Showing posts with label Viruman. Show all posts
Showing posts with label Viruman. Show all posts

Thursday, September 29, 2022

Viruman - Madura Veeran

 படம் : விருமன் (2022)

இசை : யுவன் சங்கர் ராஜா

பாடியவர்கள் : யுவன் சங்கர் ராஜா, அதிதி சங்கர்

பாடல்வரிகள் : ராஜு முருகன்



Download this MP3

ஏய்... மதுர வீரன் அழகுல

மாட்டு கொம்பு திமிருல

பாவி நெஞ்சு சிக்கிக்கிருச்சே...


வாடி என் கருப்பட்டி

பாத்தா பத்தும் தீப்பெட்டி

மாமன் நெஞ்சு பத்திக்கிருச்சே...


மாருல ஏறிட எடம் தா

மீசைய நீவுற வரம் தா

உடுத்துற வேட்டிய போல

ஒட்டிகிட்டு வாழ போறேன்டா

உன் கூட வரேன்டா



தேனீ மொத்தம் பாக்கத்தான்

தங்கமே உன்ன தூக்கித்தான்

மொத்த தேனைத்தான்

நான் மொண்டு ஊத்தவா


ஊரே கண்ணு போடத்தான்

மாமன் ஒன்ன கூடித்தான்

புள்ளை நூறுதான்

நான் பெத்து போடவா


கொடை சாஞ்சேனே...

கொம்பன் நான்தானே

கொடமாக்கி கருவாச்சி

ஒருவாட்டி என்னை தூக்கி போயேன்டி...

ஒன் கூட வரேன்டி...

ஒன் கூட வரேன்டி...


மாமன் கண்ணு சூரியே

ஈர கொல ஏறியே

எதமா என்னை 

குத்திக் கொல்லாதே...


ஏ...எஹ்... ஹே...

ஆந்தை முழி காரியே

அருவாமனை மாரியே

சொகமா என்னை 

வெட்டி தள்ளாதே


ஹ்ம்ம்...ஒ...

சேலை முந்தி ஓரமா

ஆத்தா தந்த வாசமா

உள்ள காலம்தான் 

உன்ன நெஞ்சில் தாங்குவேன்


மாமன் நெஞ்சில் மேலதான்

ஆட்டுக்குட்டி போலத்தான்

நெத்தம் தூங்கத்தான்

பத்து ஜென்மம் வாங்குவேன்


எடி பேச்சியே... என்னை சாட்சியே

என்னை மாத்தி 

புதுசாக்கி உசுராக்கி 

ஒன் கையில் தாரேன்டி...

ஒன் கூட வரேன்டி...

நான் கூட வரேன்டி...

ஒன் கூட வரேன்டி...

நான் கூட வரேன்டி...


Viruman - Kanja Poovu Kannala

 படம் : விருமன் (2022)

இசை : யுவன் சங்கர் ராஜா

பாடியவர்கள் : சித் ஸ்ரீராம், யுவன் சங்கர் ராஜா

பாடல்வரிகள் : கருமத்தூர் மணிமாறன்




Download this MP3

கஞ்சா பூவு கண்ணால

செப்பு செல உன்னால

இடுப்பு வேட்டி அவுருதடி

நீ சிரிச்சா தன்னால


கஞ்சா பூவு கண்ணால

செப்பு செல உன்னால

இடுப்பு வேட்டி அவுருதடி

நீ சிரிச்சா தன்னால


ஒன் தட்டாங்காயி பல்லால

நீ சொன்ன ஒத்த சொல்லால

சூரியனையும் ஒடைப்பேன்டி

கவட்டை எடுத்து கல்லால


கருப்பட்டி கரைச்சு

செஞ்சு வச்ச செலையா

பச்சரிசி போட்ட

பொங்கப்பானை ஒலையா


கருப்பட்டி கரைச்சு

செஞ்சு வச்ச செலையா

பச்சரிசி போட்ட

பொங்கப்பானை ஒலையா


ஈரக்கொலைய சொரண்டியென்ன

கொல்லுறாயே கொலையா

ஈரக்கொலைய சொரண்டியென்ன

கொல்லுறாயே கொலையா


கஞ்சா பூவு கண்ணால

செப்பு செல உன்னால

இடுப்பு வேட்டி அவுருதடி

நீ சிரிச்சா தன்னால




அந்தி நடுச்சாமம் எழுப்பி

அந்த நட்சத்திரம் உலுப்பி

ஒன் மூக்குல காதுல

தோடா மாட்டி தொங்க விடப்போறேன்


அந்த ராத்திரிய கிள்ளி

கொஞ்சம் கருத்த மேகம் அள்ளி

ஒன் இமைய பூசும் கண்ணு மையா

மாத்திக்கொண்டு நானும் வாரேன்


மாடுக்குத்தி கிழிச்சாலும் 

பொழச்சுக்குவேன்டி

ஒன் புருவக்கத்தி குத்திப்புட்டா 

என்ன செய்யுவேன்டி


சூரிக்கத்தி வீசுனாலும்

நிமிந்து நிப்பேன்டி

ஒன் சுண்டு விரல் பட்டு போனா

சுணங்கி போவேன்டி


நீ மனசு வெச்சா மந்தக்கல்லையும்

திண்டு செமிப்பேன்டி

நீ மனசு வெச்சா மந்தக்கல்லையும்

திண்டு செமிப்பேன்டி


கஞ்சா பூவு கண்ணால

செப்பு செல உன்னால

இடுப்பு வேட்டி அவுருதடி

நீ சிரிச்சா தன்னால


ஒன் தட்டாங்காயி பல்லால

நீ சொன்ன ஒத்த சொல்லால

சூரியனையும் ஒடைப்பேன்டி

கவட்டை எடுத்து கல்லால


Popular Posts