Showing posts with label Sridevi Vijaykumar. Show all posts
Showing posts with label Sridevi Vijaykumar. Show all posts

Thursday, June 9, 2022

Thithikkuthdhe - Thayarum Ariyamal

 படம் : தித்திக்குதே (2003)

இசை : வித்யாசாகர்

பாடியவர்கள் : உன்னி கிருஷ்ணன்

பாடல்வரிகள் : வைரமுத்து


Download this MP3


ஆஹா... ஆஹா... ஆஹா... ஆஆஆ...

ஆஆஆ... ஆஹா... ஆஆஆஆ...

தாயாரும் அறியாமல் ஊராரும் காணாமல்

மொட்டொன்று பட்டென்று மலரும்

என்னென்று தெரியாமல் ஏதென்று புரியாமல்

பெண் நெஞ்சில் பேரச்சம் பரவும்


பயம் போக சீராட்டி பாலூட்டி நீராட்டி

திருமேனி மருதாணி இடுக

உளுந்தாலே களி செய்து வெல்ல‌ங்கள் தானிட்டு

நல்லெண்ணெய் தான் விட்டு தருக

பொன்னோடு சீர்கொண்டு வருக

இந்த பூவுக்கு புது சேலை புனைக

பொன்னோடு சீர்கொண்டு வருக

இந்த பூவுக்கு புது சேலை புனைக

இயறக்கை தரும் பூப்போடு இன்னுமொரு பூப்பெய்து

வண்ணமலர் குல‌ம் வாழ வாழ்க வாழ்க


தாயாரும் அறியாமல் ஊராரும் காணாமல்

மொட்டொன்று பட்டென்று மலரும்

என்னென்று தெரியாமல் ஏதென்று புரியாமல்

பெண் நெஞ்சில் பேரச்சம் பரவும்


Thithikudhe - Mainaave Mainaave

 படம் : தித்திக்குதே (2003)

இசை : வித்யாசாகர்

பாடியவர்கள் : உன்னி கிருஷ்ணன், சாதனா சர்கம்

பாடல்வரிகள் : வைரமுத்து


Download this MP3


மைனாவே மைனாவே என் கனவில்

தினம் தினம் கேட்கும் பாடல் நீதானா 

ஹே மைனாவே மைனாவே என் கண்கள்

பூமியில் தேடிய தேடல் நீதானா

விண்மீனாய் தொலைந்த மகள்

வெண் நிலவாய் வந்தாளா

தேடியவன் கைகளிலே 

தேவதையாய் விழுந்தாளா

பிரிவுக்கும் சேர்த்து இனிமேல் 

வாழ்வோம் வாழ்வோம் என்றாளா


மைனாவே மைனாவே என் கனவில்

தினம் தினம் கேட்கும் பாடல் நீதானா

மைனாவே மைனாவே என் கண்கள்

பூமியில் தேடிய தேடல் நீ...தானா



நீ போன காலம் தொட்டு 

என் வாழ்வில் பகலே இல்லை

இருளோடு உன்னை தேடி இளைத்து விட்டேன்


திசைக்கொன்றாய் தேடி செல்ல 

விழி நான்கு இல்லை என்று 

கண்ணீரை சிந்தி சிந்தி கரைந்து விட்டேன்


பிரிந்தோம் அன்று துளியாக

இணைந்தோம் இன்று நதியாக


நீரின் தாகம் நீரால் தீர்ந்தது


ஆஆ ஆஆ 

மைனாவே மைனாவே என் கனவில்

தினம் தினம் கேட்கும் பாடல் நீதானா


மைனாவே மைனாவே என் கனவில்

தினம் தினம் கேட்கும் பாடல் நீதானா



 


சில்லென்ற முத்தம் ஒன்று 

செல் எல்லாம் நனையும்போது

உள்ளுக்குள் அச்ச பூக்கள் உதிர்கின்றதே


தேரோடு பூவனம் ஒன்று 

மாரோடு சரியும்போது

அணுவெல்லாம் ஆகாயம் போல் பிரிகின்றதே


தேகம் ரெண்டும் பிரியாதா

ஜீவன் எரியும் சுடராக


முத்தம் என்னும் எண்ணெய் ஊற்றுவோம்


ஆஆ ஆஆ ஆஆ ஆஆ..........


மைனாவே மைனாவே என் கனவில்

தினம் தினம் கேட்கும் பாடல் நீதானா 


ஆஆ...

மைனாவே மைனாவே என் கண்கள்

பூமியில் தேடிய தேடல் நீதானா


விண்மீனாய் தொலைந்த மகள் 

வெண் நிலவாய் வந்தாளா

தேடியவன் கைகளிலே 

தேவதையாய் விழுந்தாளா

பிரிவுக்கும் சேர்த்து இனிமேல் 

வாழ்வோம் வாழ்வோம் என்றாளா


Wednesday, May 25, 2022

Thithikkuthdhe - Oru Nimidama

 படம் : தித்திக்குதே (2003)

இசை : வித்யாசாகர்

பாடியவர்கள் : திப்பு, ஸ்ரீவர்தினி

பாடல்வரிகள் : வைரமுத்து




ஒரு நிமிடமா... ஒரு நிமிடமா...

ஒருநிமிடமா... தவறிவிட்டேன்

ஒருஜென்மமே... ஒரு ஜென்மமே...

ஒருஜென்மமே... இழந்துவிட்டேன்

அன்பே... அன்பே... எங்கே...


பள்ளித்தோழியே வந்து போனாயா

பாவாடைப்பூவே வந்து போனாயா

பள்ளித்தோழியே வந்து போனாயா

பாவாடைப்பூவே வந்து போனாயா

காற்றெல்லாம் உன் வாசம் வந்து போனாயா

கரையெல்லாம் உன் தடங்கள் வந்து போனாயா

நதியெல்லாம் உன் கொழுசு வந்து போனாயா


ஒரு நிமிடமா ஒரு நிமிடமா

ஒரு நிமிடமா தவறிவிட்டேன்

ஒரு ஜென்மமே ஒரு ஜென்மமே 

ஒரு ஜென்மமே இழந்துவிட்டேன்

அன்பே... அன்பே... எங்கே...

பள்ளித்தோழியே வந்து போனாயா

பாவாடைப்பூவே வந்து போனாயா




நிலா வந்து போனதற்கு 

வான்வெளியில் சாட்சியில்லை

ஆனாலும் பூமியிலே 

அல்லியெல்லாம் சாட்சிசொல்லும்

நீ வந்து போனதற்கு 

சாட்சி சொல்ல யாருமில்லை

ஆனாலும் மலையெல்லாம் 

அசையாமல் சாட்சி சொல்லும்


இளம்பிறையாகப் பார்த்தவளே 

இப்போதெப்படி இருப்பாயோ

அங்கம் கொழித்து திமிறும் அழகில் 

அடையாளங்கள் தொலைத்தாயோ

இளம்பிறையாகப் பார்த்தவளே 

இப்போதெப்படி இருப்பாயோ

அங்கம் கொழித்து திமிறும் அழகில் 

அடையாளங்கள் தொலைத்தாயோ

உதட்டில் ஒட்டிய புன்னகை மட்டும் 

உடைந்து விடாமல் இருப்பாயோ

அன்பே... அன்பே... எங்கே...

பள்ளித்தோழியே வந்து போனாயா

பாவாடைப்பூவே வந்து போனாயா



பூப்போல மலர்ந்துவிட்டேன் 

வாழ்வில் ஏதும் மாசமில்லை

கண்ணா உன்னை கண்டுகொண்டால் 

கண்கள் மீண்டும் தேவையில்லை


மறுமுறை என்னைப் பார்க்கையிலே 

மார்பில் புதைந்து அழுவாயோ

வெட்கம் தடவிய புன்னகையாலே 

விவகாரங்கள் செய்வாயோ

மறுமுறை என்னைப் பார்க்கையிலே 

மார்பில் புதைந்து அழுவாயோ

வெட்கம் தடவிய புன்னகையாலே 

விவகாரங்கள் செய்வாயோ

இலையில் சிக்கிய மழையைப்போலே 

என்னைத்தொடாமல்  தவிப்பாயோ

அன்பே... அன்பே... எங்கே...

பள்ளித்தோழியே வந்து போனாயா

பாவாடைப்பூவே வந்து போனாயா

காற்றெல்லாம் உன் வாசம் வந்து போனாயா

கரையெல்லாம் உன் தடங்கள் வந்து போனாயா

நதியெல்லாம் உன் கொழுசு வந்து போனாயா


ஒரு நிமிடமா ஒரு நிமிடமா

ஒரு நிமிடமா தவறிவிட்டேன்

ஒரு ஜென்மமே ஒரு ஜென்மமே 

ஒரு ஜென்மமே இழந்துவிட்டேன்



Thithikudhe - Silendra Theepori Ondru

 படம் : தித்திக்குதே (2003)

இசை : வித்யாசாகர்

பாடியவர்கள் : ஸ்வேதா மோகன்

பாடல்வரிகள் : வைரமுத்து


Download this MP3


சில்லென்ற தீப்பொறி ஒன்று

சிலு சிலு சிலுவென 

குளு குளு குளுவென‌

சர சர சரவென 

பரவுது நெஞ்சில் பார்த்தாயா?


இதோ உன் காதலன் என்று 

விறு விறு விருவென 

கல கல களவென

அடி மன வெளிகளில் 

ஒரு நதி நகருது கேட்டாயா


உன் மெத்தை மேல் தலை சாய்கிறேன் 

உயிர் என்னையே தின்னுதே

உன் ஆடைகள் நான் சூடினேன் 

என்னென்னவோ பண்ணுதே

தித்திக்குதே... தித்திக்குதே... 

தித்திக்குதே... தித்திக்குதே... 

தித்திக்குதே... தித்திக்குதே... 

தித்திக்குதே... நா நா நா நா நா

தித்திக்குதே... தித்திக்குதே... 

தித்திக்குதே... நா நா நா நா நா


சில்லென்ற தீப்பொறி ஒன்று

சிலு சிலு சிலுவென 

குளு குளு குளுவென‌

சர சர சரவென 

பரவுது நெஞ்சில் பார்த்தாயா?



கண்ணா உன் காலணி உள்ளே

என் கால்கள் நான் சேர்ப்பதும்

கண்மூடி நான் சாய்வதும்

கனவோடு நான் தொய்வதும்


கண்ணா உன் கால் உறை உள்ளே 

என் கைகள் நான் தொய்ப்பதும்

உள்ளூற தேன் பாய்வதும்

உயிரோடு நான் தேய்வதும்


முத்து பையன் தேநீர் உண்டு 

மிச்சம் வைத்த‌  கோப்பைகளும்

தங்க கைகள் உண்ணும் போது 

தட்டில் பட்ட ரேகைகளும்

மூக்கின் மேலே மூகாமிடும் கோபங்களும் ஓ...

தித்திக்குதே... தித்திக்குதே... 

தித்திக்குதே... தித்திக்குதே... 



அன்பே உன் புன்னகை கண்டு 

எனக்காக தான் என்று

இரவோடு நான் எரிவதும்

பகலோடு நான் உறைவதும்


நீ வாழும் அறைதனில் நின்று 

உன் வாசம் நாசியில் உண்டு

நுரையிரல் பூ மலர்வதும் 

நோய் கொண்டு நான் அழுவதும்


ஆக்கம் பக்கம் நோட்டம் விட்டு 

ஆளை தின்னும் பார்வைகளும்

நேரில் கண்டு உண்மை சொல்ல 

நெஞ்சில் முட்டும் வார்த்தைகளும்

மார்பை சுடும் தூரங்களில் சுவாசங்களும்


தித்திக்குதே... தித்திக்குதே... 

தித்திக்குதே... தித்திக்குதே... 

தித்திக்குதே... தித்திக்குதே... 

தித்திக்குதே... நா நா நா நா நா...

தித்திக்குதே... தித்திக்குதே... 

தித்திக்குதே... நா நா நா நா நா...


Monday, May 9, 2011

Kadhal Virus - Sonnalum

படம் : காதல் வைரஸ் (2002)
இசை : A.R. ரஹ்மான்
பாடியவர் :  உன்னிகிருஷ்ணன், ஹரிணி
பாடல் வரிகள் : வாலி






சொன்னாலும் கேட்பதில்லை 
கன்னி மனது
சொன்னாலும் கேட்பதில்லை 
கன்னி மனது
ஒன்றை மறைத்து வைத்தேன் 
சொல்ல தடை விதித்தேன்
நெஞ்சை நம்பி இருந்தேன் 
அது வஞ்சம் செய்தது
சொன்னாலும் கேட்பதில்லை 
கன்னி மனது

ஒ... கன்னி மனம் பாவம் 
என்ன செய்ய கூடும் 
உன்னை போல அல்ல 
உண்மை சொன்னது நீ...

சொன்னாலும் கேட்பதில்லை 
கன்னி மனது



உனை தவிர எனக்கு 
விடியலுக்கோர் கிழக்கு
உலகினில் உள்ளதோ உயிரே


சூரிய விளக்கில் 
சுடர் விடும் கிழக்கு
கிழக்குக்கு நீ தான் உயிரே
எல்லாம் தெரிந்திருந்தும் 
என்னை புரிந்திருந்தும்
சும்மா இருக்கும்படி 
சொன்னேன் நூறு முறை
சொன்னாலும் கேட்பதில்லை 
கன்னி மனது

ஒ... நங்கை உந்தன் நெஞ்சம் 
நான் கொடுத்த லஞ்சம்
வாங்கி கொண்டு இன்று 
உண்மை சொன்னது 

சொன்னாலும்...
சொன்னாலும் கேட்பதில்லை 
கன்னி மனது



விழி சிறையில் பிடித்தாய்
விலகுதல் போல் நடித்தாய்
தினம் தினம் துவண்டேன் தளிரே


நதியென நான் நடந்தேன்
அணை தடுத்தும் கடந்தேன்
கடைசியில் கலந்தேன் கடலே
எல்லாம் தெரிந்திருந்தும் 
என்னை புரிந்திருந்தும்
சும்மா இருக்கும்படி 
சொன்னேன் நூறு முறை


ஒ... பூவெடுத்து நீரில் 
பொத்தி வைத்து பாரு
வந்துவிடும் மேலே 
வஞ்சி கொடியே...


சொன்னாலும்...
சொன்னாலும்...

கேட்டிராது கன்னி மனது

சொன்னாலும் கேட்பதில்லை 
கன்னி மனது

Popular Posts