Showing posts with label Piaa Bajpai. Show all posts
Showing posts with label Piaa Bajpai. Show all posts

Thursday, August 4, 2011

கோவா - காதல் என்றால்

படம்: கோவா (2010)
இசை: யுவன் ஷங்கர் ராஜா
பாடியவர்: யுவன் ஷங்கர் ராஜா
பாடல் வரி : கங்கை அமரன்









இதுவரை இல்லாத உணர்விது
இதயத்தை துண்டாக்கும் நினைவிது
மனதினை மண்ணோடு புதைத்திடும்
பெண்ணை நம்பாதே


காதல் என்றால் அத்தனையும் கனவு
கண் மூடியே வாழ்கின்ற உறவு
பெண்கள் என்றால் ஆணை கொல்லும்
நோய் ஆனதே


ஐயோ இந்த இளமையின் தொடக்கம்
இன்றே முற்றுப்புள்ளி
அதை சொல்லாமல் சொல்லி
நம்மை பைத்தியமாக்கும்
பெண்ணைத் தேடி தொலையாதே

Sunday, April 17, 2011

கோ - என்னமோ ஏதோ எண்ணம்


படம் : கோ (2011)
இசை : ஹரீஸ் ஜெயராஜ்
பாடியவர் :  ஆலாப் ராஜு, பிரஷாந்தினி, Rap ஸ்ரீசரண், எம்சீ ஜெஸ் 
பாடல் வரி : மதன் கார்க்கி









என்னமோ ஏதோ 
எண்ணம் திரளுது கனவில்
வண்ணம் பிறழுது நினைவில்
கண்கள் இருளுது நனவில்
என்னமோ ஏதோ 
முட்டி முளைக்குது மனதில்
வெட்டி எறிந்திடும் நொடியில்
மொட்டு அவிழுது கொடியில்

ஏனோ குவியமில்லா 
குவியமில்லா ஒரு காட்சி பேழை
ஒ ஹோ உருவமில்லா உருவமில்லா நாளை
ஏனோ குவியமில்லா
குவியமில்லா ஒரு காட்சி பேழை
ஒ ஹோ அரைமனதாய் விடியுது என் காலை

என்னமோ ஏதோ 
மின்னி மறையுது விழியில்
அண்டி அகலுது வழியில்
சிந்தி சிதறுது வெளியில்
என்னமோ ஏதோ 
சிக்கி தவிக்குது மனதில்
ரெக்கை விரிக்குது கனவில்
விட்டி பறக்குது தொலைவில்

ஏனோ குவியமில்லா 
குவியமில்லா ஒரு காட்சி பேழை
ஒ ஹோ உருவமில்லா உருவமில்லா நாளை
ஏதோ... ஏனோ குவியமில்லா 
குவியமில்லா ஒரு காட்சி பேழை
ஒ ஹோ அரைமனதாய் விடியுது நாளை

நீயும் நானும் எந்திரமா?
யாரோ செய்யும் மந்திரமா?  பூவே

முத்தமிட்ட மூச்சு காற்றில்
பட்டு பட்டு கெட்டு போனேன்
பக்கம் வந்து நிற்கும் போது
திட்டமிட்டு எட்டி போனேன்
நெருங்காதே பெண்ணே எந்தன் 
நெஞ்செல்லாம் நஞ்சாகும்
அழைக்காதே பெண்ணே எந்தன் 
அச்சங்கள் அச்சாகும்
சிரிப்பால் எனை நீ சிதைத்தாய் போதும்

ஏதோ எண்ணம் திரளுது கனவில்
வண்ணம் பிறழுது நினைவில்
கண்கள் இருளுது நனவில்
என்னமோ ஏதோ 
முட்டி முளைக்குது மனதில்
வெட்டி எறிந்திடும் நொடியில்
மொட்டு அவிழுது கொடியில்

நீயும் நானும் எந்திரமா?
யாரோ செய்யும் மந்திரமா? பூவே

சுத்தி சுத்தி உன்னை தேடி
விழிகள் அலையும் அவசரம் ஏனோ
சத்த சத்த நெரிசலில் உன் சொல்
செவிகள் அறியும் அதிசயம் ஏனோ
கனா காண தானே பெண்ணே
கண் கொண்டு வந்தேனோ
வினா காண விடையும் காண
கண்ணீரும் கொண்டேனோ
நிழலை திருடும் மழலை நானோ

ஏதோ.. எண்ணம் திரளுது கனவில்
வண்ணம் பிறழுது நினைவில்
கண்கள் இருளுது நனவில்
ஒ ஹோ ஏதோ முட்டி முளைக்குது மனதில்
வெட்டி எறிந்திடும் நொடியில்
மொட்டு அவிழுது கொடியில்

ஏனோ குவியமில்லா 
குவியமில்லா ஒரு காட்சி பேழை
ஒ ஹோ உருவமில்லா உருவமில்லா நாளை... ஏதோ
ஏனோ குவியமில்லா 
குவியமில்லா ஒரு காட்சி பேழை
ஒ ஹோ அரைமனதாய் விடியுது என் காலை... ஏதோ

ஏனோ குவியமில்லா 
குவியமில்லா ஒரு காட்சி பேழை
ஒ ஹோ உருவமில்லா உருவமில்லா நாளை
ஏனோ குவியமில்லா 
குவியமில்லா ஒரு காட்சி பேழை
ஒ ஹோ அரைமனதாய் விடியுது என் காலை.. ஏதோ
....... ஏதோ

Tuesday, July 27, 2010

Goa - Idhu Varai

படம் : கோவா (2010)
இசை : யுவன் சங்கர் ராஜா
பாடியவர் :  அஜீஸ், ஆண்ட்ரியா
பாடல் வரி : கங்கை அமரன்

Goa (Original Motion Picture Soundtrack) by Yuvan Shankar Raja on ...




இதுவரை இல்லாத உணர்விது
இதயத்தில் உண்டான கனவிது
பலித்திடும் அந்நாளை தேடிடும்
பாடல் கேட்டாயோ


இதுவரை இல்லாத உணர்விது
இதயத்தில் உண்டான கனவிது
பலித்திடும் அந்நாளை தேடிடும்
பாடல் கேட்டாயோ


மூடாமல் மூடி மறைத்தது
தானாக பூத்து வருகுது
தேடாமல் தேடி கிடைத்தது இங்கே
மூடாமல் மூடி மறைத்தது
தானாக பூத்து வருகுது
தேடாமல் தேடி கிடைத்தது இங்கே



இங்கே ஒரு இன்பம் வந்து நிறைய
எப்போது என் உண்மை நிலை அறிய
தாங்காமலும் தூங்காமலும் நாள் செல்லுதே
இல்லாமலே நித்தம் வரும் கனவு கொல்லாமல் கொல்ல
சுகம் என்னென்று சொல்ல
நீ துணை வர வேண்டும்
நீண்ட வழி என் பயணம்


அங்கே அங்கே வந்து வந்து கலக்கும்
வெண்மேகமும் வெண்ணிலவும் போல
எந்தன் மன எண்ணங்களை யார் அறிவார்
என் நெஞ்சமோ உன் போல அல்ல
ஏதோ ஓர் மாற்றம்
நிலை புரியாத தோற்றம்


இது நிரந்தரம் அல்ல
மாறிவிடும் மன நிலை தான்




மனதிலே உள்ளூரும் உணர்வுகள்
மலர்ந்ததே முத்தான உறவுகள்
திறந்ததே தன்னாலே கதவுகள்
நமக்கு முன்னாலே
மனதிலே உள்ளூரும் உணர்வுகள்
மலர்ந்ததே முத்தான உறவுகள்
திறந்ததே தன்னாலே கதவுகள்
நமக்கு முன்னாலே


தேகம் இப்போது உணர்ந்தது
தென்றல் என் மீது படர்ந்தது
மோகம் முன்னேறி வருகுது முன்னே
தேகம் இப்போது உணர்ந்தது
தென்றல் என் மீது படர்ந்தது
மோகம் முன்னேறி வருகுது முன்னே 

Popular Posts