Monday, January 17, 2022

Vaamanan - Oru Devathai

படம்: வாமனன் (2009)
இசை : யுவன் சங்கர் ராஜா
பாடியவர்கள் : ரூப் குமார் ரதோட்
பாடல்வரிகள்: நா.முத்து குமார்





ஒரு தேவதை பார்க்கும் நேரமிது 
மிக அருகினில் இருந்தும் தூரம் இது 
இதயமே ஓ... இவளிடம் ஓ...
உருகுதே ஓ
ஹோ...ஓ... ஓ...
இந்த காதல் நினைவுகள் தாங்காதே 
அது தூங்கும் 
போதிலும் தூங்காதே 
பார்க்காதே ஓ... என்றாலும் ஓ...
கேக்காதே 
ஹோ...ஓ... ஓ...


என்னை என்ன செய்தாய் பெண்ணே 
நேரம் காலம் மறந்தேனே
கால்கள் இரண்டும் தரையில் இருந்தும் 
வானில் பறக்கிறேன்
என்னவாகிறேன் எங்கு போகிறேன் 
வழிகள் தெரிந்தும் தொலைந்து போகிறேன்...
காதல் என்றால் 
ஹோ...ஓ... பொல்லாதது
புரிகின்றது ஹோ...ஓ... ஓ...


ஹோ...ஓ... ஓ...
கண்கள் இருக்கும் காரணம் என்ன 
என்னை நானே கேட்டேனே
உனது அழகை காண தானே 
கண்கள் வாழுதே 
மரண நேரத்தில் உன் மடியின் ஓரத்தில் 
இடமும் கிடைத்தால் இறந்தும் வாழுவேன்...
உன் பாதத்தில் 
முடிகின்றதே 
என் சாலைகள் ஹோ...ஓ... ஓ...
இந்த காதல் நினைவுகள் தாங்காதே 
அது தூங்கும் போதிலும் தூங்காதே 

ஒரு தேவதை பார்க்கும் நேரமிது...
மிக அருகினில் இருந்தும் தூரமிது

Popular Posts