Monday, January 17, 2022

Kaathuvaakula Rendu Kaadhal - Rendu Kaadhal

படம்: காத்து வாக்குல ரெண்டு காதல் (2022)

இசை : அனிருத்

பாடியவர்கள் : அனிருத், சக்திஸ்ரீ கோபாலன் & ஐஸ்வர்யா சுரேஷ் பிந்த்ரா

பாடல்வரிகள்: விக்னேஷ் சிவன்






காதல் ஒன்றாக வந்து ரெண்டானது

காதல் ரெண்டாகி துண்டானது

கால்கள் தடுமாறி தடமாறி போனதே

காற்றில் என் காதல்கள் போகுதே

இரண்டு கண்கள் இதுலே ஒன்றை

இழக்க சொன்னால் வலி எனக்கில்லை


என்னோடு இருந்தவள் இப்போது இல்லையே

இங்கேயே இருந்தவள் இன்றில்லையே

என்னோடு இருந்தவள் இப்போது இல்லையே

இறுதியில் இருதயம் இருகியே இருக்குதே



இவன் பிரிய போகிறான்

என்று ஒருமுறை கூட நெனைக்கவில்லை

இது உடைய கூடிடும்

என்று ஒருமுறை உரைக்கவில்லையே

இவன் பொய்கள் பேசுவான்

என்று ஒருமுறைகூட நெனைக்கவில்லை

இது முடிந்து போய்விடும்

என்று ஒருமுறை தோணவில்லையே


அர்த்தங்கள் தேடி போகாதே

அழகு அழிந்து போகும்

அன்பே நீ விட்டு போகாதே

உயிரும் உறைந்து போகும்

என்னோடு இருந்தவள் இப்போது இல்லையே

இங்கேயே இருந்தவள் இன்றில்லையே

என்னோடு இருந்தவள் இப்போது இல்லையே

இறுதியில் இருதயம் இருகியே இருக்குதே



அழகாய் மலர்வது போல் உதிர்வது காதல்

எங்கோ தெரிவது போல் மறைவது காதல்

அழகாய் மலர்வது போல் உதிர்வது காதல்

எங்கோ தெரிவது போல் மறைவது காதல்


வருத்தம் கூடாதடா

வலிகள் வேணாம்மடா

இது போதும் நீ போதும்

இனி சந்திக்க‌ வேணாம்மடா

வருத்தம் கூடாதடா


காதல் ஒன்றாக வந்து ரெண்டானது

காதல்...

Popular Posts