Showing posts with label Ramya Krishnan. Show all posts
Showing posts with label Ramya Krishnan. Show all posts

Thursday, November 1, 2018

Party - Kodi Mangani

ப‌டம் : பார்ட்டி (2018)
இசை : பிரேம்ஜி அமரன்
பாடியவர்கள் :  S.P.பாலசுப்ரமணியம், K.S.சித்ரா
பாடல்வரிகள் : கங்கை அமரன்

Image result for party tamil movie



ஹே... கொடி மாங்கனி புது தேன்கனி
பறித்தேனே எந்தன் செல்லமோகினி

நீ தொடலாம் இனி குண்டு மாங்கனி
நிறுத்தாமல் பாடு இன்பலாவினி

வானவில் பெண்ணை போல் ஆனதே
வந்து தான் கொஞ்சி பேசுதே
தேன் நிலா நேரிலே தோனுதே
ஹே... தேகமே தேய்ந்து போகுதே

பூமியோ சொர்க்கம் போல் மாறுதே
போதையோ மேலும் ஏறுதே
வானிலை மாற்றமாய் போனதே
வாழ்க்கையே வாழ்ந்து காட்டுதே

ஹே கொடி மாங்கனி புது தேன்கனி
பறித்தேனே எந்தன் செல்லமோகினி

நீ தொடலாம் இனி குண்டு மாங்கனி
நிறுத்தாமல் பாடு இன்பலாவினி


ஹே... 
தேடி வந்த தேடல் இன்று தீர்ந்து போனதே
தேகம் எங்கும் ஊறுகின்றதே

கூடி வந்த ஊடல் கண்டு கூச்சம் போகுதே
கோடி மின்னல் தோன்றுகின்றதே

ஆ... அச்சமும் நாணமிட்டு ஓடுதே
ஆவலும் கூடி போனதே
மிச்சமும் மீதமின்றி போகுதே
மேனியோ உச்சம் காணுதே

ஹா... தேவியின் தேகம் வீணையானதே
நாதங்கள் தேடுகின்றதே
தேகமோ பூமி போல வீங்குதே
தேவைகள் தீர்ந்து போனதே

தேய்பிறை தீர்ந்ததே
தேகமோ பந்து போல மாறுகின்றதே

ஹே கொடி மாங்கனி புது தேன்கனி
பறித்தேனே எந்தன் செல்லமோகினி

நீ தொடலாம் இனி குண்டு மாங்கனி
நிறுத்தாமல் பாடு இன்பலாவினி

வானவில் பெண்ணை போல் ஆனதே
வந்து தான் கொஞ்சி பேசுதே
தேன் நிலா நேரிலே தோனுதே
தேகமே தேய்ந்து போகுதே

பூமியோ சொர்க்கம் போல் மாறுதே
போதையோ மேலும் ஏறுதே
வானிலை மாற்றமாய் போனதே
வாழ்க்கையே வாழ்ந்து காட்டுதே

ஹே கொடி மாங்கனி புது தேன்கனி
பறித்தேனே எந்தன் செல்லமோகினி

நீ தொடலாம் இனி குண்டு மாங்கனி
நிறுத்தாமல் பாடு இன்பலாவினி

Sunday, July 8, 2018

Vaaname Ellai - Jana Gana Mana

ப‌டம்: வானமே எல்லை (1991)
இசை: மரகதமணி
பாடியவர்கள்: S.P. பாலசுப்பிரமணியம், K.S.சித்ரா
பாடல்வரிகள்: வைரமுத்து




ஆஆ... ஆஆஆஆ ஆஆ ஆஆ...
ம்ம்... ம்ம்ம்ம்... ம்ம் ம்ம் ம்ம்...
தன்னன்னன்ன தனானானா
தன்னன்னன்ன தனானானா
தனா... நன‌னா...
தனா தனா... நன‌னா
தன்னனனனா.... 
தன்னனனனா.... 
தன்ன நனனா நனனா... நனனனனா...

ஜன கன மன என ஜதி சொல்லும் நேரம்...
ஜனனமும் மரணமும் சந்திக்கும் காலம்...
முடியும் நிகழ்ச்சி ஆஹா... மனதில் மகிழ்ச்சி...
துள்ளி எழவேண்டும்... ஏன் அழவேண்டும்...
இந்த பூமிக்கு நன்றிசொல்லி புறப்பட வேண்டும்...
ஜன கன மன என ஜதி சொல்லும் நேரம்...
ஜனனமும் மரணமும் சந்திக்கும் காலம்...


ஜனிக்கும் உயிர்கள் சாகாமல் போனால்
தாங்காது தாங்காது பூலோகம் என்னாவது
சுழலும் பூமி சுற்றாது சாமி
சுவாசிக்க முடியாது அப்போது என்செய்வது

காலம் வந்தால் எதுவும் இங்கு நடக்கும்...
நேரம் வந்தால் பறவை ரக்கை துடிக்கும்...

கிழக்கு வானம் அழைக்கும் நேரம்...
கிளிகள் கூட்டம் பறக்கட்டும்...
கீதங்கள் இசைக்கட்டும்...
திசை எங்கே அதோ அங்கே... அங்கே...
இந்த தரை வாழ்க்கை வெறும் சிறை வாழ்க்கை...
இந்த சிறைப்பட்ட சிலந்திக்கு விடுதலை வேட்கை... 

ஜன கன மன என ஜதி சொல்லும் நேரம்...
ஜனனமும் மரணமும் சந்திக்கும் காலம்...


மழையின் துளிகள் மண்ணோடு வீழ்ந்தால்
மழைக்கொண்ட சாவென்று வான்மேகம்தான் சொல்லுமா

நகரும் நதிகள் கடலோடு சேர்ந்தால்
நதிகொண்ட சாவென்று கடலென்ன தடைசொல்லுமா

சங்கமிக்க இயற்கை கற்றுத்தந்தது
சங்கமத்தால் உலகம் இன்னும் உள்ளது
பள்ளத்தில் சேரும் வெள்ளத்தைப் போலே
இயற்கையோடு கலக்கலாம் 

ஜகத்தையே ஜெயிக்கலாம்
திசை எங்கே... அதோ அங்கே... அங்கே...
இதில் தலை எங்கே... அட வால் எங்கே...
இந்த கேள்விக்கு விடை சொல்லும் ஞானிகள் எங்கே...

Sunday, December 2, 2012

Vaaname Ellai - Nee Andavana

படம்: வானமே எல்லை (1991)
இசை: மரகதமணி
பாடியவர்கள்: S.P. பாலசுப்பிரமணியம், K.S.சித்ரா
பாடல்வரிகள்: வைரமுத்து






நீ ஆண்டவனா தாய் தந்தை தான் உனக்கில்லையே
கண்ணா நான் உன் ஜாதி தான் உறவென்பதே எனக்கில்லையே
கண்ணீர் என்ன கண்ணா அட நானுன் மாமனே
மண்ணில் வந்ததாலே நீ மண்ணின் மைந்தனே

தாய் பாஷை அறியாத புது இந்தியன்
நீ என்றால் பொய்யில்லையே
தன் ஜாதி சொல்லாமல் நீ வாழ்கிறாய்
உன் போலே ஊரில்லையே

ம்..ம்ம்ம்ம்..

இதழோரம் ஆயிரம் சிறு பூக்கள் பூக்கிறாய்
ஒரு கண்ணால் பார்க்கிறாய் ஒதுக்கீடு கேட்கிறாய்
தாலாட்டிட மொழியுண்டு வளர்வாய் பிறையே
பாலூட்டிட வழியில்லை அதுதான் குறையே
உந்தன் சோகம் சொன்னால் ஏக்கம் போய்விடும்
எங்கள் சோகம் சொன்னால் உன் தூக்கம் போய்விடும்


நீ ஆண்டவனா தாய் தந்தை தான் உனக்கில்லையே
கண்ணா நான் உன் ஜாதி தான் உறவென்பதே எனக்கில்லையே

கண்ணீர் என்ன கண்ணா அட நானுன் மாமனே

மண்ணில் வந்ததாலே நீ மண்ணின் மைந்தனே


ஆரோ... ஆரோ... ஆரோ... ஆராராரோ...
ஆரோ... ஆரோ... ஆரோ... ஆரீராரோ...

கலைகின்ற மேகங்கள் சபை கூடியே
வான்வெளியில் தாலாட்டுதே
கரைகின்ற பிறை ஐந்து கை வீசியே
சூரியனை தாலாட்டுதே

ஆ... ஆஆஆஆ...

முடியாத யாத்திரை முடிகின்ற வேளையில்
முத்தங்கள் தந்து நீ முள்ளானாய் சேலையில்
நீ என்பது எம் வாழ்வில் வரவா செலவா
முள்ளென்பது ரோஜாவி்ல் உறவா பகையா
காலம் செய்த கோலம் நீ இங்கே வந்தது
கண்ணீரோடு வந்து கண்ணீர் சேர்ந்தது


நீ ஆண்டவனா தாய் தந்தை தான் உனக்கில்லையே
கண்ணா நான் உன் ஜாதி தான் உறவென்பதே எனக்கில்லையே

கண்ணீர் என்ன கண்ணா அட நானுன் மாமனே

மண்ணில் வந்ததாலே நீ மண்ணின் மைந்தனே

Saturday, August 25, 2012

படையப்பா - மின்சார பூவே


படம் : படையப்பா (1999)
இசை : ஏ.ஆர். ரஹ்மான்
வரிகள் : வைரமுத்து
பாடியவர்கள் : ஸ்ரீநிவாஸ், நித்யஸ்ரீ மகாதேவன்




மின்சார பூவே பெண் பூவே மெய் தீண்ட வேண்டும்
என்னோடு வாராய் என் ஆசை ஓசை கேளாய்
மின்சார பூவே பெண் பூவே மெய் தீண்ட வேண்டும்
என்னோடு வாராய் என் ஆசை ஓசை கேளாய்
மாலையில் பொன் மார்பினில் நான் துயில் கொள்ள வேண்டும்
காலையில் உன் கண்களில் நான் வெயில் காயவேண்டும்
சகியே... சகியே... சகியே...
என் மீசைக்கும் ஆசைக்கும் பூசைக்கும் நீ வேண்டும்

மின்சார கண்ணா
மின்சார கண்ணா என் மன்னா என் ஆணை கேட்டு
என் பின்னே வாராய் என் ஆசை ஓசை கேளாய்
கூந்தலில் விழும் பூக்களை நீ மடி ஏந்த வேண்டும்
நான் விடும் பெருமூச்சிலே நீ குளிர் காய வேண்டும்
மதனா... மதனா... மதனா...
என் பூவுக்கும் தேவைக்கும் சேவைக்கும் நீ வேண்டும்
மின்சார கண்ணா

ஒரு ஆணுக்கு எழுதிய இலக்கணம் உன்னிடத்தில் கண்டேன்
என் பாதத்தில் பள்ளிக்கொள்ள உனக்கொரு அனுமதி தந்தேன்
ஒரு ஆணுக்கு எழுதிய இலக்கணம் உன்னிடத்தில் கண்டேன்
என் பாதத்தில் பள்ளிக்கொள்ள உனக்கொரு அனுமதி தந்தேன்
என் ஆடைதாங்கிக் கொள்ள என் கூந்தல் ஏந்திக் கொள்ள
உனக்கொரு வாய்ப்பல்லவா
நான் உண்ட மிச்ச பாலை நீ உண்டு வாழ்ந்து வந்தால்
மோட்சங்கள் உனக்கல்லாவா
வானம் வந்து வளைகிறதே வணங்கிட வா

மின்சார பூவே பெண் பூவே மெய் தீண்ட வேண்டும்
என்னோடு வாராய் என் ஆசை ஓசை கேளாய்

வெண்ணிலவை தட்டி தட்டி செய்து வைத்த சிற்பம் ஒன்று கண்டேன்
அதன் விழிகளில் வழிவது அமுதல்ல விஷம் என்று கண்டேன்
அதன் நிழலையும் தொடுவது பழியென்று விலகி விட்டேன்
வாள் விழியால் வலை விரித்தாய் வஞ்சனை வெல்லாது
வலைகளிலே மீன் சிக்கலாம் தண்ணீர் என்றும் சிக்காது
வா என்றால் நான் வருதில்லை
போ என்றால் நான் மறைவதில்லை
இது நீ நான் என்ற போட்டி அல்ல
நீ ஆணையிட்டு சூடிக் கொள்ள ஆண்கள் யாரும் பூக்கள் அல்ல

மின்சார கண்ணா என் மன்னா என் ஆணை கேட்டு
என் பின்னே வாராய் என் ஆசை ஓசை கேளாய்

Monday, December 27, 2010

முதல் வசந்தம் - ஆறும் அது



படம் : முதல் வசந்தம் (1986)
இசை : இளையராஜா

பாடியவர் :  இளையராஜா
பாடல் வரி : வைரமுத்து



  



ஆறும் அது ஆழமில்ல
அது சேரும் கடலும் ஆழமில்ல



ஆறும் அது ஆழமில்ல
அது சேரும் கடலும் ஆழமில்ல
ஆழம் எது அய்யா

அந்த பொம்பள மனசுதான்யா



ஆழம் எது அய்யா
அந்த பொம்பள மனசுதான்யா

அடி அம்மாடி 
அதன் ஆழம் பார்த்ததாரு?
அடி ஆத்தாடி
அத பார்த்த பேர கூறு நீ



ஆறும் அது ஆழமில்ல
அது சேரும் கடலும் ஆழமில்ல
ஆழம் எது அய்யா

அந்த பொம்பள மனசுதான்யா

ஆழம் எது அய்யா
அந்த பொம்பள மனசுதான்யா

மாடி வீட்டு கன்னி பொண்ணு
மனசுகுள்ளே ரெண்டு கண்ணு
ஏழ கண்ண ஏங்க விட்டு
இன்னும் ஒன்ன தேடுதம்மா


கண்ணுகுள்ளே மின்னும் மையி
உள்ளுகுள்ளே எல்லாம் பொய்யி
சொன்ன சொல்லு என்ன ஆச்சு
சொந்தமெல்லாம் எங்கே போச்சு


நேசம் அந்த பாசம்
அது எல்லாம் வெளி வேஷம்
திரை போட்டு செஞ்ச மோசமே



ஆறும் அது ஆழமில்ல
அது சேரும் கடலும் ஆழமில்ல
ஆழம் எது அய்யா
அந்த பொம்பள மனசுதான்யா

ஆழம் எது அய்யா
அந்த பொம்பள மனசுதான்யா

தண்ணியிலே கோலம் போடு
ஆடி காத்தில் தீபம் ஏத்து
ஆகாயத்தில் கோட்ட கட்டு
அந்தரத்தில் தோட்டம் போடு


ஆண்டவனை கூட்டி வந்து 
அவனை அங்கே காவல் போடு
அத்தனையும் நடக்குமய்யா
ஆசை வச்சா கிடைக்குமய்யா


ஆனா கிடைக்காது
நீ ஆச வைக்கும் மாது
அவ நெஞ்சு யாவும் வஞ்சமே



ஆறும் அது ஆழமில்ல
அது சேரும் கடலும் ஆழமில்ல
ஆழம் எது அய்யா
அந்த பொம்பள மனசுதான்யா

ஆழம் எது அய்யா
அந்த பொம்பள மனசுதான்யா

அடி அம்மாடி 
அதன் ஆழம் பார்த்ததாரு?
அடி ஆத்தாடி
அத பார்த்த பேர கூறு நீ

ஆறும் அது ஆழமில்ல
அது சேரும் கடலும் ஆழமில்ல
ஆழம் எது அய்யா
அந்த பொம்பள மனசுதான்யா

ஆழம் எது அய்யா
அந்த பொம்பள மனசுதான்யா

Wednesday, September 8, 2010

ஜுலி கணபதி - எனக்குப் பிடித்த பாடல்



படம் :ஜுலி கணபதி (2003)
இசை :இளையராஜா

பாடியவர் :ஸ்ரேயா கோஷல்

பாடல் வரி : நா.முத்துகுமார்




எனக்குப் பிடித்த பாடல் அது உனக்கும் பிடிக்குமே
உன் மனது போகும் வழியை எந்தன் மனது அறியுமே



என்னைப் பிடித்த நிலவும் அது உன்னைப் பிடிக்குமே
காதல் நோய்க்கு மருந்து தந்து நோயைக் கூட்டுமே
உதிர்வது... பூக்களா..?
மனது வளர்த்த சோலையில் காதல் பூக்கள் உதிருமா?



எனக்குப் பிடித்த பாடல் அது உனக்கும் பிடிக்குமே
உன் மனது போகும் வழியை எந்தன் மனது அறியுமே


என்னைப் பிடித்த நிலவும் அது உன்னைப் பிடிக்குமே
காதல் நோய்க்கு மருந்து தந்து நோயைக் கூட்டுமே
உதிர்வது... பூக்களா..?
மனது வளர்த்த சோலையில் காதல் பூக்கள் உதிருமா?

மெல்ல நெருங்கிடும் போது நீ தூர போகிறாய்!!
விட்டு விலகிடும் போது நீ நெருங்கி வருகிறாய்!!

காதலின் திருவிழா கண்களில் நடக்குதே
குழந்தையைப் போலவே இதயமும் தொலையுதே
வானத்தில் பறக்கிறேன் மோகத்தில் மிதக்கிறேன்
காதலால் நானும் ஓர் காத்தாடி ஆகிறேன்.



எனக்குப் பிடித்த பாடல் அது உனக்கும் பிடிக்குமே
உன் மனது போகும் வழியை எந்தன் மனது அறியுமே
என்னைப் பிடித்த நிலவும் அது உன்னைப் பிடிக்குமே
காதல் நோய்க்கு மருந்து தந்து நோயைக் கூட்டுமே

வெள்ளிக் கம்பிகளைப் போல ஒரு தூறல் போடுதோ
விண்ணும் மண்ணும் வந்து சேர அது பாலம் போடுதோ


நீர்த்துளி தீண்டினால் நீ தொடும் ஞாபகம்
நீ தொட்ட இடமெல்லாம் வீணையின் தேன் ஸ்வரம்
ஆயிரம் அருவியாய் அன்பிலே அணைக்கிறாய்
மேகம் போல எனக்குள்ளே மோகம் வளர்த்து கலைக்கிறாய்





எனக்குப் பிடித்த பாடல் அது உனக்கும் பிடிக்குமே
உன் மனது போகும் வழியை எந்தன் மனது அறியுமே

என்னைப் பிடித்த நிலவும் அது உன்னைப் பிடிக்குமே
காதல் நோய்க்கு மருந்து தந்து நோயைக் கூட்டுமே
உதிர்வது... பூக்களா..?
மனது வளர்த்த சோலையில் காதல் பூக்கள் உதிருமா?

எனக்குப் பிடித்த பாடல் அது உனக்கும் பிடிக்குமே
உன் மனது போகும் வழியை எந்தன் மனது அறியுமே

Popular Posts