Sunday, July 8, 2018

Vaaname Ellai - Jana Gana Mana

ப‌டம்: வானமே எல்லை (1991)
இசை: மரகதமணி
பாடியவர்கள்: S.P. பாலசுப்பிரமணியம், K.S.சித்ரா
பாடல்வரிகள்: வைரமுத்து




ஆஆ... ஆஆஆஆ ஆஆ ஆஆ...
ம்ம்... ம்ம்ம்ம்... ம்ம் ம்ம் ம்ம்...
தன்னன்னன்ன தனானானா
தன்னன்னன்ன தனானானா
தனா... நன‌னா...
தனா தனா... நன‌னா
தன்னனனனா.... 
தன்னனனனா.... 
தன்ன நனனா நனனா... நனனனனா...

ஜன கன மன என ஜதி சொல்லும் நேரம்...
ஜனனமும் மரணமும் சந்திக்கும் காலம்...
முடியும் நிகழ்ச்சி ஆஹா... மனதில் மகிழ்ச்சி...
துள்ளி எழவேண்டும்... ஏன் அழவேண்டும்...
இந்த பூமிக்கு நன்றிசொல்லி புறப்பட வேண்டும்...
ஜன கன மன என ஜதி சொல்லும் நேரம்...
ஜனனமும் மரணமும் சந்திக்கும் காலம்...


ஜனிக்கும் உயிர்கள் சாகாமல் போனால்
தாங்காது தாங்காது பூலோகம் என்னாவது
சுழலும் பூமி சுற்றாது சாமி
சுவாசிக்க முடியாது அப்போது என்செய்வது

காலம் வந்தால் எதுவும் இங்கு நடக்கும்...
நேரம் வந்தால் பறவை ரக்கை துடிக்கும்...

கிழக்கு வானம் அழைக்கும் நேரம்...
கிளிகள் கூட்டம் பறக்கட்டும்...
கீதங்கள் இசைக்கட்டும்...
திசை எங்கே அதோ அங்கே... அங்கே...
இந்த தரை வாழ்க்கை வெறும் சிறை வாழ்க்கை...
இந்த சிறைப்பட்ட சிலந்திக்கு விடுதலை வேட்கை... 

ஜன கன மன என ஜதி சொல்லும் நேரம்...
ஜனனமும் மரணமும் சந்திக்கும் காலம்...


மழையின் துளிகள் மண்ணோடு வீழ்ந்தால்
மழைக்கொண்ட சாவென்று வான்மேகம்தான் சொல்லுமா

நகரும் நதிகள் கடலோடு சேர்ந்தால்
நதிகொண்ட சாவென்று கடலென்ன தடைசொல்லுமா

சங்கமிக்க இயற்கை கற்றுத்தந்தது
சங்கமத்தால் உலகம் இன்னும் உள்ளது
பள்ளத்தில் சேரும் வெள்ளத்தைப் போலே
இயற்கையோடு கலக்கலாம் 

ஜகத்தையே ஜெயிக்கலாம்
திசை எங்கே... அதோ அங்கே... அங்கே...
இதில் தலை எங்கே... அட வால் எங்கே...
இந்த கேள்விக்கு விடை சொல்லும் ஞானிகள் எங்கே...

Popular Posts