Showing posts with label I. Show all posts
Showing posts with label I. Show all posts

Monday, November 3, 2014

I - Ennodu Nee Irundhaal

படம் : ஐ  (2014)
இசை : A.R.ரஹ்மான் 
பாடியவர்கள் : சித் ஸ்ரீராம், சுனிதா சாரதி
பாடல்வரிகள் : கபிலன்

Image result for I tamil movie

கா...ற்றை தரும் காடுகளே வேண்டாம் ஓ... 
தண்ணீர் தரும் கடல்கள் வேண்டாம்
நான் உண்ண உறங்கவே...
பூமி வேண்டாம்... வேண்டாம்
தேவை எதுவும் தேவை இல்லை
தேவை எந்தன் தேவதையே

என்னோடு நீ இருந்தால்
உயிரோடு நான் இருப்பேன்
என்னோடு நீ இருந்தால்
உயிரோடு நான் இருப்பேன்
என்னோடு நீ இருந்தால்
உயிரோடு நான் இருப்பேன்

இருப்பேன்... இருப்பேன் ...

என்னோடு நீ இருந்தால்.... நீ இருந்தால்
உயிரோடு நான் இருப்பேன்
என்னோடு நீ இருந்தால்
உயிரோடு நான் இருப்பேன்

என்னோடு நீ இருந்தால்
உயிரோடு நான் இருப்பேன்

ஓ... என்னை நான் யாரென்று சொன்னாலும் புரியாதே
என் காதல் நீ என்று யாருக்கும் தெரியாதே
நீ கேட்டால் உலகத்தை நான் வாங்கி தருவேனே
நீ இல்லா உலகத்தில் நான் வாழ மாட்டேனே
என்னோடு நீ இருந்தால்

ஓஓஓ... ஓஓ... ஓஓஓ... ஓஓ... 
ஓஓஓ... ஓஓ... ஓஓ... ஓ... 

உண்மைக் காதல்... யாதென்றால்
உன்னை என்னை... சொல்வேனே
நீயும் நானும்... பொய் என்றால்
காதலைத் தேடி... கொல்வேனே
கூந்தல் மீசை... ஒன்றாக
ஊசி நூலில்... தைப்பேனே
தேங்காய்க்குள்ளே... நீர் போல
நெஞ்சில் தேக்கி... வைப்பேனே

வத்திக் குச்சி காம்பில் ரோஜா பூக்குமா
பூனை தேனை கேட்டால் பூக்கள் ஏற்க்குமா
முதலை குளத்தில் மலராய் மலர்ந்தேன்
குழந்தை அருகே குரங்காய் பயந்தேன்

என்னோடு நீ இருந்தால்
உயிரோடு நான் இருப்பேன்
என்னோடு நீ இருந்தால்
உயிரோடு நான் இருப்பேன்

ஓஓஓஓஓ...ஓஓஓஓஓ...

ஓ... என்னோடு நீ இருந்தால்
உயிரோடு நான் இருப்பேன்
உயிரோடு நான் இருப்பேன்...
ஓ.............

என்னோடு நீ இருந்தால்
உயிரோடு நான் இருப்பேன்
என்னோடு நீ இருந்தால்
உயிரோடு நான் இருப்பேன் 
என்னோடு நீ இருந்தால்
உயிரோடு நான் இருப்பேன்

நீ இல்லா உலகத்தில் நான் வாழ மாட்டேனே
என்னோடு... நீ இருந்தால்...

Thursday, November 22, 2012

Iruvar - Hello Mister Ethirkatchi

படம் : இருவர் (1997)
இசை: A.R. ரஹ்மான்
பாடியவர் : ஹரிணி
பாடல் வரி : வைரமுத்து

ஹலோ மிஸ்டர் எதிர்க்கட்சி
கேள்விக்கு பதிலும் என்னாச்சு
காத்து காத்து நாளாச்சு பதினெட்டு வயசாச்சு

ஹலோ மிஸ்டர் எதிர்க்கட்சி
கேள்விக்கு பதிலும் என்னாச்சு
காத்து காத்து நாளாச்சு பதினெட்டு வயசாச்சு
காதலா காதலா உனை நான் விடமாட்டேன்
கைத்தளம் பற்றுவேன் பிரிய விடமாட்டேன்
கண்கள் மீனாட அழகு மீதாட விடவே விடமாட்டேன்
ஹலோ மிஸ்டர் எதிர்க்கட்சி
கேள்விக்கு பதிலும் என்னாச்சு
காத்து காத்து நாளாச்சு பதினெட்டு வயசாச்சு

கண்ணை நான் பிரிந்தால் காதல் பூ உதிர்ந்தால்
உள்ளத்தில் உலகப்போர் மூளுமே
நீ என்னை மறந்தால் நில்லாமல் மறைந்தால்
என் கண்கள் பாலைவனமாகுமே
பருவங்கள் சந்தித்தால் பிரிவொன்று உண்டாகும்
துருவங்கள் சந்தித்தால் பிரியாது என்னாளும்
கம்பன் பார்த்தால் காவியம் உருவாகும்

ஹலோ மிஸ்டர் எதிர்க்கட்சி
கேள்விக்கு பதிலும் என்னாச்சு
காத்து காத்து நாளாச்சு பதினெட்டு வயசாச்சு

மண்ணை வேர்கள் பிரிந்தாலும்
விண்ணை நீலம் பிரிந்தாலும்
கண்ணை மணிகள் பிரிந்தாலும்
உனை நான் பிரியேன்
சங்கம் தமிழைப் பிரிந்தாலும்
சத்தம் இசையைப் பிரிந்தாலும்
தாளம் சுருதியைப் பிரிந்தாலும்
உனை நான் பிரியேன்

உன்னோடு வாழத்தான் என் அன்னை பெற்றாலோ
உன்னோடு சேரத்தான் விதி மன்னன் இட்டானோ
உன்னைப் பார்த்த நாள் தான் பொன் நாளோ

ஹலோ மிஸ்டர் எதிர்க்கட்சி
கேள்விக்கு பதிலும் என்னாச்சு
காத்து காத்து நாளாச்சு பதினெட்டு வயசாச்சு

ஹலோ மிஸ்டர் எதிர்க்கட்சி
கேள்விக்கு பதிலும் என்னாச்சு

Sunday, September 4, 2011

Idaya Kovil - Vanuyarntha Solaiyile

படம் : இதயகோயில் (1985)
இசை : இளையராஜா
பாடியவர் : S.P.பால சுப்பிரமணியம்
பாடல் வரி : வைரமுத்து

Tamil Old Songs Lyrics - Nenjil Nindra Raagangal: Idhayam Oru ...

வானுயர்ந்த சோலையிலே நீ நடந்த பாதையெல்லாம் 
வானுயர்ந்த சோலையிலே நீ நடந்த பாதையெல்லாம்
நானிருந்து வாடுகின்றேன் நாவறண்டு பாடுகின்றேன் 
நானிருந்து வாடுகின்றேன் நாவறண்டு பாடுகின்றேன் 
வானுயர்ந்த சோலையிலே

வாழ்வான வாழ்வெனக்கு வந்ததென்று நானிருந்தேன்
பாழான நாளிதென்று பார்த்தவர்கள் கூறவில்லை
வாழ்வான வாழ்வெனக்கு வந்ததென்று நானிருந்தேன்
பாழான நாளிதென்று பார்த்தவர்கள் கூறவில்லை
தேனாகப் பேசியதும் சிரித்து விளையாடியதும்
தேனாகப் பேசியதும் சிரித்து விளையாடியதும்
வீணாகப் போகுமென்று யாரேனும் நினைக்கவில்லை

வானுயர்ந்த சோலையிலே நீ நடந்த பாதையெல்லாம் 
வானுயர்ந்த சோலையிலே நீ நடந்த பாதையெல்லாம்
நானிருந்து வாடுகின்றேன் நாவறண்டு பாடுகின்றேன் 
வானுயர்ந்த சோலையிலே

ஆற்றங்கரை ஓரத்திலே யாருமற்ற நேரத்திலே
வீற்றிருந்த மணற்பரப்பு வேதனையைத் தூண்டுதடி
ஆற்றங்கரை ஓரத்திலே யாருமற்ற நேரத்திலே
வீற்றிருந்த மணற்பரப்பு வேதனையைத் தூண்டுதடி
பூத்திருந்த மலரெடுத்து பூங்குழலில் சூடிவைத்து
பூத்திருந்த மலரெடுத்து பூங்குழலில் சூடிவைத்து
பார்த்திருந்த கோலமெல்லாம் பழங்கதை ஆனதடி

வானுயர்ந்த சோலையிலே நீ நடந்த பாதையெல்லாம் 
வானுயர்ந்த சோலையிலே நீ நடந்த பாதையெல்லாம்
நானிருந்து வாடுகின்றேன் நாவறண்டு பாடுகின்றேன் 
நானிருந்து வாடுகின்றேன் நாவறண்டு பாடுகின்றேன் 
வானுயர்ந்த சோலையிலே

Monday, August 15, 2011

இந்திரா - அச்சம் அச்சம் இல்லை

படம் : இந்திரா (1995)
இசை : A.R. ரஹ்மான்
பாடியவர் : அனுராதாஸ்ரீராம், G.V. பிரகாஷ், எஸ்தர், ஷா, சுஜாதா, ஸ்வேதா
பாடல் வரி : வைரமுத்து

ராரரா… ராரரா…
ராரரா… ராரரா…

விடியாத இரவென்று எதுவுமில்லை
இல்லை இல்லை இல்லை இல்லை
முடியாத துயரென்று எதுவுமில்லை
இல்லை இல்லை இல்லை இல்லை
வடியாத வெள்ளமென்று எதுவுமில்லை
இல்லை இல்லை இல்லை இல்லை
வாடாத வாழ்க்கையென்று எதுவுமில்லை
இல்லை இல்லை இல்லை இல்லை
ராரரா…

ஹே அச்சம் அச்சம் இல்லை இனி அடிமை எண்ணம் இல்லை
நம் காலம் இங்கே கூடிப்போச்சு கண்ணீர் மிச்சமில்லையே
ஹே அச்சம் அச்சம் இல்லை இனி அடிமை எண்ணம் இல்லை
நம் காலம் இங்கே கூடிப்போச்சு கண்ணீர் மிச்சமில்லையே

காலம் மாறிப்போச்சு நம் கண்ணீர் மாறிப்போச்சு
நாளை நல்ல நாளை என்ற நம்பிக்கை உண்டாச்சு
காலம் மாறிப்போச்சு நம் கண்ணீர் மாறிப்போச்சு
நாளை நல்ல நாளை என்ற நம்பிக்கை உண்டாச்சு

ஹே அச்சம் அச்சம் இல்லை இனி அடிமை எண்ணம் இல்லை
நம் காலம் இங்கே கூடிப்போச்சு கண்ணீர் மிச்சமில்லையே

அந்த நிலா நிலா நிலா நிலா நீ கொண்டோடி வா
அந்த நிலா நிலா நிலா நிலா நீ கொண்டோடி வா

பட்டாம்பூச்சி சுற்றும் மனிதன் என்ன மட்டம் 
அட இன்னும் கொஞ்சும் போனால் என்ன வானம் தலையில் தட்டும்
பட்டாம்பூச்சி சுற்றும் மனிதன் என்ன மட்டம் 
அட இன்னும் கொஞ்சும் போனால் என்ன வானம் தலையில் தட்டும்

வாடி இளைய செல்லியே… வாடி இளைய செல்லியே
நம் காலம் சொல்லும் நம்மை வாழச்சொல்லியே
அம்மா அழகுக் கண்ணம்மா... அம்மா அழகுக் கண்ணம்மா
இது நம்ம பூமியென்று அழுத்திச்சொல்லம்மா

ஹே அச்சம் அச்சம் இல்லை இனி அடிமை எண்ணம் இல்லை
நம் காலம் இங்கே கூடிப்போச்சு கண்ணீர் மிச்சமில்லையே
ஹே அச்சம் அச்சம் இல்லை இனி அடிமை எண்ணம் இல்லை
நம் காலம் இங்கே கூடிப்போச்சு கண்ணீர் மிச்சமில்லையே

காலம் மாறிப்போச்சு நம் கண்ணீர் மாறிப்போச்சு
நாளை நல்ல நாளை என்ற நம்பிக்கை உண்டாச்சு
காலம் மாறிப்போச்சு நம் கண்ணீர் மாறிப்போச்சு
நாளை நல்ல நாளை என்ற நம்பிக்கை உண்டாச்சு

லல்லல்லல்லோ பட்டாம்பூச்சி
லல்லல்லல்லோ பட்டாம்பூச்சி 

வானம் பக்கம் இனி வாழ்க்கை ரொம்பப் பக்கம்
அச்சம் அச்சம் துச்சம் என்றால் பக்கம் பக்கம் சொர்க்கம்
வானம் பக்கம் இனி வாழ்க்கை ரொம்பப் பக்கம்
அச்சம் அச்சம் துச்சம் என்றால் பக்கம் பக்கம் சொர்க்கம்
பூமி தொறந்துகெடக்கு அட மனுசப்பய மனசு பூட்டிக்கெடக்கு
பூமி தொறந்துகெடக்கு அட மனுசப்பய மனசு பூட்டிக்கெடக்கு

இனி அச்சம் அச்சம் இல்லை இனி அடிமை எண்ணம் இல்லை
இனி அச்சம் அச்சம் இல்லை இனி அடிமை எண்ணம் இல்லை
நம் காலம் இங்கே கூடிப்போச்சு கண்ணீர் மிச்சமில்லையே

இன்பக்காற்று வீசட்டும் எட்டுத்திக்கும் பரவட்டும்
பரவட்டும் பரவட்டும் பரவட்டும் பரவட்டும்
மனிதப்பூக்கள் மலரட்டும் மனங்கள் இன்னும் விரியட்டும்
விரியட்டும் விரியட்டும் விரியட்டும் விரியட்டும்

இன்பக்காற்று வீசட்டும் எட்டுத்திக்கும் பரவட்டும்
மனிதப்பூக்கள் மலரட்டும் மனங்கள் இன்னும் விரியட்டும்
குற்றம் குற்றம் எரியட்டும் சுற்றம் சுற்றம் வாழட்டும்
வட்டம் வட்டம் விரியட்டும் வானம் தொட்டு வளரட்டும்
வட்டம் வட்டம் விரியட்டும் வானம் தொட்டு வளரட்டும்

கோழிச்சிறகில் குஞ்சைப் போலவே பூமிப்பந்து உறங்கட்டும்
ரத்தம் சிந்தா நூற்றாண்டு புத்தம் புதிதாய் விடியட்டும்

Saturday, August 13, 2011

I - Alphabet Movie Title

இளமைக்காலங்கள் (1983)

இன்று நீ நாளை நான் (1983)

இணைந்த கைகள் (1990)
இதயத்தை திருடாதே (1989)

இதய தாமரை (1989)

இது நம்ம பூமி  (1992)

இங்கேயும் ஒரு கங்கை (1984)

Saturday, July 30, 2011

Inaintha Kaigal - Anthi Nera Thendral

படம் : இணைந்த கைகள் (1990)
இசை : மனோஜ் பட்நாகர்

பாடியவர்க‌ள் :  S.P. பாலசுப்பிரமணியம், ஜெயசந்திரன்

பாடல் வரிக‌ள்: ஆபாவாணன்

அந்தி நேர தென்றல் காற்று
அள்ளி தந்த தாலாட்டு
அந்தி நேர தென்றல் காற்று
அள்ளி தந்த தாலாட்டு
தங்கமகன் வரவைக் கேட்டு
தந்தை உள்ளம் பாடும் பாட்டு
தங்கமகன் வரவைக் கேட்டு
தந்தை உள்ளம் பாடும் பாட்டு

அந்தி நேர தென்றல் காற்று
அள்ளி தந்த தாலாட்டு
அந்தி நேர தென்றல் காற்று
அள்ளி தந்த தாலாட்டு

உயிர் கொடுத்த தந்தை இங்கே
உரு கொடுத்த அன்னை அங்கே
இன்பதுன்பம் எது வந்தாலும்
பங்கு கொள்ளும் சொந்தம் எங்கே

தாலாட்ட அன்னை உண்டு
சீராட்ட தந்தை உண்டு
இன்பதுன்பம் எது வந்தாலும்
பங்கு கொள்ள நண்பன் உண்டு
ஒரு தாயின் பிள்ளை போல
உருவான சொந்தம் கொண்டு
வரும் காலம் யாவும் வெல்ல
இணைந்த கைகள் என்றும் உண்டு

அந்தி நேர தென்றல் காற்று
அள்ளி தந்த தாலாட்டு
அந்தி நேர தென்றல் காற்று
அள்ளி தந்த தாலாட்டு

ஆராரோ... ஆரிராரிராராரோ...
ஆரிராராரோ... ஆரிராரிராராரோ...

ஆராரோ... ஆரிராரிராராரோ...
ஆரிராராரோ... ஆரிராரிராராரோ...

உன் மகனை தோளில் கொண்டு
உரிமையோடு பாடுவதென்று
அந்நாளில் துணையாய் நின்று
பங்குக் கொள்ள நானும் உண்டு

தத்துப் பிள்ளை இவனை கண்டேன்
தாய்மை நெஞ்சம் நானும் கொண்டேன்
பத்து திங்கள் முடிந்த பின்னே
முத்து பிள்ளை அவனை காண்பேன்
உறங்காத கண்ணில் இன்று
ஒளி வந்து சேரக் கண்டேன்
பரிவான நண்பன் தந்த
கனிவான தோள்கள் கண்டேன்

அந்தி நேர தென்றல் காற்று
அள்ளி தந்த தாலாட்டு
அந்தி நேர தென்றல் காற்று
அள்ளி தந்த தாலாட்டு
தங்கமகன் வரவைக் கேட்டு
தந்தை உள்ளம் பாடும் பாட்டு
தங்கமகன் வரவைக் கேட்டு
தந்தை உள்ளம் பாடும் பாட்டு

அந்தி நேர தென்றல் காற்று
அள்ளி தந்த தாலாட்டு
அந்தி நேர தென்றல் காற்று
அள்ளி தந்த தாலாட்டு

Monday, July 11, 2011

Idhu Namma Bhoomi - Oru Pokiri Raathiri

படம் : இது நம்ம பூமி  (1992)
இசை : இளையராஜா
பாடியவர்க‌ள் : மனோ, சொர்ணலதா
பாடல் வரிக‌ள் : வாலி

ஒரு போக்கிரி ராத்திரி 
பார்க்கிற பார்வை தான்
ன்ன தாக்குது கேட்குது 
பூக்குது ஆசை தான்
பிறக்குது சபலம் சபலம்
கொடுப்பது சுலபம் சுலபம்
மனக்காயங்கள் ஆறாதோ 
காதலால் தான்
ஒரு ஆறுதல் கூறினேன் 
ஆதலால் தான்
ஒரு போக்கிரி ராத்திரி 
பார்க்கிற பார்வை தான்

கல்லூரி வாசலிலே நட்டு 
வைத்த காதல் விதை
காயாகி கனிந்து வரும் 
காலம் உள்ள காலம் வரை

கல்யாண பந்தலுக்கு 
காத்திருக்கும் வாழை இது
கண்ணா உன் கை அணைக்க 
பூத்திருக்கும் தாழை இது

சிங்கார மேனி தான் 
சொக்க வெள்ளி பாற்குடம்

சிந்தாமல் நீ இதை 
அள்ளுகின்ற நாள் வரும்

எப்போது ஆரம்பம் 
அந்தப்புர நாடகம்

ஏன் இந்த தாமதம் 
என்ன சொல்ல காரணம்

காத்திரு கண்ணே 
கொடி நாட்டலாம் ஹோய்...

காதலே வெல்லும் 
எனக் காட்டலாம் ஹோய்...

ஒரு போக்கிரி ராத்திரி 
பார்க்கிற பார்வை தான்

ன்ன தாக்குது கேட்குது 
பூக்குது ஆசை தான்

என்னோடு நீ இருந்தால் 
நெஞ்சுக்கோரு நிம்மதி தான்
இல்லாமல் தனித்திருந்தால் 
அம்புப்பட்ட பைங்க்கிளி தான்

எப்போதும் என் மனது 
உன்னைச் சுற்றி கோலமிடும்
தன்னந்தனி என்றிருந்தால் 
தத்தளித்து ஓலமிடும்

என் கூந்தல் வேண்டுது 
உன்னுடைய பூச்சரம்
எந்நாளில் கை வரும் 
உன்னுடைய மோதிரம்

என் தேகம் யாவுமே 
உன்னுடைய சீதனம்
பார்த்தாலும் தீருமோ 
உன் அழகு நூதனம்

காதலால் கூவும் 
ஒரு பூங்குயில் ஹோய்...

பூங்குயில் மேவும் 
இளம் ஆண் குயில் ஹோய்...

ஒரு போக்கிரி ராத்திரி 
பார்க்கிற பார்வை தான்
ன்ன தாக்குது கேட்குது 
பூக்குது ஆசை தான்
பிறக்குது சபலம் சபலம்
கொடுப்பது சுலபம் சுலபம்
மனக்காயங்கள் ஆறாதோ 
காதலால் தான்
ஒரு ஆறுதல் கூறினேன் 
ஆதலால் தான்

ஒரு போக்கிரி ராத்திரி 
பார்க்கிற பார்வை தான்

ன்ன தாக்குது கேட்குது 
பூக்குது ஆசை தான்

Popular Posts