Showing posts with label Ambika. Show all posts
Showing posts with label Ambika. Show all posts

Saturday, December 13, 2014

Raagangal Maaruvathillai - Vizhigal Meeno

படம்: ராகங்கள் மாறுவதில்லை (1983)
இசை: இளையராஜா
பாடியவர்: S.P.பால சுப்பிரமணியம்
பாடல்வரிகள்: வைரமுத்து









விழிகள் மீனோ மொழிகள் தேனோ

நிலவின் மகளே நீதானோ

விழிகள் மீனோ மொழிகள் தேனோ

நிலவின் மகளே நீதானோ
பூக்களின் மேலே தேவதை போலே
நீந்தி வரும் முகிலோ ஓஓஓஓஒ
விழிகள் மீனோ மொழிகள் தேனோ
நிலவின் மகளே நீதானோ


குழலில் மேகம் குடியிருந்தாலும்

விழியில் ஏதோ புதுவித தாகம்
பௌர்னமி பார்வை பொழிகிறதே
மனந்தனில் இன்பம் வழிகிறதே
பெண்மையின் பாகம் தாமரையாகும்
பெண்மையின் பாகம் தாமரையாகும்
இடையின் பாகம் நூலாகும்
விழிகள் மீனோ மொழிகள் தேனோ
நிலவின் மகளே நீ...தானோ
பூக்களின் மேலே தேவதை போலே
நீந்தி வரும் முகிலோ 

விழிகள் மீனோ மொழிகள் தேனோ

நிலவின் மகளே நீதானோ


அடடா கால்கள் அழகிய வாழை

நினைத்தால் மணக்கும் ரகசிய சோலை
நகங்கள் யாவும் பிறை நிலவு
இவள் தான் இங்கே கலை நிலவு
நாயகி பாதம் நாயகன் வேதம் 
நாயகி பாதம் நாயகன் வேதம் 
நீயே காதல் தேவாரம்

விழிகள் மீனோ மொழிகள் தேனோ

நிலவின் மகளே நீதானோ
பூக்களின் மேலே தேவதை போலே
நீந்தி வரும் முகிலோ ஓஓஓஓஒ
விழிகள் மீனோ மொழிகள் தேனோ
நிலவின் மகளே நீ...தா...னோ

Thursday, February 7, 2013

Idaya Kovil - Kootathile Kovil Pura

படம் : இதய கோவில் (1985)
இசை : இளையராஜா
பாடியவர்கள் : S.P.பாலசுப்ரமணியம்
பாடல்வரிகள் முத்துலிங்கம்


Tamil Old Songs Lyrics - Nenjil Nindra Raagangal: Idhayam Oru ...



கூட்டத்துலே கோவில் புறா யாரை இங்கு தேடுதம்மா
கூட்டத்துலே கோவில் புறா யாரை இங்கு தேடுதம்மா
கூட்டத்துலே கோவில் புறா யாரை இங்கு தேடுதம்மா
கொலுசுச் சத்தம் கேட்கையிலே 
மனம் தந்தியடிக்குது தந்தியடிக்குது
குமரிப் பெண்ணைப் பார்க்கையிலே 
ஒளி மின்னலடிக்குது மின்னலடிக்குது
கூட்டத்துலே கோவில் புறா யாரை இங்கு தேடுதம்மா
கூட்டத்துலே கோவில் புறா யாரை இங்கு தேடுதம்மா

ஆ ஆ ஆ ஆ... ஆ ஆ ஆ ஆ...
ச ப க ம ப... ச ப க ம ப... ப ச நி த நி த ப...

நான் பாடும் ராகங்கள் யார் தந்தது
என் காதல் தேவி நீ தந்தது
உன் பார்வை என் நெஞ்சில் யாழ் மீட்டுது
உன் ஆசை என்னைத் தாலாட்டுது
பூங்குயிலே… 
பூங்குயிலே உந்தன் பாதையிலே 
ஆனந்தத் தேன் பொழிவேன்
பாவை உன்னை எண்ணிக்கொண்டு 
பாடுகின்றேன் பாடலொன்று
நெஞ்சுக்குள்ளே நீயும் வந்து 
வாழுகின்றாய் கோவில்கொண்டு
ஆனந்த மேடையில் பூவிழி ஜாடையில்
ஆயிரம் காவிய நாடகமாடிட எண்ணுது என் மனமே
கூட்டத்துலே கோவில் புறா யாரை இங்கு தேடுதம்மா
கூட்டத்துலே கோவில் புறா யாரை இங்கு தேடுதம்மா

தத்தித் தகதாம் தளாங்கு தகதாம் தரிகிட தகதாம் 
தஜம் தஜம் தஜம் தஜம் 

ஆ ஆ ஆ... ஆ ஆ ஆ...

நி க த... ச ரி க... ச க ரி க ப... த ச... நி த...

நீதானே நானாடும் பிருந்தாவனம்

நின்றாடும் தேகம் ரோஜாவனம்
ஆகாயம் காணாத பொன் மேகமே
என் பாடல் உன்னாலே உயிர் வாழுமே
கன்னிப்பெண்ணே நீயும் இல்லையென்றால்
கானமழை வருமோ
தாமரைப்பூ காலெடுத்து நீ நடக்கும் வேளையிலே
தாளத்துடன் சந்தங்களைக் 
கற்றுக்கொண்டேன் பொன்மயிலே
என்னிசை தீபத்தை ஏற்றிய பொன்மயில்
வான்மழை போல் இந்தப் பாவலன்
நெஞ்சினில் வாழிய வாழியவே

கூட்டத்துலே கோவில் புறா யாரை இங்கு தேடுதம்மா
கூட்டத்துலே கோவில் புறா யாரை இங்கு தேடுதம்மா
கொலுசுச் சத்தம் கேட்கையிலே 
மனம் தந்தியடிக்குது தந்தியடிக்குது
குமரிப் பெண்ணைப் பார்க்கையிலே 
ஒளி மின்னலடிக்குது மின்னலடிக்குது

ச க ம ப த நி ச நி ச க ம
கூட்டத்துலே கோவில் புறா
நி ச நி த த த நி த நி ப ப ம க நி த ப ச நி த நி ச க ம ப
கூட்டத்துலே கோவில் புறா
க ம க ம க ச  க ம ப ம க ச  ப ப நி நி  
 த த ச ச   நி நி  க க  ப த நி  ச க ம ப
கூட்டத்துலே கோவில் புறா

தத்தித்தகதிமி தளாங்கு தகதிமி தகதித் தகதிமி தோம் தித்தோம்
தித் தகிட தகிட தகிட தகிட
தகிட ததுமி தஜனு தனுத தஜம் தஜம் தஜம் தகிட
தகதாம் தத் தரிகிட தரிகிடதத்
திரிகிட தரிகிடதோம் க்ரிகிட தரிகிடதோம்
தத்தகதிமி தகதிமி தக திரிகிடதோம்

திரிகிடதோம் திரிகிடதோம் திரிகிடதோம்

கூட்டத்துலே கோவில் புறா யாரை இங்கு தேடுதம்மா

கூட்டத்துலே கோவில் புறா யாரை இங்கு தேடுதம்மா

Sunday, September 4, 2011

Idaya Kovil - Vanuyarntha Solaiyile

படம் : இதயகோயில் (1985)
இசை : இளையராஜா
பாடியவர் : S.P.பால சுப்பிரமணியம்
பாடல் வரி : வைரமுத்து


Tamil Old Songs Lyrics - Nenjil Nindra Raagangal: Idhayam Oru ...



வானுயர்ந்த சோலையிலே நீ நடந்த பாதையெல்லாம் 
வானுயர்ந்த சோலையிலே நீ நடந்த பாதையெல்லாம்
நானிருந்து வாடுகின்றேன் நாவறண்டு பாடுகின்றேன் 
நானிருந்து வாடுகின்றேன் நாவறண்டு பாடுகின்றேன் 
வானுயர்ந்த சோலையிலே


வாழ்வான வாழ்வெனக்கு வந்ததென்று நானிருந்தேன்
பாழான நாளிதென்று பார்த்தவர்கள் கூறவில்லை
வாழ்வான வாழ்வெனக்கு வந்ததென்று நானிருந்தேன்
பாழான நாளிதென்று பார்த்தவர்கள் கூறவில்லை
தேனாகப் பேசியதும் சிரித்து விளையாடியதும்
தேனாகப் பேசியதும் சிரித்து விளையாடியதும்
வீணாகப் போகுமென்று யாரேனும் நினைக்கவில்லை



வானுயர்ந்த சோலையிலே நீ நடந்த பாதையெல்லாம் 
வானுயர்ந்த சோலையிலே நீ நடந்த பாதையெல்லாம்
நானிருந்து வாடுகின்றேன் நாவறண்டு பாடுகின்றேன் 
வானுயர்ந்த சோலையிலே

ஆற்றங்கரை ஓரத்திலே யாருமற்ற நேரத்திலே
வீற்றிருந்த மணற்பரப்பு வேதனையைத் தூண்டுதடி
ஆற்றங்கரை ஓரத்திலே யாருமற்ற நேரத்திலே
வீற்றிருந்த மணற்பரப்பு வேதனையைத் தூண்டுதடி
பூத்திருந்த மலரெடுத்து பூங்குழலில் சூடிவைத்து
பூத்திருந்த மலரெடுத்து பூங்குழலில் சூடிவைத்து
பார்த்திருந்த கோலமெல்லாம் பழங்கதை ஆனதடி

வானுயர்ந்த சோலையிலே நீ நடந்த பாதையெல்லாம் 
வானுயர்ந்த சோலையிலே நீ நடந்த பாதையெல்லாம்
நானிருந்து வாடுகின்றேன் நாவறண்டு பாடுகின்றேன் 
நானிருந்து வாடுகின்றேன் நாவறண்டு பாடுகின்றேன் 
வானுயர்ந்த சோலையிலே

Wednesday, August 24, 2011

Anbulla Rajnikanth - Then Poove Poove

படம் : அன்புள்ள ரஜினிகாந்த் (1984)
இசை : இளையராஜா
பாடியவர் : கிருஷ்ணசந்தர், S. ஜானகி
பாடல் வரி :  வைரமுத்து

Image result for Anbulla Rajinikanth


தேன் பூவே பூவே வா தென்றல் தேட
பூந்தேனே தேனே வா தாகம் கூட
நான் சொல்லும் கானம் நீ தந்த தானம்
நான் சொல்லும் கானம் நீ தந்த தானம்
நூறு ராகம் நெஞ்சோடு தான்

உனை நினைத்தேன் பூவே பூவே வா தென்றல் தேட

பனி விழும் புல்வெளியில் தினம் தினம் பொன் பொழுதில்

கனி விழும் உன் மடியில் கலந்திடும் உன் உறவில்

நானும் கம்பன் தான் கொஞ்சும் போது

ஹோய்... கொஞ்சும் இன்பம் போல் வேறு ஏது

தேவ தேவி என்னோடு தான்


உனை நினைத்தேன் பூவே பூவே வா தென்றல் தேட

பூந்தேனே தேனே வா தாகம் கூட

இடையினில் உன் விரல்கள் எழுதிடும் என் சுகங்கள்

அணைக்கையில் உன் உடலில் அழுந்திடும் என் நகங்கள்

மீண்டும் மீண்டும் நான் வேண்டும் போது

ஆ.. ஹ.. ஹா... காதல் யோகம் தான் கட்டில் மீது

காண வேண்டும் உன்னோடு தான்

உனை நினைத்தேன் பூவே பூவே வா தென்றல் தேட
பூந்தேனே தேனே வா தாகம் கூட

நான் சொல்லும் கானம் நீ தந்த தானம்
நான் சொல்லும் கானம் நீ தந்த தானம்
நூறு ராகம் நெஞ்சோடு தான்

உனை நினைத்தேன் பூவே பூவே வா

லா.. ல.. லா.. லா..

லா லா லா லா லா
லா ல லா லா

Saturday, January 8, 2011

காக்கி சட்டை - கண்மணியே பேசு



படம் : காக்கி சட்டை (1985)
இசை : இளையராஜா

பாடியவர் :  S.P.பாலசுப்பிரமணியம், S.ஜானகி
பாடல் வரி : வைரமுத்து




கண்மணியே பேசு...மெளனம் என்ன கூறு
கண்மணியே பேசு...மெளனம் என்ன கூறு
கண்ணங்கள் புது ரோசாப்பூ 
உன் கண்கள் இரு ஊதாப்பூ 
இது பூவில் பூத்த பூவையோ 


கண்மணியே பேசு...மெளனம் என்ன கூறு


அந்தப்புரம் இந்தப்புரமோ விழி மை இட்டு 
அந்தி கலை சொல்லித்தருமோ இரு கை தொட்டு
அந்தப்புரம் இந்தப்புரமோ விழி மை இட்டு 
அந்தி கலை சொல்லித்தருமோ இரு கை தொட்டு 

ஆயிரம் பொன் பூக்கும் எந்தன் தேகம் எங்குமே... 
லலலலலாஅ 
அங்குலம் கெடாமல் இந்த கங்கை பொங்குமே... 
லலலலலாஅ 
தோளிலும் என் மார்பிலும் கொஞ்சிடும் என் அஞ்சுகம் 
நான் நீ ஏது ஹோய் ஹோய்.. 


கண்மணியே பேசு.. 


ம்ம்ம்ம்ம்ம் 


மெளனம் என்ன கூறு 
கண்ணங்கள் புது ரோசாப்பூ 


ஹாஆஆஅ 


உன் கண்கள் இரு ஊதாப்பூ 


ம்ம்ம்ம்ம்ம் 


இது பூவில் பூத்த பூவையே 



கண்மணியே பேசு...மெளனம் என்ன கூறு

உன்னைகொடு என்னை தருவேன் ஒரு தாலாட்டில்
பிள்ளைத் தமிழ் சொல்லித் தருவேன் விழி மூடாமல் 

உன்னைகொடு என்னை தருவேன் ஒரு தாலாட்டில்
பிள்ளைத் தமிழ் சொல்லித் தருவேன் விழி மூடாமல்

கண்களால் என் தேகம் எங்கும் காயம் செய்கிறாய் 


லலலலலாஅ 


கைகளால் என் பாதம் நீவி ஆரச் செய்கிறாய் 


லலலலலாஅ 


வானகம்...இவ்வையகம்.. யாவுமே என் கையகம்.. 
நீ தான் தந்தாய் ஹோ... ஹோ... 



கண்மணியே பேசு...மெளனம் என்ன கூறு


கண்மணியே பேசு...மெளனம் என்ன கூறு


கண்ணங்கள் புது ரோசாப்பூ 

ஹாஆஆஅ 



உன் கண்கள் இரு ஊதாப்பூ 

இது பூவில் பூத்த பூவையே  
கண்மணியே பேசு...மெளனம் என்ன கூறு

Saturday, January 1, 2011

Idaya Kovil - Naan Paadum

படம் : இதயகோயில் (1985)
இசை : இளையராஜா
பாடியவர்கள் : S.P.பால சுப்பிரமணியம்
பாடல் வரிகள் : வைரமுத்து

Tamil Old Songs Lyrics - Nenjil Nindra Raagangal: Idhayam Oru ...




நான் பாடும் மௌன ராகம்.... 
என் காதல் ராணி இன்னும்.....


நான் பாடும் மௌன ராகம் கேட்கவில்லையா
என் காதல் ராணி இன்னும் தூங்கவில்லையா
கண்ணீரில் உன்னைத் தேடுகின்றேன்
என்னோடு நானே பாடுகின்றேன்


நான் பாடும் மௌன ராகம் கேட்கவில்லையா
என் காதல் ராணி இன்னும் தூங்கவில்லையா


உன்னைக் கண்டு தென்றலும் நின்று போனதுண்டு
உன்னைக் காண வெண்ணிலா வந்து போவதுண்டு
ஏன் தேவி இன்று நீ என்னைக் கொல்கிறாய்
முள் மீது ஏனடி தூங்கச் சொல்கிறாய்
உன்னைத் தேடித் தேடியே எந்தன் ஆவி போனது
கூடுதானே இங்கு பாடுது
கூடு இன்று குயிலைத் தானே தேடுது


நான் பாடும் மௌன ராகம் கேட்கவில்லையா
என் காதல் ராணி இன்னும் தூங்கவில்லையா


கண்கள் என்னும் சோலையில் காதல் வாங்கி வந்தேன்
வாங்கி வந்த பின்பு தான் சாபம் என்று கண்டேன்
என் சாபம் தீரவே நீயும் இல்லையே
என் சோகம் பாடவே ராகம் இல்லையே
பூவும் வீழ்ந்து போனது காம்பு என்ன வாழ்வது
காலம் என்னைக் கேள்வி கேட்குது
கேள்வி இன்று கேலியாகிப் போனது



நான் பாடும் மௌன ராகம் கேட்கவில்லையா
என் காதல் ராணி இன்னும் தூங்கவில்லையா
கண்ணீரில் உன்னைத் தேடுகின்றேன்
என்னோடு நானே பாடுகின்றேன்



நான் பாடும் மௌன ராகம் கேட்கவில்லையா
என் காதல் ராணி இன்னும் தூங்கவில்லையா


Popular Posts