Monday, July 11, 2011

Idhu Namma Bhoomi - Oru Pokiri Raathiri

படம் : இது நம்ம பூமி  (1992)
இசை : இளையராஜா
பாடியவர்க‌ள் : மனோ, சொர்ணலதா
பாடல் வரிக‌ள் : வாலி







ஒரு போக்கிரி ராத்திரி 
பார்க்கிற பார்வை தான்
ன்ன தாக்குது கேட்குது 
பூக்குது ஆசை தான்
பிறக்குது சபலம் சபலம்
கொடுப்பது சுலபம் சுலபம்
மனக்காயங்கள் ஆறாதோ 
காதலால் தான்
ஒரு ஆறுதல் கூறினேன் 
ஆதலால் தான்
ஒரு போக்கிரி ராத்திரி 
பார்க்கிற பார்வை தான்



கல்லூரி வாசலிலே நட்டு 
வைத்த காதல் விதை
காயாகி கனிந்து வரும் 
காலம் உள்ள காலம் வரை

கல்யாண பந்தலுக்கு 
காத்திருக்கும் வாழை இது
கண்ணா உன் கை அணைக்க 
பூத்திருக்கும் தாழை இது

சிங்கார மேனி தான் 
சொக்க வெள்ளி பாற்குடம்

சிந்தாமல் நீ இதை 
அள்ளுகின்ற நாள் வரும்

எப்போது ஆரம்பம் 
அந்தப்புர நாடகம்

ஏன் இந்த தாமதம் 
என்ன சொல்ல காரணம்

காத்திரு கண்ணே 
கொடி நாட்டலாம் ஹோய்...

காதலே வெல்லும் 
எனக் காட்டலாம் ஹோய்...


ஒரு போக்கிரி ராத்திரி 
பார்க்கிற பார்வை தான்

ன்ன தாக்குது கேட்குது 
பூக்குது ஆசை தான்



என்னோடு நீ இருந்தால் 
நெஞ்சுக்கோரு நிம்மதி தான்
இல்லாமல் தனித்திருந்தால் 
அம்புப்பட்ட பைங்க்கிளி தான்

எப்போதும் என் மனது 
உன்னைச் சுற்றி கோலமிடும்
தன்னந்தனி என்றிருந்தால் 
தத்தளித்து ஓலமிடும்

என் கூந்தல் வேண்டுது 
உன்னுடைய பூச்சரம்
எந்நாளில் கை வரும் 
உன்னுடைய மோதிரம்

என் தேகம் யாவுமே 
உன்னுடைய சீதனம்
பார்த்தாலும் தீருமோ 
உன் அழகு நூதனம்

காதலால் கூவும் 
ஒரு பூங்குயில் ஹோய்...

பூங்குயில் மேவும் 
இளம் ஆண் குயில் ஹோய்...

ஒரு போக்கிரி ராத்திரி 
பார்க்கிற பார்வை தான்
ன்ன தாக்குது கேட்குது 
பூக்குது ஆசை தான்
பிறக்குது சபலம் சபலம்
கொடுப்பது சுலபம் சுலபம்
மனக்காயங்கள் ஆறாதோ 
காதலால் தான்
ஒரு ஆறுதல் கூறினேன் 
ஆதலால் தான்

ஒரு போக்கிரி ராத்திரி 
பார்க்கிற பார்வை தான்

ன்ன தாக்குது கேட்குது 
பூக்குது ஆசை தான்

Popular Posts