Showing posts with label Kushboo. Show all posts
Showing posts with label Kushboo. Show all posts

Saturday, September 1, 2018

Ettupatti Rasa - Panju Mittai

படம்: எட்டுப்பட்டி ராசா (1997)
இசை: தேவா
பாடகர்: S. ஜானகி, மலேசியா வாசுதேவன்
பாடல்வரிகள்: கஸ்தூரி ராஜா

Ettupatti Rasa DVD cover.jpg



பஞ்சு மிட்டாய் சீல கட்டி
பட்டுவண்ண லவுக்க போட்டு
அடி பஞ்சு மிட்டாய் சீல கட்டி
பட்டுவண்ண லவுக்க போட்டு
கஞ்சி கொண்டு போறவளே
நெஞ்சுக்குள்ள நீ வரியா

தும்ப பூவு மல்லு வேட்டி... ஆஹா
தொட தெரிய ஏத்தி கட்டி... ஓஹோ
வம்பு பண்ண வாறவுரே 
வழி விடுங்க நேரமாச்சு... அப்டி போடு


ஏழை புத்திக்குள்ள சுத்துது கிறுக்கு
ன் இடுப்பு கொசுவத்துல சூட்சமும் இருக்கு
நீ நெளிஞ்சு போகயிலே நெஞ்சுல சுளுக்கு

வாட காத்தடிச்சு வாட்டுது மாமா
என்கூட வந்து குச்சுக்குள்ள ஒட்டிக்க மாமா
ன் கூத‌லுக்கு சூடு கொஞ்சம் ஏத்திக்க மாமா

ன் கண்ணு ரெண்டும் நவா பழம் 
காச்சு இருக்கு கொய்யா பழம்
மூடி வைக்காதே திங்காம வீணடிக்காதே

அட புல் அறுக்க போகையில
புள்ள வரம் கேட்க வந்தேன் 
தள்ளி நிக்காத மனச கிள்ளி வைக்காத

அடியே... பஞ்சு மிட்டாய் சீல கட்டி
பட்டுவண்ண லவுக்க போட்டு
கஞ்சி கொண்டு போறவளே
நெஞ்சுக்குள்ள நீ வாரியா புள்ள


அம்மாடியோ... யப்பா.... அடியாத்தே...

ஓரஞ்சாரம் பாத்து ஒதுங்கனும் பதமா
பின்ன ஓட தண்ணிக்குள்ள முங்கி குளிக்கனும் சுகமா
மெல்ல லவகமா ன் முதுக தேய்க்கனும் இதமா

மாமா பம்முறீயே பொழுதுக்கு மேல
நீ கம்மன்கட்டு மூலையில கள்ளன‌ போல
நான் ஒத்தையிலதான் வருவேன் ன் நினைப்பால

அட மஞ்ச காட்டு ஓரத்தில மத்தியான நேரத்தில
காத்திருக்கட்டா தினமும் காத்திருக்கட்டா

அட வெள்ளைச்சோள சோறு வச்சு கார தூவயல‌ரைச்சு
ஊட்டி விடட்டா உனக்கு ஊட்டி விடட்டா

யே புள்ள... பஞ்சு மிட்டாய் சீல கட்டி
பட்டுவண்ண லவுக்க போட்டு
கஞ்சி கொண்டு போறவளே
நெஞ்சுக்குள்ள நீ வரியா

தும்ப பூவு மல்லு வேட்டி
தொட தெரிய ஏத்தி கட்டி
வம்பு பண்ண வாறவுரே
வழி விடுங்க நேரமாச்சு

Thursday, July 21, 2016

Michael Madhana Kama Rajan - Vechalum Vekkama

படம் : மைக்கேல் மதன காமராஜன் (1990)
இசை : இளையராஜா
பாடியவர் :  மலேசியா வாசுதேவன், S. ஜானகி
பாடல் வரி : வாலி


Image result for Michael Madana Kama Rajan



பேர் வச்சாலும் வைக்காம போனாலும் மல்லி வாசம்
அது குத்தால சுக வாசம் 
அட இப்போதும் எப்போதும் முப்போதும் தொட்டுப் பேசும்
இந்த பெண்ணோட சகவாசம்

மொட்டு தான் வந்து சொட்டு தேன் தந்து
கிட்ட தான் ஒட்ட தான் கட்ட தான்  அப்பபப்பா!

வச்சாலும் வைக்காமப் போனாலும் மல்லி வாசம்
அது குத்தால சுக வாசம்

அட இப்போதும் எப்போதும் முப்போதும் தொட்டு பேசும்
இந்த பெண்ணோட சகவாசம்


கோடை வெப்பத்தில் கோயில் தெப்பத்தில் ஏறலாம் ஏறலாம்

காமன் குன்றத்தில் காதல் மன்றத்தில் சேரலாம் சேரலாம்

கோடை வெப்பத்தில் கோயில் தெப்பத்தில் ஏறலாம் ஏறலாம்

காமன் குன்றத்தில் காதல் மன்றத்தில் சேரலாம் சேரலாம்

மந்தாரை செடியோரம் கொஞ்சம் மல்லாந்து நெடு நேரம்

சந்தோஷம் பெறலாமா... ஹோய் அதில் சந்தேகம் வரலாமா...

பந்தக்கால் நட்டு பட்டுப்பாய் இட்டு
மெல்ல தான் அள்ளத்தான் கிள்ளத்தான் அப்பபப்பா

வச்சாலும் வைக்காம போனாலும் மல்லி வாசம்... ஹேய்
அது குத்தால சுக வாசம்
அட இப்போதும் எப்போதும் முப்போதும் தொட்டு பேசும்
இந்த பெண்ணோட சகவாசம்

மொட்டு தான் வந்து சொட்டு தேன் தந்து
கிட்ட தான் ஒட்ட தான் கட்ட தான் அப்பப்பா!

வச்சாலும் வைக்காம போனாலும் மல்லி வாசம்
அது குத்தால சுக வாசம்


பீம்பாய் பீம்பாய் பீம்பாய் அந்த ஆறு


காதல் மன்னனா நீயும் கண்ணனா நாளும் ஓர் அலங்காரமா

தோழி மெல்ல தான் தேதி சொல்ல தான் தோன்றினேன் அவதாரமா

காதல் மன்னனா நீயும் கண்ணனா நாளும் ஓர் அலங்காரமா

தோழி மெல்ல தான் தேதி சொல்ல தான் தோன்றினேன் அவதாரமா

கல்யாணம் முடிக்காது நம்ம கச்சேரி தொடங்காது

கல்லால அணை போட்டு ஹேய் இந்த காவேரி அடங்காது

அப்பப்பா அப்பு தப்பப்பா தப்பு
செட்டப்பா செட்டப்பா எட்டிப்போ அப்பபப்பா

வச்சாலும் வைக்காம போனாலும் மல்லி வாசம்
அது குத்தால சுக வாசம் ஹே ஹேய்

அட இப்போதும் எப்போதும் முப்போதும் தொட்டு பேசும்
இந்த பெண்ணோட சகவாசம்

மொட்டு தான் வந்து சொட்டு தேன் தந்து
கிட்ட தான் ஒட்ட தான் கட்ட தான் அப்பப்பப்பா

வச்சாலும் வைக்காம போனாலும் மல்லி வாசம்
அது குத்தால சுக வாசம்

அட இப்போதும் எப்போதும் முப்போதும் தொட்டு பேசும்
இந்த பெண்ணோட சகவாசம்


Saturday, July 20, 2013

சிங்காரவேலன் - இன்னும் என்னை என்ன

படம் : சிங்காரவேலன் (1992)
இசை : இளையராஜா
பாடியவர் : S.P.பாலசுப்ரமணியம், S.ஜானகி
பாடல் வரிகள் : R.V.உதயகுமார்





இன்னும் என்னை என்ன செய்யப் போகிறாய்
அன்பே... அன்பே...
என்னைக் கண்டால் என்னென்னவோ ஆகிறாய்
முன்பே... முன்பே...
கைகள் தானாய் கோர்த்தாய்
கட்டி முத்தம் தேனாய் வார்த்தாய்
இன்பம் இன்பம் சிங்கார லீலா...
இன்னும் என்னை என்ன செய்யப் போகிறாய்
அன்பே... அன்பே...
என்னைக் கண்டால் என்னென்னவோ ஆகிறாய்
முன்பே... முன்பே...


பாடி வரும் வான் மதியே பார்வைகளின் பூம்பனியே
தேவ சுக தேன் கனியே மோக பரிபூரணியே

பூவோடு தான் சேர இளங்காற்று போராடும் போது
சேராமல் தீராது இடம் பார்த்து தீர்மானம் போடு

புதுப்புது விடுகதை தொடத் தொட தொடர்கிறதே

இன்னும் என்னை என்ன செய்யப் போகிறாய்
அன்பே... அன்பே...
என்னைக் கண்டால் என்னென்னவோ ஆகிறாய்
முன்பே... முன்பே...
உன்னை சேர்த்தாள் பாவை இன்னும் அங்கு ஏதோ தேவை
சொல்லு சொல்லு சிங்கார வேலா...


தேன் கவிதை தூதுவிடும் நாயகனே மாயவனே
நூலிடையை ஏங்கவிடும் வானமுத சாதனனே

நீ தானே நான் பாடும் சுகமான ஆகாச வாணி
பாடாமல் கூடாமல் உறங்காது ரீங்காரத் தேனீ

தடைகளை கடந்து நீ மடைகளை திறந்திடவா

இன்னும் என்னை என்ன செய்யப் போகிறாய்
அன்பே... அன்பே...

ஆஹா... என்னைக் கண்டால் என்னென்னவோ ஆகிறாய்
முன்பே... முன்பே...

கைகள் தானாய் கோர்த்தாய்
கட்டி முத்தம் தேனாய் வார்த்தாய்

சொல்லு சொல்லு சிங்கார வேலா...

இன்னும் என்னை என்ன செய்யப் போகிறாய்
அன்பே... அன்பே... அன்பே... அன்பே...

என்னைக் கண்டால் என்னென்னவோ ஆகிறாய்
முன்பே... முன்பே... அன்பே...


Tuesday, June 25, 2013

தாலாட்டு பாடவா - வராது வந்த

படம் : தாலாட்டு பாடவா (1990)
இசை : இளையராஜா
பாடியவர்கள் : அருண் மொழி, S.ஜானகி
பாடல்வரிகள் : வாலி





முதாக ராத்த மோதகம் சதா விமுக்தி சாதகம்
கலா தறாவ தம் சகம் விலாசி லோக ரக்ஷகம்
அனாயகைக நாயகம் வினாசி தேப்ர தைத்யகம்

நதாசு பாசு நாஷ்யகம் நமாமி தம் விநாயகம்
முதாக ராத்த மோதகம் சதா விமுக்தி சாதகம்
வராது வந்த நாயகன்.. ஒரே சிறந்த ஓர் வரன்


வராது வந்த நாயகன் ஒரே சிறந்த ஓர் வரன்
தராதரம் புரிந்தவன் நிரந்தரம் நிறைந்தவன்
வரம் தரும் உயர்ந்தவன் கரம் கரம் இணைந்தவன்
இவன் தலைவி நாயகன்
வராது வந்த நாயகன் ஒரே சிறந்த ஓர் வரன்
தராதரம் புரிந்தவன் நிரந்தரம் நிறைந்தவன்


தொடாமலும் படாமலும் உலாவும் காதல் வாகனம்
வராமலும் தராமலும் விடாது இந்த வாலிபம்

உன்னோடுதான் பின்னோடுதான் வந்தாடும் இந்த மோகனம்
கையோடுதான் மெய்யோடுதான் கொஞ்சாமல் என்ன தாமதம்

உன் பார்வை யாவும் நூதனம் பெண்பாவை நீயும் சீதனம்

உன் வார்த்தை அன்பின் சாசனம் பெண் உள்ளம் உந்தன் ஆசனம்

அள்ளாமலும் கிள்ளாமலும் தள்ளாடும் இந்த பூவனம்

வராது வந்த நாயகன் ஒரே சிறந்த ஓர் வரன்
தராதரம் புரிந்தவன் நிரந்தரம் நிறைந்தவன்

வரம் தரும் உயர்ந்தவன் கரம் கரம் இணைந்தவன்
இவன் தலைவி நாயகன்

வராது வந்த நாயகன் ஒரே சிறந்த ஓர் வரன்

தராதரம் புரிந்தவன் நிரந்தரம் நிறைந்தவன்


கல்யாணமும் வைபோகமும் கொண்டாடும் நல்ல நாள் வரும்
அந்நாளிலே பொன்னாளிலே என் மாலை உந்தன் தோள் வரும்

சல்லாபமும் உல்லாசமும் கண் காணும் நேரம் சொபனம்
சொல்லமாலும் கொள்ளமாலும் திண்டாடும் பாவம் பெண்மனம்

இந்நேரம் அந்த ஞாபகம் உண்டாக நீயும் காரணம்

கண்ணார நாமும் காணலாம் செவ்வாழை பந்தல் தோரணம்

என் ஆசையும் உன் ஆசையும் அந்நாளில் தானே பூரணம்

வராது வந்த நாயகன் ஒரே சிறந்த ஓர் வரன்
தராதரம் புரிந்தவன் நிரந்தரம் நிறைந்தவன்

வரம் தரும் உயர்ந்தவன் கரம் கரம் இணைந்தவன்
இவன் தலைவி நாயகன்

வராது வந்த நாயகன் ஒரே சிறந்த ஓர் வரன்

தராதரம் புரிந்தவன் நிரந்தரம் நிறைந்தவன்


Thursday, March 28, 2013

கேப்டன் மகள் - எந்த பெண்ணிலும்

படம்: கேப்டன் மகள் (1991)
இசை: ஹம்சலேகா
பாடியவர்கள்: பாலசுப்ரமணியம்
பாடல்வரிகள்: வைரமுத்து




எந்த பெண்ணிலும் இல்லாத ஒன்று
ஏதோ... அது ஏதோ....
அடி ஏதோ உன்னிடம் இருக்கிறது
அதை அறியாமல் விட மாட்டேன்
அது வரை உன்னை தொட மாட்டேன்


எந்த பெண்ணிலும் இல்லாத ஒன்று
ஏதோ... அது ஏதோ....
அடி ஏதோ உன்னிடம் இருக்கிறது
அதை அறியாமல் விட மாட்டேன்
அது வரை உன்னை தொட மாட்டேன்

எந்த பெண்ணிலும் இல்லாத ஒன்று
ஏதோ... அது ஏதோ....
அடி ஏதோ உன்னிடம் இருக்கிறது




கூந்தல் முடிகள் நெற்றிப் பரப்பில்
கோலம் போடுதே அதுவா கோலம் போடுதே அதுவா
சிரிக்கும்போது கண்ணில் மின்னல்
தெறித்து ஓடுதே அதுவா தெறித்து ஓடுதே அதுவா
மூக்கின் மேலே மூக்குத்தி போலே மச்சம் உள்ளதே
அதுவா அதுவா அதுவா
கழுத்தின் கீழே கவிதைகள் இரண்டு மிச்சம் உள்ளதே
அதுவா அதுவா அதுவா
அதை அறியாமல் விட மாட்டேன்
அது வரை உன்னை தொட மாட்டேன்


எந்த பெண்ணிலும் இல்லாத ஒன்று
ஏதோ... அது ஏதோ....
அடி ஏதோ உன்னிடம் இருக்கிறது
அதை அறியாமல் விட மாட்டென்
அது வரை உன்னை தொட மாட்டேன்



முல்லை நிறத்து பற்களில் ஒன்று
தள்ளி உள்ளதே அதுவா தள்ளி உள்ளதே அதுவா
சங்கு கழுத்தை பாசிமணிகள்
தடவுகின்றதே அதுவா தடவுகின்றதே அதுவா
ஒவ்வொரு வாக்கியம் முடியும் போதும் புன்னகை செய்வாய்
அதுவா அதுவா அதுவா
ஓரிரு வார்த்தை தப்பாய் போனால் உதடு கடிப்பாய்
அதுவா அதுவா அதுவா
அதை அறியாமல் விட மாட்டேன்
அது வரை உன்னை தொட மாட்டேன்


எந்த பெண்ணிலும் இல்லாத ஒன்று
ஏதோ... அது ஏதோ....
அடி ஏதோ உன்னிடம் இருக்கிறது
அதை அறியாமல் விட மாட்டேன்
அது வரை உன்னை தொட மாட்டேன்


எந்த பெண்ணிலும் இல்லாத ஒன்று
ஏதோ... அது ஏதோ....
அடி ஏதோ உன்னிடம்..... இருக்கிறது


Wednesday, January 30, 2013

சின்ன தம்பி - தூளியிலே ஆடவந்த

படம் : சின்ன தம்பி (1991)
இசை : இளையராஜா
பாடியவர்கள் : மனோ
பாடல்வரிகள் : வாலி






ஒ... ஒஹோ... ஒஹோ...

ஒ... ஒஹோ... ஒஹோ... 

தூளியிலே ஆடவந்த வானத்து மின்விளக்கே
ஆழியில் கண்டெடுத்த அற்புத ஆணிமுத்தே
தொட்டில் மேலே முத்து மால
வண்ண பூவா விளையாட சின்னத்தம்பி எச பாட
தூளியிலே ஆடவந்த வானத்து மின்விளக்கே
ஆழியில் கண்டெடுத்த அற்புத ஆணிமுத்தே


பாட்டெடுத்து நான் படிச்சா காட்டருவி கண்ணுறங்கும்
பட்டமரம் பூ மலரும் பாறையிலும் நீர் சுரக்கும்
பாட்டெடுத்து நான் படிச்சா காட்டருவி கண்ணுறங்கும்
பட்டமரம் பூ மலரும் பாறையிலும் நீர் சுரக்கும்
ராகமென்ன தாளமென்ன அறிஞ்சா நான் படிச்சேன்
ஏழு கட்ட எட்டுக் கட்ட தெரிஞ்சா நான் படிச்சேன்
நான் படைச்ச ஞானமெல்லாம் யார் கொடுத்தா சாமி தான்
ஏடெடுத்துப் படிச்சதில்ல சாட்சியிந்த பூமி தான்
தொட்டில் மேலே முத்து மால
வண்ண பூவா விளையாட சின்னத்தம்பி எச பாட


சோறுபோடத் தாயிருக்கா பட்டினியப் பார்த்ததில்ல
தாயிருக்கும் காரணத்தால் கோயிலுக்குப் போனதில்ல
சோறுபோடத் தாயிருக்கா பட்டினியப் பார்த்ததில்ல
தாயிருக்கும் காரணத்தால் கோயிலுக்குப் போனதில்ல
தாயடிச்சு வலிச்சதில்ல இருந்தும் நானழுவேன்
நானழுக தாங்கிடுமா ஒடனே தாயழுவா
ஆக மொத்தம் தாய் மனசு போல் நடக்கும் பிள்ள தான்
வாழுகிற வாழ்க்கையிலே தோல்விகளே இல்லை தான்
தொட்டில் மேலே முத்து மால
வண்ண பூவா விளையாட சின்னத்தம்பி எச பாட


தூளியிலே ஆடவந்த வானத்து மின்விளக்கே
ஆழியில் கண்டெடுத்த அற்புத ஆணிமுத்தே
தொட்டில் மேலே முத்து மால
வண்ண பூவா விளையாட சின்னத்தம்பி எச பாட
வண்ண பூவா விளையாட சின்னத்தம்பி எச பாட


Popular Posts