Saturday, September 1, 2018

Ettupatti Rasa - Panju Mittai

படம்: எட்டுப்பட்டி ராசா (1997)
இசை: தேவா
பாடகர்: S. ஜானகி, மலேசியா வாசுதேவன்
பாடல்வரிகள்: கஸ்தூரி ராஜா

Ettupatti Rasa DVD cover.jpg



பஞ்சு மிட்டாய் சீல கட்டி
பட்டுவண்ண லவுக்க போட்டு
அடி பஞ்சு மிட்டாய் சீல கட்டி
பட்டுவண்ண லவுக்க போட்டு
கஞ்சி கொண்டு போறவளே
நெஞ்சுக்குள்ள நீ வரியா

தும்ப பூவு மல்லு வேட்டி... ஆஹா
தொட தெரிய ஏத்தி கட்டி... ஓஹோ
வம்பு பண்ண வாறவுரே 
வழி விடுங்க நேரமாச்சு... அப்டி போடு


ஏழை புத்திக்குள்ள சுத்துது கிறுக்கு
ன் இடுப்பு கொசுவத்துல சூட்சமும் இருக்கு
நீ நெளிஞ்சு போகயிலே நெஞ்சுல சுளுக்கு

வாட காத்தடிச்சு வாட்டுது மாமா
என்கூட வந்து குச்சுக்குள்ள ஒட்டிக்க மாமா
ன் கூத‌லுக்கு சூடு கொஞ்சம் ஏத்திக்க மாமா

ன் கண்ணு ரெண்டும் நவா பழம் 
காச்சு இருக்கு கொய்யா பழம்
மூடி வைக்காதே திங்காம வீணடிக்காதே

அட புல் அறுக்க போகையில
புள்ள வரம் கேட்க வந்தேன் 
தள்ளி நிக்காத மனச கிள்ளி வைக்காத

அடியே... பஞ்சு மிட்டாய் சீல கட்டி
பட்டுவண்ண லவுக்க போட்டு
கஞ்சி கொண்டு போறவளே
நெஞ்சுக்குள்ள நீ வாரியா புள்ள


அம்மாடியோ... யப்பா.... அடியாத்தே...

ஓரஞ்சாரம் பாத்து ஒதுங்கனும் பதமா
பின்ன ஓட தண்ணிக்குள்ள முங்கி குளிக்கனும் சுகமா
மெல்ல லவகமா ன் முதுக தேய்க்கனும் இதமா

மாமா பம்முறீயே பொழுதுக்கு மேல
நீ கம்மன்கட்டு மூலையில கள்ளன‌ போல
நான் ஒத்தையிலதான் வருவேன் ன் நினைப்பால

அட மஞ்ச காட்டு ஓரத்தில மத்தியான நேரத்தில
காத்திருக்கட்டா தினமும் காத்திருக்கட்டா

அட வெள்ளைச்சோள சோறு வச்சு கார தூவயல‌ரைச்சு
ஊட்டி விடட்டா உனக்கு ஊட்டி விடட்டா

யே புள்ள... பஞ்சு மிட்டாய் சீல கட்டி
பட்டுவண்ண லவுக்க போட்டு
கஞ்சி கொண்டு போறவளே
நெஞ்சுக்குள்ள நீ வரியா

தும்ப பூவு மல்லு வேட்டி
தொட தெரிய ஏத்தி கட்டி
வம்பு பண்ண வாறவுரே
வழி விடுங்க நேரமாச்சு

Popular Posts