Saturday, September 1, 2018

Kadhal Kavithai - Aalana Naal muthala

படம்:காதல் கவிதை (1998)
இசை: இளையராஜா
பாடகர்: சௌமியா ராவ், புஷ்பவனம் குப்புசாமி
பாடல்வரிகள்: அகத்தியன்


Image result for kadhal kavithai tamil movie



மச்சான்...
ஆளான நாள் முதலா யாரையும் நெனச்சதில்ல 
மாமா நா உங்களுக்கே வாக்கப்பட ஆசப்பட்டேன்...
வேணான்னு சொல்லுறீகளே 
சும்மா வெறும் வாயை மெல்லுறீகளே 
ஆடியில கட்டிக்கிட்டா சித்திரைக்கு புள்ள வரும் 
ஆகாது ஆகாது மச்சானே 
இது தோதான‌ தை மாசம் வச்சானே 
ஆகாது ஆகாது மச்சானே 
இது தோதான‌ தை மாசம் வச்சானே 

உன்னை நான் கட்டிக்கொள்ள எப்பவும் நெனச்சதில்ல
கல்லக்கட்டி தண்ணிக்குள்ள முங்குற‌வன் யாருமில்ல 
வேணான்டி விட்டு விடடி 
நான் தவிச்சாக்க தண்ணி குடுடி 
தாலிக்கட்டி கூடிக்கிட்டா சாமி குத்தம் ஆகுமுன்னு 
மேலூரு குறிகாரன் சொன்னான்டி 
அடி கண்ணாலம் நமக்குள்ளே வேணான்டி 
மேலூரு குறிகாரன் சொன்னான்டி 
அடி கண்ணாலம் நமக்குள்ளே வேணான்டி 

ஆளான நாள் முதலா யாரையும் நெனச்சதில்ல 
மாமா நா உங்களுக்கே வாக்கப்பட ஆசப்பட்டேன்


புல்லருக்க போகயில 
புல்லுநுனி தண்ணியில 
உன் முகத்தை பாத்துப்புட்டு 
ஊடு வந்து சேர்ந்துபுட்டேன் 
என் பாசம் தெரியாது மாமா... ஆஹா 
இது அனுமாரு நெஞ்சில்ல ராமா... ஆஹா 
என் பாசம் தெரியாது மாமா 
இது அனுமாரு நெஞ்சில்ல ராமா 

கொல்லையில மாங்காய் மரம் 
கொத்து கொத்தாய் காய்ச்சிருக்கு 
காவல்காரன் தூங்கயில 
கையெறிஞ்சு மாம்பழத்தை 
அறியாம பறிச்சாதான் இனிக்கும் 
அடி அணில்புள்ள‌ கடிச்சாதான் ருசிக்கும்
அறியாம பறிச்சாதான் இனிக்கும்
அடி அணில்புள்ள‌ கடிச்சாதான் ருசிக்கும்

பூ எடுத்து மாலை கட்டி ராசா
நான் கூடு கட்டி குடியிருக்கேன் ராசா
உன்னை நெனச்சே பொறந்தேன் வளந்தேன்
ராசா... என் ராசா... 

யம்மா...
உன்னை நான் கட்டிகொள்ள‌ எப்பவும் நெனச்சதில்ல
கல்லக்கட்டி தண்ணிக்குள்ள முங்குற‌வன் யாருமில்ல 


காளக்கன்னு வாங்கி கட்டி பால்க்கறக்க ஆசைப்பட்ட
கோழி குஞ்சு குட்டி போட கோயிலுக்கு நெந்துக்கிட்ட
முட்டாளா இருக்கேடி மானே 
அடி ஒட்டாதே என் வாழ்க்கை தானே 
ரொம்ப முட்டாளா இருக்கேடி மானே
அடி ஒட்டாதே என் வாழ்க்கை தானே 

ஒத்தைக்கொத்த சண்டையினா ஓடி போற ஆம்பள நீ 
செத்து போன பாம்பை பாத்து சத்தம் போட்ட வீரனும் நீ 
நீ மட்டும் சரிதானா மாமா...  
என் நெனப்பதான் நீ பாரு மாமா.... ஹ்க்கும் 
நீ மட்டும் சரிதானா மாமா 
என் நெனப்பதான் நீ பாரு மாமா

உன் வாயை கொஞ்ச முடிக்கடி வாரேன் 
நான் ஆம்பள தான் வீரத்த நீ பாரேன் 
நான் நெனச்சா மலைய ஒடப்பேன் 
வாரேன்... நான் வாரேன்


மச்சான்...
ஆளான நாள் முதலா யாரையும் நெனச்சதில்ல 

உன்னை நான் கட்டிக்கொள்ள எப்பவும் நெனச்சதில்ல

வேணான்னு சொல்லுறீகளே

அடி வேணான்டி விட்டு விடடி

தாலி கட்டி கூடிக்கிட்ட சாமி குத்தம் ஆகுமடி

ஆகாது ஆகாது மச்சானே 

அடி கண்ணாலம் நமக்குள்ளே வேணான்டி 

ஆகாது ஆகாது மச்சானே 

அடி கண்ணாலம் நமக்குள்ளே வேணான்டி

Popular Posts