Showing posts with label Urvashi. Show all posts
Showing posts with label Urvashi. Show all posts

Saturday, September 1, 2018

Ettupatti Rasa - Panju Mittai

படம்: எட்டுப்பட்டி ராசா (1997)
இசை: தேவா
பாடகர்: S. ஜானகி, மலேசியா வாசுதேவன்
பாடல்வரிகள்: கஸ்தூரி ராஜா

Ettupatti Rasa DVD cover.jpg



பஞ்சு மிட்டாய் சீல கட்டி
பட்டுவண்ண லவுக்க போட்டு
அடி பஞ்சு மிட்டாய் சீல கட்டி
பட்டுவண்ண லவுக்க போட்டு
கஞ்சி கொண்டு போறவளே
நெஞ்சுக்குள்ள நீ வரியா

தும்ப பூவு மல்லு வேட்டி... ஆஹா
தொட தெரிய ஏத்தி கட்டி... ஓஹோ
வம்பு பண்ண வாறவுரே 
வழி விடுங்க நேரமாச்சு... அப்டி போடு


ஏழை புத்திக்குள்ள சுத்துது கிறுக்கு
ன் இடுப்பு கொசுவத்துல சூட்சமும் இருக்கு
நீ நெளிஞ்சு போகயிலே நெஞ்சுல சுளுக்கு

வாட காத்தடிச்சு வாட்டுது மாமா
என்கூட வந்து குச்சுக்குள்ள ஒட்டிக்க மாமா
ன் கூத‌லுக்கு சூடு கொஞ்சம் ஏத்திக்க மாமா

ன் கண்ணு ரெண்டும் நவா பழம் 
காச்சு இருக்கு கொய்யா பழம்
மூடி வைக்காதே திங்காம வீணடிக்காதே

அட புல் அறுக்க போகையில
புள்ள வரம் கேட்க வந்தேன் 
தள்ளி நிக்காத மனச கிள்ளி வைக்காத

அடியே... பஞ்சு மிட்டாய் சீல கட்டி
பட்டுவண்ண லவுக்க போட்டு
கஞ்சி கொண்டு போறவளே
நெஞ்சுக்குள்ள நீ வாரியா புள்ள


அம்மாடியோ... யப்பா.... அடியாத்தே...

ஓரஞ்சாரம் பாத்து ஒதுங்கனும் பதமா
பின்ன ஓட தண்ணிக்குள்ள முங்கி குளிக்கனும் சுகமா
மெல்ல லவகமா ன் முதுக தேய்க்கனும் இதமா

மாமா பம்முறீயே பொழுதுக்கு மேல
நீ கம்மன்கட்டு மூலையில கள்ளன‌ போல
நான் ஒத்தையிலதான் வருவேன் ன் நினைப்பால

அட மஞ்ச காட்டு ஓரத்தில மத்தியான நேரத்தில
காத்திருக்கட்டா தினமும் காத்திருக்கட்டா

அட வெள்ளைச்சோள சோறு வச்சு கார தூவயல‌ரைச்சு
ஊட்டி விடட்டா உனக்கு ஊட்டி விடட்டா

யே புள்ள... பஞ்சு மிட்டாய் சீல கட்டி
பட்டுவண்ண லவுக்க போட்டு
கஞ்சி கொண்டு போறவளே
நெஞ்சுக்குள்ள நீ வரியா

தும்ப பூவு மல்லு வேட்டி
தொட தெரிய ஏத்தி கட்டி
வம்பு பண்ண வாறவுரே
வழி விடுங்க நேரமாச்சு

Friday, March 15, 2013

Mundhanai Mudichu - Chinnanjiru Kiliyae

படம்: முந்தானை முடிச்சு (1983)
இசை: இளையராஜா
பாடியவர்கள்: S.P.பாலசுப்ரமணியம், S.ஜானகி

பாடல்வரிகள்: முத்துலிங்கம்


Image result for Mundhanai Mudichu




ஆரிராரிரோ... ஆரிராரிரோ...
ஆரிராரிரோ... ஆரிராரிரோ...
ஆரிராரிரோ... ஆரிராரிரோ...

சின்னஞ்சிறு கிளியே சித்திரப்பூவிழியே
சின்னஞ்சிறு கிளியே சித்திரப்பூவிழியே
அன்னை மனம் ஏங்கும்
தந்தை மனம் தூங்கும்
நாடகம் ஏனடா நியாயத்தை கேளடா
சின்னஞ்சிறு கிளியே...


சுகமே நினைத்து சுயம்வரம் தேடி
குழல்மேல் தவிக்கும் துயரங்கள் கோடி
மழை நீர் மேகம் விழிகளில் மேவும்
இந்த நிலை மாறுமோ அன்பு வழி சேருமோ
கண்கலங்கி பாடும் எனது பாசம் உனக்கு வேஷமோ
வாழ்ந்தது போதுமடா வாழ்க்கை இனிமே...
சின்னஞ்சிறு...


சின்னஞ்சிறு கிளியே சித்திரப்பூவிழியே
சின்னஞ்சிறு கிளியே சித்திரப்பூவிழியே
உன்னை எண்ணி நானும் உள்ளம் தடுமாறும்
வேதனை பாரடா வேடிக்கை தானடா
சின்னஞ்சிறு கிளியே...



மயிலே உன்னை நான் மயக்கவும் இல்லை
மனதால் என்றும் வெறுக்கவும் இல்லை
என்னை நீ தேடி இணைந்தது பாவம்
எல்லாம் நீயே எழுதிய கோலம்
இந்த நிலை காணும் பொழுது நானும் அழுது வாழ்கிறேன்
காலத்தின் தீர்ப்புகளை யாரரிவாரோ... ஓ

சின்னஞ்சிறு கிளியே சித்திரப்பூவிழியே

உன்னை என்னி நானும் உள்ளம் தடுமாறும்

நாடகம் ஏனடா நியாயத்தை கேளடா

சின்னஞ்சிறு கிளியே...

சித்திரப்பூவிழியே...



Friday, January 25, 2013

வனஜா கிரிஜா - ஒத்தையிலே

படம்: வனஜா கிரிஜா (1994)
இசை: இளையராஜா
பாடியவர்கள் : K.S.சித்ரா
பாடல்வரிகள் : பஞ்சு அருணாசலம்







ஒத்தையிலே நின்னதென்ன என் மன்னவனே மன்னவனே
ஒத்தையிலே நின்னதென்ன என் மன்னவனே மன்னவனே
சுத்தி நின்ன சுத்தம் எல்லாம் இப்போ எட்டி நின்னு பாப்பதென்ன
உங்க வழி துணைக்கு நானும் வரவா
உங்க வாய் துணைக்கு பேச்சு தரவா
இந்த கன்னி பொண்ணு காதில் கொஞ்சம் சொல்லிப்போடுங்க
ஒத்தையிலே நின்னதென்ன என் மன்னவனே மன்னவனே
சுத்தி நின்ன சுத்தம் எல்லாம் இப்போ எட்டி நின்னு பாப்பதென்ன


சாலையிலே இல ஆடுது சாமி வச்ச பூமரம்
உன்பேரத்தான் பாடுது அம்மன் கோவில் கோபுரம்
வானம் பாத்து நிக்காமலே வளர்ந்த பயிரு யாராலைய்யா
வாய்க்கால் நீரு வத்தாமலே ஓடி வருது உன்னாலைய்யா
இங்கு எல்லாமே நீ தானய்யா... நீ இல்லாம ஊரேதய்யா

ஆ... ஒத்தையிலே நின்னதென்ன என் மன்னவனே மன்னவனே
சுத்தி நின்ன சுத்தம் எல்லாம் இப்போ எட்டி நின்னு பாப்பதென்ன


ஏறெடுத்து பாத்துட்டா ஏவல் செய்ய ஆள் வரும்
கண்ணசைச்சி காட்டிட்டா கைய கட்டி ஊர் வரும்
உந்தன் பக்கம் நானும் வர என்ன தவம் செஞ்சேனய்யா
ஒட்டுரவா நானிருப்பேன் இட்ட பணி செய்வேனய்யா
உந்தன் துணையாக நானில்லையா
இனி தனியாக நீயில்லைய்யா

ஆ... ஒத்தையிலே நின்னதென்ன என் மன்னவனே மன்னவனே
சுத்தி நின்ன சுத்தம் எல்லாம் இப்போ எட்டி நின்னு பாப்பதென்ன
உங்க வழி துணைக்கு நானும் வரவா
உங்க வாய்... துணைக்கு... பேச்சு தரவா
இந்த கன்னி பொண்ணு காதில் கொஞ்சம் சொல்லிப்போடுங்க
ஒத்தையிலே நின்னதென்ன என் மன்னவனே மன்னவனே
சுத்தி நின்ன சுத்தம் எல்லாம் இப்போ எட்டி நின்னு பாப்பதென்ன



Wednesday, October 24, 2012

Michael Madana Kama Rajan - Sundhari Neeyum

படம் : மைக்கேல் மதன காமராஜன் (1990)
இசை : இளையராஜா
பாடியவர்
கள் :  கமல்ஹாசன் & S. ஜானகி
பாடல் வரிகள் : பஞ்சு அருணாசலம்

Image result for Michael Madana Kama Rajan



ஆ... ஆ... ஆ.. ஆ... ஆ...
ஆ... ஆ... ஆ.. ஆ... ஆ... ஆ... ஆ...
ஆ... ஆ...

சுந்தரி நீயும் சுந்தரன் ஞானும்

சேந்திருந்தால் திருவோணம்

ஓஓ... ஓஓ...

சுந்தரன் நீயும் சுந்தரி ஞானும்
சேந்திருந்தால் திருவோணம்

கையில் கையும் வச்சு
கண்ணில் கண்ணும் வச்சு
நெஞ்சின் மன்றம் கொண்டு சேரும் நன்நேரம்
சுந்தரி நீயும் சுந்தரன் ஞானும்
சேந்திருந்தால் திருவோணம்

ஓஓ... ஓஓ...

சுந்தரன் நீயும் சுந்தரி ஞானும்
சேந்திருந்தால் திருவோணம்


ஆ... ஆ... ஆ.. ஆ... ஆ...
ஆ... ஆ... ஆ.. ஆ... ஆ... ஆ... ஆ...
ஆ... ஆ... ஆ... ஆ... ஆ........... ஆ...

ஒன்னுட சுந்தர ரூபம்
வர்ணிக்க ஓர் கவி வேணும்

மோகன ராகம் நின்தேகம்
கீர்த்தனமாக்கி ஞான் பாடும்

உஞ்சிரிப்பால் என் உள்ளம் கவர்ந்நு

கண்ணான கண்ணே என் சொந்தம் அல்லோ? நீ...

சுந்தரன் நீயும் சுந்தரி ஞானும்
சேந்திருந்தால் திருவோணம்

ஓஓ... ஓஓ...

சுந்தரி நீயும் சுந்தரன் ஞானும்
சேந்திருந்தால் திருவோணம்

கையில் கையும் வச்சு
கண்ணில் கண்ணும் வச்சு
நெஞ்சின் மன்றம் கொண்டு சேரும் நன்நேரம்
சுந்தரன் நீயும் சுந்தரி ஞானும்
சேந்திருந்தால் திருவோணம்

ஓஓ... ஓஓ...

சுந்தரி நீயும் சுந்தரன் ஞானும்
சேந்திருந்தால் திருவோணம்



செப்பர மஞ்சத்தில் ஆட
சொப்பன லோகத்தில் கூட

ப்ரேமத்தின் கீதங்கள் பாட
சொர்க்கத்தில் ஆனந்தம் தேட

சயன நேரம் மன்மத யானம்

உலரி வரையில் நம்முட லோகம் ஆ... ஆ... ஆ...


சுந்தரி நீயும் சுந்தரன் ஞானும்
சேந்திருந்தால் திருவோணம்

ஓஓ... ஓஓ...

சுந்தரன் நீயும் சுந்தரி ஞானும்
சேந்திருந்தால் திருவோணம்

கையில் கையும் வச்சு 
கண்ணில் கண்ணும் வச்சு
நெஞ்சின் மன்றம் கொண்டு சேரும் நன்நேரம்
சுந்தரி நீயும் சுந்தரன் ஞானும்
சேந்திருந்தால் திருவோணம்

ஓஓ... ஓஓ...

சுந்தரன் நீயும் சுந்தரி ஞானும்
சேந்திருந்தால் திருவோணம்


Popular Posts