Showing posts with label Anu Haasan. Show all posts
Showing posts with label Anu Haasan. Show all posts

Monday, August 15, 2011

இந்திரா - அச்சம் அச்சம் இல்லை

படம் : இந்திரா (1995)
இசை : A.R. ரஹ்மான்
பாடியவர் : அனுராதாஸ்ரீராம், G.V. பிரகாஷ், எஸ்தர், ஷா, சுஜாதா, ஸ்வேதா
பாடல் வரி : வைரமுத்து

ராரரா… ராரரா…
ராரரா… ராரரா…

விடியாத இரவென்று எதுவுமில்லை
இல்லை இல்லை இல்லை இல்லை
முடியாத துயரென்று எதுவுமில்லை
இல்லை இல்லை இல்லை இல்லை
வடியாத வெள்ளமென்று எதுவுமில்லை
இல்லை இல்லை இல்லை இல்லை
வாடாத வாழ்க்கையென்று எதுவுமில்லை
இல்லை இல்லை இல்லை இல்லை
ராரரா…

ஹே அச்சம் அச்சம் இல்லை இனி அடிமை எண்ணம் இல்லை
நம் காலம் இங்கே கூடிப்போச்சு கண்ணீர் மிச்சமில்லையே
ஹே அச்சம் அச்சம் இல்லை இனி அடிமை எண்ணம் இல்லை
நம் காலம் இங்கே கூடிப்போச்சு கண்ணீர் மிச்சமில்லையே

காலம் மாறிப்போச்சு நம் கண்ணீர் மாறிப்போச்சு
நாளை நல்ல நாளை என்ற நம்பிக்கை உண்டாச்சு
காலம் மாறிப்போச்சு நம் கண்ணீர் மாறிப்போச்சு
நாளை நல்ல நாளை என்ற நம்பிக்கை உண்டாச்சு

ஹே அச்சம் அச்சம் இல்லை இனி அடிமை எண்ணம் இல்லை
நம் காலம் இங்கே கூடிப்போச்சு கண்ணீர் மிச்சமில்லையே

அந்த நிலா நிலா நிலா நிலா நீ கொண்டோடி வா
அந்த நிலா நிலா நிலா நிலா நீ கொண்டோடி வா

பட்டாம்பூச்சி சுற்றும் மனிதன் என்ன மட்டம் 
அட இன்னும் கொஞ்சும் போனால் என்ன வானம் தலையில் தட்டும்
பட்டாம்பூச்சி சுற்றும் மனிதன் என்ன மட்டம் 
அட இன்னும் கொஞ்சும் போனால் என்ன வானம் தலையில் தட்டும்

வாடி இளைய செல்லியே… வாடி இளைய செல்லியே
நம் காலம் சொல்லும் நம்மை வாழச்சொல்லியே
அம்மா அழகுக் கண்ணம்மா... அம்மா அழகுக் கண்ணம்மா
இது நம்ம பூமியென்று அழுத்திச்சொல்லம்மா

ஹே அச்சம் அச்சம் இல்லை இனி அடிமை எண்ணம் இல்லை
நம் காலம் இங்கே கூடிப்போச்சு கண்ணீர் மிச்சமில்லையே
ஹே அச்சம் அச்சம் இல்லை இனி அடிமை எண்ணம் இல்லை
நம் காலம் இங்கே கூடிப்போச்சு கண்ணீர் மிச்சமில்லையே

காலம் மாறிப்போச்சு நம் கண்ணீர் மாறிப்போச்சு
நாளை நல்ல நாளை என்ற நம்பிக்கை உண்டாச்சு
காலம் மாறிப்போச்சு நம் கண்ணீர் மாறிப்போச்சு
நாளை நல்ல நாளை என்ற நம்பிக்கை உண்டாச்சு

லல்லல்லல்லோ பட்டாம்பூச்சி
லல்லல்லல்லோ பட்டாம்பூச்சி 

வானம் பக்கம் இனி வாழ்க்கை ரொம்பப் பக்கம்
அச்சம் அச்சம் துச்சம் என்றால் பக்கம் பக்கம் சொர்க்கம்
வானம் பக்கம் இனி வாழ்க்கை ரொம்பப் பக்கம்
அச்சம் அச்சம் துச்சம் என்றால் பக்கம் பக்கம் சொர்க்கம்
பூமி தொறந்துகெடக்கு அட மனுசப்பய மனசு பூட்டிக்கெடக்கு
பூமி தொறந்துகெடக்கு அட மனுசப்பய மனசு பூட்டிக்கெடக்கு

இனி அச்சம் அச்சம் இல்லை இனி அடிமை எண்ணம் இல்லை
இனி அச்சம் அச்சம் இல்லை இனி அடிமை எண்ணம் இல்லை
நம் காலம் இங்கே கூடிப்போச்சு கண்ணீர் மிச்சமில்லையே

இன்பக்காற்று வீசட்டும் எட்டுத்திக்கும் பரவட்டும்
பரவட்டும் பரவட்டும் பரவட்டும் பரவட்டும்
மனிதப்பூக்கள் மலரட்டும் மனங்கள் இன்னும் விரியட்டும்
விரியட்டும் விரியட்டும் விரியட்டும் விரியட்டும்

இன்பக்காற்று வீசட்டும் எட்டுத்திக்கும் பரவட்டும்
மனிதப்பூக்கள் மலரட்டும் மனங்கள் இன்னும் விரியட்டும்
குற்றம் குற்றம் எரியட்டும் சுற்றம் சுற்றம் வாழட்டும்
வட்டம் வட்டம் விரியட்டும் வானம் தொட்டு வளரட்டும்
வட்டம் வட்டம் விரியட்டும் வானம் தொட்டு வளரட்டும்

கோழிச்சிறகில் குஞ்சைப் போலவே பூமிப்பந்து உறங்கட்டும்
ரத்தம் சிந்தா நூற்றாண்டு புத்தம் புதிதாய் விடியட்டும்

Saturday, January 1, 2011

இந்திரா - தொடத்தொட

படம் : இந்திரா  (1995)
இசை : A.R. ரஹ்மான்

பாடியவர் : S.P.பால சுப்பிரமணியம், K.S.சித்ரா
பாடல் வரி : வைரமுத்து

தொடத்தொட மலர்வதென்ன பூவே
தொட்டவனை மறந்ததென்ன?
பார்வைகள் புதிதா ஸ்பரிசங்கள் புதிதா
மழை வர பூமி மறுப்பதென்ன?

பார்வைகள் புதிதா ஸ்பரிசங்கள் புதிதா
மழை வர பூமி மறுப்பதென்ன?
தொடத்தொட மலர்வதென்ன பூவே
தொட்டவனை மறந்ததென்ன?

அந்த இள வயதில் ஆற்றங்கரை மணலில்
காலடித் தடம் பதித்தோம் யார் அழித்தார்
நந்தவனக் கரையில் நட்டு வைத்த செடியில்
மொட்டு விட்ட முதல் பூவை யார் பறித்தார்
காதலன் தீண்டாத பூக்களில் தேனில்லை
இடைவெளி தாண்டாதே என் வசம் நானில்லை

தொடத்தொட மலர்ந்ததென்ன பூவே
சுடச்சுட நனைந்ததென்ன
பார்வைகள் புதிது ஸ்பரிசங்கள் புதிது
நரம்புகள் பின்னப்பின்ன நடுக்கமென்ன

தொடத்தொட மலர்ந்ததென்ன பூவே
சுடச்சுட நனைந்ததென்ன

பனிதனில் குளித்த பால்மலர் காண
இருபது வசந்தங்கள் விழி வளர்த்தேன்
பசித்தவன் அமுதம் பருகிடத் தானே
பதினேழு வசந்தங்கள் இதழ் வளர்த்தேன்
இதழ் மூடும் மலராக இதயத்தை மறைக்காதே
மலர் கொள்ளும் காற்றாக இதயத்தை உலுக்காதே

தொடத்தொட மலர்ந்ததென்ன பூவே
சுடச்சுட நனைந்ததென்ன

பார்வைகள் புதிதா ஸ்பரிசங்கள் புதிதா
மழை வர பூமி மறுப்பதென்ன?

தொடத்தொட மலர்வதென்ன பூவே
தொட்டவனை மறந்ததென்ன?

Popular Posts