Showing posts with label D. Show all posts
Showing posts with label D. Show all posts

Saturday, August 13, 2011

தேவர் மகன் - மாசறு பொன்னே

படம் : தேவர் மகன் (1992)
இசை : இளையராஜா
பாடியவர் :  சொர்ணலதா, மின்மினி
பாடல் வரி : வாலி



மாசறு பொன்னே வருக

மாசறு பொன்னே வருக
திரிபுரம் அதை எரித்த ஈசனின் பங்கே வருக
மாதவன் தங்காய் வருக
மணி ரதம் அதில் உலவ வாசலில் இங்கே வருக


கோல முகமும் குறுநகையும் குளிர் நிலவென
நீலவிழியும் பிறை நுதலும் விளங்கிடும எழில்
நீலியென சூலியெனத் தமிழ் மறை தொழும்

மாசறு பொன்னே வருக
திரிபுரம் அதை எரித்த ஈசனின் பங்கே வருக


நீர் வானம் நிலம் காற்று நெருப்பான ஐம்பூதம்
உனதாணைத் தனையேற்றுப் பணியாற்றுதே
பார் போற்றும் தேவாரம் ஆழ்வார்கள் தமிழாரம்
இவையாவும் எழிலே உன் பதம் போற்றுதே
திரிசூலம் கரம் ஏந்தும் மாகாளி உமையே
கருமாரி மகமாயி காப்பாற்று எனையே


பாவம் விலகும் வினையகலும் உனைத் துதித்திட
ஞானம் விளையும் நலம் பெருகும் இருள் விலகிடும்
சோதியென ஆதியென அடியவர் தொழும்



மாசறு பொன்னே வருக
திரிபுரம் அதை எரித்த ஈசனின் பங்கே வருக
மாதவன் தங்காய் வருக
மணி ரதம் அதில் உலவ வாசலில் இங்கே வருக

கோல முகமும் குறுநகையும் குளிர் நிலவென
நீலவிழியும் பிறை நுதலும் விளங்கிடும எழில்
நீலியென சூலியெனத் தமிழ் மறை தொழும்



மாசறு பொன்னே வருக
திரிபுரம் அதை எரித்த ஈசனின் பங்கே வருக


தேவர் மகன் - மணமகளே


படம் : தேவர் மகன் (1992)
இசை : இளையராஜா
பாடியவர் :  சொர்ணலதா, சுஜாதா
பாடல் வரி : வாலி










மணமகளே மணமகளே வாழும் காலம் சூழும்
மங்கலமே மங்கலமே
குணமகளே குலமகளே பாலும் தேனும் நாளும்
பொங்கிடுமே பொங்கிடுமே
குத்தம் குறை இல்லா ஒரு குண்டுமணி சரமே
மஞ்சள் வளமுடனே என்றும் வாழனும் வாழனுமே




மணமகளே மணமகளே வாழும் காலம் சூழும்
மங்கலமே மங்கலமே
குணமகளே குலமகளே பாலும் தேனும் நாளும்
பொங்கிடுமே பொங்கிடுமே




வலது அடி எடுத்து வைத்து வாசல் தாண்டி வா வா
பொன்மயிலே பொன்மயிலே
புகுந்த இடம் ஒளிமயமாய் உன்னால் தானே மாறும்
மாங்குயிலே மாங்குயிலே
இல்லம் கோயிலடி அதில் பெண்மை தெய்வமடி
தெய்வம் உள்ள இடம் என்றும் செல்வம் பொங்குமடி

மணமகளே மணமகளே வாழும் காலம் சூழும்
மங்கலமே மங்கலமே
குணமகளே குலமகளே பாலும் தேனும் நாளும்
பொங்கிடுமே பொங்கிடுமே

தேவர் மகன் - இஞ்சி இடுப்பழகி


படம் : தேவர்மகன் (1992)
இசை : இளையராஜா
பாடியவர் :  கமலஹாசன், S. ஜானகி
பாடல் வரி : வாலி




இஞ்சி இடுப்பழகி... மஞ்ச சிவப்பழகி... கள்ளச் சிரிப்பழகி...
மறக்க மனம் கூடுதில்லையே
மறக்குமா மாமன் எண்ணம் மயக்குதே பஞ்சவர்ணம்
மடியிலே ஊஞ்சல் போட மானே வா...

இஞ்சி இடுப்பழகி... மஞ்ச சிவப்பழகி... கள்ளச் சிரிப்பழகி...
மறக்க மனம் கூடுதில்லையே... யே

தன்னந்தனிசிருக்க தத்தளிச்சு தானிருக்க
உன் நெனப்பில் நான் பறிச்சேன் தாமரய


புன்ன வனத்தினிலே பேடைக்குயில் கூவையில
உன்னோடைய வேதனய நான் அறிஞ்சேன்


உன் கழுத்தில் மாலையிட உன்னிரண்டு தோளைத்தொட
என்ன தவம் செஞ்சேனோ என் மாமா


வண்ணக்கிளி கையத் தொட சின்ன சின்னக் கோலமிட
உள்ளம் மட்டும் உன் வழியே நானே 
உள்ளம் மட்டும் உன் வழியே நானே


இஞ்சி இடுப்பழகா... மஞ்ச சிவப்பழகா... கள்ளச் சிரிப்பழகா...
மறக்க மனம் கூடுதில்லையே


இஞ்சி இடுப்பழகி... மஞ்ச சிவப்பழகி... கள்ளச் சிரிப்பழகி...
மறக்க மனம் கூடுதில்லையே


அடிக்கிற காத்தைக் கேளு அசையுற நாத்தைக் கேளு 
நடக்கிற ஆத்தைக் கேளு நீ தானா…


இஞ்சி இடுப்பழகி... மஞ்ச சிவப்பழகி... கள்ளச் சிரிப்பழகி...
மறக்க மனம் கூடுதில்லையே ஹா...

D - Alphabet Movie Title





தசாவதாரம் (2009)

தர்மத்தின் தலைவன் (1988)

தாம்தூம் (2008)

தாஸ் (2005)
தீனா (2001)

தீபாவளி (2007)

Saturday, May 7, 2011

தெய்வத் திருமகள் - விழிகளில் ஒரு

படம் : தெய்வத் திருமகள் (2011)
இசை : G.V. பிரகாஷ்
பாடியவர் : 
சந்தவி
பாடல் வரி : நா.முத்துகுமார்



விழிகளில் ஒரு வானவில்
இமைகளை தொட்டு பேசுதே
இது என்ன புது வானிலை
மழை வெயில் தரும்
உன்னிடம் பார்கிறேன்... நான் பார்கிறேன்...
என் தாய்முகம் அன்பே...
உன்னிடம் தோற்கிறேன்... நான் தோற்கிறேன்...
என்னாகுமோ இங்கே...
முதன் முதலாய் மயங்குகிறேன்...
கண்ணாடி போல தோன்றினாய்
என் முன்பு என்னை காட்டினாய்
கனா எங்கும் வினா...



விழிகளில் ஒரு வானவில்
இமைகளை தொட்டு பேசுதே
இது என்ன புது வானிலை
மழை வெயில் தரும்



நீ வந்தாய் என் வாழ்விலே
பூ பூத்தாய் என் வேரிலே
நாளையே நீ போகலாம்
என் ஞாபகம் நீ ஆகலாம்
தேர் சென்ற பின்னாலே வீதி என்னாகுமோ...
யார் இவன்... யார் இவன்...
ஒர் மாயவன் மெய்யானவன் அன்பில்..
யார் இவன்.. யார் இவன்
நான் நேசிக்கும் கண்ணீர் இவன் நெஞ்சில்
இனம் புரியா உறவிதுவோ
என் தீவில் பூத்த பூவிது
என் நெஞ்சில் வாசம் தூவுது
மனம் எங்கும் மனம்



விழிகளில் ஒரு வானவில்
இமைகளை தொட்டு பேசுதே
இது என்ன புது வானிலை
மழை வெயில் தரும்



நான் உனக்காக பேசினேன்
யார் எனக்காக பேசுவார்
மௌனமாய் நான் பேசினேன்
கைகளில் மை பூசினேன்
நீ வந்த கனவேங்கே காற்றில் கை வீசினேன்
அன்பெனும் தூண்டிலை நீ வீசினால்
மீன் ஆகிறேன் அன்பே
உன் முன்பு தானடா இப்போது நான்
பெண்ணாகிறேன் இங்கே
தயக்கங்களால் திணறுகிறேன்
நில்லென்று சொன்ன போதிலும்
நில்லாமல் நெஞ்சம் ஓடுதே
இதோ உந்தன் வழி

Tuesday, April 26, 2011

தீனா - சொல்லாமல் தொட்டு



படம் : தீனா (2001)
இசை : யுவன் சங்கர் ராஜா
பாடியவர் :  ஹரிஹரன்
பாடல் வரி : வாலி








சொல்லாமல் தொட்டு செல்லும் தென்றல்
என் காதல் தேவதையின் கண்கள்
நெஞ்சத்தில் கொட்டி செல்லும் மின்னல்
கண்ணோரம் மின்னும் அவள் காதல்


ஒரு நாளைக்குள்ளே மெல்ல மெல்ல
உன் மௌனம் என்னை கொல்ல கொல்ல
இந்த காதலினால் காற்றில் பறக்கும் காகிதம் ஆனேன்


சொல்லாமல் தொட்டு செல்லும் தென்றல்
என் காதல் தேவதையின் கண்கள்
நெஞ்சத்தில் கொட்டி செல்லும் மின்னல்
கண்ணோரம் மின்னும் அவள் காதல்


ஒ... காதலின் அவஸ்தை எதிரிக்கும் வேண்டாம்
நரக சுகம் அல்லவா
நெருப்பை விழுங்கி விட்டேன்
ஒ... அமிலம் அருந்தி விட்டேன்


நோயாய் நெஞ்சில் நீ நுழைந்தாய்
மருந்தை ஏனடி தர மறந்தாய்
வாலிபத்தின் சோலையிலே
ரகசியமாய் பூ பறித்தவள் நீ தானே


சொல்லாமல் தொட்டு செல்லும் தென்றல்
என் காதல் தேவதையின் கண்கள்
நெஞ்சத்தில் கொட்டி செல்லும் மின்னல்
கண்ணோரம் மின்னும் அவள் காதல்


யே... பெண்களின் உள்ளம் படு குழி என்பேன்
விழுந்து எழுந்தவன் யார்
ஆழம் அளந்தவன் யார்
ஒ... கரையை கடந்தவன் யார்


காதல் இருக்கும் பயத்தினில் தான்
கடவுள் பூமிக்கு வருவதில்லை
மீறி அவன் பூமி வந்தால்
தாடியுடன் தான் அலைவான் வீதியிலே....

சொல்லாமல் தொட்டு செல்லும் தென்றல்
என் காதல் தேவதையின் கண்கள்
நெஞ்சத்தில் கொட்டி செல்லும் மின்னல்
கண்ணோரம் மின்னும் அவள் காதல்

ஒரு நாளைக்குள்ளே மெல்ல மெல்ல
உன் மௌனம் என்னை கொல்ல கொல்ல
இந்த காதலினால் காற்றில் பறக்கும் காகிதம் ஆனேன்

சொல்லாமல் தொட்டு செல்லும் தென்றல்
என் காதல் தேவதையின் கண்கள்
நெஞ்சத்தில் கொட்டி செல்லும் மின்னல்
கண்ணோரம் மின்னும் அவள் காதல்

Wednesday, February 2, 2011

Doubles - Adi Kaathal

படம் : டபுள்ஸ் (2000)
இசை : ஸ்ரீகாந்த் தேவா
பாடியவர்கள் :  உன்னிகிருஷ்ணன், ஹரிணி
பாடல் வரிகள் : வைரமுத்து







அடி காதல் ஒரு கண்ணில் 
காமம் ஒரு கண்ணில் 
இது தான் தேன் நிலா 


சிறு முத்தம் தருகையில் 
மொத்தம் நனைவது 
அடடா தேன் நிலா 


நான் காலம் முழுதும் 
தூங்கும் தலையணை 
உந்தன் நெஞ்சிலா? 


உன் மூச்சுக்காற்று 
தேகம் கிள்ளும் 
மாலை தென்றலா? 


கலந்திடவா...

கறைந்திடவா...




விரல்களை நுழைத்து 
கூந்தலை கலைத்து 
இதழ்களை அடைத்து 
இதயத்தை நிறுத்து 


தேகத்தை கொடுத்து 
தீபத்தை நிறுத்து 
வாரியே கொடுத்தேன் 
வசதியை பொறுத்து 


பற பற பறவேன 
மோக வெள்ளம் பாய்வது எதற்கு? 


அடட
டா 
ஆணி வேரும் இனிக்குது எனக்கு 


என் மேனியில் மயில் இறக்காக 
உன் மீசை ஆடியதென்ன? 


உன் ஆடைகள் நழுவிய போது 
ஆடை நானே விடை சொல்லடி 
பதில் என்னடி...இ...இ..இ 



இது நல்ல உணர்ச்சி 
இளமைக்கு பயிற்சி 
உடம்புக்குள் உயிரை 
தேடிடும் முயற்சி 


நான் இன்று கண்டேன் 
இன்னொரு மலர்ச்சி
நாளைக்கும் வேண்டும் 
சுகங்களின் தொடர்ச்சி 


உன் தேவைகள் எவை 
என்று சொன்னால் தீர்த்து வைப்பேன் 
அது என் கடமை 


பெண் தேவைகள் எவை
என்று காண ஆணின் கடமை 
கண்டுபிடி... கண்டுபிடி... 


அடி காதல் ஒரு கண்ணில் 
காமம் ஒரு கண்ணில் 
இது தான் தேன் நிலா 


சிறு முத்தம் தருகையில் 
மொத்தம் நனைவது 
அடடா தேன் நிலா 


நான் காலம் முழுதும் 
தூங்கும் தலையணை 
உந்தன் நெஞ்சிலா? 


உன் மூச்சுக்காற்று
தேகம் கிள்ளும் 
மாலை தென்றலா? 

கலந்திடவா....

கறைந்திடவா....

Popular Posts