Saturday, August 13, 2011

தேவர் மகன் - மாசறு பொன்னே

படம் : தேவர் மகன் (1992)
இசை : இளையராஜா
பாடியவர் :  சொர்ணலதா, மின்மினி
பாடல் வரி : வாலி



மாசறு பொன்னே வருக

மாசறு பொன்னே வருக
திரிபுரம் அதை எரித்த ஈசனின் பங்கே வருக
மாதவன் தங்காய் வருக
மணி ரதம் அதில் உலவ வாசலில் இங்கே வருக


கோல முகமும் குறுநகையும் குளிர் நிலவென
நீலவிழியும் பிறை நுதலும் விளங்கிடும எழில்
நீலியென சூலியெனத் தமிழ் மறை தொழும்

மாசறு பொன்னே வருக
திரிபுரம் அதை எரித்த ஈசனின் பங்கே வருக


நீர் வானம் நிலம் காற்று நெருப்பான ஐம்பூதம்
உனதாணைத் தனையேற்றுப் பணியாற்றுதே
பார் போற்றும் தேவாரம் ஆழ்வார்கள் தமிழாரம்
இவையாவும் எழிலே உன் பதம் போற்றுதே
திரிசூலம் கரம் ஏந்தும் மாகாளி உமையே
கருமாரி மகமாயி காப்பாற்று எனையே


பாவம் விலகும் வினையகலும் உனைத் துதித்திட
ஞானம் விளையும் நலம் பெருகும் இருள் விலகிடும்
சோதியென ஆதியென அடியவர் தொழும்



மாசறு பொன்னே வருக
திரிபுரம் அதை எரித்த ஈசனின் பங்கே வருக
மாதவன் தங்காய் வருக
மணி ரதம் அதில் உலவ வாசலில் இங்கே வருக

கோல முகமும் குறுநகையும் குளிர் நிலவென
நீலவிழியும் பிறை நுதலும் விளங்கிடும எழில்
நீலியென சூலியெனத் தமிழ் மறை தொழும்



மாசறு பொன்னே வருக
திரிபுரம் அதை எரித்த ஈசனின் பங்கே வருக


Popular Posts