Showing posts with label Revathi. Show all posts
Showing posts with label Revathi. Show all posts

Tuesday, October 23, 2018

Marupadiyum - Nalam Vaazha

படம் : மறுபடியும் (1993)
இசை : இளையராஜா
பாடியவர் : S.P.பாலசுப்ரமணியம்
பாடல்வரிகள் : வாலி




நலம் வாழ எந்நாளும் என் வாழ்த்துகள்
தமிழ் கூறும் பல்லாண்டு என் வார்த்தைகள்
இளவேனில் உன் வாசல் வந்தாடும்
இளந்தென்றல் உன் மீது பண்பாடும்
இளவேனில் உன் வாசல் வந்தாடும்
இளந்தென்றல் உன் மீது பண்பாடும்

நலம் வாழ எந்நாளும் என் வாழ்த்துகள்
தமிழ் கூறும் பல்லாண்டு என் வார்த்தைகள்
ஓஹோ... ஹோ... ஓஹோ... ஹோ...
ஓஹோ...ஹோ.. ஓ... ஓ... ஓ...


மனிதர்கள் சில நேரம் நிறம் மாறலாம்
மனங்களும் அவர் குணங்களும் தடம் மாறலாம்
இலக்கணம் சில நேரம் பிழையாகலாம்
எழுதிய அன்பு இலக்கியம் தவறாகலாம்
விரல்களைத் தாண்டி வளர்ந்ததைக் கண்டு
நகங்களை நாமும் நறுக்குவதுண்டு
இதிலென்ன பாவம் எதற்கிந்த சோகம் கிளியே

நலம் வாழ எந்நாளும் என் வாழ்த்துகள்
தமிழ் கூறும் பல்லாண்டு என் வார்த்தைகள்


கிழக்கினில் தினம் தோன்றும் கதிரானது
மறைவதும் பின்பு உதிப்பதும் மரபானது
கடல்களில் உருவாகும் அலையானது
விழுவதும் பின்பு எழுவதும் இயல்பானது
நிலவினை நம்பி இரவுகள் இல்லை
விளக்குகள் காட்டும் வெளிச்சத்தின் எல்லை
ஒரு வாசல் மூடி மறுவாசல் வைப்பான் இறைவன்

நலம் வாழ எந்நாளும் என் வாழ்த்துகள்
தமிழ் கூறும் பல்லாண்டு என் வார்த்தைகள்
இளவேனில் உன் வாசல் வந்தாடும்
இளந் தென்றல் உன் மீது பண்பாடும்
இளவேனில் உன் வாசல் வந்தாடும்
இளந் தென்றல் உன்மீது பண்பாடும்

நலம் வாழ எந்நாளும் என் வாழ்த்துகள்
தமிழ் கூறும் பல்லாண்டு என் வார்த்தைகள்


Wednesday, April 12, 2017

Power Paandi - Paarthen

படம் : ப.பாண்டி (2017)
இசை : ஷான் ரோல்டன்
பாடியவர்கள் : ஷான் ரோல்டன், ஸ்வேதா மோகன்
பாடல்வரிகள்: செல்வராகவன்


Power paandi poster.jpg



பார்த்தேன் களவு போன நிலவ நான் பார்த்தேன்
சாஞ்சேன் என் நெஞ்சுக்குள்ள என்ன சுகம் சாஞ்சேன்
காத்து சில்லுனு வீசுது காதல் இம்புட்டுதான்
சாரல் சன்ன‌தி காட்டுது காதல் இம்புட்டுதான்
இடி மின்னல் அடிக்குது வெளிச்சத்துல

பார்த்தேன் களவு போன நிலவ நான் பார்த்தேன்
சாஞ்சேன் என் நெஞ்சுக்குள்ள என்ன சுகம் சாஞ்சேன்


திருவிழா ஒன்ன முன்னே காட்சிதான் கொடுக்கிறதே
எத்தன பிறவி தவமோ கண்ணு முன்னே நடக்கிறதே
தரையில காலும் இல்ல கனவுல மெதக்கிறனே
மழையில மண்ணின் வாசம் மயங்கி போய் கெடக்கிறனே
வேண்டுன சாமி எல்லாம் வரமா தந்த துணை நீதான்
நெஞ்சுகுழி தவிக்குது அழகே உன்ன...

பார்த்தேன்... பார்த்தேன்... 
சாஞ்சேன்..சாஞ்சேன்..

பார்த்தேன் களவு போன நிலவ நான் பார்த்தேன்
சாஞ்சேன் என் நெஞ்சுக்குள்ள என்ன சுகம் சாஞ்சேன்

காத்து சில்லுனு வீசுது காதல் இம்புட்டுதான்
சாரல் சங்கதி பாடுது காதல் இம்புட்டுதான்
இடி மின்னல் அடிக்குது வெளிச்சத்துல...

Power Paandi - Venpani Malare

படம் : ப.பாண்டி (2017)
இசை : ஷான் ரோல்டன்
பாடியவர்கள் : ஸ்வேதா மோகன்
பாடல்வரிகள்: தனுஷ்


Image result for Power Paandi



வெண்பனி மலரே உன் வாசம் உயிரில் புது சுவாசம் தருதே
உன் இரு விழியால் என் ஆயுள் ரேகை புது வாழ்வு பெறுதே
காலங்கள் ஓய்ந்த பின்னும் காதல் என்ன
வாலிபம் தேய்ந்த பின்னும் கூச்சம்தான் என்ன

காற்றில் பறக்கும் காத்தாடி நானே
எட்டு வயதாய் கூத்தாடினேனே
காய்ந்த இலை நான் பச்சை ஆனேன்
பாலைவனம் நான் நீர்வீழ்ச்சி ஆனேன்
காற்றில் பறக்கும் காத்தாடி நானே
எட்டு வயதாய் கூத்தாடினேனே
காய்ந்த இலை நான் பச்சை ஆனேன்
பாலைவனம் நான் நீர்வீழ்ச்சி ஆனேன்

வெண்பனி மலரே... உன் இரு விழியால்...


தேடிய தருணங்கள் எல்லாம் தேடியே வருகிறதே...
தேகத்தின் சுருக்கங்கள் எல்லாம் சிரிக்கின்றதே...
வந்ததும் வாழ்ந்ததும் கண் முன்னே தெரிகிதே ...
அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே பூக்கிறதே...
பாரம் பாய்ந்த நெஞ்சுகுள்ளே ஈரம் பாயுதே
நரைகளும் மறைந்திடவே...

வெண்பனி மலரே... உன் இரு விழியால்...
வெண்பனி மலரே உன் வாசம் உயிரில் புது சுவாசம் தருதே
உன் இரு விழியால் என் ஆயுள் ரேகை புது வாழ்வு பெறுதே
காலங்கள் ஓய்ந்த பின்னும் காதல் என்ன
வாலிபம் தேய்ந்த பின்னும் கூச்சம்தான் என்ன

காற்றில் பறக்கும் காத்தாடி நானே
எட்டு வயதாய் கூத்தாடினேனே
காய்ந்த இலை நான் பச்சை ஆனேன்
பாலைவனம் நான் நீர்வீழ்ச்சி ஆனேன்
காற்றில் பறக்கும் காத்தாடி நானே
எட்டு வயதாய் கூத்தாடினேனே
காய்ந்த இலை நான் பச்சை ஆனேன்
பாலைவனம் நான் நீர்வீழ்ச்சி ஆனேன்

Thursday, December 22, 2016

Punnagai Mannan - Vaan megam

படம் : புன்னகை மன்னன் (1986) 
இசை : இளையராஜா 
பாடியவர் :  K.S. சித்ரா 
பாடல் வரி : வைரமுத்து


Image result for punnagai mannan




வான் மேகம் பூப்பூவாய்த் தூவும்
தேகம் என்னவாகும் இன்பமாக நோகும்
மழைத்துளி தெறித்தது எனக்குள்ளே குளித்தது
நினைத்தது பலித்தது குடைக்கம்பி துளிர்த்தது
வானம் முத்துக்கள் சிந்தி வாழ்க‌வென்றது
காதல் வென்றது மேகம் வ‌ந்தது பூக்கள் சிந்துது
ஆளுமில்லை சேர்த்தெடுக்க நூலுமில்லை கோர்த்தெடுக்க
வான் மேகம் பூப்பூவாய்த் தூவும்
தேகம் என்னவாகும் இன்பமாக நோகும்


வானிலே வானிலே நீரின் தோரணங்களோ... ஹோய்
என் மனம் பொங்குதே என்ன காரணங்களோ
அவன் விழி அசைத்த‌தில் இவள் மனம் அசைந்ததோ
தளிர்கரம் பிடிக்கையில் மலர்க்கொடி சிலிர்த்ததோ
சாலை எங்கும் இங்கே சங்கீத மேடையானதோ
வாடை பாடுதோ தூரல் போடுதோ தோகை ஆடுதோ
பூமியெங்கும் கவியரங்கம் சாரல் பாடும் ஜலதரங்கம்


வான் மேகம் பூப்பூவாய்த் தூவும்
தேகம் என்னவாகும் இன்பமாக நோகும்
மழைத்துளி தெறித்தது எனக்குள்ளே குளித்தது
நினைத்தது பலித்தது குடைக்கம்பி துளிர்த்தது
வானம் முத்துக்கள் சிந்தி வாழ்க‌வென்றது
காதல் வென்றது மேகம் வ‌ந்தது பூக்கள் சிந்துது
ஆளுமில்லை சேர்த்தெடுக்க நூலுமில்லை கோர்த்தெடுக்க
வான் மேகம் பூப்பூவாய்த் தூவும்
தேகம் என்னவாகும் இன்பமாக நோகும்

Monday, January 21, 2013

உதய கீதம் - சங்கீத மேகம்

படம் : உதய கீதம் (1985)
இசை : இளையராஜா
பாடியவர்கள் : S.P. பாலசுப்ரமணியம்
பாடல்வரிகள் : முத்துலிங்கம்





சங்கீத மேகம் தேன் சிந்தும் நேரம்
ஆகாயம் பூக்கள் தூவும் காலம்
நாளை என் கீதமே எங்கும் உலாவுமே
நாளை என் கீதமே எங்கும் உலாவுமே
என்றும் விழாவே என் வாழ்விலே

சங்கீத மேகம் தேன் சிந்தும் நேரம்
ஆகாயம் பூக்கள் தூவும் காலம்

லலல... லலல...
லல... லல... ல...


போகும் பாதை தூரமே வாழும் காலம் கொஞ்சமே
ஜீவ சுகம் பெற ராக நதியினில் நீ நீந்தவா
போகும் பாதை தூரமே வாழும் காலம் கொஞ்சமே
ஜீவ சுகம் பெற ராக நதியினில் நீ நீந்தவா
இந்த தேகம் மறைந்தாலும் இசையாய் மலர்வேன்
இந்த தேகம் மறைந்தாலும் இசையாய் மலர்வேன்
கேளாய் பூமனமே.... ஹோ.....


சங்கீத மேகம் தேன் சிந்தும் நேரம்
ஆகாயம் பூக்கள் தூவும் காலம்


உள்ளம் என்னும் ஊரிலே பாடல் என்னும் தேரிலே
நாளும் கனவுகள் ராஜ பவனிகள் போகின்றதே
உள்ளம் என்னும் ஊரிலே பாடல் என்னும் தேரிலே
நாளும் கனவுகள் ராஜ பவனிகள் போகின்றதே
எந்தன் மூச்சும் இந்த பாட்டும் அணையா விளக்கே
எந்தன் மூச்சும் இந்த பாட்டும் அணையா விளக்கே
கேளாய் பூமனமே.... ஹோ.....


சங்கீத மேகம் தேன் சிந்தும் நேரம்
ஆகாயம் பூக்கள் தூவும் காலம்
நாளை என் கீதமே எங்கும் உலாவுமே
நாளை என் கீதமே எங்கும் உலாவுமே
என்றும் விழாவே என் வாழ்விலே... ஒ...
சங்கீத மேகம் தேன் சிந்தும் நேரம்
ஆகாயம் பூக்கள் தூவும் காலம்


Thursday, January 17, 2013

சின்ன பசங்க நாங்க - என்ன மானமுள்ள

படம் : சின்ன பசங்க நாங்க (1992)
இசை : இளையராஜா
பாடியவர்கள் : S.ஜானகி
பாடல்வரிகள் : கங்கைஅமரன்







ம்.... ஆ.....
என்ன மானமுள்ள பொண்ணுயின்னு மருதயில கேட்டாக

மண்ணார்க்குடியில் கேட்டாக
அந்த மாயவரத்துல கேட்டாக

சீர் சனத்தியோட வந்து சீமையில கேட்டாக

அந்த சிங்கப்பூரிலும் கேட்டாக
நம்ம சின்னமருவூரிலும் கேட்டாக

அத எல்லாம் உன்னால வேணாமினு சொன்னேன் கண்ணால
எம் மச்சான் உம் மேல ஆசப்பட்டு வந்தேன் முன்னால

அத எல்லாம் உன்னால வேணாமினு சொன்னேன் கண்ணால
எம் மச்சான் உம் மேல ஆசப்பட்டு வந்தேன் முன்னால

என்ன மானமுள்ள பொண்ணுயின்னு மருதயில கேட்டாக

மண்ணார்க்குடியில் கேட்டாக
அந்த மாயவரத்துல கேட்டாக


கொண்ட முடி அழக பாத்து கோயமுத்துருல கேட்டாக
நெத்தியில பொட்ட பாத்து நெல்லூருல கேட்டாக

ரெண்டு புருவ அழக பார்த்தாக
புது கோட்டையில் இவள கேட்டாக

கண்ணழக பாத்து பாத்து கண்டமனுருல கேட்டாக
முக்கழக பாத்து என்ன மூக்கயகோட்டையில் கேட்டாக
கோவமுள்ள பொண்ணுனு என்ன கோப்பையில கேட்டாக
பாசமுள்ள பொண்ணுனு என்ன பண்ணபுரத்துல கேட்டாக
இத்துன பேரும் சுத்தி வலைச்சும்
உத்தமராசா உன்ன நெனைக்கும் பத்தினி உள்ளமய்யா
என்ன மானமுள்ள பொண்ணுயின்னு மருதயில கேட்டாக

மண்ணார்க்குடியில் கேட்டாக
அந்த மாயவரத்துல கேட்டாக

அத எல்லாம் உன்னால வேணாமினு சொன்னேன் கண்ணால
எம் மச்சான் உம் மேல ஆசப்பட்டு வந்தேன் முன்னால


வேண்ட ஒரு சாமியுமில்ல விரும்பி வந்தேன் உங்கள
உன்ன விட யாரும் இங்கே உருப்படியா தோணல

நல்ல வாட்டமுள்ள ஆம்பள
உன்ன மறக்க இவளுக்கு ஆகல

வாரிக்கட்டி தோளிலணைச்சு வச்சுக்குங்க  வேற கேட்கல
மாறி நீங்க போனீங்கனா மனசு இப்ப ஆறல
தொட்டணைக்க கூடாதா என்ன சூடி கொண்டா ஆகாதா
பட்டு துணி மேலாக்க அத தொட்டு இழுக்க கூடாதா
உள்ளதெல்லாம் சொல்லி முடிச்சேன்
நல்ல முடிவு சொல்லுங்க மச்சான் இன்னமும் சொல்லனுமா
என்ன மானமுள்ள பொண்ணுயின்னு மருதயில கேட்டாக

மண்ணார்க்குடியில் கேட்டாக
அந்த மாயவரத்துல கேட்டாக

சீர் சனத்தியோட வந்து சீமையில கேட்டாக

அந்த சிங்கப்பூரிலும் கேட்டாக
நம்ம சின்னமருவூரிலும் கேட்டாக

அத எல்லாம் உன்னால வேணாமினு சொன்னேன் கண்ணால
எம் மச்சான் உம் மேல ஆசப்பட்டு வந்தேன் முன்னால

என்ன மானமுள்ள பொண்ணுயின்னு மருதயில கேட்டாக

மண்ணார்க்குடியில் கேட்டாக
அந்த மாயவரத்துல கேட்டாக


Friday, December 28, 2012

ஒரு கைதியின் டைரி - பொன் மானே

படம்: ஒரு கைதியின் டைரி (1985)
இசை: இளையராஜா
பாடியவர்கள்: உன்னி மேனன், உமா ரமணன்
பாடல்வரிகள்: வைரமுத்து






பொன் மானே கோபம் ஏனோ
பொன் மானே கோபம் ஏனோ
காதல் பால்குடம் கள்ளாய்ப் போனது
ரோஜா ஏனடி முள்ளாய்ப் போனது
பொன் மானே கோபம் ஏனோ
பொன் மானே கோபம் ஏனோ



காவல் காத்தவன் கைதியாய் நிற்கிறேன் வா

ஊடல் என்பது காதலின் கௌரவம் போ

ரெண்டு கண்களும் ஒன்று ஒன்றின் மேல் கோபம் கொள்வதா
லல... லலல... லல... லலல...லல... லலல...

ஆண்கள்... எல்லாம்... பொய்யின் வம்சம்

கோபம்... கூட... அன்பின் அம்சம்

நாணம் வந்தால் ஊடல் போகும் ஓஹோ...

பொன் மானே கோபம் ஏனோ
பொன் மானே கோபம் ஏனோ


உந்தன் கண்களில் என்னையே பார்கிறேன் வா

ரெண்டு பௌர்ணமி கண்களில் பார்கிறேன் வா

உன்னை பார்ததும் எந்தன் பெண்மைதான் கண்ணை திறந்ததே
லல... லலல... லல... லலல...லல... லலல...

கண்ணே... மேலும்... காதல்... பேசு

நேரம்... பார்த்து... நீயும்... பேசு

பார்வை பூவை நெஞ்சில் வீசு ஓஹோ....

பொன் மானே.... ஓஹோ....
கோபம்... ஓஹோ....
எங்கே... ஓஹோ.... ஓஹோ.... ஓஹோ....


பொன் மானே.... ஓஹோ....
கோபம்... ஓஹோ....
எங்கே... ஓஹோ.... ஓஹோ.... ஓஹோ....


பூக்கள் மோதினால் காயம் நேருமா
தென்றல் கிள்ளினால் ரோஜா தாங்குமா

ல... லல... லல... லல....
ல... லல... லல... லல....

Friday, December 14, 2012

மெளன ராகம் - பனி விழும்


படம் : மெளன ராகம் (1986)
இசை : இளையராஜா
பாடியவர்கள் :  S.P.பாலசுப்பிரமணியம், S.ஜானகி
பாடல் வரிகள் : வாலி






லாலா... லா... லாலா... லா... லா... லாலாலாலா

பனி விழும் இரவு நனைந்தது நிலவு
இளங்குயில் இரண்டு இசைக்கின்ற பொழுது
பூப்பூக்கும் ராப்போது பூங்காற்றும் தூங்காது
வா... வா... வா....

பனி விழும் இரவு


பூவிலே ஒரு பாய் போட்டு பனித்துளி தூங்க

பூவிழி இமை மூடாமல் பைங்கிளி ஏங்க

மாலை விளக்கேற்றும் நேரம்
மனசில் ஒரு கோடி பாரம்

தனித்து வாழ்ந்தென்ன லாபம்
தேவையில்லாத தாபம்

தனிமையே போ... இனிமையே வா...
நீரும் வேரும் சேர வேண்டும்

பனி விழும் இரவு நனைந்தது நிலவு


லால... லா... லால... லா... லால... லா...
ஹ ஹ ஹ ஹ ஹ ஹ ஹ ஹ

காவலில் நிலை கொள்ளாமல் தாவுதே மனது

காரணம் துணையில்லாமல் வாடிடும் வயது

ஆசை கொல்லாமல் கொல்லும்
அங்கம் தாளாமல் துள்ளும்

என்னைக் கேட்காமல் ஓடும்
இதயம் உன்னோடு கூடும்

விரகமே ஓ நரகமோ சொல்
பூவும் முள்ளாய் மாறிப் போகும்

பனி விழும் இரவு நனைந்தது நிலவு
இளங்குயில் இரண்டு இசைக்கின்ற பொழுது
பூப்பூக்கும் ராப்போது பூங்காற்றும் தூங்காது
வா... வா... வா...

பனி விழும் இரவு நனைந்தது நிலவு

Wednesday, December 12, 2012

Kai Kodukkum Kai - Thalam Poove

படம் : கை கொடுக்கும் கை (1984)
இசை : இளையராஜா
பாடியவர்கள்: S.P. பாலசுப்ரமணியம், S. ஜானகி
பாடல்வரிகள்: புலமைபித்தன்




ம்... ம்... ம்... ம்ம்ம்...
ம்... ம்... ம்... ம்ம்ம்... ம்

தாழம்பூவே வாசம் வீசு
தாயின் தாயே கொஞ்சிப்பேசு
வீடேதும் இல்ல வாசலும் இல்ல
அன்புக்கு பஞ்சமில்ல
தாலேலோ தாலேலோ
தாழம்பூவே வாசம் வீசு
தாயின் தாயே கொஞ்சிப்பேசு


நடந்தா காஞ்ச நிலம் செழிக்கும்
சிரிச்சா கோயில் மணி அடிக்கும்
கண்ட கண்ணு படும்

பேசும் போது தாய பாத்தேன்
தோளின் தூங்கும் பிள்ளை ஆனேன்

நெஞ்சத்திலே ஏ... ஏ...
நெஞ்சத்திலே ஊஞ்சல் கட்டி
ஆராரிரோ பாடவோ

தாழம்பூவே வாசம் வீசு
தாயின் தாயே கொஞ்சிப்பேசு
வீடேதும் இல்ல வாசலும் இல்ல
அன்புக்கு பஞ்சமில்ல
தாலேலோ தாலேலோ
தாழம்பூவே வாசம் வீசு
தாயின் தாயே கொஞ்சிப்பேசு


இனி நான் கோடி முறை பொறப்பேன்
உன்னை நான் பாக்க விழி திறப்பேன்
இது சத்தியமே

நீரும் போனா மேகம் ஏது
நீயும் போனா நானும் ஏது

என்னுயிரே ஏ... ஏ...
என்னுயிரே நீ இருக்க
உன்னுயிரும் போகுமோ

தாழம்பூவே வாசம் வீசு
தாயின் தாயே கொஞ்சிப்பேசு

வீடேதும் இல்ல வாசலும் இல்ல
அன்புக்கு பஞ்சமில்ல
தாலேலோ தாலேலோ

ம்ஹீம்... ம்...  ம்... ம்ஹீம்... ம்...  ம்...
ம்ஹீம்... ம்...  ம்... ம்ஹீம்... ம்...  ம்...

Monday, December 3, 2012

உதயகீதம் - பாடு நிலாவே


படம்: உதயகீதம் (1985)
இசை: இளையராஜா
பாடியவர்கள்: S.P. பாலசுப்ரமணியம், S. ஜானகி
பாடல்வரிகள்: .M. மேதா






ஆ... ஆ... ஆ... ஆஆஆ...
ஆஆ.... ஆ... ஆஆஆ...
ஆஆ... ஆஆ... ஆஆ... ஆஆ... ஆ... ஆ....ஆஆஆ...

பாடு நிலாவே தேன் கவிதை பூ மலர
பாடு நிலாவே தேன் கவிதை பூ மலர
உன் பாடலை நான் தேடினேன்
கேட்காமலே நான் வாடினேன்
பாடு நிலாவே தேன் கவிதை பூ மலர


நீ போகும் பாதை என் பூங்காவனம்
நீ பார்க்கும் பார்வை என் பிருந்தாவனம்
ஊரெங்கும் உன் ராக ஊர்கோலமோ
என் வீடு வாராமல் ஏன் போகுமோ
கைதான போதும் கை சேரவேன்டும்
உன்னோடு வாழும் ஓர் நாளும் போதும்
என் ஜென்மமே ஈடேறவே

பாடும் நிலவே தேன் கவிதை பூ மலரே
உன் பாடலை நான் கேட்கிறேன்
பாமாலையை நான் கோர்க்கிறேன்
பாடும் நிலாவே தேன் கவிதை பூ மலரே


ஊரெங்கும் போகும் என் ராகங்களே
உன் வீடு தேடும் என் மேகங்களே
பூ மீது தேன் தூவும் காதல் வரம்
என் நெஞ்சில் நீ ஊதும் நாதஸ்வரம்
காவேரி வெள்ளம் கை சேர கூடும்
ராகங்கள் சேரும் தாகங்கள் தீரும்
காதல் நிலா தூதாகுமே
பாடும் நிலாவே தேன் கவிதை பூ மலரே

உன் பாடலை நான் கேட்கிறேன்

பாமாலையை நான் கோர்க்கிறேன்

பாடும் நிலாவே...

தேன் கவிதை...

பூ மலரே...



Thursday, October 25, 2012

அவதாரம் - தென்றல் வந்து

படம்: அவதாரம் (1995)
இசை: இளையராஜா
பாடியவர்கள்: இளையராஜா, S. ஜானகி
பாடல் வரிகள்: வாலி





தானத் தந்தத் தானத் தந்தத் தனனா
தானத் தந்தத் தானத் தந்தத் தனனா......
தானத் தந்தத் தானத் தந்தத் தனனா
தானத் தந்தத் தானத் தந்தத் தனனா

தந்தனன..... தானனான.... தானனான....
தந்தனன..... தானனான.... தானனான....
தென்றல் வந்து தீண்டும் போது என்ன வண்ணமோ மனசுல
திங்கள் வந்து காயும் போது என்ன வண்ணமோ நினப்புல
வந்து வந்து போகுதம்மா எண்ணமெல்லாம் வண்ணமம்மா
எண்ணங்களுக்கேத்தபடி வண்ணமெல்லாம் மாறுமம்மா
உண்மையம்மா உள்ளத நானும் சொன்னேன்
பொன்னம்மா சின்னக் கண்ணே
தென்றல் வந்து தீண்டும் போது என்ன வண்ணமோ மனசுல
திங்கள் வந்து காயும் போது என்ன வண்ணமோ நினப்புல


தம் தம் தம்......  தம் தம் தம்......  தம் தம் தம்...... 
ஓ ஓ ஓ.... ஓ ஓ ஓ.... ஓ ஓ ஓ....
ஓ ஓ ஓ.... ஓ ஓ ஓ.... ஓ ஓ ஓ....
ஓ ஓ ஓ.... ஓ ஓ ஓ.... ஓ ஓ ஓ....

விவரம் இல்லாமலே பூக்களும் வாசம் வீசுது
உறவும் இல்லாமலே இருமனம் ஏதோ பேசுது

எவரும் சொல்லாமலே குயிலெல்லாம் தேனா பாடுது
எதுவும் இல்லாமலே மனசெல்லாம் இனிப்பா இனிக்குது

ஓடை நீரோடை இந்த உலகம் அது போல

ஓடும் அது ஓடும் இந்தக் காலம் அது போல

நிலையா நில்லாது நினைவில் வரும் நிறங்களே

தென்றல் வந்து தீண்டும் போது என்ன வண்ணமோ மனசுல

ம்ம்... ம்ம்... ம்ம்... ம்ம்...
ம்ம்... ம்ம்... ம்ம்... ம்ம்...
ம்ம்... ம்ம்... ம்ம்... ம்ம்...

ஈரம் விழுந்தாலே நிலத்திலே எல்லாம் துளிர்க்குது
நேசம் பெறந்தாலே உடம்பெல்லாம் ஏனோ சிலிர்க்குது

ஆலம் விழுதாக ஆசைகள் ஊஞ்சல் ஆடுது
அலையும் அலை போலே அழகெல்லாம் கோலம் போடுது

குயிலே குயிலினமே அந்த எசையா கூவுதம்மா

கிளியே கிளியினமே அதைக் கதையாப் பேசுதம்மா

கதையாய் விடுகதையாய் ஆவதில்லையே அன்புதான்

தென்றல் வந்து தீண்டும் போது என்ன வண்ணமோ மனசுல

திங்கள் வந்து காயும் போது என்ன வண்ணமோ நினப்புல

வந்து வந்து போகுதம்மா எண்ணமெல்லாம் வண்ணமம்மா

எண்ணங்களுக்கேத்தபடி வண்ணமெல்லாம் மாறுமம்மா

உண்மையிலே உள்ளது என்ன என்ன?
வண்ணங்கள் என்ன என்ன?

தென்றல் வந்து தீண்டும் போது என்ன வண்ணமோ மனசுல

திங்கள் வந்து காயும் போது என்ன வண்ணமோ நினப்புல


Monday, May 28, 2012

பிரியங்கா - வனக்குயிலே குயில்


படம்: பிரியங்கா (1994)
இசை: இளையராஜா
பாடியவர்கள்: S.P. பாலசுப்ரமணியம்
பாடல்: வைரமுத்து






Download this MP3

வனக்குயிலே குயில் தரும் கவியே
கவி தரும் இசையே........
வனக்குயிலே குயில் தரும் கவியே
கவி தரும் இசையே........
கொடி மலரே மலர் விடும் இதழே
இதழ் தரும் மதுவே........
வனக்குயிலே குயில் தரும் கவியே
கவி தரும் இசையே........
மலரிலும் மலையிலும் நதியிலும் உன் உருவமே
தெரிவதென்ன அழகழகாய் தெரிவதென்ன
வனக்குயிலே குயில் தரும் கவியே
கவி தரும் இசையே........

ஹோயல்லோ ஹோய ஹோய ஹோயல்லோ
ஹோயல்லோ ஹோய ஹோய ஹோயல்லோ
ஹோய ஹோய ஹோயே....
ஹோய ஹோய ஹோயே....

உன் ஞாபகம் நெஞ்சில் வந்தாடுதே
ஓயாமலே என்னைப் பந்தாடுதே
உன் பூமுகம் கண்ணில் நின்றாடுதே
நான் கொஞ்சவே என்னை மன்றாடுதே
படித்தால் இனித்திடும் புதினம்
உனை நான் மறப்பது கடினம்
அலையாய் தொடர்ந்திடும் நினைப்பு
வலைக்குள் தவித்திடும் தவிப்பு
துளிர்க்கும் ஆசை துளிர்த்தால்
மேனி சிலிர்க்கும் மிதக்கும் பறக்கும்

வனக்குயிலே குயில் தரும் கவியே
கவி தரும் இசையே........
வனக்குயிலே குயில் தரும் கவியே
கவி தரும் இசையே........

ஆஹா  ஹோ ஓஹோஹோ
ஓஹோ ஹோ ஹோ ஹோ
ஓஹோ ஓஹோ ஹோ ஹோ
ஆஹா ஆஹா...

செவ்வாழைகள் பந்தலாய் தோன்றுதே
கூந்தல் பனை தோரனை ஆனாதே
பூமாலையாய் தோன்றும் பூஞ்சோலையே
எங்கெங்கும் கல்யாணக் கோலங்களே
மணநாள் நினைவுகள் மலரும்
மனதில் மலையென வளரும்
வருவேன் தருவேன் கிளியே
விழிக்குள் இருக்கும் விழியே
இணைந்தால் இருவர் இணைந்தால்
இன்ப வரவும் உறவும் சுகமே

வனக்குயிலே குயில் தரும் கவியே
கவி தரும் இசையே........
வனக்குயிலே குயில் தரும் கவியே
கவி தரும் இசையே........
கொடி மலரே மலர் விடும் இதழே
இதழ் தரும் மதுவே........
வனக்குயிலே குயில் தரும் கவியே
கவி தரும் இசையே........
மலரிலும் மலையிலும் நதியிலும் உன் உருவமே
தெரிவதென்ன அழகழகாய் தெரிவதென்ன
வனக்குயிலே குயில் தரும் கவியே
கவி தரும் இசையே........

Saturday, May 26, 2012

Vaithegi Kathirunthal - Indraikku En

படம்: வைதேகி காத்திருந்தாள் (1984)
இசை: இளையராஜா
பாடியவர்: ஜெயச்சந்திரன், வாணி ஜெயராம்
பாடல் வரி: கங்கைஅமரன்






ஆ.... ஆ ஆ ஆ ஆ.... ஆ ஆ ஆ...
இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே
இன்பத்தில் ஆடுது என் மனமே
கனவுகளின்..... சுயம்வரமோ
கண் திறந்தால்..... சுகம் வருமோ

இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே
இன்பத்தில் ஆடுது என் மனமே

பூங்குயில் சொன்னது காதலின் மந்திரம்
பூமகள் காதினிலே

பூவினை தூவிய பாயினில் பெண் மனம்
பூத்திடும் வேளையிலே

நாயகன் கை தொடவும் - வந்த
நாணத்தைப் பெண் விடவும்
நாயகன் கை தொடவும் - வந்த
நாணத்தைப் பெண் விடவும்

மஞ்சத்திலே கொஞ்ச கொஞ்ச

மங்கை உடல் கெஞ்ச கெஞ்ச

சுகங்கள் சுவைக்கும் இரண்டு விழிகளில்
இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே
இன்பத்தில் ஆடுது என் மனமே
கனவுகளின்..... சுயம்வரமோ
கண் திறந்தால்..... சுகம் வருமோ

இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே... ஏ....

க ரி ம க ரி ச......
ரி க ம த ம க.....
ச த நி ச த ம.....
க ச ரி க ம ம த ச ரி.....
ச ச ச ச ச ச ச ச ச ரி ரி ச ரி நி ச த க ம ப த
ரி ரி ரி ரி ரி ரி ரி ரி க ம ரி க ச க ம நி ச க ம

மாவிலைத் தோரணம் ஆடிய காரணம்
தேவியின் திருமணமோ

ஆலிலையோ தொட ஆளில்லையோ
அதில் ஆடிடும் என் மனமோ

காதலின் பல்லவியோ - அதில்
நான் அனுபல்லவியோ
காதலின் பல்லவியோ - அதில்
நான் அனுபல்லவியோ

அங்கத்திலே ஏழு ஸ்வரம்
இன்பத்திலே நூறு வரம்

மிதந்து மறந்து மகிழந்த நெஞ்சத்தில்

இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே
இன்பத்தில் ஆடுது என் மனமே

கனவுகளின்..... சுயம்வரமோ
கண் திறந்தால்..... சுகம் வருமோ

இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே... ஏ....

Thursday, May 24, 2012

Vaidhegi Kathirunthal - Azhagu Malar Aada

படம்: வைதேகி காத்திருந்தாள் (1984)
இசை: இளையராஜா
பாடியவர்: S.ஜானகி, T.S. ராகவேந்தர்
பாடல் வரிகள்: வாலி





தகிடு தகிடு தோம்....
தகிடு தகிடு தோம்....
தகிடு தகிடு தோம்.... ச...... ச.....

ம க ம ச... ம க ம ச... ம க ம ச...
ச... ச...

அழகு மலராட அபினயங்கள் கூட
சிலம்பொலியும் புலம்புவதை கேள்
என் சிலம்பொலியும் புலம்புவதை கேள்

அழகு மலராட அபினயங்கள் கூட
சிலம்பொலியும் புலம்புவதை கேள்
விரல் கொண்டு மீட்டாமல் வாழ்கின்ற வீணை
குளிர் வாடை கொஞ்சாமல் கொதிக்கின்ற சோலை
பகலிரவு பல கனவு இரு விழியில் வரும்பொழுது
அழகு மலராட அபினயங்கள் கூட
சிலம்பொலியும் புலம்புவதை கேள்

த க திம் த... த க திம் த...
த க திம் த... த க திம் த...
தகிடு தோம்.... தகிடு தோம்.... த திம் த... த திம் த... த க...
தகிடு தோம்.... தகிடு தோம்.... த திம் த... த திம் த... த க...

ஆ.... ஆகாயம் இல்லாமலே ஒரு நிலவு தரை மீது தள்ளாடுது
ஆதாரம் இல்லாமலே ஒரு கொடியும் ஆடாமல் தலை சாயுது
தாளத்தில் சேராத தனிப்பாடல் ஒன்று
சங்கீதம் காணாமல் தவிக்கின்றது
விடியாத இரவெது கிடையாது என்ற
ஊர் சொன்ன வார்த்தைகள் பொய்யானது
வசந்தம் இனி வருமோ வாழ்வினிமை பெறுமோ
ஒரு பொழுது மயக்கம் ஒரு பொழுது கலக்கம்
பதிலேதும் இல்லாத கேள்வி

அழகு மலராட அபினயங்கள் கூட
சிலம்பொலியும் புலம்புவதை  கேள்
விரல் கொண்டு மீட்டாமல் வாழ்கின்ற வீணை
குளிர் வாடை கொஞ்சாமல் கொதிக்கின்ற சோலை
பகலிரவு பல கனவு இரு விழியில் வரும்பொழுது
அழகு மலராட அபினயங்கள் கூட
சிலம்பொலியும் புலம்புவதை  கேள்

ஆ... ஊதாத புல்லாங்குழல் எனதழகு சூடாத பூவின் மடல்
தேய்கின்ற மஞ்சள் நிலா ஒரு துணையைத் தேடாத வெள்ளைப் புறா
பூங்காற்று மெதுவாகப் பட்டாலும் போதும்
பொன்மேனி நெருப்பாகக் கொதிக்கின்றது
நீரூற்றிப் பாயாத நிலம் போல நாளும்
என் மேனி தரிசாக இருக்கின்றதே
தனிமையிலும் தனிமை கொடுமையிலும் கொடுமை
இனிமை இல்லை வாழ்வில் எதற்கு இந்த இளமை
தனிமையிலும் தனிமை கொடுமையிலும் கொடுமை
இனிமை இல்லை வாழ்வில் எதற்கு இந்த இளமை
வேறேன்ன நான் செய்த பாவம்

அழகு மலராட அபினயங்கள் கூட
சிலம்பொலியும் புலம்புவதை  கேள்
விரல் கொண்டு மீட்டாமல் வாழ்கின்ற வீணை
குளிர் வாடை கொஞ்சாமல் கொதிக்கின்ற சோலை
பகலிரவு பல கனவு இரு விழியில் வரும்பொழுது
அழகு மலராட அபினயங்கள் கூட
சிலம்பொலியும் புலம்புவதை  கேள்

ச ச ச நி நி க க க ம ப க க க ச ச நி
நி நி நி ச ச க க க ம ப க க க ச ச நி

ச க க நி ச.... ச க க நி ச...
ச க க நி ச.... ச க க நி ச...
நி ச நி த நி ச நி ச நி த ப
தகிடு தகிடு தோம்.... தகிடு தோம்....
கிகிடு தகிடு தோம்.... தகிடு தோம்....
தகிடு தோம்.... தகிடு தோம்.... தகிடு தோம்.... தகிடு தகிடு தோம்....
தகிடு தோம்.... தகிடு தோம்.... தகிடு தோம்.... தகிடு தகிடு தோம்....
தகிடு தகிடு தோம்.... தகிடு தகிடு தோம்.... தகிடு தகிடு தோம்....
த க தகிட த க தகிட த க தகிட தகிடு தகிடு தோம்....
த க தகிட த க தகிட த க தகிட தகிடு தகிடு தோம்....
த க தகிட த க தகிட த க தகிட தகிடு தகிடு தோம்....
த க தகிட த........


Popular Posts