Wednesday, January 9, 2013

Dhill - Un Samayal Arayil

படம் : தில் (2001)
இசை : வித்யாஷாகர்
பாடியவர்கள் : உன்னிகிருஷ்ணன், சுஜாதா
பாடல்வரிகள்: கபிலன்






உன் சமையல் அறையில் 
நான் உப்பா சர்க்கரையா

நீ படிக்கும் அறையில் 
நான் கண்களா புத்தகமா

உன் சமையல் அறையில் 
நான் உப்பா சர்க்கரையா

நீ படிக்கும் அறையில் 
நான் கண்களா புத்தகமா

நீ விரல்கள் என்றால் 
நான் நகமா மோதிரமா

ஆ... நீ இதழ்கள் என்றால் 
நான் முத்தமா புன்னகையா

ஆ... நீ அழகு என்றால் 
நான் கவியா ஓவியனா
உன் சமையல் அறையில் 
நான் உப்பா சர்க்கரையா

ம்ம்... நீ படிக்கும் அறையில் 
நான் கண்களா புத்தகமா



நான் வெட்கம் என்றால் 
நீ சிவப்பா கன்னங்களா

ஆ... நான் தீண்டல் என்றால் 
நீ விரலா ஸ்பரிசங்களா

ஆ... நீ குழந்தை என்றால் 
நான் தொட்டிலா தாலாட்டா

ஆ... ஹா... நீ தூக்கம் என்றால் 
நான் மடியா தலையணையா

ஆ... நான் இதயம் என்றால் 
நீ உயிரா துடிதுடிப்பா

உன் சமையல் அறையில் 
நான் உப்பா சர்க்கரையா

நீ படிக்கும் அறையில் 
நான் கண்களா புத்தகமா



நீ விதைகள் என்றால் 
நான் வேரா விளைநிலமா

ஆ... நீ விருந்து என்றால் 
நான் பசியா ருசியா

ஆ... நீ கைதி என்றால் 
நான் சிறையா தண்டணையா

ஆ... ஹா... நீ மொழிகள் என்றால் 
நான் தமிழா ஓசைகளா

ஆ... நீ புதுமை என்றால் 
நான் பாரதியா பாரதிதாசனா... நீ
நீ தனிமை என்றால் 
நான் துணையா தூரத்திலா

நீ துணைதான் என்றால் 
நான் பேசவா யோசிக்கவா

நீ திரும்பி நின்றால் 
நான் நிற்கவா போய்விடவா

ஆ... நீ போகிறாய் என்றால் 
நான் அழைக்கவா அழுதிடவா

ஆ... நீ காதல் என்றால் 
நான் சரியா தவறா

உன் வலதுகையில் பத்து விரல்..... பத்து விரல்
என் இடதுகையில் பத்து விரல்..... பத்து விரல்
தூரத்து மேகம் தூரல்கள் சிந்த
தீர்த்த மழையில் தீ குளிப்போம்…

Popular Posts