Showing posts with label Madhavan. Show all posts
Showing posts with label Madhavan. Show all posts

Monday, March 16, 2020

Run - Azhagiya Thimirudan

படம் : ரன் (2002)
இசை : வித்யாசாகர்
பாடியவர்கள் : ஜேக் ஸ்மெல்லி வித்யாசாகர், சாதனாசர்கம்
பாடல்வரிகள் : விவேகா

Image result for run tamil movie



அழகிய திமிருடன்
இரு விழி புயல் எனை தாக்குதே
ஒ ஒஹோ... வோ... வோ... வோ...

ஒருமுனை கொளுத்திய
சரவெடி உயிருக்குள் கேட்குதே
ஒ யே... ஒ யேயேயே...

உடை பட்ட அணை விட்டு
நுரை முட்ட புது வெள்ளம் பாயுதே
ஒ ஒ ஒஹோ... ஒ ஒஹோ...

நெரிசனில் நடுவிலும்
கவிதையின் தரிசனம் நீளுதே
ஒ வோ... வோ... ஒ ஒஹோ...
ஒ யேயேயே...


மறு முறை அவள் விழி
எனை தொட முதல்முறை வேர்க்கிறேன்
ஒ ஒஹோ...

மழை தொட வெயில் சுட
புது வித அனுபவம் பார்க்கிறேன்
வோ... வோ... வோ...

கனவு எது நிஜம் எது
ஒரு பதில் தரும்படி கேட்க்கிறேன்
வோ... வோ... வோ...
யே... யே... யே...

Tuesday, November 13, 2018

Dum Dum Dum - Un Perai Sonnale

படம் : டும் டும் டும் (2001)
இசை : கார்த்திக் ராஜா
பாடியவர்கள் :  உன்னி கிருஷ்ணன், சாதனா சர்கம்
பாடல்வரிகள் : நா.முத்துகுமார்

Image result for Dumm Dumm Dumm


உன் பேரை சொன்னாலே
உள்நாக்கில் தித்திக்குமே
போகாதே போகாதே
உன்னோடு சென்றாலே
வழியெல்லாம் பூப்பூக்குமே
வாராயோ வாராயோ

உன் பேரை சொன்னாலே
உள்நாக்கில் தித்திக்குமே
போகாதே போகாதே
உன்னோடு சென்றாலே
வழியெல்லாம் பூப்பூக்குமே
வாராயோ வாராயோ

ஒன்றா இரண்டா ஒரு கோடி ஞாபகம்
உயிர் தின்ன பாக்குதே கண்ணே
துண்டாய் துண்டாய் பூமியில் விழுந்தேன்
எங்கே நீ என் கண்ணே

சித்தாரா சித்தாரா சித்தா
சித்தாரா சித்தாரா சித்தா
சித்தாரா சித்தாரா சித்தா
சித்தாரா சித்தாரா சித்தா


ஒன்றா ரெண்டா ஒரு கோடி ஞாபகம்
உயிர் தின்ன பார்குதே கண்ணே
துண்டாய் துண்டாய் பூமியில் விழுந்தேன்
எங்க நீ என் கண்ணே

நினைவில்லை என்பாயா
நிஜமில்லை என்பாயா
நீ என்ன சொல்வாய் அன்பே
உயிர் தோழன் என்பாயா
வழிபோக்கன் என்பாயா
விடை என்ன சொல்வாய் அன்பே

ஒ ஹோ ஹோ... ஒ ஒ ஹோ ஹோ...
ஒ ஹோ ஹோ... ஒ ஒ ஹோ ஹோ...

உயிர் தோழன் என்பாயா
வழிப்போக்கன் என்பாயா
விடை என்ன சொல்வாய் அன்பே
சாஞ்சாடும் சூரியனே
சந்திரனை அழவைத்தாய்
சோகம் ஏன் சொல்வாயா
செந்தாழம் பூவுக்குள்
புயலொன்று வரவைத்தால்
என்னாகும் சொல்வாயா

Dum Dum Dum - Ragasiyamai

படம் : டும் டும் டும் (2001)
இசை : கார்த்திக் ராஜா
பாடியவர்கள் :  ஹரிஹரன், சாதனா சர்கம்
பாடல்வரிகள் : நா.முத்துகுமார்


Image result for Dumm Dumm Dumm




ரகசியமாய் ரகசியமாய் 
புன்னகைத்தால் பொருள் என்னவோ
ரகசியமாய் ரகசியமாய் 
புன்னகைத்தால் பொருள் என்னவோ

சொல்ல துடிக்கும் வார்த்தை கிற‌ங்கும்
தொண்டை குழியில் ஊசி இறங்கும்
இலை வடிவில் இதயம் இருக்கும்
மலை வடிவில் அதுவும் கனக்கும்
சிரித்து சிரித்து சிறையிலே
சிக்கி கொள்ள அடம் பிடிக்கும்


நிலம் நீர் காற்றிலே 
மின்சாரங்கள் பிறந்திடும்
காதல் தரும் மின்சாரமோ 
பிரபஞ்சத்தைக் கடந்திடும்

நிஜமாய் நீ என்னைத் தீண்டினால்

நிஜமாய் நீ என்னைத் தீண்டினால்
பனியாய் பனியாய் உறைகிறேன்

ஓளியாய் நீ என்னைத் தீண்டினால்
நுரையாய் உன்னுள் கறைகிறேன்

காதல் வந்தாலே வந்தாலே
ஏனோ உலறல்கள் தானோ

அதிசயமாய் அவசரமாய் 
மொழி தொலைந்தால் பொருள் என்னவோ


வெள்ளித் தரைப்போலவே 
என் இதயம் இருந்தது
மெல்ல வந்த உன் விரல் 
காதல் என்று எழுதுது

ஒரு நாள் காதல் என் வாசலில்

ஒரு நாள் காதல் என் வாசலில்
வரவா வரவா கேட்டது
மறுநாள் காதல் என் வீட்டுக்குள்
அடிமை சாசனம் மீட்டுது
அதுவோ அது இதுவோ இது எதுவோ
அதுவே நாம் அறியோமே

ரகசியமாய் ரகசியமாய் 
புன்னகைத்தால் பொருள் என்னவோ

அவசரமாய் அவசரமாய்
மொழி தொலைந்தால் பொருள் என்னவோ

சொல்லத் துடிக்கும் வார்த்தை கிற‌ங்கும்
தொண்டைக் குழியில் ஊசி இறங்கும்
இலை வடிவில் இதயம் இருக்கும்
மலை வடிவில் அதுவும் கனக்கும்

சிரித்து சிரித்து சிறையிலே
சிக்கிக் கொள்ள அடம் பிடிக்கும்

Saturday, January 20, 2018

Vikram Vedha - Vaazhakka

படம்: விக்ரம் வேதா (2017)
இசை: ஷாம் C.S
பாடியவர்கள்: சிவம், ஷாம் C.S
பாடல் வரிகள்: விக்னேஷ் சிவன்


Vikram Vedha poster.jpg



வாழ்க்க ஓடி... ஓடி...
அலைஞ்சி திரிஞ்சி ஒடைஞ்சி முடிஞ்சி
ஆரம்பிச்ச இடத்தத்தேடி வந்து நிற்கும்டா
எல்லாம் முடிஞ்சப்பின்னே
எரியப்போறோம் பொதையப்போறோம்
சொர்க்கம் நரகம் போனதுக்கு சாட்சி இல்லடா
இந்த நொடி இருக்க வாழ்ந்துக்கோ
நேரம் நல்லா இருந்தா பொழச்சிக்கோ
எதுவும் இங்கே சரியும்மில்ல தவறுமில்லப் போடா

தனனன... தனனன... தனனன... தனனன...
தனனன... தனனன... தனனன... தனன...


கோழையும் வீரனும் ஒன்னு
வீரமான கோழையும் உண்டு
தர்மமும் துரோகமும் ஒன்னு ஒன்னு
தர்மம் காக்க துரோகம் செஞ்சதுண்டே...
யாரையும் நம்பாதே... நீயும்  இங்கே
நம்புனா மாறாத... வாழ்க்கைத் தீர
போர்க்களம் போகாத... போடா நீயும்
போரிடு எதையும் யோசிக்காத

தனனன... தனனன... தனனன... தனனன...
தனனன... தனனன... தனனன... தனன...

Wednesday, August 2, 2017

Vikram Vedha - Yaanji

படம்: விக்ரம் வேதா (2017)
இசை: ஷாம் C.S 
பாடியவர்கள்: அனிருத், சக்திஸ்ரீ கோபாலன்
பாடல் வரிகள்: மோகன்ராஜ்

Vikram Vedha poster.jpg




யாஞ்சி யாஞ்சி என் நெஞ்சில்
வந்து வந்து நிக்குற... ஏன்...
என்ன சாஞ்சி சாஞ்சி நீ பார்த்து
உன்னில் சிக்க வைக்குற... ஏன்...

கனாவென‌ முளைக்கிறாய்
இமையனைக்கயில் நான்...
வினாவென வளைகிறேன்
உன்னை நினைக்கையில்... ஏன்...

ஓ... நெஞ்சாத்தியே... நெஞ்சாத்தியே...
நீதானடி என் வாழ்க்கையே...
ஓ... ஓ... ஹோ
நீ என்பதே நான் என்கிற நீயே...
ஓ... நெஞ்சாத்தியே... நெஞ்சாத்தியே...
நீதானடி என் வாழ்க்கையே...
ஓ... ஓ... ஹோ
நீ என்பதே நான் என்கிற நீயே...

யாஞ்சி... ஏன்...


மென்மையாய் மெல்ல நகரும் எந்தன் நாட்குறிப்பில்
வன்மையாய் நீ வந்து சேரும் மாயம் என்ன...
என்னவோ செய்கிறாய் என் ஆயுள்
எல்லைகள் போல் ஆகிறாய்

ஓ... ஓ... ஓ... ஓ... ஹோ...
காந்தமாய் என்னை ஈர்க்கும் உந்தன் அன்பு இன்று
சாந்தமாய் என்னை கட்டிபோடும் ஜாலம் என்ன
கேட்கிறேன் கூறடி பெண்மையே...

வாழ்க்க‌ போகும் தூரம் நீயும் நானும் போக வேணும்
எந்தன் நெஞ்சில் கோடி ஆசை தோன்றுது

நீ எந்தன் பாதி என்றும் நானும் உந்தன் மீதி என்றும்
காதல் காதுக்குள்ள வந்து ஓதுது.

ஓ... ஓ... ஓ... ஓ... ஹோ  யாஞ்சி...
ஓ... ஓ... ஹோ 
ஓ... நெஞ்சாத்தியே... நெஞ்சாத்தியே...
நீதானடி என் வாழ்க்கையே...
ஓ... ஓ... ஹோ 
நீ என்பதே நான் என்கிற நீயே...
ஓ... நெஞ்சாத்தியே... நெஞ்சாத்தியே...
நீதானடி என் வாழ்க்கையே...
ஓ... ஓ... ஹோ 
நீ என்பதே நான் என்கிற நீயே...

யாஞ்சி ஏன்...

Saturday, May 7, 2016

Irudhi Suttru - Ey Sandakaara

படம்: இறுதிச் சுற்று (2016)
இசை: சந்தோஷ் நாரயணன்
பாடியவர்: தீ
பாடல்வரிகள்: விவேக்


ஏய்... சண்டக்கரா குண்டு முழியில
ரெண்டு உயிரை தேடி பாயுதே
குத்து சண்ட இத்தோட நிப்பாட்டு போதும்
முத்த சண்ட என்னோட நீ போட வேணும்
தனிமை தொரத்த அலையுற நானும்
மனச திறந்து என்ன காப்பாத்து
தேடி கட்டிக்கப் போறேன்
தாவி ஒட்டிக்கப் போறேன்
தாலி கட்டிக்கப் போறேன் – ஆமா
மோதி முச்சிக்கப் போறேன்
பாதி பிச்சிக்கப் போறேன்
பாவி வெச்சிக்கப் போறேன் – ஆமா

எதிரானையே அழகாளனே
உன்னை வந்து ஒரசாம ஒதுங்கியே நடந்தேன்
எது மோதி நா இடம் மாறினேன்
தடுமாறி முழிச்சா நா உனக்குள்ளே கிடந்தேன்
கண்கட்டி வித்தை காட்டி
என்னை எப்போ கட்டி போட்ட
நான் என்னை எழுதி நீட்ட
அதில் வெட்கம் மட்டும் கிழிச்சு போட்ட
தேடி கட்டிக்கப் போறேன்
தாவி ஒட்டிக்கப் போறேன்
தாலி கட்டிக்கப் போறேன் – ஆமா
மோதி முச்சிக்கப் போறேன்
பாதி பிச்சிக்கப் போறேன்
பாவி வெச்சிக்கப் போறேன் – ஆமா

சிறு ஓடையில் ஒரு ஓடமா
மனசோட ஒரு காதல் மிதந்தோடுதடா
உனை பாத்ததும் வழி ஓரமா
உயிரோட ஒரு பாதி கழண்டோடுதடா
என் ஆச ரொம்ப பாவம்
கொஞ்சம் கண் எடுத்து பாரு
நீ மோச பார்வை வீசி
மதி கெட்டு திரியும் மதியை பாரு

தனிமை தொரத்த அலையுற நானும்
மனச திறந்து என்ன காப்பாத்து
தேடி கட்டிக்கப் போறேன்
தாவி ஒட்டிக்கப் போறேன்
தாலி கட்டிக்கப் போறேன் – ஆமா
மோதி முச்சிக்கப் போறேன்
பாதி பிச்சிக்கப் போறேன்
பாவி வெச்சிக்கப் போறேன் – ஆமா

Irudhi Suttru - Vaa Machaney

படம்: இறுதிச் சுற்று (2016)
இசை: சந்தோஷ் நாரயணன்
பாடியவர்: ஷான் ரோல்டன்
பாடல்வரிகள்: விவேக்





Download this MP3

அஞ்சு நூறு தாளைப் பாத்து ஆட்டம் போடுறா 
ஆஞ்ச மீனா குழம்புக்குள்ளத் தாளம் போடுறா 
செஞ்சுவச்ச ஆசையெல்லாம் தீக்கப்பாக்குறா 
நெஞ்சுக்குள்ள இராணியாட்டம் உச்சி நோக்குறா 
கிடைச்சா இடத்தைப் புடிப்பா 
அடுத்து எதுவும் நடக்கும் தடுக்காதே 

வா மச்சானே மச்சானே 
பூ வச்சாளே வச்சாளே 
தீக்குச்சாட்டம் தொட்டாளே சுட்டாளே 
வா மச்சானே மச்சானே 


கறியும் சோறும் கடிச்சுத் துன்ன கிளம்பி நிக்கிறா 
தனுசுப் படம் பாக்க ஏங்கி புலம்பிச் சொக்குறா
கோதாவுல இறங்கச் சொன்னா தாதாப் பொண்ணு 
கண்ணுல கெத்து இவ கண்ணுல கெத்து 
வாய்ப்பில்லாம வச்சிடுவா வாயில குத்து 
வாயில குத்து வாயில குத்து 

ஏ... வா மச்சானே மச்சானே 
பூ வச்சாளே வச்சாளே 
தீக்குச்சாட்டம் தொட்டாளே சுட்டாளே 
வா மச்சானே மச்சானே


ஒத்த நாளுல இவங்க வாழ்க்கை சக்கரம் 
தத்தி ஓடுதே கடலே காக்கும் சத்திரம் 
எந்த நேரமும் சிரிப்பச் சொந்தமாக்குவா 
திட்டம்போட்டு வந்துப்புட்டா திமுருப் பொண்ணு... ஹோய்

வா மச்சானே மச்சானே 
பூ வச்சாளே வச்சாளே 
தீக்குச்சாட்டம் தொட்டாளே சுட்டாளே 
வா மச்சானே மச்சானே

வா மச்சானே மச்சானே 
பூ வச்சாளே வச்சாளே 
தீக்குச்சாட்டம் தொட்டாளே சுட்டாளே 
வா மச்சானே மச்சானே

Wednesday, May 8, 2013

Thambi - Sudum Nilavu

படம் : தம்பி (2006)
இசை : வித்யாசாகர்
பாடியவர்
கள் :  உன்னி கிருஷ்ணன், ஹரிணி
பாடல் வரிகள் : வைரமுத்து





சுடும் நிலவு சுடாத சூரியன்
ஓடும் நிமிஷம் உறையும் வருஷம்
எல்லாம் எல்லாம் எல்லாம் வேண்டுமா
எல்லாம் எல்லாம் எல்லாம் வேண்டுமா

காதலித்துப் பார்... காதலித்துப் பார்...
காதலித்துப் பார்... காதலித்துப் பார்...


சுடும் நிலவு சுடாத சூரியன்
ஓடும் நிமிஷம் உறையும் வருஷம்



இமையடித்தாலும் இதயம் வலிக்கும்
வலிகளில் கூட வாசனை இருக்கும்

காதலித்துப் பார்... காதலித்துப் பார்...
காதலித்துப் பார்... காதலித்துப் பார்...


நரம்புக்கு நடுவே நதிகள் நகரும்
நதியிருந்தாலும் நாவே உலரும்

தப்பு எல்லாம் கணிதமாகும்
தவறு எல்லாம் புனிதமாகும்

பச்சைத் தண்ணீர் வெப்பமாகும்
எச்சில் பண்டம் அமிர்தமாகும்

நாக்கு உதடு பேசும் வார்த்தை முத்தமாகும்

சுடும் நிலவு சுடாத சூரியன்
ஓடும் நிமிஷம் உறையும் வருஷம்


மழைத்துளி நமக்கு சமுத்திரமாகும்
சமுத்திரம் எல்லாம் துளியாய்ப் போகும்

காதலித்துப் பார்... காதலித்துப் பார்...
காதலித்துப் பார்... காதலித்துப் பார்...


சத்தியக் காதல் என்னமும் செய்யும்
சந்திர ஒளியை ஆடையாய் நெய்யும்

தொட்ட பாகம் மோட்சமாகும்
மற்ற பாகம் காய்ச்சலாகும்

தெய்வம் தேய்ந்து மிருகமாகும்
மிருகம் தூங்கி தெய்வமாகும்

தேடல் ஒன்றே வாழ்க்கை
என்று தெரிந்து போகும்

காதலித்துப் பார்... காதலித்துப் பார்...
காதலித்துப் பார்... காதலித்துப் பார்...




Thursday, February 28, 2013

Vazhthugal - Kannil Vanthathum

படம் : வாழ்த்துகள் (2008)
இசை : யுவன் சங்கர் ராஜா
பாடியவர்கள் : ஹரிசரண்
பாடல்வரிகள் : நா.முத்துகுமார்



Image result for Vazhthugal





கண்ணில் வந்ததும் நீதான்
கண்ணீர் தந்தும் நீதான் கண்மணி
காதல் சொன்னதும் நீதான்
காயம் தந்ததும் நீதான் கண்மணி
நினைவை தந்ததும் நீதான்
இன்று நெருப்பை தந்ததும் நீதான் கண்மணி
உன்னை பிரிந்து போகையிலே
உள்ளம் எரிந்து போகுதடி உயிரே உயிரே
கண்ணில் வந்ததும் நீதான்
கண்ணீர் தந்தும் நீதான் கண்மணி கண்மணி


உன்னுடைய கால் கொலுசு எங்க வீட்டில் கேட்டிடுமா
உன்னுடைய புன்சிரிப்பு என் உதட்டில் பூத்திடுமா
உன்னுடைய கைவிரலை என் விரல்கள் பிடித்திடுமா
உன்னுடைய இதயத்திலே என் துடிப்பு ஒலித்திடுமா
உயிரே உயிரே உனக்காய் வாழ்கிறேன்


உன்னுடைய பூ முகத்தை பார்த்து கொண்டே நான் இருப்பேன்
உன்னுடைய ஞாபகத்தை விட்டு விட்டால் நான் இறப்பேன்
உன்னுடைய நினைவுகளை உள்ளுக்குள்ளே தேக்கி வைத்தேன்
என்னிடத்தில் எதுவும் இல்லை உயிர் மட்டும் பாக்கி வைத்தேன்
உயிரே உயிரே உனக்காய் வாழ்கிறேன்

கண்ணில் வந்ததும் நீதான்
கண்ணீர் தந்தும் நீதான் கண்மணி
காதல் சொன்னதும் நீதான்
காயம் தந்ததும் நீதான் கண்மணி
நினைவை தந்ததும் நீதான்
இன்று நெருப்பை தந்ததும் நீதான் கண்மணி
உன்னை பிரிந்து போகையிலே
உள்ளம் எரிந்து போகுதடி உயிரே உயிரே

கண்ணில் வந்ததும் நீதான்
கண்ணீர் தந்தும் நீதான் கண்மணி கண்மணி


Monday, February 11, 2013

ரன் - பொய் சொல்லக்கூடாது

படம் : ரன் (2002)
இசை : வித்யாசாகர்
பாடியவர்கள் : ஹரிஹரன், சாதனாசர்கம்
பாடல்வரிகள் : அறிவுமதி





பொய் சொல்லக்கூடாது காதலி
பொய் சொன்னாலும் நீயே என் காதலி

பொய் சொல்லக்கூடாது காதலி
பொய் சொன்னாலும் நீயே என் காதலி
கண்களால் கண்களில் தாயம் ஆடினாய்
கைகளால் கைகளில் ரேகை மாற்றினாய்
பொய் ஒன்றை ஒப்பித்தாய் ஐயையோ தப்பித்தாய்
கண்மூடித் தேடத்தான் கனவெங்கும் தித்தித்தாய்
பொய் சொல்லக்கூடாது காதலி
பொய் சொன்னாலும் நீயே என் காதலி


ஹா...ஹஹஹா... ஹஹஹா... ஹா ஹா ஹா...

அழகிய பொய்கள் பூக்கும் பூச்செடி கண்டேன்
ரகசியமாக உயிரைத் தோண்டி பதியம் போட்டுக் கொண்டேன்
கண்டவுடன் எனையே தின்றதடி விழியே
என்னைவிட்டுத் தனியே சென்றதடி நிழலே
அடி சுட்டும் விழிச்சுடரே நட்சத்திரப் பயிரே
ரெக்கை கட்டி வா நிலவே
பொய் ஒன்றை ஒப்பித்தாய் ஐயையோ தப்பித்தாய்
கண்மூடித் தேடத்தான் கனவெங்கும் தித்தித்தாய்
பொய் சொல்லக்கூடாது காதலி
பொய் சொன்னாலும் நீயே என் காதலி


ஹா.... ஹா.... ஒரு மழை என்பது ஒரு துளிதானா கண்ணே 
நீ ஒற்றைத் துளியா கோடி கடலா உண்மை சொல்லடி பெண்ணே 
கன்னக்குழி நடுவே சிக்கிக்கொண்டேன் அழகே 
நெற்றிமுடி வழியே தப்பிவந்தேன் வெளியே 
அடி பொத்திவைத்த புயலே தத்தளிக்கும் திமிரே 
வெட்கம் விட்டு வா வெளியே
நில் என்று கண்டித்தாய் உள் சென்று தண்டித்தாய் 
சொல் என்று கெஞ்சத்தான் சொல்லாமல் வஞ்சித்தாய் 

பொய் சொல்லக்கூடாது காதலி
பொய் சொன்னாலும் நீயே என் காதலி
கண்களால் கண்களில் தாயம் ஆடினாய்
கைகளால் கைகளில் ரேகை மாற்றினாய்
பொய் ஒன்றை ஒப்பித்தாய் ஐயையோ தப்பித்தாய்
கண்மூடித் தேடத்தான் கனவெங்கும் தித்தித்தாய்


Sunday, January 6, 2013

அலைபாயுதே - பச்சை நிறமே

படம் : அலைபாயுதே (2000)
இசை : A.R. ரஹ்மான்
பாடியவர்கள் : ஹரிஹரன்
பாடல்வரிகள் : வைரமுத்து





சகியே சினேகிதியே
காதலில் காதலில் காதலில் நிறமுண்டு
சகியே சினேகிதியே
என் அன்பே அன்பே உனக்கும் நிறமுண்டு

பச்சை நிறமே பச்சை நிறமே
இச்சை மூட்டும் பச்சை நிறமே
புல்லின் சிரிப்பும் பச்சை நிறமே
எனக்கு சம்மதம் தருமே

பச்சை நிறமே பச்சை நிறமே
இலையின் இளமை பச்சை நிறமே
உந்தன் நரம்பும் பச்சை நிறமே
எனக்கு சம்மதம் தருமே
எனக்கு சம்மதம் தருமே
எனக்கு சம்மதம் தருமே


கிளையில் காணும் கிளியின் மூக்கு
விடலைப் பெண்ணின் வெற்றிலை நாக்கு
புத்தம் புதிதாய் ரத்த ரோஜா
பூமி தொடாத பிள்ளையின் பாதம்
எல்லா சிவப்பும் உந்தன் கோவம்
எல்லா சிவப்பும் உந்தன் கோவம்

அந்தி வானம் அரைக்கும் மஞ்சள்
அக்கினிக் கொழுந்தில் பூத்த மஞ்சள்
தங்கத்தோடு ஜனித்த மஞ்சள்
கொன்றைப் பூவில் குளித்த மஞ்சள்
மஞ்சள் மஞ்சள் மஞ்சள்
மாலை நிலவின் மரகத மஞ்சள்
எல்லாம் தங்கும் உந்தன் நெஞ்சில்

சகியே சினேகிதியே
காதலில் காதலில் காதலில் நிறமுண்டு
சகியே சினேகிதியே
என் அன்பே அன்பே உனக்கும் நிறமுண்டு

அலையில்லாத ஆழி வண்ணம்
முகிலில்லாத வானின் வண்ணம்
மயிலின் கழுத்தில் வாழும் வண்ணம்
குவளைப் பூவில் குழைத்த வண்ணம்
ஊதாப் பூவில் ஊற்றிய வண்ணம்
எல்லாம் சேர்ந்து உன் கண்ணில் மின்னும்
எல்லாம் சேர்ந்து உன் கண்ணில் மின்னும்


இரவின் நிறமே இரவின் நிறமே
கார்காலத்தின் மொத்த நிறமே
காக்கைச் சிறகில் காணும் நிறமே
பெண்மை எழுதும் கண்மை நிறமே
வெயிலில் பாடும் குயிலின் நிறமே
எல்லாம் சேர்ந்து கூந்தல் நிறமே
எல்லாம் சேர்ந்து கூந்தல் நிறமே

சகியே சினேகிதியே
காதலில் காதலில் காதலில் நிறமுண்டு
சகியே சினேகிதியே
என் அன்பே அன்பே உனக்கும் நிறமுண்டு

வெள்ளை நிறமே வெள்ளை நிறமே…
மழையில் உடையும் தும்பை நிறமே…
வெள்ளை நிறமே வெள்ளை நிறமே
விழியில் பாதி உள்ள நிறமே
மழையில் உடையும் தும்பை நிறமே
உனது மனசின் நிறமே
உனது மனசின் நிறமே
உனது மனசின் நிறமே

அலைபாயுதே - சினேகிதனே சினேகிதனே


படம் : அலைபாயுதே (2000)
இசை : A.R. ரஹ்மான்
பாடியவர்கள் : சாதனா சர்கம், ஸ்ரீநிவாஸ்
பாடல்வரிகள் : வைரமுத்து




சினேகிதனே சினேகிதனே ரகசிய சினேகிதனே
சின்னச் சின்னதாய் கோரிக்கைகள் செவிகொடு சினேகிதனே
இதே அழுத்தம் அழுத்தம் இதே அணைப்பு அணைப்பு
வாழ்வின் எல்லை வரை வேண்டும் வேண்டும்
வாழ்வின் எல்லை வரை வேண்டும் வேண்டுமே
சினேகிதனே சினேகிதனே ரகசிய சினேகிதனே


சின்னச் சின்ன அத்துமீறல் புரிவாய்
என் செல் எல்லாம் பூக்கள் பூக்கச் செய்வாய்
மலர்களில் மலர்வாய்…
பூப்பறிக்கும் பக்தன் போல மெதுவாய்
நான் தூங்கும் போது விரல் நகம் களைவாய்
சத்தமின்றித் துயில்வாய்…
ஐவிரல் இடுக்கில் ஆலிவ் எண்ணை
பூசி சேவைகள் செய்யவேண்டும்
நீயழும் போது நான் அழ நேர்ந்தால்
துடைக்கின்ற விரல் வேண்டும்
சினேகிதனே சினேகிதனே ரகசிய சினேகிதனே
சின்னச் சின்னதாய் கோரிக்கைகள் செவிகொடு சினேகிதனே

நேற்று முன்னிரவில் உன்னில் திலவு மடியில்
காற்று நுழைவதேனோ உயிர் கலந்து களித்திருந்தேன்
இன்று விண்ணிலவில் அந்த ஈர நினைவில்
கன்று தவிப்பதேனோ மனம் கலங்கிப் புலம்புகிறேன்
கூந்தல் நெளிவில் எழில் குலச்சரிவில்
கூந்தல் நெளிவில் எழில் குலச்சரிவில்
கர்வம் அழிந்ததடி என் கர்வம் அழிந்ததடி

சொன்னதெல்லாம் பகலிலே புரிவேன் ஏன்…
சொன்னதெல்லாம் பகலிலே புரிவேன்
நீ சொல்லாததும் இரவிலே புரிவேன்
காதில் கூந்தல் நுழைப்பேன்
உந்தன் சட்டை நானும் போட்டு அலைவேன்
நீ குளிக்கையில் நானும் கொஞ்சம் நனைவேன்
உப்பு மூட்டை சுமப்பேன்
உன்னை அள்ளி எடுத்து உள்ளங்கையில் மடித்து
கைக்குட்டையில் ஒளித்துக்கொள்வேன்
வேளை வரும்போது விடுதலை செய்து
வேண்டும் வரம் வாங்கிக்கொள்வேன்

சினேகிதனே சினேகிதனே ரகசிய சினேகிதனே
சின்னச் சின்னதாய் கோரிக்கைகள் செவிகொடு சினேகிதனே

Friday, December 7, 2012

மின்னலே - வசீகரா என்


படம்: மின்னலே (2001)
இசை: ஹாரீஸ் ஜெயராஜ்
பாடியவர்: பாம்பே ஜெயஸ்ரீ
பாடல்வரிகள்: தாமரை






வசீகரா என் நெஞ்சினிக்க
உன் பொன் மடியில் தூங்கினால் போதும்
அதே கணம் என் கண்ணுறங்கா
முன் ஜென்மங்களின் ஏக்கங்கள் தீரும்


வசீகரா என் நெஞ்சினிக்க
உன் பொன் மடியில் தூங்கினால் போதும்
அதே கணம் என் கண்ணுறங்கா
முன் ஜென்மங்களின் ஏக்கங்கள் தீரும்
நான் நேசிப்பதும் சுவாசிப்பதும் உன் தயவால் தானே
ஏங்குகிறேன் தேங்குகிறேன் உன் நினைவால் நானே நான்


அடை மழை வரும் அதில் நனைவோமே
குளிர் காய்ச்சலோடு சிநேகம்
ஒரு போர்வைக்குள் இரு தூக்கம்
குளு குளு பொய்கள் சொல்லி என்னை வெல்வாய்
அது தெரிந்தும் கூட அன்பே
மனம் அதையேதான் எதிர்ப்பார்க்கும்
எங்கேயும் போகாமல் தினம் வீட்டிலேயே நீ வேண்டும்
சில சமயம் விளையாட்டாய்
உன் ஆடைக்குள்ளே நான் வேண்டும்


வசீகரா என் நெஞ்சினிக்க
உன் பொன் மடியில் தூங்கினால் போதும்
அதே கணம் என் கண்ணுறங்கா
முன் ஜென்மங்களின் ஏக்கங்கள் தீரும்

தீரும்... தீரும்...


தினமும் நீ குளித்ததும் என்னை தேடி
என் சேலை நுனியால் உந்தன் தலை துடைப்பாயே அது கவிதை
திருடன் போல் பதுங்கியே திடீரென்று
பின்னாலிருந்து என்னை நீ அணைப்பாயே அது கவிதை
யாரேனும் மணி கேட்டால் அதை சொல்லக்கூடத் தெரியாதே
காதலெனும் முடிவிலியில் கடிகார நேரம் கிடையாதே



வசீகரா என் நெஞ்சினிக்க
உன் பொன் மடியில் தூங்கினால் போதும்
அதே கணம் என் கண்ணுறங்கா
முன் ஜென்மங்களின் ஏக்கங்கள் தீரும்
நான் நேசிப்பதும் சுவாசிப்பதும் உன் தயவால் தானே
ஏங்குகிறேன் தேங்குகிறேன் உன் நினைவால் நானே நான்


Friday, November 30, 2012

என்னவளே - அடி காதல் என்பது

படம்: என்னவளே (2000)
இசை: S.A. ராஜ்குமார்
பாடியவர்கள்: ஹரிஹரன்
பாடல்வரிகள்: வைரமுத்து







Download this MP3



அடி காதல் என்பது தூங்கும் மிருகம்
மனசுக்குள் படுத்திருக்கும்
அதன் இரண்டு கண்களும் தூங்குவதில்லை
ஒரு கண் விழித்திருக்கும்
சகியே அது சாதுவான ஒரு சைவ பூனை போல்
உள்ளே ஒளிந்திருக்கும்
அந்த வேளை வந்ததும் விஸ்வருபம் கொண்டு
வெளியே குதித்துவிடும்
கண்மனி காதல் மிருகம் உனக்குள் இல்லையா

அடி காதல் என்பது தூங்கும் மிருகம்
மனசுக்குள் படுத்திருக்கும்
அதன் இரண்டு கண்களும் தூங்குவதில்லை
ஒரு கண் விழித்திருக்கும்


இடி ஒலி கேட்கும் போதிலும் வெடி ஒலி கேட்கும் போதிலும்
காதல் மிருகம் விழிக்காது கண் மூடி தூங்குமே
பூக்கள் மலரும் ஒசையில் புடவையின் சரசர ஒசையில்
காதல் மிருகம் திடுக்கிட்டு தலை தூக்கி பார்க்குமே
ஒரு முறை விழித்தபின் உறங்காதம்மா
இறை தேடும் மிருகம் தான் என்னை திண்ணுமா
நாம் இரண்டு பேரும் அதை அடக்க வேண்டும்
கொஞ்சம் வலிமை சேர்க்க வாமா
கண்மனி மிருகம் கொண்டு தெய்வம் செய்வோம்

அடி காதல் என்பது தூங்கும் மிருகம்
மனசுக்குள் படுத்திருக்கும்
அதன் இரண்டு கண்களும் தூங்குவதில்லை
ஒரு கண் விழித்திருக்கும்


காதல் மிருகம் என்பது ரத்தம் சதையா கேட்குது
உன் கூந்தல் பூங்காவில் ஒரு பூவை கேட்குது
மீண்டும் மிருகம் தூங்கவே காடா மலையா கேட்குது
இடுப்பில் உன் சேலை கொண்ட மடிப்பொன்று கேட்குது
மிருகம் தவிக்குதே வழி சொல்லவா
மிருகத்தை வதைப்பது குற்றம் அல்லவா
மடி தாங்கி கொடுக்க மெல்ல தடவி கொடுக்க
அது தூங்கி போகும் அல்லவா
கண்மனி மிருகம் கொண்டு தெய்வம் செய்வோம்

அடி காதல் என்பது தூங்கும் மிருகம்
மனசுக்குள் படுத்திருக்கும்
அதன் இரண்டு கண்களும் தூங்குவதில்லை
ஒரு கண் விழித்திருக்கும்

சகியே அது சாதுவான ஒரு சைவ பூனை போல்
உள்ளே ஒளிந்திருக்கும்
அந்த வேளை வந்ததும் விஸ்வருபம் கொண்டு
வெளியே குதித்துவிடும்
கண்மனி காதல் மிருகம் உனக்குள் இல்லையா



Popular Posts