Showing posts with label Bhavana. Show all posts
Showing posts with label Bhavana. Show all posts

Wednesday, May 2, 2018

Veyil - Kadhal Nerupin

படம்: வெயில் (2006)
இசை: G.V.பிரகாஷ்
பாடியவர்கள் : சின்மயி, கார்த்திக்
பாடல்வரிகள் : நா.முத்துக்குமார்

Related image



காதல் நெருப்பின் நடனம்

உயிரை உருக்கி தொலையும் பயணம்

காதல் நீரின் சலனம்

புயல்கள் உறங்கும் கடலின் மௌனம்

காதல் மாய உலகம்

சிலந்தி வலையில் சிறுத்தை மாட்டும்

புள்ளி மான்கள் புன்னகை செய்து

வேடனை வீழ்த்தும்

காதல் நெருப்பின் நடனம்

உயிரை உருக்கி தொலையும் பயணம்

காதல் புயல்கள் உறங்கும் கடலின் மௌனம்



கனவுகள் பூக்கின்ற செடி என 

கண்கள் மாறுதுன்னாலே

வயதிலும் மனதிலும் 
விட்டு விட்டு 
வண்ணம் வழியிதுன்னாலே

உனது வளையாடும் அழகான கை சீண்டவே

தலையில் இலை ஒன்று விழ வேண்டுமே

குடைகள் இல்லாத நேரத்து மழை வாழ்கவே

உனது கை ரெண்டும் குடை ஆனதே

உனது முத்ததில் நிறம் மாறுதே

உடலில் ஒரு சோடி நதி பாயுதே
காதல் நெருப்பின் நடனம்
உயிரை உருக்கி தொலையும் பயனம்
காதல் புயல்கள் உறங்கும் கடலின் மௌனம்


வானத்தின் மறுபுறம் 
பறவையாய் 
நீயும் நானும் போவோமே

பூமியின் அடிப்புறம் 
வேர்களாய் 
நீண்ட தூரம் போவோமே

கோடி மேகங்கள் தலை மீது தவழ்ந்தாடுதே

காதல் மொழி கேட்டு மழை ஆனதே

நூறு நூற்றாண்டு காணாத பூவாசமே

பூமி எங்கெங்கும் தான் வீசுதே

என்னுள்  உன்னை உன்னுள் என்னை

காலம் செய்யும் காதல் பொம்மை
காதல் நெருப்பின் நடனம்
உயிரை உருக்கி தொலையும் பயணம்
காதல் புயல்கள் உறங்கும் கடலின் மௌனம்

Thursday, February 28, 2013

Vazhthugal - Kannil Vanthathum

படம் : வாழ்த்துகள் (2008)
இசை : யுவன் சங்கர் ராஜா
பாடியவர்கள் : ஹரிசரண்
பாடல்வரிகள் : நா.முத்துகுமார்



Image result for Vazhthugal





கண்ணில் வந்ததும் நீதான்
கண்ணீர் தந்தும் நீதான் கண்மணி
காதல் சொன்னதும் நீதான்
காயம் தந்ததும் நீதான் கண்மணி
நினைவை தந்ததும் நீதான்
இன்று நெருப்பை தந்ததும் நீதான் கண்மணி
உன்னை பிரிந்து போகையிலே
உள்ளம் எரிந்து போகுதடி உயிரே உயிரே
கண்ணில் வந்ததும் நீதான்
கண்ணீர் தந்தும் நீதான் கண்மணி கண்மணி


உன்னுடைய கால் கொலுசு எங்க வீட்டில் கேட்டிடுமா
உன்னுடைய புன்சிரிப்பு என் உதட்டில் பூத்திடுமா
உன்னுடைய கைவிரலை என் விரல்கள் பிடித்திடுமா
உன்னுடைய இதயத்திலே என் துடிப்பு ஒலித்திடுமா
உயிரே உயிரே உனக்காய் வாழ்கிறேன்


உன்னுடைய பூ முகத்தை பார்த்து கொண்டே நான் இருப்பேன்
உன்னுடைய ஞாபகத்தை விட்டு விட்டால் நான் இறப்பேன்
உன்னுடைய நினைவுகளை உள்ளுக்குள்ளே தேக்கி வைத்தேன்
என்னிடத்தில் எதுவும் இல்லை உயிர் மட்டும் பாக்கி வைத்தேன்
உயிரே உயிரே உனக்காய் வாழ்கிறேன்

கண்ணில் வந்ததும் நீதான்
கண்ணீர் தந்தும் நீதான் கண்மணி
காதல் சொன்னதும் நீதான்
காயம் தந்ததும் நீதான் கண்மணி
நினைவை தந்ததும் நீதான்
இன்று நெருப்பை தந்ததும் நீதான் கண்மணி
உன்னை பிரிந்து போகையிலே
உள்ளம் எரிந்து போகுதடி உயிரே உயிரே

கண்ணில் வந்ததும் நீதான்
கண்ணீர் தந்தும் நீதான் கண்மணி கண்மணி


Monday, November 19, 2012

தீபாவளி - கண்ணன் வரும்

படம்: தீபாவளி (2007)
இசை: யுவன்ஷங்கர்ராஜா
பாடியவர்கள்: மதுஸ்ரீ, அனுராதாஸ்ரீராம்
பாடல் வரி: நா.முத்துகுமார்







யேய்.... யே யேய்..... யேய்.... யே யேய்.....
கண்ணன் வரும் வேளை
அந்திமாலை நான் காத்திருந்தேன்
சின்னச் சின்னத் தயக்கம்
செல்ல மயக்கம் அதை ஏற்க நின்றேன்
கட்டுக்கடங்கா எண்ண அலைகள்
றெக்கை விரிக்கும் ரெண்டு விழிகள்
கூடுபாயும் குறும்புக்காரன் அவனே
கண்ணன் வரும் வேளை
அந்திமாலை நான் காத்திருந்தேன்
சின்னச் சின்னத் தயக்கம்
செல்ல மயக்கம் அதை ஏற்க நின்றேன்


வான்கோழி கொள்ளும் ஆசை யாழில் தோற்பது
தைமாசம் கொள்ளும் ஆசை கூடிப் பார்ப்பது
தேர்க்கால்கள் கொள்ளும் ஆசை வீதி சேர்வது
ஓரீசல் கொள்ளும் ஆசை தீயில் வாழ்வது
கூறவா இங்கு எனது ஆசையை
தோழனே வந்து உளறு மீதியை
கோடிக் கோடி ஆசை தீரும் மாலை

கண்ணன் வரும் வேளை
அந்திமாலை நான் காத்திருந்தேன்
சின்னச் சின்னத் தயக்கம்
செல்ல மயக்கம் அதை ஏற்க நின்றேன்


யேய்.... யே யேய்..... யேய்.... யே யேய்.....
பூவாசம் தென்றலோடு சேர வேண்டுமே
ஆண்வாசம் தொட்டிடாத தேகம் ஊனமே
தாய்ப்பாசம் பத்து மாதம் பாரம் தாங்குமே
வாழ்நாளின் மிச்சபாரம் காதல் எழுதுமே
நீண்டநாள் கண்ட கனவு தீரவே
தீண்டுவேன் உன்னை இளமை ஊறவே
நீயில்லாமல் நிழலும் எனக்குத் தொலைவே 

கண்ணன் வரும் வேளை
அந்திமாலை நான் காத்திருந்தேன்
சின்னச் சின்னத் தயக்கம்
செல்ல மயக்கம் அதை ஏற்க நின்றேன்
கட்டுக்கடங்கா எண்ண அலைகள்
றெக்கை விரிக்கும் ரெண்டு விழிகள்
கூடுபாயும் குறும்புக்காரன் அவனே
கண்ணன் வரும் வேளை
அந்திமாலை நான் காத்திருந்தேன்
சின்னச் சின்னத் தயக்கம்
செல்ல மயக்கம் அதை ஏற்க நின்றேன்

Monday, January 10, 2011

தீபாவளி - காதல் வைத்து



படம் : தீபாவளி (2007)
இசை : யுவன் சங்கர் ராஜா

பாடியவர் :  விஜய் யேசுதாஸ் 
பாடல் வரி : 
நா. முத்துக்குமார்




காதல் வைத்து காதல் வைத்து காத்திருந்தேன் 
காற்றில் உந்தன் குரல் மட்டும் கேட்டுருந்தேன்
சிரித்தாய் இசை அறிந்தேன்
நடந்தாய் திசை அறிந்தேன் 

காதலெனும் கடலுக்குள் நான் விழுந்தேன் 
கரையினில் வந்த பின்னும் நான் மிதந்தேன் 
அசைந்தாய் அன்பே அசைந்தேன்
அழகாய் அய்யோ தொலைந்தேன் 

காதல் வைத்து காதல் வைத்து காத்திருந்தேன் 
காற்றில் உந்தன் குரல் மட்டும் கேட்டுருந்தேன்
அசைந்தாய் அன்பே அசைந்தேன்
அழகாய் அய்யோ தொலைந்தேன் 

தேவதை கதை கேட்ட போதெல்லாம்
நிஜமென்று நினைக்கவில்லை 
நேரில் உன்னையே பார்த்த பின்பு நான்
நம்பி விட்டேன் மறுக்கவில்லை 
அதிகாலை விடிவதெல்லாம்
உன்னை பார்க்கும் மயக்கத்தில் தான்
அந்தி மாலை மறைவதெல்லாம் 
உன்னை பார்த்த துறக்கத்தில் தான் 

காதல் வைத்து காதல் வைத்து காத்திருந்தேன் 
காற்றில் உந்தன் குரல் மட்டும் கேட்டுருந்தேன்
அசைந்தாய் அன்பே அசைந்தேன்
அழகாய் அய்யோ தொலைந்தேன்


உன்னை கண்ட நாள் ஒலி வட்டம் போல்
உள்ளுக்குள்ளே சுழலுதடி
உன்னிடத்தில் நான் பேசியதெல்லாம்
உயிருக்குள் ஒலிக்குதடி
கடலோடு பேச வைத்தாய்
கடிகாரம் வீச வைத்தாய்
மழையோடு குளிக்க வைத்தாய்
வெயில் கூட ரசிக்க வைத்தாய்   


காதல் வைத்து காதல் வைத்து காத்திருந்தேன் 
காற்றில் உந்தன் குரல் மட்டும் கேட்டுருந்தேன்
சிரித்தாய் இசை அறிந்தேன்
நடந்தாய் திசை அறிந்தேன் 


காதலெனும் கடலுக்குள் நான் விழுந்தேன் 
கரையினில் வந்த பின்னும் நான் மிதந்தேன் 
அசைந்தாய் அன்பே அசைந்தேன்
அழகாய் அய்யோ தொலைந்தேன் 
அசைந்தாய் அன்பே அசைந்தேன்
அழகாய் அய்யோ தொலைந்தேன் 

Friday, August 13, 2010

Vazhthugal - Enthan Vaanamum Neethan

படம் : வாழ்த்துகள் (2008)
இசை : யுவன் சங்கர் ராஜா
பாடியவர்: மஹதி, ஹரிஹரன்
பாடல்வரிகள்:  நா.முத்துகுமார்


 Image result for Vazhthugal






எந்தன் வானமும் நீதான் 
எந்தன் பூமியும் நீதான் 
உன் கண்கள் பார்த்திடும் திசையில் 
வாழ்கிறேனே
எந்தன் பாதயும் நீதான் 
எந்தன் பயணமும் நீதான் 
உன் கால்கள் நடந்திடும் வளியில் வருகிறேனே
உன் பேச்சிலே என் முகவரி
உன் மூச்சிலே என் வாழ்வடி
எந்தன் வாழ்வடி

எந்தன் வானமும் நீதான் 
எந்தன் பூமியும் நீதான் 
உன் கண்கள் பார்த்திடும் திசையில் 
வாழ்கிறேனே

நீ நடக்கும் போது உன் நிழலும்
மண்ணின் விழும்முன்னே ஏந்திக்கொள்வேன்


உன் காதலின் ஆழம் கண்டு கண்கள் கலங்குதே


உன்னுடய கால்தடத்தை மழை அழித்தால்
குடை ஒன்று பிடித்து காவல் செய்வேன்


உன்னால் இன்று பெண்ணானதன் அர்த்தம் புரிந்ததே

உன் பேச்சிலே என் முகவரி
உன் மூச்சிலே என் வாழ்வடி
எந்தன் வாழ்வடி

ஒரே ஒரு வார்த்தயில் கவிதை என்றால் 
உதடுகள் உன்பெயரை உச்சரிக்கும்


என் பெயரைதான் யாரும் கேட்டல் 
உன் பேர் சொல்கிறேன்


ஒரே ஒரு உடலில் இருஇதயம்
காதல் என்னும் உலகத்தில்தான் இருக்கும்


நீயில்லயேல் நான் இல்லயே நெஞ்சம் சொல்லுதே

உன் பேச்சிலே என் முகவரி
உன் மூச்சிலே என் வாழ்வடி
எந்தன் வாழ்வடி

எந்தன் வானமும் நீதான் 
எந்தன் பூமியும் நீதான் 
உன் கண்கள் பார்த்திடும் திசையில் 
வாழ்கிறேனே
எந்தன் பாதயும் நீதான் 
எந்தன் பயணமும் நீதான் 
உன் கால்கள் நடந்திடும் வளியில் வருகிறேனே


Tuesday, August 10, 2010

தீபாவளி - போகாதே போகாதே

படம் :தீபாவளி (2007)

பாடியவர்: யுவன் சங்கர் ராஜா
இசை : யுவன் சங்கர் ராஜா
பாடலாசிரியர் : நா.முத்துகுமார்




       


போகாதே போகாதே நீ இருந்தால் நான் இருப்பேன்
போகாதே போகாதே நீ பிரிந்தால் நான் இறப்பேன்
உன்னோடு வாழ்ந்த காலங்கள் யாவும்
கனவாய் என்னை முடுதடி
யரென்று நீயும் என்னை பார்க்கும் போது
உயிரே உயிர் போகுதடி
கல்லறையில் கூட யன்னல் ஒன்று வைத்து
உந்தன் முகம் பார்ப்பேனடி போகாதே போகதே
நீ இருந்தால் நான் இருப்பேன் போகாதே போகாதே
நீ பிரிந்தால் நான் இறப்பேன்

கலைந்தாலும் மேகம் அது மீண்டும் மிதக்கும்
அது போல தானே உந்தன் காதல் எனக்கும்
நடை பாதை விளக்கா காதல்
விடிந்தவுடன் அணைப்பதற்கு
நெருப்பாலும் முடியாதம்மா
நினைவுகளை அழிப்பதற்கு
உனக்காக காத்திருப்பேன் ஓஓகோ
உயிரோடு பார்த்திருபேன் ஓஓகோ

போகாதே போகாதே நீ இருந்தால் நான் இருப்பேன்
போகாதே போகாதே நீ பிரிந்தால் நான் இறப்பேன்

அழகான நேரம் அதை நீ தான் கொடுத்தாய்
அழியாத சோகம் அதையும் நீ தான் கொடுத்தாய்
கண்தூங்கும் நேரம் பார்த்து கடவுள் வந்து போனது போல்
என் வாழ்வில் வந்தே போனாய் ஏமாற்றம் தாங்கேலையே 
பெண்ணே நீ இல்லாமல் பூலோகம் இருட்டிடுதே

போகாதே போகாதே நீ இருந்தால் நான் இருப்பேன்
போகாதே போகாதே நீ பிரிந்தால் நான் இறப்பேன்

Popular Posts