Showing posts with label Ritika Singh. Show all posts
Showing posts with label Ritika Singh. Show all posts

Saturday, May 7, 2016

Irudhi Suttru - Ey Sandakaara

படம்: இறுதிச் சுற்று (2016)
இசை: சந்தோஷ் நாரயணன்
பாடியவர்: தீ
பாடல்வரிகள்: விவேக்


ஏய்... சண்டக்கரா குண்டு முழியில
ரெண்டு உயிரை தேடி பாயுதே
குத்து சண்ட இத்தோட நிப்பாட்டு போதும்
முத்த சண்ட என்னோட நீ போட வேணும்
தனிமை தொரத்த அலையுற நானும்
மனச திறந்து என்ன காப்பாத்து
தேடி கட்டிக்கப் போறேன்
தாவி ஒட்டிக்கப் போறேன்
தாலி கட்டிக்கப் போறேன் – ஆமா
மோதி முச்சிக்கப் போறேன்
பாதி பிச்சிக்கப் போறேன்
பாவி வெச்சிக்கப் போறேன் – ஆமா

எதிரானையே அழகாளனே
உன்னை வந்து ஒரசாம ஒதுங்கியே நடந்தேன்
எது மோதி நா இடம் மாறினேன்
தடுமாறி முழிச்சா நா உனக்குள்ளே கிடந்தேன்
கண்கட்டி வித்தை காட்டி
என்னை எப்போ கட்டி போட்ட
நான் என்னை எழுதி நீட்ட
அதில் வெட்கம் மட்டும் கிழிச்சு போட்ட
தேடி கட்டிக்கப் போறேன்
தாவி ஒட்டிக்கப் போறேன்
தாலி கட்டிக்கப் போறேன் – ஆமா
மோதி முச்சிக்கப் போறேன்
பாதி பிச்சிக்கப் போறேன்
பாவி வெச்சிக்கப் போறேன் – ஆமா

சிறு ஓடையில் ஒரு ஓடமா
மனசோட ஒரு காதல் மிதந்தோடுதடா
உனை பாத்ததும் வழி ஓரமா
உயிரோட ஒரு பாதி கழண்டோடுதடா
என் ஆச ரொம்ப பாவம்
கொஞ்சம் கண் எடுத்து பாரு
நீ மோச பார்வை வீசி
மதி கெட்டு திரியும் மதியை பாரு

தனிமை தொரத்த அலையுற நானும்
மனச திறந்து என்ன காப்பாத்து
தேடி கட்டிக்கப் போறேன்
தாவி ஒட்டிக்கப் போறேன்
தாலி கட்டிக்கப் போறேன் – ஆமா
மோதி முச்சிக்கப் போறேன்
பாதி பிச்சிக்கப் போறேன்
பாவி வெச்சிக்கப் போறேன் – ஆமா

Irudhi Suttru - Vaa Machaney

படம்: இறுதிச் சுற்று (2016)
இசை: சந்தோஷ் நாரயணன்
பாடியவர்: ஷான் ரோல்டன்
பாடல்வரிகள்: விவேக்





Download this MP3

அஞ்சு நூறு தாளைப் பாத்து ஆட்டம் போடுறா 
ஆஞ்ச மீனா குழம்புக்குள்ளத் தாளம் போடுறா 
செஞ்சுவச்ச ஆசையெல்லாம் தீக்கப்பாக்குறா 
நெஞ்சுக்குள்ள இராணியாட்டம் உச்சி நோக்குறா 
கிடைச்சா இடத்தைப் புடிப்பா 
அடுத்து எதுவும் நடக்கும் தடுக்காதே 

வா மச்சானே மச்சானே 
பூ வச்சாளே வச்சாளே 
தீக்குச்சாட்டம் தொட்டாளே சுட்டாளே 
வா மச்சானே மச்சானே 


கறியும் சோறும் கடிச்சுத் துன்ன கிளம்பி நிக்கிறா 
தனுசுப் படம் பாக்க ஏங்கி புலம்பிச் சொக்குறா
கோதாவுல இறங்கச் சொன்னா தாதாப் பொண்ணு 
கண்ணுல கெத்து இவ கண்ணுல கெத்து 
வாய்ப்பில்லாம வச்சிடுவா வாயில குத்து 
வாயில குத்து வாயில குத்து 

ஏ... வா மச்சானே மச்சானே 
பூ வச்சாளே வச்சாளே 
தீக்குச்சாட்டம் தொட்டாளே சுட்டாளே 
வா மச்சானே மச்சானே


ஒத்த நாளுல இவங்க வாழ்க்கை சக்கரம் 
தத்தி ஓடுதே கடலே காக்கும் சத்திரம் 
எந்த நேரமும் சிரிப்பச் சொந்தமாக்குவா 
திட்டம்போட்டு வந்துப்புட்டா திமுருப் பொண்ணு... ஹோய்

வா மச்சானே மச்சானே 
பூ வச்சாளே வச்சாளே 
தீக்குச்சாட்டம் தொட்டாளே சுட்டாளே 
வா மச்சானே மச்சானே

வா மச்சானே மச்சானே 
பூ வச்சாளே வச்சாளே 
தீக்குச்சாட்டம் தொட்டாளே சுட்டாளே 
வா மச்சானே மச்சானே

Popular Posts