Saturday, March 31, 2012

ஒரு கல் ஒரு கண்ணாடி - வேணாம் மச்சான்


படம் : ஒரு கல் ஒரு கண்ணாடி (2012)
இசை: ஹாரிஸ் ஜெயராஜ்
பாடியவர்: நரேஷ் அய்யர், வேல் முருகன்
பாடல் வரி: நா. முத்துகுமார்




(Right click & Save Link As)


வஞ்சரம் மீனு வவ்வாளு...கெடைச்சா கெளுத்தி வெராலு...
இருக்கு மீசை ஏராலு...இறங்கி கலக்கு கோபாலு...

வஞ்சரம் மீனு வவ்வாளு...கெடைச்சா கெளுத்தி வெராலு...
இருக்கு மீசை ஏராலு...இறங்கி கலக்கு கோபாலு...

வேணாம் மச்சான் வேணாம் இந்த பொண்ணுக காதலு
அது மூடி தொறக்கும் போதே உன்ன கவுக்கும் குவாடரு

வேணாம் மச்சான் வேணாம் இந்த பொண்ணுக காதலு
அது மூடி தொறக்கும் போதே உன்ன கவுக்கும் குவாட்ட‌ரு
கடல போல காதல் ஒரு சால்ட் வாட்ட‌ரு
அது கொஞ்சம் கரிக்கும் போதே நீ தூக்கி போட்டுடு...

மம்மி சொன்ன பொண்ண கட்டுனா டார்ச்ச‌ர் இல்லடா
நீயும் டாவடிக்கும் பொண்ண கட்டினா டவுசர் அவுருண்டா...
மம்மி சொன்ன பொண்ண கட்டுனா டார்ச்ச‌ர் இல்லடா
நீயும் டாவடிக்கும் பொண்ண கட்டினா டவுசர் அவுருண்டா...
கண்ண கலங்க வைக்கும் ஃபிகரு வேணான்டா...
நமக்கு கண்ணீர் அஞ்சலி போஸ்டர் ஒட்டும் நண்பன் போதுண்டா...

வஞ்சரம் மீனு வவ்வாளு...கெடைச்சா கெளுத்தி வெராலு...
இருக்கு மீசை ஏராலு...இறங்கி கலக்கு கோபாலு...

வஞ்சரம் மீனு வவ்வாளு...கெடைச்சா கெளுத்தி வெராலு...
இருக்கு மீசை ஏராலு...இறங்கி கலக்கு கோபாலு...

பைக்குல‌ தினமும் ஒண்ணா போனோம்...
பேக்குல‌ இப்போ அவள‌ காணோம்...
பீச்சுல சொகமா கடல போட்டோம்...
கடலுக்கும் இப்போ கண்ணீர் மூட்டும்...
பைக்குல‌ தினமும் ஒண்ணா போனோம்...
பேக்குல‌ இப்போ அவள‌ காணோம்...
பீச்சுல சொகமா கடல போட்டோம்...
கடலுக்கும் இப்போ கண்ணீர் மூட்டும்...

காதலிக்கும் போது அட கண்ணு தெரியாது...
உன் கண்ணு முழிச்சுக்கிட்டா அங்க காதல் கிடையாது...
அவ போனாளே போனா தண்ணீர விட்டு மீனா
நா காயம் பட்ட மைனா இப்போ பாடுறேன் கானா...

பிகரு சுகரு மாதிரி

ஜனக்கு ஜனக்கு வவ்வாலு

நட்பு தடுப்பு ஊசிடா

ஜனக்கு ஜானு கோபாலு

பிகரு சுகரு மாதிரி பசங்க ஒடம்ப‌ உருக்கிடும்...
நட்பு தடுப்பு ஊசிடா ஒடஞ்ச மனச தேத்திடும்...

வேணாம் மச்சான் வேணாம் இந்த பொண்ணுக காதலு
அது மூடி தொறக்கும் போதே உன்ன கவுக்கும் குவாட்ட‌ரு
கடல போல காதல் ஒரு சால்ட் வாட்ட‌ரு
அது கொஞ்சம் கரிக்கும் போதே நீ தூக்கி போட்டுடு...

பாதியில் வந்த பொண்ண நம்பி
ஆதியில் வளர்ந்த நட்ப விட்டேன்...
தேதிய போல கிழிச்சிப்புட்டா
தேவதை அவளை நம்பி கெட்டேன்...

தோலு மட்டும் வெள்ள
உன்ன கவுட்துப்புட்டா மெல்ல
என்ன பண்ணி என்ன
அட அப்பவே நான் சொன்னேன்...
அவ போட்டாளே போட்டா
நல்ல திண்டுகல்லு பூட்டா
ஒரு சாவி கொண்டு வாடா
என்ன தொறந்து விடேண்டா...

கண்ணுல மைய்ய வெப்பாடா...
அதுல பொய்ய வெப்பாடா...
உதட்டில் சாயம் வெப்பாடா...
உனக்கு காயம் வெப்பாடா...
கண்ணுல மைய்ய வெப்பாடா...

அதுல பொய்யோ பொய்யையோ...

உதட்டில் சாயம் வெப்பாடா...

உனக்கு கையோ கையையோ...

வேணாம் மச்சான் வேணாம் இந்த பொண்ணுங்க காதலு
அது மூடி தொறக்கும் போதே உன்ன கவுக்கும் குவாட்ட‌ரு
கடல போல காதல் ஒரு சால்ட் வாட்ட‌ரு
அது கொஞ்சம் கரிக்கும் போதே நீ தூக்கி போட்டுடு...

மம்மி சொன்ன பொண்ண கட்டுனா டார்ச்ச‌ர் இல்லடா
நீயும் டாவடிக்கும் பொண்ண கட்டினா டவுசர் அவுருண்டா...
மம்மி சொன்ன பொண்ண கட்டுனா டார்ச்ச‌ர் இல்லடா
நீயும் டாவடிக்கும் பொண்ண கட்டினா டவுசர் அவுருண்டா...
கண்ண கலங்க வைக்கும் ஃபிகரு வேணான்டா...
என‌க்கு கண்ணீர் அஞ்சலி போஸ்டர் ஒட்டும் நண்பன் போதுண்டா...

ஒரு கல் ஒரு கண்ணாடி - அடடா ஒரு தேவதை


படம் : ஒரு கல் ஒரு கண்ணாடி (2012)
இசை: ஹாரிஸ் ஜெயராஜ்
பாடியவர்: கார்த்திக்
பாடல் வரி: நா. முத்துகுமார்





(Right click & Save  Link As)


அடடா ஒரு தேவதை வந்து போகுதே இந்த வழியில்
புதிதாய் இவள் தேகத்தை யார் நெய்ததோ பட்டு தறியில்
பெரிதாய் ஒரு பேரலை வந்து தாக்குதே இரு விழியில்
வலியா இது இன்பமா என்ன ஆகுமா இவள் யாரோ யாரோ
உயிரே....

உயிரே.... உயிரே...
உயிரே உயிரே எங்கோ பறக்க  வச்ச
அடி சொந்தம் பந்தம் உறவ மறக்க வச்ச
உயிரே உயிரே புதுசா பொறக்க வச்ச
அடி எனக்குள் நானே பேசி சிரிக்க வச்ச... வச்ச... வச்ச...

அடடா ஒரு தேவதை வந்து போகுதே இந்த வழியில்
புதிதாய் இவள் தேகத்தை யார் நெய்ததோ பட்டு தறியில்
பெரிதாய் ஒரு பேரலை வந்து தாக்குதே இரு விழியில்
வலியா இது இன்பமா என்ன ஆகுமா இவள் யாரோ யாரோ

உயிரே உயிரே எங்கோ பறக்க வச்ச வச்ச
அடி சொந்தம் பந்தம் உறவ மறக்க வச்ச
உயிரே உயிரே புதுசா பொறக்க வச்ச
அடி எனக்குள் நானே பேசி சிரிக்க வச்ச

இவள் யாரிவள் இந்திரன் மகளா
இந்த பூமியில் சந்திரன் நகலா
இந்த சந்திரன் வருவது பொதுவாய் பகலா
அலைபாய்ந்திடும் கூந்தலும் முகிலா
அதில் வீசிடும் வாசனை அகிலா
இவள் பார்பது ஆண்டவன் செயலா
யாரோ யாரோ இவள்
தீயாகவே வந்தாள் இவள்
திண்டாடவே செய்தாள்  இவள்
காற்றாகவே வந்தாள் இவள்
உன் சுவாசத்தில் சென்றாள் இவள்

உயிரே உயிரே எங்கோ பறக்க வச்ச வச்ச
அடி சொந்தம் பந்தம் உறவ மறக்க வச்ச
உயிரே உயிரே புதுசா பொறக்க வச்ச
அடி எனக்குள்  நானே பேசி சிரிக்க வச்ச

புன்னகை மன்னன் - என்ன சத்தம்


படம் : புன்னகை மன்னன் (1986)
இசை : இளையராஜா
பாடியவர் :  பாலசுப்பிரமணியம்
பாடல் வரி : வைரமுத்து





(Right Click & Save Link As)

என்ன சத்தம் இந்த நேரம் குயிலின் மொழியா
என்ன சத்தம் இந்த நேரம் நதியின் ஒலியா
கிளிகள் முத்தம் தருதா
அதனால் சத்தம் வருதா அடடா..

என்ன சத்தம் இந்த நேரம் குயிலின் மொழியா
என்ன சத்தம் இந்த நேரம் நதியின் ஒலியா


கன்னத்தில் முத்தத்தின் ஈரம் அது காயவில்லையே
கண்களில் ஏனிந்த கண்ணீர் அது யாராலே
கன்னியின் கழுத்தைப் பார்த்தால் மணமாகவில்லையே
காதலன் மடியில் பூத்தாள் ஒரு பூப்போலே
மன்னவனே உன் விழியால் பெண் விழியை மூடு
ஆதரவாய்ச் சாய்ந்துவிட்டாள் ஆரிரரோ பாடு
ஆரிரரோ இவர் யார் எவரோ
பதில் சொல்வார் யாரோ


என்ன சத்தம் இந்த நேரம் குயிலின் மொழியா
என்ன சத்தம் இந்த நேரம் நதியின் ஒலியா
கிளிகள் முத்தம் தருதா
அதனால் சத்தம் வருதா அடடா..
என்ன சத்தம் இந்த நேரம் குயிலின் மொழியா
என்ன சத்தம் இந்த நேரம் நதியின் ஒலியா


கூந்தலில் நுழைந்த கைகள் ஒரு கோலம் போடுதோ
தன்னிலை மறந்த பெண்மை அதைத் தாங்காதோ
உதட்டில் துடிக்கும் வார்த்தை அது உலர்ந்து போனதோ
உள்ளங்கள் துடிக்கும் ஓசை இசையாகாதோ
மங்கையிவள் வாய் திறந்தால் மல்லிகைப்பூ வாசம்
ஓடையெல்லாம் பெண் பெயரை உச்சரித்தே பேசும்
யார் இவர்கள் இரு பூங்குயில்கள்
இளங்காதல் மான்கள்


என்ன சத்தம் இந்த நேரம் குயிலின் மொழியா
என்ன சத்தம் இந்த நேரம் நதியின் ஒலியா
கிளிகள் முத்தம் தருதா
அதனால் சத்தம் வருதா அடடா..

என்ன சத்தம் இந்த நேரம் குயிலின் மொழியா
என்ன சத்தம் இந்த நேரம் நதியின் ஒலியா


Saturday, March 17, 2012

தம்பி வெட்டோத்தி சுந்தரம் - கொலைகாரா


படம்: தம்பி வெட்டோத்தி சுந்தரம் (2011)
இசை: வித்யாசாகர்
பாடியவர்கள்: கார்த்திக் & கல்யாணி
பாடல் வரி : வைரமுத்து





 

(Right click & Save Link As)


கொலைகாரா அனலாச்சு என் மூச்சு
புத்தி மாறி போயாச்சு அட கொலைகாரா.... ஹா


கொலைகாரி உன்ன பாத்து உசுர் போச்சு
நின்னு போச்சு என் மூச்சு அடி கொலைகாரி


உன் மடியில் சீராட்டு என் மனச தாலாட்டு
அந்த அலை மேல் பாய் போட்டு என் அழக நீராட்டு
கொலைகாரா அனலாச்சு என் மூச்சு
புத்தி மாறி போயாச்சு அட கொலைகாரா ஹோய்


பாலு சோறும் உண்காம பச்ச தண்ணி செல்லாம
இத்து இத்து போனேனே எச்சி முத்தம் இல்லாம
நெஞ்சாங்கனி தாங்காம ரெண்டு கண்ணும் தூங்காம
கட்டில் சுகம் காங்காம காமன் செய்யும் நாட்டாம


பஞ்சில்லாம தீயில்லாம பத்த வச்ச கள்ளி
புத்திக்குள்ள கத்தி வீசி போவதென்ன தள்ளி
பச்ச வாழத்தோப்புக்குள்ள பந்திவைக்க வாடி புள்ள
பால் பழங்கள் கூடைகுள்ள பத்தியமும் தேவையில்ல
கொலைகாரி... ஹோ ஒய்


நாஞ்சில் நாட்டு கடலெல்லாம் உன்னை கண்டு வலை வீசும்
சங்கு முத்து எல்லாமே தங்க கால விலை பேசும்
ஓரக்கரை எல்லாமே ஒட்டிக்கொள்ளும் மீன் வாசம்
உன்னை மட்டும் தொட்டாலே மாசம் எல்லாம் பூ வாசம்


பாதி கொலை செஞ்சிப்புட்டு தப்பி செல்லும் மூடா
முத்தமிட்டு மொத்தத்தையும் கொன்னுப்புட்டு போடா
ஆசை வச்ச பொம்பளைக்கு அஞ்சு நாளா தூக்கம் இல்ல
மீசை வச்ச ஆம்பளைக்கு மெத்தை வாங்க நேரம் இல்ல


கொலைகாரி உன்ன பாத்து உசுர் போச்சு
நின்னு போச்சு என் மூச்சு அடி கொலைகாரி


கொலைகாரா அனலாச்சு என் மூச்சு
புத்தி மாறி போயாச்சு அட கொலைகாரா


உன் மடியில் சீராட்டு என் மனச தாலாட்டு
அந்த அலை மேல் பாய்போட்டு


என் அழக நீராட்டு

Vaagai Sooda Vaa - Poraney Poraney



படம் : வாகை சூடவா (2011)
இசை : ஜிப்ரான்
பாடியவர்கள் : ரஞ்சித், நேஹா பஸின்
பாடல் வரிகள் : கார்த்திக் நேதா




(Right click & Save Link As)


போறானே போறானே காத்தோட தூத்தல போல
போறானே போறானே போவாமத்தான் போறானே

போறானே போறானே காத்தோட தூத்தல போல
போறானே போறானே போவாமத்தான் போறானே
அழகா நீ நிறைஞ்சே அடடா பொந்துக்குள் புகைய போல

போறாளே போறாளே காத்தோட தூத்தல போல
போறாளே போறாளே போவாமத்தான் போறாளே
போறாளே போறாளே காத்தோட தூத்தல போல
போறாளே போறாளே போவாமத்தான் போறாளே

பருவம் தொடங்கி ஆச வச்சேன்
இல்லாத சாமிக்கும் பூச வச்சேன்

மழையில் நனைஞ்ச காத்தை போல
மனசை நீயும் நனைச்சுப்புட்ட

ஈரக்கொலைய கொஞ்சம் இரவல் தாய்யா
பொண்ணு மனசை கொஞ்சம் புனைய வாய்யா
ஏற இறங்க பார்க்கும் ரோசக்காரா
டீ தூளு வாசம் கொண்ட மோசக்காரா

அட நல்லாங்குருவி ஒண்ணு மனச மனச
சிறு கன்னங்குழியிலே பதுக்கிருச்சே
சின்ன சின்ன தொரட்டிப்பொண்ணு
கண்ணு முழியத்தான் ஈச்சங்காயா ஆஞ்சிருச்சே

போறானே போறானே காத்தோட தூத்தல போல
போறானே போறானே போவாமத்தான் போறானே
போறானே போறானே காத்தோட தூத்தல போல
போறானே போறானே போவாமத்தான் போறானே

கிணத்து நிலவா நான் இருந்தேன்
கல்லை எரிஞ்சு குழப்பிப்புட்ட

உன்னை பார்த்து பேசையில
ரெண்டாம் முறையா குத்த வச்சேன்

மூக்கணாங்கவுற போல உன் நினைப்பு
சீம்பாலு வாசம் போல உன் சிரிப்பு

அடை காக்கும் கோழி போல என் தவிப்பு
பொசுக்குன்னு பூத்திருக்கே என் பொழப்பு

அடி மஞ்சக்கிழங்கு உன்னை நினைச்சு நினைச்சு
தினம் மனசுக்குள்ள வச்சு பூட்டிக்கிட்டேன்
உன் பிஞ்சுவிரல் பதிச்ச மண்ணை எடுத்து
நான் காயத்துக்கு பூசிக்கிட்டேன்
போறாளே… போறாளே
போறாளே…போவாமத்தான் போறாளே

அழகா நீ நிறைஞ்சே அடடா பொந்துக்குள் புகைய போல
போறானே போறானே காத்தோட தூத்தல போல
போறானே போறானே போவாமத்தான் போறானே
போறானே போறானே காத்தோட தூத்தல போல
போறானே போறானே போவாமத்தான் போறானே
போறானே… போறானே…

Tuesday, March 13, 2012

பிடிச்சிருக்கு - காற்றோடு சொல்லி




படம் : பிடிச்சிருக்கு (2008)
இசை : மனு ரமேஷன்
பாடியவர்கள் : கார்த்திக், சாதனா சர்கம்
பாடல் வரிகள் : யுபாரதி



 

(Right click & Save link As)

எங்கே உன் பூ முகம் எங்கே உன் நியாபகம் 
கண்ணே உன் தரிசனம் 
எந்தனாளிலும் எதிரி போலாகும்


காற்றோடு சொல்லி போனாயே 
எந்தன் மூச்சோடு மொத்தம் சேர்ந்தாயே 
ஓர பார்வையில் நீ என் உதிரம் பருகினாய்
உந்தன் மீதி பார்வையில் நீ என் உயிரை திருகினாய்


கண் காது நாசியாவிலும் கலகங்கள் நிறைய செய்கிறாய்
என் ஜாணில் புகுந்து கொண்டு நீ இறங்காமல் உறைய வைக்கிறாய்
ஏனென்னை சீரழித்தாய்.............


காற்றோடு சொல்லி போனாயே 
எந்தன் மூச்சோடு மொத்தம் சேர்ந்தாயே 


கருப்பான விடியல் கிடையாது 
சிவப்பான நதிகள் கிடையாது
நினைத்தாலும் தேங்கி போகும் நிமிசம் கிடையாது
செதுக்காமல் சிலைகள் கிடையாது 
எடுக்காமல் புதையல் கிடையாது
அணைக்காமல் நீங்கி போனால் அமுதம் கிடையாது


உப்புகல் உப்புகல் தண்ணீரில் தங்காது
பக்கத்தில் நீ நின்றால் வாய் பேசாது
பிம்பத்தை பிம்பத்தை கண்ணாடி திட்டாது
வண்டின்றி புஷ்பத்தில் தேன் சொட்டாது


இனி மேலே நீயில்லாமல் நானும் இங்கு ஏது
காற்றோடு சொல்லி போனாயே 
எந்தன் மூச்சோடு மொத்தம் சேர்ந்தாயே 


உதட்டோர சுழியில் தொலைந்தேனா 
உருத்தாதா அழகில் தொலைந்தேனா
இமைத்தாயே கூச்சத்தோடு அதிலே தொலைந்தேனா
இனிப்பான பகையில் தொலைந்தேனா
இயல்பான வகையில் தொலைந்தேனா
தொலைந்தாயே நீ என்னோடு அதனால் தொலைந்தேனா


வண்ணங்கள் வண்ணங்கள் இல்லாமல் வாழ்ந்தேனே
தந்தாயே நிறமெல்லாம் அதனால் தானா
கண்ணுக்குள் கண்ணுக்குள் காணாத கனவாக
கண்டேனே நான் உன்னை அதனால் தானா


எதனாலே காதல் பிச்சை கேட்கும் பக்தன் நானா
காற்றோடு சொல்லி போனாயே 
எந்தன் மூச்சோடு மொத்தம் சேர்ந்தாயே 
ஓர பார்வையில் நீ என் உதிரம் பருகினாய்
உந்தன் மீதி பார்வையில் நீ என் உயிரை திருகினாய்


கண் காது நாசியாவிலும் கலகங்கள் நிறைய செய்கிறாய்
என் ஜாணில் புகுந்து கொண்டு நீ இறங்காமல் உறைய வைக்கிறாய்
ஏனென்னை சீரழித்தாய்.............

Sunday, March 11, 2012

மயக்கம் என்ன - பிறை தேடும்



படம் : மயக்கம் என்ன (2011)
இசை : ஜி.வி.பிரகாஷ்
பாடியவர்கள் : ஜி.வி.பிரகாஷ், சைந்தவி
பாடல் வரிகள் : தனுஷ்


 

(Right click & Save link As)

பிறை தேடும் இரவிலே உயிரே எதைத் தேடி அலைகிறாய்
கதை சொல்ல அழைக்கிறேன் உயிரே அன்பே நீ வா

பிறை தேடும் இரவிலே உயிரே எதைத் தேடி அலைகிறாய்
கதை சொல்ல அழைக்கிறேன் உயிரே அன்பே நீ வா
இருளில் கண்ணீரும் எதற்கு மடியில் கண் மூட வா
அழகே இந்த சோகம் எதற்கு நான் உன் தாயும் அல்லவா

உனக்கென மட்டும் வாழும் இதயமடி
உயிருள்ள வரை நான் உன் அடிமையடி

பிறை தேடும் இரவிலே உயிரே எதைத் தேடி அலைகிறாய்
கதை சொல்ல அழைக்கிறேன் உயிரே அன்பே நீ வா

அழுதால் உன் பார்வையும் அயர்ந்தால் உன் கால்களும்
அதிகாலையின் கூடலில் சோகம் தீர்க்கும் போதுமா
நிழல் தேடிடும் ஆண்மையும் நிஜம் தேடிடும் பெண்மையும்
ஒரு போர்வையில் வாழும் இன்பம் தெய்வம் தந்த சொந்தமா

என் ஆயுள் ரேகை நீயடி என் ஆணிவேரடி
சுமை தாங்கும் எந்தன் கண்மணி எனை சுடும் பனி
உனக்கென மட்டும் வாழும் இதயமடி
உயிருள்ள வரை நான் உன் அடிமையடி

பிறை தேடும் இரவிலே உயிரே எதைத் தேடி அலைகிறாய்
கதை சொல்ல அழைக்கிறேன் உயிரே அன்பே நீ வா

விழியின் அந்த தேடலும் அலையும் உந்தன் நெஞ்சமும்
புரிந்தாலே போதுமே ஏழு ஜென்மம் தாங்குவேன்
அனல் மேலே வாழ்கிறாய் நதி போலே பாய்கிறாய்
ஒரு காரணம் இல்லையே மீசை வைத்த பிள்ளையே

இதைக் காதல் என்று சொல்வதா நிழல் காய்ந்து கொள்வதா
தினம் கொல்லும் இந்த பூமியில் நீ வரம் தரும் இதம்

Thursday, March 8, 2012

ஈசன் - கண்ணில் அன்பை


படம்: ஈசன் (2010) 
இசை: ஜேம்ஸ் வசந்தன்
பாடியவர்கள்: பத்மநாபன்
பாடலாசிரியர்: நா.முத்துகுமார்

 

 

(Right click & Save link as)


கண்ணில் அன்பை சொல்வாளே யாரும் இல்லை இவள் போலே
துன்பம் என்னை தீண்டாமல் தாயாய் காப்பாள் மண் மேலே


கண்ணில் அன்பை சொல்வாளே யாரும் இல்லை இவள் போலே
துன்பம் என்னை தீண்டாமல் தாயாய் காப்பாள் மண் மேலே


சில நேரம் புன்னகையாலே பூக்கள் தந்திடுவாள்
சில நேரம் சண்டைகளாலே என்னை வென்றிடுவாள்
பேசாமல் மௌனத்தினாலே மனதை சொல்லிடுவாள்
இவள் சொந்தம் போதும் என்னும் எண்ணம் தந்திடுவாள்


கண்ணில் அன்பை சொல்வாளே யாரும் இல்லை இவள் போலே
துன்பம் என்னை தீண்டாமல் தாயாய் காப்பாள் மண் மேலே


உலகம் எந்தன் உலகம் எங்கும் இவளே வந்திடுவாள்
உயரம் கொஞ்சம் வளர்ந்த போதும் குழந்தை என்றிடுவாள்
உள்ளங்கையில் பாசம் வைத்து உணவைத் தந்திடுவாள்
உறங்கும் போதும் உறங்காமல் என் அருகில் நின்றிடுவாள்
இவள் போலே இவளை போலே வாழ்வில் நண்பர்கள் இல்லை
மறுஜென்மம் வந்தால் கூட நான் தான் இவளின் பிள்ளை
என்றும் என்றென்றும் இவள் சொந்தம் வேண்டும்

கண்ணில் அன்பை சொல்வாளே யாரும் இல்லை இவள் போலே
துன்பம் என்னை தீண்டாமல் தாயாய் காப்பாள் மண் மேலே

கண்ணீர் துளிகள் வேண்டும் என்று கண்ணை கேட்கின்றேன்
கண்ணீர் துடைக்க இவளும் வந்தால் தினமும் அழுகின்றேன்
என்னை நானே காண்பது போலே இவளை பார்க்கின்றேன்
என்றும் எங்கும் வழித்துணையாக இவளை கேட்கின்றேன்
உறவேன்னும் வார்த்தைக்கு தான் அர்த்தம் இங்கே கண்டேன்
இவள் அன்பின் வெளிச்சம் என் மேல் இரவும் பகல் தான் என்பேன்
என்றும் என்றென்றும் இவள் சொந்தம் வேண்டும்

கண்ணில் அன்பை சொல்வாளே யாரும் இல்லை இவள் போலே
துன்பம் என்னை தீண்டாமல் தாயாய் காப்பாள் மண் மேலே

சில நேரம் புன்னகையாலே பூக்கள் தந்திடுவாள்
சில நேரம் சண்டைகளாலே என்னை வென்றிடுவாள்
பேசாமல் மௌனத்தினாலே மனதை சொல்லிடுவாள்
இவள் சொந்தம் போதும் என்னும் எண்ணம் தந்திடுவாள்


கண்ணில் அன்பை சொல்வாளே யாரும் இல்லை இவள் போலே
துன்பம் என்னை தீண்டாமல் தாயாய் காப்பாள் மண் மேலே


Popular Posts