Thursday, March 8, 2012

ஈசன் - கண்ணில் அன்பை

படம்: ஈசன் (2010) 
இசை: ஜேம்ஸ் வசந்தன்
பாடியவர்கள்: பத்மநாபன்
பாடலாசிரியர்: நா.முத்துகுமார்

(Right click & Save link as)

கண்ணில் அன்பை சொல்வாளே யாரும் இல்லை இவள் போலே
துன்பம் என்னை தீண்டாமல் தாயாய் காப்பாள் மண் மேலே

சில நேரம் புன்னகையாலே பூக்கள் தந்திடுவாள்
சில நேரம் சண்டைகளாலே என்னை வென்றிடுவாள்
பேசாமல் மௌனத்தினாலே மனதை சொல்லிடுவாள்
இவள் சொந்தம் போதும் என்னும் எண்ணம் தந்திடுவாள்

உலகம் எந்தன் உலகம் எங்கும் இவளே வந்திடுவாள்
உயரம் கொஞ்சம் வளர்ந்த போதும் குழந்தை என்றிடுவாள்
உள்ளங்கையில் பாசம் வைத்து உணவைத் தந்திடுவாள்
உறங்கும் போதும் உறங்காமல் என் அருகில் நின்றிடுவாள்
இவள் போலே இவளை போலே வாழ்வில் நண்பர்கள் இல்லை
மறுஜென்மம் வந்தால் கூட நான் தான் இவளின் பிள்ளை
என்றும் என்றென்றும் இவள் சொந்தம் வேண்டும்

கண்ணில் அன்பை சொல்வாளே யாரும் இல்லை இவள் போலே
துன்பம் என்னை தீண்டாமல் தாயாய் காப்பாள் மண் மேலே

கண்ணீர் துளிகள் வேண்டும் என்று கண்ணை கேட்கின்றேன்
கண்ணீர் துடைக்க இவளும் வந்தால் தினமும் அழுகின்றேன்
என்னை நானே காண்பது போலே இவளை பார்க்கின்றேன்
என்றும் எங்கும் வழித்துணையாக இவளை கேட்கின்றேன்
உறவேன்னும் வார்த்தைக்கு தான் அர்த்தம் இங்கே கண்டேன்
இவள் அன்பின் வெளிச்சம் என் மேல் இரவும் பகல் தான் என்பேன்

Popular Posts