Thursday, August 30, 2018

Vishwaroopam 2 - Naanaagiya

படம் : விஸ்வரூபம் 2 (2018)
இசை: M. ஜீப்ரான்
பாடியவர்கள் : கமல்ஹாசன், கெளசிகி சக்ரபூர்தி, மாஸ்டர் கார்த்திக், சுரேஷ் ஐயர்
பாடல்வரிகள் : கமல்ஹாசன்


Image result for Vishwaroopam 2



நானாகிய நதி மூலமே 
தாயாகிய ஆதாரமே 
எனை தாங்கிய கருக்குடம்
இணையேயில்லா திருத்தலம்
அனுதினமும் நான் நினைந்திருக்கிறேன் 
அனுதினமும் உனை ம்நினைந்திருக்கிறேன்

உன் போல நான் உயிரானதும் 
பெண் என்ற நான் தாயானதும்
பிறந்த பயனாய் உன்னை பெரும்
சிறந்த பெருமை நிகழ்ந்ததும்
அனுதினமும் நான் நினைந்திருக்கிறேன்  
அனுதினமும் நான் நினைந்திருக்கிறேன் 


அம்மாவும் நீ அப்பாவும் நீ
அன்பால் எனை ஆண்டாளும் நீ
பிறந்த பயனாய் உனை பெரும் 
சிறந்த பெருமை நிகழ்ந்ததும்
அனுதினமும் நான் நினைந்திருக்கிறேன் 


உன் மனதின் சாயலுள்ள
பெண் உருவைத் தேடினேன்
பழங்கனவைக் கானலிலே
கண்கலங்க காண்கிறேன்
பழையபடி நினைவுகள் திரும்பிடும்
பிறந்தமடி சாய்ந்திடக் கிடைத்திடும்
நாள் வருமோ திருநாள் வருமோ

நானாகிய நதி மூலமே 
தாயாகிய ஆதாரமே 
எனை தாங்கிய கருக்குடம்
இணையேயில்லா திருத்தலம்
அனுதினமும் நான் நினைந்திருக்கிறேன்

Imaikkaa Nodigal - Vilambara Idaiveli

ப‌டம் : இமைக்கா நொடிகள் (2018)
இசை : ஹிப்பாப் தமிழா
பாடியவர்கள் :  கிறிஸ்டொபர் ஸ்டான்லி, சுதர்சன் அசோக், ஸ்ரீனிஷா ஜெயசீலன் 
பாடல் வரிகள் : கபிலன் வைரமுத்து

Image result for Imaikkaa Nodigal



ஒளி இல்லா உன் மொழிகள்
விடை தேடும் என் விழிகள்
இமைக்காத நம் நொடிகள்
கெடிகார தேன் துளிகள்

அடி வாயார உன் காதல் நீ சொல்லடி
வாராத நடிப்பெல்லாம் வேண்டாமடி
மின்னஞ்சல் குறுஞ்செய்தி அனுப்பாதடி
கண் முன்னே உந்தன் எண்ணம் கூறடி

விளம்பர இடைவெளி மாலையில்
உன் திருமுகம் திறக்கின்ற‌ வேளையில்
என் நிறமற்ற இதயத்தில் வானவில்
அடி என்ன நிலை உந்தன் மனதில்

நான் உனதே அடி  நீ எனதா?
தெரியாமல் நானும் தேய்கிறேன்
இல்லை என்றே  சொன்னால் இன்றே
என் மோக பார்வை மூடுவேன்


காதல் பூவை நான் ஏற்றுக்கொண்டால்
உன் காத்திருப்பு நிறைவாகுமே
காத்திருப்பு அது தீர்ந்து விட்டால்
நம் கால் தடங்கள் அவை திசை மாறுமே

இவளின் கனவோ... உள்ளே ஒளியும்
இரவும் பகலும்... இதயம் வழியும்
வழியும் கனவு... இதழை அடையும்
எந்த காட்சியில்... அது வார்த்தையாகிடும்

விளம்பர இடைவெளி மாலையில்
உன் திருமுகம் திறக்கின்ற‌ வேளையில்
என் நிறமற்ற இதயத்தில் வானவில்
அடி என்ன நிலை உந்தன் மனதில்


நிலமெல்லாம் உன் தடமே
நிலவெல்லாம் உன் படமே
நிஜமெல்லாம் உன் நிறமே
நினைவெல்லாம் உன் நயமே

மதுரம் கொஞ்சம் இளைஞன் நீயோ
மத‌மே இல்லா இறைவன் நீயோ
வயதை கடிக்கும் குழந்தை நீயோ
வரம்பு மீறலோ என்னை தொடரும் தூறலோ

நான் உனதே அடி நீ எனதா?
தெரியாமலே நானும் தேய்கிறேன்
இல்லை என்றே சொன்னால் இன்றே
என் மோக பார்வை மூடுவேன்

நான் உனதே அடி நீ எனதா?
தெரியாமலே நானும் தேய்கிறேன்
இல்லை என்றே சொன்னால் இன்றே
என் மோக பார்வை மூடுவேன்

Imaikkaa Nodigal - Neeyum Naanum Anbe

ப‌டம் : இமைக்கா நொடிகள் (2018)
இசை : ஹிப்பாப் தமிழா
பாடியவர்கள் :  ரகு தீட்சித், சத்யபிரகாஷ், ஜித்தின் ராஜ் 
பாடல் வரிகள் : கபிலன்

Image result for Imaikkaa Nodigal



நீயும் நானும் அன்பே
கண்கள் கோர்த்துக்கொண்டு
வாழ்வின் எல்லை சென்று
ஒன்றாக வாழலாம்

ஆயுள் காலம் யாவும்
அன்பே நீயே போதும்
இமைகள் நான்கும் போர்த்தி
இதமாய் நாம் தூங்கலாம்

நீயும் நானும் அன்பே
கண்கள் கோர்த்துக்கொண்டு
வாழ்வின் எல்லை சென்று
ஒன்றாக வாழலாம்

என் பாதை நீ... என் பாதம் நீ
நான் போகும் தூரம் நீயடி
என் வானம் நீ... என் பூமி நீ
என் ஆதி அந்தம் நீயடி

என் பாதை நீ... என் பாதம் நீ
நான் போகும் தூரம் நீயடி
என் வானம் நீ... என் பூமி நீ
என் ஆதி அந்தம் நீயடி


தாய்மொழி போலே நீ வாழ்வாய் என்னில்
உன் நிழல் பிரிந்தாலும் வீழ்வேன் மண்ணில்
மின்மினி பூவே உன் காதல் கண்ணில்
புதிதாய் கண்டேனே என்னை உன்னில்
தாமதமாய் உன்னை கண்ட பின்பும்
தாய்மடியாய் வந்தாய் நான் தூங்கவே

நீயும் நானும் அன்பே
கண்கள் கோர்த்துக்கொண்டு
வாழ்வின் எல்லை சென்று
ஒன்றாக வாழலாம்


உன் தேவையை நான் தீர்க்கவே
வெந்நீரில் மீனாய் நீந்துவேன்
உன் காதலை கடன் வாங்கியே
என்னை நானே தாங்குவேன்

உன் பாதியும் என் மீதியும்
ஒன்றேதான் என்று வாழ்கிறேன்
உன் கண்களில் நீர் சிந்தினால்
அப்போதே செத்து போகிறேன்

சாலை ஓர பூக்கள் சாய்ந்து நம்மை பார்க்க
நாளை தேவை இல்லை பெண்ணே நாளும் வாழலாம்  

நீயும் நானும் அன்பே
கண்கள் கோர்த்துக்கொண்டு
வாழ்வின் எல்லை சென்று
ஒன்றாக வாழலாம்

என் பாதை நீ... என் பாதம் நீ
நான் போகும் தூரம் நீயடி
என் வானம் நீ... என் பூமி நீ
என் ஆதி அந்தம் நீயடி

என் பாதை நீ... என் பாதம் நீ
நான் போகும் தூரம் நீயடி
என் வானம் நீ... என் பூமி நீ
என் ஆதி அந்தம் நீயடி

Friday, August 24, 2018

Kanaa - Vaayadi Petha Pulla

படம் : கனா (2018)
இசை : திபு நின்னன் தாமஸ்
பாடியவர்கள் :  ஆராதனா சிவகார்த்திகேயன், சிவகார்த்திகேயன், வைக்கம் விஜயலெட்சுமி
பாடல் வரிகள் : GKB


Related image



வாயாடி பெத்த புள்ள‌
வர போறா நெல்ல போல‌
யார் இவ... யார் இவ...
கையில‌ சுத்துற காத்தாடி
காத்துல ஆடுது கூத்தாடி
கண்ணுல‌ கலரா கண்ணாடி
வம்புக்கு வந்து நிப்பா
யார் இவ... யார் இவ...

யார் இந்த தேவதை ஆனந்தப்பூ மக
வால் மட்டும் இல்லையே
சேட்டைக்கெல்லாம் சொந்தக்காரி
யார் இந்த தேவதை ஊர் கொஞ்சும் என் மக‌
நீ எந்தன் சாமி தான்
என்னை பெத்த சின்ன தாயே


அன்னக்கிளியே வண்ணக்குயிலே
குட்டி குரும்பே கட்டி கரும்பே... ஆ... ஹா...
செல்ல கிளியே சின்ன சிலையே
அப்பன் நகலா பிறந்தவளா.. ஹே....

அப்பனுக்கு ஆஸ்தியும் நான் தானே
ஆசையா வந்தே பொறந்தேனே
வானத்தில் பட்டமாய் ஒசற‌க்க பறந்தேனே

எனக்கு இருக்கும் கனவு எல்லாமே
நிலவுகிட்ட சொல்லி வைப்பேனே
பாசத்தில் விளையுற வயல போல் இருப்பேனே

பொட்டபுள்ள நெனப்புள்ள‌ பசி எனக்கில்லையே
இவ சிரிப்புல மயிலே
வானவில்லு குடைகுள்ளே மழை பஞ்சமில்ல
இடி மின்னல் இவகூட‌ பாட்டுகட்டி ஆடும்

யார் இந்த தேவதை

தனனன... தன்னன நன‌...

வால் மட்டும் இல்லையே


ஆசமக என்ன செஞ்சாலும்
அதட்ட‌கூட ஆசைபட மாட்டேன்
என் மக ஆம்பள பத்துக்கு சமம்தானே

செவத்து மேல பந்த போலதான்
சனியையும் சொலட்டி அடிப்பாளே
காளைய கூடவும் அண்ணனா நெனைப்பாளே

எப்பவும் செல்லபுள்ள‌ விளையாட்டு புள்ள‌
ரெட்டசுழி புள்ள அழகே
பெத்தவங்க முகத்துல ஒரு சிரிப்புல
ஆசை பொண்ணு ஆயுள்தானே கூட்டிகிட்டு போகும்

வாயாடி பெத்த புள்ள‌
வர போறா நெல்ல போல‌
யார் இவ... யார் இவ...
கையில‌ சுத்துற காத்தாடி
காத்துல ஆடுது கூத்தாடி
கண்ணுல‌ கலரா கண்ணாடி
வம்புக்கு வந்து நிப்பா
யார் இவ... யார் இவ...


யார் இந்த தேவதை ஆனந்தப்பூ மக
வால் மட்டும் இல்லையே

சேட்டைக்கெல்லாம் சொந்தக்காரி

யார் இந்த தேவதை ஊர் கொஞ்சும் என் மக‌
நீ எந்தன் சாமி தான்
என்னை பெத்த சின்ன தாயே



Monday, August 20, 2018

Rasukutty - Palayathu Ponnu

படம் : ராசுக்குட்டி (1992)
இசை : இளையராஜா
பாடியவர் :  K.S.சித்ரா
பாடல் வரி : வாலி

Image result for rasukutty



பாளையத்து பொண்ணு நானு சின்னய்யா
பழய பந்தத்த நான் தேடி வந்தேன் செல்லய்யா

பாளையத்து பொண்ணு எங்க‌ சின்னம்மா
பழய பந்தத்த தான் தேடி வந்தோம் பொன்னம்மா

வீட்டுகாரர் பேர...
அய்யய்யோ வீட்டுகாரர் பேர சொல்லலாங்கலா

அத சொல்லாம எப்படிமா தெரிஞ்சிகிறது
அட சும்மா சொல்லுமா

வீட்டுகாரர் பேர சொன்னேன் ராசுகுட்டி ராசுகுட்டி
அவர் பேசுகிற பேச்சு எல்லாம் சீனிக்கட்டி
அட கண்ணுகழகா ஆளும் இருப்பாரே... ஓஹோ...
நித்தம் கலர் கலரா ஆடை அணிவாரே... அடடடே டடே...
இப்ப எந்த திசையில் எங்கு இருக்காரோ... ஓ...
அவர் என்ன தினமும் எண்ணி துடிப்பாரோ... அடட டடட...

பாளையத்து பொண்ணு நானு சின்னய்யா
பழய பந்தத்த நான் தேடி வந்தேன் செல்லய்யா



என்னோட போட்டோவ தான் எங்கயோ பாத்துப்புட்டு
போடாத வேசமெல்லாம் போட்டாயே ஆசப்பட்டு
அண்ணாந்து பார்க்க ஒரு மெழுகுவர்த்தி மெழுகுவர்த்தி
அம்மாடி நீதான் அப்போ ஏத்தி வச்ச ஏத்தி வச்ச‌
பூங்காத்து வீசி அது அணையுமுன்னே அணையுமுன்னே
வந்தேனே ராசா உன்ன அணைச்சிடதான் அணைச்சிடதான்
உம்மனச நான் அறிஞ்சேன் எம்மனச நான் கொடுத்தேன்
வீட்டவிட்டு ஓடி வந்து உன் வலையில் நான் விழுந்தேன்
ஓத்தி ஓத்தி நீ இருந்தா உன்ன விடமாட்டேன்

பாளையத்து பொண்ணு நானு சின்னய்யா
பழய பந்தத்த நான் தேடி வந்தேன் செல்லய்யா

பாளையத்து பொண்ணு எங்க‌ சின்னம்மா
பழய பந்தத்த தான் தேடி வந்தோம் பொன்னம்மா


ராசா நீ முனு லட்சம் ரூவாய்க்கு பட்டு சேலை
கொண்டாந்து வச்சதிப்ப மின்னுது என் மேனிமேல
உன்னோட சேலை நெஞ்ச உசுப்புதைய்யா உசுப்புதைய்யா
உள்ளார எங்கும் பட்டு உறுத்துதைய்யா உறுத்துதைய்யா
அஞ்சாறு வகுப்பு நீங்க படிக்கவில்ல படிக்கவில்ல‌
ஆனாலும் வேறு ஆள புடிக்கவில்ல புடிக்கவில்ல‌
உன்ன தேடி நான் வரத்தான் இத்தனநாள் தவிச்சிருந்தேன்
ஊர விட்டு ஊரு வந்து ஒத்த காலில் தவமிருந்தேன்
ஒத்துக்கிட்டேன் உன்ன இப்ப கட்டிக்கொள்ள நான்தான்

பாளையத்து பொண்ணு நானு சின்னய்யா
பழய பந்தத்த நான் தேடி வந்தேன் செல்லய்யா
வீட்டுகாரர் நீதானய்யா ராசுக்குட்டி ராசுக்குட்டி
நீ பேசுகிற பேச்சு எல்லாம் சீனிக்கட்டி
அட கண்ணுக்கழகா ஆளும் இருக்கீக‌
நித்தம் கலர் கலரா ஆடை அணிவீக‌
நல்ல பந்தல் அமைச்சி பாட்டு படிச்சீக‌
குஷ்தி போட்டியில தான் நீங்க ஜெயிச்சீக‌

பாளையத்து பொண்ணு நானு சின்னய்யா
பழய பந்தத்த நான் தேடி வந்தேன் செல்லய்யா

Kumbakarai Thangaiah - Thendral Kaatre

ப‌டம்: கும்பக்கரை தங்கய்யா(1991) 
இசை: இளையராஜா
பாடியவர்கள்: மனோ, S. ஜானகி
பாடல்வரிகள்: கங்கைஅமரன்

Related image



தென்றல் காத்தே தென்றல் காத்தே
சேதி ஒன்னு கேட்டியா
கன்னிப்பூவு கண்ணில் நூறு
கோலம் போட்டா பாத்தியா
மாமன் மொகத்த பாத்து தான்
வந்து சேர சொல்ல மாட்டியா

தென்றல் காத்தே தென்றல் காத்தே
சேதி ஒன்னு கேட்டியா
கன்னிப்பூவு கண்ணில் நூறு
கோலம் போட்டா பாத்தியா


முத்து மேனி தான் பட்டு ராணி தான்
முழுதும் வாழும் யோகம் தான்
தொட்டு பார்க்கவும் கட்டி சேர்க்கவும்
தொடரும் எனது வேகம் தான்

நீயும் நானும் பாலும் தேனும்
போல ஒன்னா கூடனும்

வானம் போல பூமி போல
சேர்ந்து ஒன்னா வாழனும்

தென்றல் காத்தே தென்றல் காத்தே
சேதி ஒன்னு கேட்டியா


இந்த பூமியும் அந்த வானமும்
இருக்கும்கோலம் மாறலாம்
இந்த ஆசையும் செஞ்ச பூசையும்
என்றும் மாற கூடுமோ

காத்து வாழும் காலம் யாவும்
காதல் கீதம் வாழுமே

கனவு கூட கவிதையாகி
உனது புகழ பாடுமே

தென்றல் காத்தே தென்றல் காத்தே
சேதி ஒன்னு கேட்டியா

கன்னிப்பூவு கண்ணில் நூறு
கோலம் போட்டா பாத்தியா

Kumbakarai Thangaiah - Poothu Poothu

ப‌டம்: கும்பக்கரை தங்கய்யா(1991) 
இசை: இளையராஜா
பாடியவர்கள்: S.P.பாலசுப்ரமணியம், உமா ரமணன்
பாடல்வரிகள்: கங்கைஅமரன்

Related image



பூத்து பூத்து குலுங்குதடி பூவு
அத பாத்து பாத்து மனசுக்குள்ள நோவு
மத்தளம் தான் கொட்டும் புது குத்தாலம் தான்
மத்தளம் தான் கொட்டும் புது குத்தாலம் தான்

ஒரு அச்சாரம் தான் வைக்காமலே... ஹோ...
புது மச்சான் வந்தான் மச்சான் வந்தான்... ஹோய்...

பூத்து பூத்து குலுங்குதடி பூவு
அத பாத்து பாத்து மனசுக்குள்ள நோவு


வைக்காத செந்தூரம் தான் 
வச்சு வந்தேன் உன்னோடு நான் 
இப்போது நீ தந்தால் என்ன முத்தாரம் தான்

வண்டாடும் கண்ணோரம் தான் 
வஞ்சி இளம் பெண்ணோடு நான்
வந்தேனம்மா கொண்டாடத்தான் இந்நேரம் தான்

மொட்டானதே இளம் மேனி மேனி
தொட்டாடவே வரும் மாமன் நீ

மேளம் ஒரு இடி இடிக்குது
வானம் புது குடை புடிக்குது
வா வா வா... மானே...

பூத்து பூத்து குலுங்குதய்யா பூவு
அத பாத்து பாத்து மனசுக்குள்ள நோவு
மத்தளம் தான் கொட்டும் புது குத்தாலம் தான்
மத்தளம் தான் கொட்டும் புது குத்தாலம் தான்

ஒரு அச்சாரம் தான் வைக்காமலே... ஹோ.....ஹோ..
புது மச்சான் வந்தான் மச்சான் வந்தான்... ஹோ...ஹோ..
பூத்து பூத்து குலுங்குதடி பூவு
அத பாத்து பாத்து மனசுக்குள்ள நோவு


பட்டோடு பொன்னாட தான் 
பார்த்த மனம் உன்னோடு தான்
கட்டாமலே எட்டாமலே தள்ளாடுதே

தோளோடு தோளாகத்தான்
மேலோடு மேலாகத் தான்
துள்ளாமலே நில்லாமலே வந்தான் மச்சான்

செம்மேனியா செந்தாழம் பூவா....
அது உன்மேனியா ஹ..பொன் மேனியா

பார்த்தா உடல் சிலு சிலுக்குது
பார்வை பட கிளுகிளுக்குது
வா வா வா... மாமா...

பூத்து பூத்து குலுங்குதடி பூவு
அத பாத்து பாத்து மனசுக்குள்ள நோவு
மத்தளம் தான் கொட்டும் புது குத்தாலம் தான்
ஹஹ்ஹ...மத்தளம் தான் கொட்டும் புது குத்தாலம் தான்

ஒரு அச்சாரம் தான் வைக்காமலே... ஹோ...
புது மச்சான் வந்தான் மச்சான் வந்தான்... ஹோ...ய்

பூத்து பூத்து குலுங்குதடி பூவு
அத பாத்து பாத்து மனசுக்குள்ள நோவு
பூத்து பூத்து குலுங்குதடி பூவு
அத பாத்து பாத்து மனசுக்குள்ள நோவு

Sunday, August 19, 2018

Kumbakarai Thangaiah - Pattu Onna Ilukkutha

ப‌டம்: கும்பக்கரை தங்கய்யா(1991) 
இசை: இளையராஜா
பாடியவர்கள்: S.P.பாலசுப்ரமணியம், S. ஜானகி
பாடல்வரிகள்: கங்கைஅமரன்

Related image



ஹா ஆ ஆ ஆ... ஓஓஓ.... 
ஆ ஆ ஆ ஆ ஹா... ஓஓஓ...
ஹா ஆ ஆ ஆ... ஓஓஓ....
ஆ ஆ ஆ ஆ ஹா... ஓஓஓ...

ஏய்... நானா நா நன்ன நன்ன நானா நா நன்னனா...

நானா நா நன்ன நன்ன நானா நா நன்னனா...

நானா நா நன்ன நன்ன நா...
பாட்டு உன்ன இழுக்குதா... ஆமா... ஆமா...
அதை கேட்டு நெஞ்சம் மயங்குதா... ஆமா... ஆமா...
என்ன பூட்டி புடிச்சி விக்க
கூட்டு கிளியும் இல்ல காட்டு குயிலும் இல்ல
கேட்டா கிறங்குதில்ல தந்தா நந்தா நந்தானா
பாட்டு உன்ன இழுக்குதா... ஆமா... ஆமா...
அதை கேட்டு நெஞ்சம் மயங்குதா... ஆமா... ஆமா...


நீரோடும் வைகையில நீரானவ
நிமிந்து நடந்து வந்தா தேரானவ
மாறாத வாக்கு சொல்லும் சீரானவ
மறுத்து எவரும் சொன்னா வேறானவ
செந்தாழம் பூ நல்லாருக்கும் தொட்டா முள்ளு குத்தாதா
வந்தாலும் தான் போனாலும் தான் வண்டா கண்ணு சுத்தாதா
கொய்யாத கொய்யா கனி நான்தானடி
கொண்டாட ஏங்கும் பல ஆண்தானடி
ஏழூரிலும் என் போல பெண் ஏது
எங்கே சொல்லு பெண்ணே இப்போது

ஹே.... ஹா ஆ ஆ ஆ ஆ...
தந்தானன... தந்தா நன்ன... தந்தான தந்தான நா...
தந்தானன... தந்தா நன்ன... தந்தான தந்தான நா...
வித்தாரக்கள்ளி இவள கொஞ்சம் பாரு
இவ தொட்டா உடம்பில் ஒட்டிக்கொள்ளும் சேறு
வித்தாரக்கள்ளி இவள கொஞ்சம் பாரு
இவ தொட்டா உடம்பில் ஒட்டிக்கொள்ளும் சேறு
கத்தால முள்ளு தானா இல்ல கொட்டாத சிறுதேளா
தந்தான கிளி... தந்தான கிளி... தந்தா நா....
அட... தந்தான கிளி... தந்தான கிளி... தந்தா நா...
டுர்...ர்..ரா...  டுர்..ர்..ர்...

நீ என்ன தென்மதுரை அரசானியா
நெசமாக வந்திருக்கும் அள்ளி ராணியா
நான் என்ற எண்ணம் கொண்டு நடக்காதம்மா
நடந்தா தங்கையா கிட்ட நடக்காதம்மா
இல்லாதத‌ பொல்லாதத எல்லாருக்கும் சொல்லாத
எம்மா எம்மா சும்மா சும்மா அங்கே இங்கே துள்ளாத
பெண்ணாக வந்தாலே பெரும் பாக்கியம்
முன்னோர்கள் சொன்னாரடி ஒரு வாக்கியம்
வாயாடியே ஒம் போல பெண்ணாலே
பெண்ணின் புகழ் மங்கும் தன்னாலே
பாட்டு படிக்கும் குயிலே... ஆமா... ஆமா...
உன் பாட்ட நிப்பாட்டு ஒயிலே... ஆமா... ஆமா...
கூட்டில் புடிச்சி வைப்பேன் வீட்டு கிளியே உன்ன 
காட்டில் தொரத்தி ரெண்டு போட்டு கிறங்க வைப்பேன்
தந்தா... நந்தா... நந்தானா...
பாட்டு படிக்கும் குயிலே... ஆமா... ஆமா...
உன் பாட்ட நிப்பாட்டு ஒயிலே... ஆமா... ஆமா...

Junga - Koottippo Koodave

ப‌டம்: ஜுங்கா (2018) 
இசை: சித்தார்த் விபின்
பாடியவர்கள்: ரனினா ரெட்டி, சத்யபிரகாஷ்
பாடல்வரிகள்: லலித்ஆனந்

Related image



நீ யாரோ... யாரோ...
நீ யாரோ நின்றாய் யாதுமாய்
நீளாதோ இந்நாள் தூரமாய்
போகாத சாலை பொன் வேளை
வான் காணா வானிலை
நேராத ஏதோ நேரலை

நீ யாரோ... யாரோ...
நீ யாரோ நின்றாய் யாதுமாய்
நீளாதோ இந்நாள் தூரமாய்
போகாத சாலை பொன் வேளை
வான் காணா வானிலை
நேராத ஏதோ நேரலை

அண்மையில் நீ பார்த்து நிற்கின்ற நேரம்
மென்மையாய் கைகோர்த்துப் போகவே
மெதுவாய் மேல்நாட்டு மேகம் ஏங்கும்
நகரா நாள் வேண்டுமே... வேண்டுமே...

ஆகாயம் தாண்டியும்... கூட்டிப்போ கூடவே
ஆளில்லாத் தீவுகள்...  கூட்டிப்போ கூடவே
காணாத வேறிடம்... கூட்டிப்போ கூடவே
வாழாத ஓரிடம்... கூட்டிப்போ கூடவே


நிகழாத சூழல் நிகர் இல்லாத முதல் காட்சியே
அழகே நீ தந்தாய் என் வாழ்வையே
ஒளி பாயும் காலம் குளிர் ஏதேதோ ஆசை கூட்டுதே
அடைந்தேனே உன்னை அடையாளமே

பாதாதி கேசம் தோன்றாத மாற்றமே
பாராத தேசம் வாராத வாசமே
ஆகாயம் தாண்டியும்... கூட்டிப்போ கூடவே
ஆளில்லாத் தீவுகள்... கூட்டிப்போ கூடவே
காணாத வேறிடம்... கூட்டிப்போ கூடவே
வாழாத ஓரிடம்...  கூட்டிப்போ கூடவே
நீ யாரோ... யாரோ...
நீ் யாரோ நின்றாய் யாதுமாய்...
நீளாதோ இந்நாள் தூரமாய்
போகாத சாலை பொன் வேளை
வான் காணா வானிலை
நேராத ஏதோ நேரலை

உன்னுடன் நான் சேர்ந்து போகின்றபோது
உண்மையில் தோள்சாயத் தோன்றுதே
உணர்வில் நீ பூத்து நிற்கின்றபோது
உணரா ஒரு வாசமே... வாசமே...

ஆகாயம் தாண்டியும்... கூட்டிப்போ கூடவே
ஆளில்லாத் தீவுகள்... கூட்டிப்போ கூடவே
காணாத வேறிடம்... கூட்டிப்போ கூடவே
வாழாத ஓரிடம்... கூட்டிப்போ கூடவே

Friday, August 17, 2018

Arunachalam - Thalai Magane

ப‌டம்: அருணாசலம் (1997)
இசை: தேவா
பாடியவர்கள்: S.P. பாலசுப்ரமணியம்
பாடல்வரிகள்: காளிதாசன்

Related image



தலைமகனே கலங்காதே
தனிமை கண்டு மயங்காதே

தலைமகனே கலங்காதே
தனிமை கண்டு மயங்காதே
உன் தந்தை தெய்வம் தானடா... ஆஆ...
உன் தந்தை தெய்வம் தானடா

தலைமகனே கலங்காதே
தனிமை கண்டு மயங்காதே

ஏ... மேகங்கள் அது போல சோகங்கள் கலந்தோடும்
நீ போகும் பாதையெல்லாம் நியாயங்கள் சபையேறும்
எந்நாளும் உன்னோடு உன் அன்னை மனம் வாழும்
தெய்வங்கள் அருளோடு திசையாவும் மலர் தூவும்

தலைமகனே கலங்காதே
தனிமை கண்டு மயங்காதே
தலைமகனே கலங்காதே
தனிமை கண்டு மயங்காதே

Walter Vetrivel - Chinna Rasave

ப‌டம்: வால்டர் வெற்றிவேல் (1993)
இசை: இளையராஜா
பாடியவர்கள்: மனோ, S. ஜானகி
பாடல்வரிகள்: வாலி


Image result for Walter vetrivel



சின்ன ராசாவே சிட்டெறும்பு என்ன கடிக்குது
உன்ன சேராம அடிக்கடி ராத்திரி துடிக்குது

சின்ன ராசாவே சிட்டெறும்பு என்ன கடிக்குது
உன்ன சேராம அடிக்கடி ராத்திரி துடிக்குது
வாங்கின பூவும் பத்தாது வீசுற காத்தும் நிக்காது 
அட முஜுக்கு முஜுக்கு ராவெல்லாம் பேச்சுக்கு 
ராசாவே... ராசாவே...
ராசாவே சிட்டெறும்பு என்ன கடிக்குது
உன்ன சேராம அடிக்கடி ராத்திரி துடிக்குது


அக்கா மக பாட்ட கேட்டு
முக்கா முழ பூவ சூட்டு 
அக்காலத்து கோட்ட‌ போட்டு 
நிக்காதே நீ ரொம்ப லேட்டு 

கொஞ்சம் பொறு மானே 
கொல்லி மலைத்தேனே
காத்திருக்கேன் மீனே 
தூண்டிலிட நானே

அட மாமாவே வாயா நான் கூட 
ஒரு மாமாங்கம் போச்சு நான் ஆட

அட முஜுக்கு முஜுக்கு ராவெல்லாம் பேச்சுக்கு 
ரோசாவே சிட்டெறும்பு உன்ன கடிக்குதா
என்ன சேராம அடிக்கடி ராத்திரி துடிக்குதா


தெக்கால தான் மேயும் காத்து 
தென்ன மர கீத்த பாத்து
ஒக்காந்து தான் தாளம் போடும்
ஒன்னுடைய ராகம் பாடும்

உச்சிமல ஓரம் வெயில் தாழும் நேரம் 
ஊத்து தண்ணி போல உன் நெனப்பு ஊரும் 

சிறு பாவாட சூடும் பூந்தேரு 
இது பூவாட வீசும் பாலாறு 

அட முஜுக்கு முஜுக்கு ராவெல்லாம் பேச்சுக்கு 
ராசாவே சிட்டெறும்பு என்ன கடிக்குது
உன்ன சேராம அடிக்கடி ராத்திரி துடிக்குது

வாங்கின பூவும் பத்தாது வீசுற காத்தும் நிக்காது 
அட முஜுக்கு முஜுக்கு ராவெல்லாம் பேச்சுக்கு
ரோசாவே... ரோசாவே... ரோசாவே...

சிட்டெறும்பு என்ன கடிக்குது
உன்ன சேராம அடிக்கடி ராத்திரி துடிக்குது

ம்.. அட ரோசாவே சிட்டெறும்பு உன்ன கடிக்குதா
என்ன சேராம அடிக்கடி ராத்திரி துடிக்குதா

Thursday, August 16, 2018

Varuthapadatha Valibar Sangam - Yennada Yennada

படம்: வருத்தப்படாத வாலிபர் சங்கம் (2013)
இசை: D.இமான்
பாடியவர்கள்: ஸ்ரேயா கோஷல், சூரஜ் சந்தோஷ்,
 ஸ்வேதா சுரேஷ் (விசில்)

பாடல்வரிகள்: யுகபாரதி






யென்னடா யென்னடா... யென்னடா யென்னடா...


யென்னடா யென்னடா உன்னாலே தொல்லையா போச்சு

சொல்லவே இல்லையே தன்னாலே என்னவோ ஆச்சு
பாராமல் பொலம்பவிடும் பார்த்தாலே 
பதுங்கிவிடும் வால் பையன் நீதானடா 
யென்னடா யென்னடா உன்னாலே தொல்லையா போச்சு
சொல்லவே இல்லையே தன்னாலே என்னவோ ஆச்சு

ஓ... நீ லேசாக பார்த்தாலும் லூசாகி போறேன்
பச்ச நெருப்பா பத்திக்கிடுறேன் 
விளையாட்டு பொம்மைய போல உடைஞ்சேனே நானும் கூட
அநியாயம் பண்ணுற காதல் அடங்காம ஆட்டம் போட
பொல்லாத உன் நெனப்பு எப்போதும் போட்டி போட்டு கொல்ல
போகாத கோயிலுக்கும் நான் போவேன் பூச பண்ணுறேன்..
என்ன சொல்ல...

யென்னடா... 
ஓ.யென்னடா...

ஓ... யென்னடா யென்னடா... உன்னாலே தொல்லையா போச்சு

சொல்லவே இல்லையே.. தன்னாலே என்னவோ ஆச்சு
பாராமல் பொலம்பவிடும் பார்த்தாலே 
பதுங்கிவிடும் வால் பையன் நீதானேடா 

யென்னடா...  யென்னடா...

யென்னடா...  யென்னடா...

Popular Posts