Showing posts with label Aishwarya. Show all posts
Showing posts with label Aishwarya. Show all posts

Monday, August 20, 2018

Rasukutty - Palayathu Ponnu

படம் : ராசுக்குட்டி (1992)
இசை : இளையராஜா
பாடியவர் :  K.S.சித்ரா
பாடல் வரி : வாலி

Image result for rasukutty



பாளையத்து பொண்ணு நானு சின்னய்யா
பழய பந்தத்த நான் தேடி வந்தேன் செல்லய்யா

பாளையத்து பொண்ணு எங்க‌ சின்னம்மா
பழய பந்தத்த தான் தேடி வந்தோம் பொன்னம்மா

வீட்டுகாரர் பேர...
அய்யய்யோ வீட்டுகாரர் பேர சொல்லலாங்கலா

அத சொல்லாம எப்படிமா தெரிஞ்சிகிறது
அட சும்மா சொல்லுமா

வீட்டுகாரர் பேர சொன்னேன் ராசுகுட்டி ராசுகுட்டி
அவர் பேசுகிற பேச்சு எல்லாம் சீனிக்கட்டி
அட கண்ணுகழகா ஆளும் இருப்பாரே... ஓஹோ...
நித்தம் கலர் கலரா ஆடை அணிவாரே... அடடடே டடே...
இப்ப எந்த திசையில் எங்கு இருக்காரோ... ஓ...
அவர் என்ன தினமும் எண்ணி துடிப்பாரோ... அடட டடட...

பாளையத்து பொண்ணு நானு சின்னய்யா
பழய பந்தத்த நான் தேடி வந்தேன் செல்லய்யா



என்னோட போட்டோவ தான் எங்கயோ பாத்துப்புட்டு
போடாத வேசமெல்லாம் போட்டாயே ஆசப்பட்டு
அண்ணாந்து பார்க்க ஒரு மெழுகுவர்த்தி மெழுகுவர்த்தி
அம்மாடி நீதான் அப்போ ஏத்தி வச்ச ஏத்தி வச்ச‌
பூங்காத்து வீசி அது அணையுமுன்னே அணையுமுன்னே
வந்தேனே ராசா உன்ன அணைச்சிடதான் அணைச்சிடதான்
உம்மனச நான் அறிஞ்சேன் எம்மனச நான் கொடுத்தேன்
வீட்டவிட்டு ஓடி வந்து உன் வலையில் நான் விழுந்தேன்
ஓத்தி ஓத்தி நீ இருந்தா உன்ன விடமாட்டேன்

பாளையத்து பொண்ணு நானு சின்னய்யா
பழய பந்தத்த நான் தேடி வந்தேன் செல்லய்யா

பாளையத்து பொண்ணு எங்க‌ சின்னம்மா
பழய பந்தத்த தான் தேடி வந்தோம் பொன்னம்மா


ராசா நீ முனு லட்சம் ரூவாய்க்கு பட்டு சேலை
கொண்டாந்து வச்சதிப்ப மின்னுது என் மேனிமேல
உன்னோட சேலை நெஞ்ச உசுப்புதைய்யா உசுப்புதைய்யா
உள்ளார எங்கும் பட்டு உறுத்துதைய்யா உறுத்துதைய்யா
அஞ்சாறு வகுப்பு நீங்க படிக்கவில்ல படிக்கவில்ல‌
ஆனாலும் வேறு ஆள புடிக்கவில்ல புடிக்கவில்ல‌
உன்ன தேடி நான் வரத்தான் இத்தனநாள் தவிச்சிருந்தேன்
ஊர விட்டு ஊரு வந்து ஒத்த காலில் தவமிருந்தேன்
ஒத்துக்கிட்டேன் உன்ன இப்ப கட்டிக்கொள்ள நான்தான்

பாளையத்து பொண்ணு நானு சின்னய்யா
பழய பந்தத்த நான் தேடி வந்தேன் செல்லய்யா
வீட்டுகாரர் நீதானய்யா ராசுக்குட்டி ராசுக்குட்டி
நீ பேசுகிற பேச்சு எல்லாம் சீனிக்கட்டி
அட கண்ணுக்கழகா ஆளும் இருக்கீக‌
நித்தம் கலர் கலரா ஆடை அணிவீக‌
நல்ல பந்தல் அமைச்சி பாட்டு படிச்சீக‌
குஷ்தி போட்டியில தான் நீங்க ஜெயிச்சீக‌

பாளையத்து பொண்ணு நானு சின்னய்யா
பழய பந்தத்த நான் தேடி வந்தேன் செல்லய்யா

Friday, March 2, 2018

Raasukutty - Adi Naan Pudicha

படம் : ராசுக்குட்டி (1992)
இசை : இளையராஜா
பாடியவர் :  S.P. பாலசுப்ரமணியம்
பாடல் வரி : வாலி


Image result for rasukutty



யே ஹே... யே ஹே...யே யேஹே... 
தந்தான தான...  தந்தான தான... 
தந்தான தந்தான தானனா... 

அடி நான் புடிச்ச கிளியே வாச மலர் கொடியே 
எம் மனசு தவிக்குதடி
நீ கூடு விட்டு வெளியே வந்ததென்ன தனியே 
தேகமெங்கும் கொதிக்குதடி
ஒன்னு நீயா திருந்து இல்ல தாரேன் மருந்து
அடி உன்னை தான் நெனச்சேன் உன்னையே மணப்பேன்

நான் புடிச்ச கிளியே வாச மலர் கொடியே 
எம் மனசு தவிக்குதடி
நீ கூடு விட்டு வெளியே வந்ததென்ன தனியே 
தேகமெங்கும் கொதிக்குதடி


கட்டு கட்டா புத்தகத்த சுமக்கவில்ல நானடி
ஆனாலும் தான் கெட்ட வழி போனதில்ல நானடி
வெள்ள மனம் பிள்ள குணம் உள்ள ஆளு நானடி
என்ன பத்தி ஊருக்குள்ளே நீயும் கொஞ்சம் கேளடி
படிப்பு ஒன்னே வாழ்க்கையா பாசம் அன்பு இல்லையா
படிப்பில்லாமல் வாழ்க்கையில் உயர்ந்த மேதை இல்லையா
உன்னை கண் போலதான் வச்சி காப்பேனடி
அடி உன்னதான் நெனச்சேன் உன்னையே மணப்பேன்

நான் புடிச்ச கிளியே வாச மலர் கொடியே 
எம் மனசு தவிக்குதடி
நீ கூடு விட்டு வெளியே வந்ததென்ன தனியே 
தேகமெங்கும் கொதிக்குதடி
ஒன்னு நீயா திருந்து இல்ல தாரேன் மருந்து
அடி உன்னை தான் நெனச்சேன் உன்னையே மணப்பேன்

நான் புடிச்ச கிளியே வாச மலர் கொடியே 
எம் மனசு தவிக்குதடி
நீ கூடு விட்டு வெளியே வந்ததென்ன தனியே 
தேகமெங்கும் கொதிக்குதடி


ஊருக்குள்ளே நூறு பொண்ணு என் நெனப்பில் ஏங்குது
அத்தனையும் தள்ளி வச்சி உன் நெனப்பில் ஏங்குறேன்
காசு பணம் சீர்வரிச கேட்கவில்ல நானடி
ஆசை பட்ட பாவத்துக்கு அல்லி தர்பார் ஏனடி
மயக்கம் என்ன பூங்கொடி மாமன் தோள சேரடி
நடந்ததெல்லாம் கனவென மறந்து மாலை சூடலாம்
உன்ன கண் போலதான் வச்சி காப்பேனடி
அடி உன்னதான் நெனச்சேன் உன்னையே மணப்பேன்

நான் புடிச்ச கிளியே வாச மலர் கொடியே 
எம் மனசு தவிக்குதடி
நீ கூடு விட்டு வெளியே வந்ததென்ன தனியே 
தேகமெங்கும் கொதிக்குதடி
ஒன்னு நீயா திருந்து இல்ல தாரேன் மருந்து
அடி உன்னை தான் நெனச்சேன் உன்னையே மணப்பேன்

நான் புடிச்ச கிளியே வாச மலர் கொடியே 
எம் மனசு தவிக்குதடி
நீ கூடு விட்டு வெளியே வந்ததென்ன தனியே 
தேகமெங்கும் கொதிக்குதடி

Saturday, March 23, 2013

அபியும் நானும் - ஒரே ஒரு ஊரிலே


படம்: அபியும் நானும் (2008)
இசை: வித்யாசாகர்
பாடியவர்: கைலாஷ் கேர்
பாடல்வரிகள்: வைரமுத்து









ஏ.. ஹோ... ந ந... ஓஹோ ஹோ...
ஏ... ஹோ ஹோ... ஓஹோ ஹோ ஹோ...
ஏ... ம்.... ம்... ஓ... ஏ... ஹே...

ஒரே ஒரு ஊரிலே ஒரே ஒரு அய்யா
ஒரே ஒரு அய்யாவுக்கு ஒரே ஒரு அம்மா
ஒரே ஒரு அம்மா பெத்த ஒரே ஒரு பொண்ணு
அவ பொண்ணு இல்ல பொண்ணு இல்ல
கடவுளோட கண்ணு

அய்யா இருக்காரே அய்யா
பாசம் இல்லாம பலரு பைத்தியமா ஆனதுண்டு
பாசத்தினாலே இவரு பைத்தியமா ஆவதுண்டு
காத்தடிச்சா மகளுக்கு காவலுக்கு நிப்பாரு
காய்ச்சடிச்சா சூரியனை கைது செய்ய பாப்பாரு
மக மட்டும் மக மட்டும் உசிரு
மத்ததெல்லாம் மத்ததெல்லாம்
இவருக்கு கொசுரு

ஒரே ஒரு ஊரிலே ஒரே ஒரு அய்யா
ஒரே ஒரு அய்யாவுக்கு ஒரே ஒரு அம்மா


அக்கா இருக்காங்களே எங்க அக்கா
பூச்சிய பாத்தாலே சிலரு புத்தி மாறி போவாங்க
பூகம்பமே வந்தாலும் அக்கா பூத்தொடுத்து நிப்பாங்க
கொண்டதுவும் ஒரு குழந்தை கொடுத்தவனும் ஒரு குழந்தை
தொலையட்டும் கழத்தி கண்ணு தொல்லையல்லாம் பொறுப்பாங்க
எங்க அக்கா எங்களுக்கு பரிசு
எங்க அக்கா மனசோட
இமயமலை சிறுசு…

தன தன தன தும் தன தும் தன தும்
தன தன  தும் தன தும் தன தும்
தன தன தன தும் தன தும் தன தும்
தன தன  தும் தன தும்
தன தன தன தும் தன தும் தன தும்
தன தன  தும் தன தும் தன தும்

அம்மா இருக்காளே எங்க அம்மா
பிறந்து வரும் போதே சிலரு வரம் வாங்கி வருவாங்க
பிறந்து வரும் போதே சிலரு வரம் தருவே வருவாங்க
வரமா வந்தம்மா வாஞ்சையுள்ள தங்கம்மா
சித்தெறும்ப நசுக்காத சிங்கம் தான் எங்கம்மா
மறுபிறவி உண்டுன்னா எனக்கென்ன வேண்டும்
இந்த மகளுக்கோ தாய்கோ நான் மகனாக வேணும்



Friday, January 11, 2013

ஊரெல்லாம் உன் பாட்டு - ஊரெல்லாம் உன் பாட்டு

படம் : ஊரெல்லாம் உன் பாட்டு (1991)
இசை : இளையராஜா
பாடியவர்கள் : K.J. யேசுதாஸ்
பாடல்வரிகள் : வாலி






ஆ ஆ ஆ ஆ... ஆ ஆ ஆ ஆ...
ஆ ஆ ஆ ஆ... ஆ ஆ ஆ ஆ ஆ...
ஆ ஆ ஆ ஆ... ஆ ஆ ஆ ஆ...
ஆ ஆ ஆ ஆ ஆ...


ஊரெல்லாம் உன் பாட்டுதான் உள்ளத்தை மீட்டுது
நாளெல்லாம் உன் பார்வைதான் இன்பத்தை கூட்டுது
நீயல்லால் தெய்வம் வேரெது
நீயெனை சேரும் நாளெது…ஓஹோ
ஊரெல்லாம் உன் பாட்டுதான் உள்ளத்தை மீட்டுது
நாளெல்லாம் உன் பார்வைதான் இன்பத்தை கூட்டுது


உன் பெயர் உச்சரிக்கும் உள்ளம் நித்தமும் தத்தளிக்கும்
இங்கு நீயில்லாது வாழ்வில் ஏது வேனிற்காலம் தான்
என் மனம் உன் வசமே கண்ணில் என்றும் உன் சொப்பனமே
விழி காணும் காட்சி யாவும் உந்தன் வண்ண கோலம் தான்
ஆலம் விழுதுகள் போலே ஆடும் நினைவுகள் கோடி
ஆடும் நினைவுகள் நாளும் வாடும் உனதருள் தேடி
இந்த பிறப்பிலும் எந்த பிறப்பிலும் எந்தன் உயிர் உன்னை சேரும்

ஊரெல்லாம் உன் பாட்டுதான் உள்ளத்தை மீட்டுது
நாளெல்லாம் உன் பார்வைதான் இன்பத்தை கூட்டுது


சென்றது கண்ணுறக்கம் நெஞ்சில் நின்றது உன் மயக்கம்
இங்கு ஓய்வதேது தேய்வதேது உந்தன் ஞாபகம்
உன்னிடம் சொல்வதற்கு எண்ணம் ஒன்றல்ல நூறிருக்கு
அதை நீயும் கேட்க நானும் சொல்ல ஏது வாசகம்
பாத சுவடுகள் போகும் பாதை அறிந்திங்கு நானும்
கூட வருகின்ற போதும் கூட மறுப்பதோ நீயும்
உள்ளக் கதவினை மெல்ல திறந்திங்கு நெஞ்சில் இடம் தர வேண்டும்


ஊரெல்லாம் உன் பாட்டுதான் உள்ளத்தை மீட்டுது
நாளெல்லாம் உன் பார்வைதான் இன்பத்தை கூட்டுது
நீயல்லால் தெய்வம் வேரெது
நீயெனை சேரும் நாளெது…ஓஹோ
ஊரெல்லாம் உன் பாட்டுதான் உள்ளத்தை மீட்டுது
நாளெல்லாம் உன் பார்வைதான் இன்பத்தை கூட்டுது



Popular Posts