Showing posts with label Kanaka. Show all posts
Showing posts with label Kanaka. Show all posts

Monday, August 20, 2018

Kumbakarai Thangaiah - Thendral Kaatre

ப‌டம்: கும்பக்கரை தங்கய்யா(1991) 
இசை: இளையராஜா
பாடியவர்கள்: மனோ, S. ஜானகி
பாடல்வரிகள்: கங்கைஅமரன்

Related image



தென்றல் காத்தே தென்றல் காத்தே
சேதி ஒன்னு கேட்டியா
கன்னிப்பூவு கண்ணில் நூறு
கோலம் போட்டா பாத்தியா
மாமன் மொகத்த பாத்து தான்
வந்து சேர சொல்ல மாட்டியா

தென்றல் காத்தே தென்றல் காத்தே
சேதி ஒன்னு கேட்டியா
கன்னிப்பூவு கண்ணில் நூறு
கோலம் போட்டா பாத்தியா


முத்து மேனி தான் பட்டு ராணி தான்
முழுதும் வாழும் யோகம் தான்
தொட்டு பார்க்கவும் கட்டி சேர்க்கவும்
தொடரும் எனது வேகம் தான்

நீயும் நானும் பாலும் தேனும்
போல ஒன்னா கூடனும்

வானம் போல பூமி போல
சேர்ந்து ஒன்னா வாழனும்

தென்றல் காத்தே தென்றல் காத்தே
சேதி ஒன்னு கேட்டியா


இந்த பூமியும் அந்த வானமும்
இருக்கும்கோலம் மாறலாம்
இந்த ஆசையும் செஞ்ச பூசையும்
என்றும் மாற கூடுமோ

காத்து வாழும் காலம் யாவும்
காதல் கீதம் வாழுமே

கனவு கூட கவிதையாகி
உனது புகழ பாடுமே

தென்றல் காத்தே தென்றல் காத்தே
சேதி ஒன்னு கேட்டியா

கன்னிப்பூவு கண்ணில் நூறு
கோலம் போட்டா பாத்தியா

Kumbakarai Thangaiah - Poothu Poothu

ப‌டம்: கும்பக்கரை தங்கய்யா(1991) 
இசை: இளையராஜா
பாடியவர்கள்: S.P.பாலசுப்ரமணியம், உமா ரமணன்
பாடல்வரிகள்: கங்கைஅமரன்

Related image



பூத்து பூத்து குலுங்குதடி பூவு
அத பாத்து பாத்து மனசுக்குள்ள நோவு
மத்தளம் தான் கொட்டும் புது குத்தாலம் தான்
மத்தளம் தான் கொட்டும் புது குத்தாலம் தான்

ஒரு அச்சாரம் தான் வைக்காமலே... ஹோ...
புது மச்சான் வந்தான் மச்சான் வந்தான்... ஹோய்...

பூத்து பூத்து குலுங்குதடி பூவு
அத பாத்து பாத்து மனசுக்குள்ள நோவு


வைக்காத செந்தூரம் தான் 
வச்சு வந்தேன் உன்னோடு நான் 
இப்போது நீ தந்தால் என்ன முத்தாரம் தான்

வண்டாடும் கண்ணோரம் தான் 
வஞ்சி இளம் பெண்ணோடு நான்
வந்தேனம்மா கொண்டாடத்தான் இந்நேரம் தான்

மொட்டானதே இளம் மேனி மேனி
தொட்டாடவே வரும் மாமன் நீ

மேளம் ஒரு இடி இடிக்குது
வானம் புது குடை புடிக்குது
வா வா வா... மானே...

பூத்து பூத்து குலுங்குதய்யா பூவு
அத பாத்து பாத்து மனசுக்குள்ள நோவு
மத்தளம் தான் கொட்டும் புது குத்தாலம் தான்
மத்தளம் தான் கொட்டும் புது குத்தாலம் தான்

ஒரு அச்சாரம் தான் வைக்காமலே... ஹோ.....ஹோ..
புது மச்சான் வந்தான் மச்சான் வந்தான்... ஹோ...ஹோ..
பூத்து பூத்து குலுங்குதடி பூவு
அத பாத்து பாத்து மனசுக்குள்ள நோவு


பட்டோடு பொன்னாட தான் 
பார்த்த மனம் உன்னோடு தான்
கட்டாமலே எட்டாமலே தள்ளாடுதே

தோளோடு தோளாகத்தான்
மேலோடு மேலாகத் தான்
துள்ளாமலே நில்லாமலே வந்தான் மச்சான்

செம்மேனியா செந்தாழம் பூவா....
அது உன்மேனியா ஹ..பொன் மேனியா

பார்த்தா உடல் சிலு சிலுக்குது
பார்வை பட கிளுகிளுக்குது
வா வா வா... மாமா...

பூத்து பூத்து குலுங்குதடி பூவு
அத பாத்து பாத்து மனசுக்குள்ள நோவு
மத்தளம் தான் கொட்டும் புது குத்தாலம் தான்
ஹஹ்ஹ...மத்தளம் தான் கொட்டும் புது குத்தாலம் தான்

ஒரு அச்சாரம் தான் வைக்காமலே... ஹோ...
புது மச்சான் வந்தான் மச்சான் வந்தான்... ஹோ...ய்

பூத்து பூத்து குலுங்குதடி பூவு
அத பாத்து பாத்து மனசுக்குள்ள நோவு
பூத்து பூத்து குலுங்குதடி பூவு
அத பாத்து பாத்து மனசுக்குள்ள நோவு

Sunday, August 19, 2018

Kumbakarai Thangaiah - Pattu Onna Ilukkutha

ப‌டம்: கும்பக்கரை தங்கய்யா(1991) 
இசை: இளையராஜா
பாடியவர்கள்: S.P.பாலசுப்ரமணியம், S. ஜானகி
பாடல்வரிகள்: கங்கைஅமரன்

Related image



ஹா ஆ ஆ ஆ... ஓஓஓ.... 
ஆ ஆ ஆ ஆ ஹா... ஓஓஓ...
ஹா ஆ ஆ ஆ... ஓஓஓ....
ஆ ஆ ஆ ஆ ஹா... ஓஓஓ...

ஏய்... நானா நா நன்ன நன்ன நானா நா நன்னனா...

நானா நா நன்ன நன்ன நானா நா நன்னனா...

நானா நா நன்ன நன்ன நா...
பாட்டு உன்ன இழுக்குதா... ஆமா... ஆமா...
அதை கேட்டு நெஞ்சம் மயங்குதா... ஆமா... ஆமா...
என்ன பூட்டி புடிச்சி விக்க
கூட்டு கிளியும் இல்ல காட்டு குயிலும் இல்ல
கேட்டா கிறங்குதில்ல தந்தா நந்தா நந்தானா
பாட்டு உன்ன இழுக்குதா... ஆமா... ஆமா...
அதை கேட்டு நெஞ்சம் மயங்குதா... ஆமா... ஆமா...


நீரோடும் வைகையில நீரானவ
நிமிந்து நடந்து வந்தா தேரானவ
மாறாத வாக்கு சொல்லும் சீரானவ
மறுத்து எவரும் சொன்னா வேறானவ
செந்தாழம் பூ நல்லாருக்கும் தொட்டா முள்ளு குத்தாதா
வந்தாலும் தான் போனாலும் தான் வண்டா கண்ணு சுத்தாதா
கொய்யாத கொய்யா கனி நான்தானடி
கொண்டாட ஏங்கும் பல ஆண்தானடி
ஏழூரிலும் என் போல பெண் ஏது
எங்கே சொல்லு பெண்ணே இப்போது

ஹே.... ஹா ஆ ஆ ஆ ஆ...
தந்தானன... தந்தா நன்ன... தந்தான தந்தான நா...
தந்தானன... தந்தா நன்ன... தந்தான தந்தான நா...
வித்தாரக்கள்ளி இவள கொஞ்சம் பாரு
இவ தொட்டா உடம்பில் ஒட்டிக்கொள்ளும் சேறு
வித்தாரக்கள்ளி இவள கொஞ்சம் பாரு
இவ தொட்டா உடம்பில் ஒட்டிக்கொள்ளும் சேறு
கத்தால முள்ளு தானா இல்ல கொட்டாத சிறுதேளா
தந்தான கிளி... தந்தான கிளி... தந்தா நா....
அட... தந்தான கிளி... தந்தான கிளி... தந்தா நா...
டுர்...ர்..ரா...  டுர்..ர்..ர்...

நீ என்ன தென்மதுரை அரசானியா
நெசமாக வந்திருக்கும் அள்ளி ராணியா
நான் என்ற எண்ணம் கொண்டு நடக்காதம்மா
நடந்தா தங்கையா கிட்ட நடக்காதம்மா
இல்லாதத‌ பொல்லாதத எல்லாருக்கும் சொல்லாத
எம்மா எம்மா சும்மா சும்மா அங்கே இங்கே துள்ளாத
பெண்ணாக வந்தாலே பெரும் பாக்கியம்
முன்னோர்கள் சொன்னாரடி ஒரு வாக்கியம்
வாயாடியே ஒம் போல பெண்ணாலே
பெண்ணின் புகழ் மங்கும் தன்னாலே
பாட்டு படிக்கும் குயிலே... ஆமா... ஆமா...
உன் பாட்ட நிப்பாட்டு ஒயிலே... ஆமா... ஆமா...
கூட்டில் புடிச்சி வைப்பேன் வீட்டு கிளியே உன்ன 
காட்டில் தொரத்தி ரெண்டு போட்டு கிறங்க வைப்பேன்
தந்தா... நந்தா... நந்தானா...
பாட்டு படிக்கும் குயிலே... ஆமா... ஆமா...
உன் பாட்ட நிப்பாட்டு ஒயிலே... ஆமா... ஆமா...

Sunday, July 14, 2013

கோயில் காளை - பள்ளிகூடம்

படம் : கோயில் காளை (1993)
இசை : இளையராஜா
பாடியவர்கள் : S.P.பாலசுப்ரமணியம், S.ஜானகி
பாடல்வரிகள் கங்கைஅமரன்





பள்ளிக்கூடம் போகலாமா
ராத்திரி பள்ளிக்கூடம் போகலாமா

பள்ளிக்கூடம் போகலாமா
அதுக்கு புத்தகத்த வாங்கலாமா சொல்லிச் சொல்லி கேக்கலாமா
மனச சுத்த விட்டு பாக்கலாமா எல்லொருக்கும் நல்ல பாடம்
சொல்லாமலே புரியும் பாடம் அடி மைனாவே மைனாவே மைனாவே வா பள்ளிக்கூடம் போகலாமா
அதுக்கு புத்தகத்த வாங்கலாமா சொல்லிச் சொல்லி கேக்கலாமா
மனச சுத்த விட்டு பாக்கலாமா மனதில் இருக்கு புது கணக்கு
சொன்னா புரியும் அது உனக்கு கூட்டல் பெருக்கல் வகுத்தலுக்கு
கூடும் நேரம் வழி இருக்கு இருக்குற நாள இருவரும் சேர்ந்து
இணைபிரியாம கழிச்சிட வேணும் ஏதோ ஏதோ சொல்லத் தோனும் அட ஒன்னோட ஒன்னானா மூணாகும் ஹோய் அது இப்பொதும் எப்பொதும் தேனாகும் ஹோய்
பள்ளிக்கூடம் போகலாமா
அதுக்கு புத்தகத்த வாங்கலாமா
எல்லொருக்கும் நல்ல பாடம்
சொல்லாமலே புரியும் பாடம்
அட ராசாவே ராசாவே ராசாவே வா
பள்ளிக்கூடம் போகலாமா
அதுக்கு புத்தகத்த வாங்கலாமா
தனியா படிச்சா ஏறவில்ல
துண நீ இருந்தா போதும் புள்ள இனிப்பா இருக்கு படிப்பதற்கு
இரவில் படிக்க வெளக்கெதுக்கு முதல் முதலாக படிக்கிற பாடம்
விடியிற நேரம் முடிக்கிற பாடம் இது தான் காதல் எனும் பாடம் இது நாளெல்லாம் படிச்சாலும் அலுக்காது ஹோய் அடி நமக்கிந்த புது பாடம் சலிக்காதம்மா
பள்ளிக்கூடம் போகலாமா
அதுக்கு புத்தகத்த வாங்கலாமா

எல்லொருக்கும் நல்ல பாடம்
சொல்லாமலே புரியும் பாடம்

அடி மைனாவே மைனாவே மைனாவே வா
பள்ளிக்கூடம் போகலாமா
அதுக்கு புத்தகத்த வாங்கலாமா
சொல்லிச் சொல்லி கேக்கலாமா
மனச சுத்த விட்டு பாக்கலாமா


Tuesday, January 22, 2013

சக்திவேல் - மல்லிக மொட்டு

படம் : சக்திவேல் (1994)
இசை : இளையராஜா
பாடியவர்கள் : அருண்மொழி, சொர்ணலதா
பாடல்வரிகள் : பொன்னியின் செல்வன்






மல்லிக மொட்டு மனச தொட்டு இழுக்குதடி மானே
வளையல் மெட்டு வயச தொட்டு வளைக்குதடி மீனே
மல்லிக மொட்டு மனச தொட்டு இழுக்குதடி மானே
வளையல் மெட்டு வயச தொட்டு வளைக்குதடி மீனே
மந்தாரச்செடி ஓரத்திலே மாமன் நடத்துற பாடத்துலே
மானே மருதாணி பூசவா ஹோ... ஒ...
தேனே அடையாளம் போடவா

மல்லிக மொட்டு மனச தொட்டு இழுக்குதய்யா மானே
வளையல் மெட்டு வயச தொட்டு வளைக்குதய்யா மீனே


மூடி வச்சு மூடி வச்சு மறச்சு வச்சதெல்லாம்
காத்து அடிச்சு காத்து அடிச்சு கலஞ்சு போனதென்ன

பாடி வச்சு பாடி வச்சு பதுக்கி வச்சதெல்லாம்
காதலிக்க காதலிக்க வெளஞ்சு வந்ததென்ன

உன்னாலதான் உன்னாலதான் உதிர்ந்து போச்சு வெக்கம்

கண்ணாலதான் கையாலதான் கலந்துகிட்டா சொர்க்கம்

நானிருந்தேன் சும்மா வாசலிலே
மாட்டிகிட்டேன் இப்போ வம்பினிலே
நானே மருதாணி பூசவா ஹோ... ஒ...
நீயே அடையாளம் போடவா


மல்லிக மொட்டு மனச தொட்டு இழுக்குதடி மானே
வளையல் மெட்டு வயச தொட்டு வளைக்குதடி மீனே

மந்தாரச்செடி ஓரத்திலே மாமன் நடத்துற பாடத்துலே
நானே மருதாணி பூசவா ஹோ... ஒ...
நீயே அடையாளம் போடவா



பூவரசம் பூவுக்குள்ளே இருப்பதென்ன சொல்லு
பூ பறிக்கும் மாப்பிள்ளைக்கு பசிக்குதம்மா நில்லு

பூவெடுத்து தேனெடுத்து எதுக்கு இங்கே வரணும்
பரிதவிச்சு பசிச்சு நின்னா பந்தியப் போட்டு தரணும்

ஆடியாடி பாடி வந்து அலையுதொரு குருவி

கீச்சு கீச்சு பேசுதையா மனச கொஞ்சம் துருவி

பிஞ்சு பிஞ்சு விரல் கொஞ்சுதடி
கொஞ்சி கொஞ்சி வந்து கெஞ்சுதடி
மானே மருதாணி பூசவா ஹோ... ஒ...
தேனே அடையாளம் போடவா


மல்லிக மொட்டு மனச தொட்டு இழுக்குதய்யா மானே
வளையல் மெட்டு வயச தொட்டு வளைக்குதய்யா மீனே

மந்தாரச்செடி ஓரத்திலே மாமன் நடத்துற பாடத்துலே

நானே மருதாணி பூசவா ஹோ... ஒ...
நீயே அடையாளம் போடவா

மல்லிக மொட்டு மனச தொட்டு இழுக்குதடி மானே

வளையல் மெட்டு வயச தொட்டு வளைக்குதய்யா மீனே



Friday, January 11, 2013

கரகாட்டக்காரன் - குடகு மலை

படம் : கரகாட்டக்காரன் (1990)
இசை: இளையராஜா
பாடியவர் : மனோ, K.S. சித்ரா
பாடல்வரிகள் : கங்கை அமரன்






குடகு மலைக் காற்றில் வரும் பாட்டுக்கேட்குதா என் பைங்கிளி
குடகு மலைக் காற்றில் வரும் பாட்டுக் கேட்குதா என் பைங்கிளி
ஏதோ நினைவுதான் உன்னச் சுத்திப் பறக்குது
என்னோட மனசுதான் கண்டபடி தவிக்குது
ஒத்த வழி என் வழி தானே மானே
குடகு மலைக் காற்றில் வரும் பாட்டுக் கேட்குதா என் பைங்கிளி


மானே மயிலே மரகதக்குயிலே
தேனே நான் பாடும் தெம்மாங்கே
பூவே பொழுதே பொங்கி வரும் அமுதே
காதில் கேட்டாயோ என் வாக்கே
ஒன்ன எண்ணி நான் தான் ஒரு ஊர்கோலம் போனேன்
தன்னந்தனியாக நிக்குந்தேர் போல ஆனேன்
பூப்பூத்த சொலையிலே பொன்னான மாலையிலே
நீ வந்த வேளையிலே மயிலே
நீர் பூத்த கண்ணு ரெண்டு நீங்காத தாகம் கொண்டு பாடும் பாட்டு

குடகு மலைக் காற்றில் ஒரு பாட்டுப் பாடுது இந்த பைங்கிளி
குடகு மலைக் காற்றில் ஒரு பாட்டுப் பாடுது இந்த பைங்கிளி


மறந்தால் தானே நினைக்கணும் மாமா
நினைவே நீ தானே நீ தானே
மனசும் மனசும் இணைஞ்சது மாமா
நெனச்சுத் தவிச்சேனே நான் தானே
சொல்லிவிட்ட பாட்டு தெக்குக் காதோட கேட்டேன்
தூது விட்ட ராசா மனந்தடுமாற மாட்டேன்
ஊரென்ன சொன்னாலென்ன ஒண்ணாக நின்னாலென்ன
ஒன் பேரப் பாடி நிப்பேன் மாமா
தூங்காமல் ஒன்ன எண்ணி துடிச்சாலே இந்தக் கன்னி வா மாமா

குடகு மலைக் காற்றில் வரும் பாட்டுக் கேட்குதா என் பைங்கிளி

ஏதோ நினைவுதான் உன்னச் சுத்திப் பறக்குது
என்னோட மனசுதான் கண்டபடி தவிக்குது

ஒத்த வழி என் வழி தானே மானே

குடகு மலைக் காற்றில் ஒரு பாட்டுப் பாடுது இந்த பைங்கிளி

குடகு மலைக் காற்றில் வரும் பாட்டுக் கேட்குதா என் பைங்கிளி


கரகாட்டக்காரன் - மாங்குயிலே பூங்குயிலே

படம் : கரகாட்டக்காரன் (1990)
இசை : இளையராஜா
பாடியவர் : S.P. பாலசுப்ரமணியம்
பாடல்வரிகள் : கங்கை அமரன்






மாங்குயிலே பூங்குயிலே சேதி ஒண்ணு கேளு
ஒன்ன மாலையிட தேடி வரும் நாளு எந்த நாளு
மாங்குயிலே பூங்குயிலே சேதி ஒண்ணு கேளு
ஒன்ன மாலையிட தேடி வரும் நாளு எந்த நாளு
முத்து முத்து கண்ணாலே நான் சுத்தி வந்தேன் பின்னாலே
மாங்குயிலே பூங்குயிலே சேதி ஒண்ணு கேளு
ஒன்ன மாலையிட தேடி வரும் நாளு எந்த நாளு


தொட்டு தொட்டு வெளக்கி வச்ச வெங்கலத்து செம்பு
அத தொட்டெடுத்து தலையில் வெச்சா பொங்குதடி தெம்பு
பட்டெடுத்து உடுத்தி வந்த பாண்டியரு தேரு
இப்போ கிட்ட வந்து கெளருதடி என்ன படு ஜோரு
கண்ணுக்கழகாப் பொண்ணு சிரிச்சா
பொண்ணு மனச தொட்டு பறிச்சா
தன்னந்தனியா எண்ணி ரசிச்சா
கண்ணு வல தான் விட்டு விரிச்சா
ஏறெடுத்து பாத்து யம்மா நீரெடுத்து ஊத்து
சீரெடுத்து வாரேன் யம்மா சேத்து என்னை தேத்து
முத்தையன் படிக்கும் முத்திர கவிக்கு
நிச்சயம் பதிலு சொல்லணும் மயிலு

மாங்குயிலே பூங்குயிலே சேதி ஒண்ணு கேளு
ஒன்ன மாலையிட தேடி வரும் நாளு எந்த நாளு


ஒன்ன மறந்திருக்க ஒரு பொழுதும் அறியேன்
யம்மா கன்னி மொகத்த விட்டு வேறெதையும் தெரியேன்
வங்கத்திலே வெளஞ்ச மஞ்சக் கெழங்கெடுத்து ஒரசி
யம்மா இங்குமங்கும் பூசிவரும் எழிலிருக்கும் அரசி
கூடியிருப்போம் கூண்டுக் கிளியே
கொஞ்சி கெடப்போம் வாடி வெளியே
ஜாடை சொல்லி தான் பாடி அழைச்சேன்
சம்மதமுன்னு சொல்லு கிளியே
சாமத்திலே வாரேன் யம்மா சாமந்திப்பூ தாரேன்
கோபப்பட்டு பாத்தா யம்மா வந்த வழி போறேன்
சந்தனம் கரைச்சு பூசனும் எனக்கு
முத்தையங் கணக்கு மொத்தமும் ஒனக்கு

மாங்குயிலே பூங்குயிலே சேதி ஒண்ணு கேளு
ஒன்ன மாலையிட தேடி வரும் நாளு எந்த நாளு
மாங்குயிலே பூங்குயிலே சேதி ஒண்ணு கேளு
ஒன்ன மாலையிட தேடி வரும் நாளு எந்த நாளு
முத்து முத்து கண்ணாலே நான் சுத்தி வந்தேன் பின்னாலே
மாங்குயிலே பூங்குயிலே சேதி ஒண்ணு கேளு
ஒன்ன மாலையிடத் தேடி வரும் நாளு எந்த நாளு

Popular Posts