Thursday, February 22, 2018

Kadhalukku Mariyadhai - Ithu Sangeetha

படம் : காதலுக்கு மரியாதை (1997)
இசை : இளையராஜா
பாடியவர் :  பவதாரணி
பாடல் வரி : பழனி பாரதி





இது சங்கீத திருநாளோ
புது சந்தோஷம் வரும் நாளோ
ரதி நம் வீட்டில் பிறந்தாளோ
சிறு பூவாக மலர்ந்தாளோ
சின்ன சின்ன அசைவில் சித்திரங்கள் வரைந்தாள்
முத்தமழை கன்ன‌ம் விழ நனைந்தாளே
கொஞ்சி கொஞ்சி பிஞ்சு நடை நடந்தாளே

இது சங்கீத திருநாளோ
புது சந்தோஷம் வரும் நாளோ
ரதி நம் வீட்டில் பிறந்தாளோ
சிறு பூவாக மலர்ந்தாளோ


கைகளில் பொம்மைகள் கொண்டு ஆடுவாள்
கண்களை பின்புறம் வந்து மூடுவாள்
செல்லம் கொஞ்சி தமிழ் பாடுவாள்
தோள்களில் கண்களை மெல்ல மூடுவாள்
உறங்கும் பொழுதும் என்னை தேடுவாள்
அங்கும் இங்கும் துள்ளி ஓடுவாள்
பூவெல்லாம் இவள் போல அழகில்லை
பூங்காற்று இவள் போல சுகமில்லை
இது போல சொந்தங்கள் இனி இல்லை
எப்போதும் அன்புக்கு அழிவில்லை
இவள் தானே நம் தேவதை

இது சங்கீத திருநாளோ
புது சந்தோஷம் வரும் நாளோ
ரதி நம் வீட்டில் பிறந்தாளோ
சிறு பூவாக மலர்ந்தாளோ


நடக்கும் நடையில் ஓர் தேர்வனம்
சிரிக்கும் அழகில் ஒரு கீர்த்தனம்
கண்ணில் மின்னும் ஒரு காவியம்
மனதில் வரைந்து வைத்த ஒவியம்
நினைவில் நனைந்து நிற்கும் பூவனம்
என்றும் எங்கும் இவள் ஞாபகம்
இவள் போகும் வழியெங்கும் பூவாவேன்
இரு பக்கம் காக்கின்ற கரையாவேன்
இவளாடும் பொன்னூஞ்சல் நானாவேன்
இதயத்தில் சுமக்கின்ற தாயாவேன்
எப்போதும் தாலாட்டுவேன்

இது சங்கீத திருநாளோ
புது சந்தோஷம் வரும் நாளோ
ரதி நம் வீட்டில் பிறந்தாளோ
சிறு பூவாக மலர்ந்தாளோ
சின்ன சின்ன அசைவில் சித்திரங்கள் வரைந்தாள்
முத்த மழை கன்ன‌ம் விழ நனைந்தாளே
கொஞ்சி கொஞ்சி பிஞ்சு நடை நடந்தளே

இது சங்கீத திருநாளோ
புது சந்தோஷம் வரும் நாளோ
ரதி நம் வீட்டில் பிறந்தாளோ
சிறு பூவாக மலர்ந்தாளோ

Sunday, February 18, 2018

Pyaar Perma Kaadhal - Hey Penne

ப‌டம்: ப்யார் ப்ரேமா காதல் (2018)
இசை: யுவன் சங்கர் ராஜா
பாடியவர்: சித் ஸ்ரீராம்
பாடல்வரிகள்: நிரஞ்ஜ‌ன் பாரதி


Image result for Pyaar Prema Kaadhal


ஹே... பெண்ணே என் நெஞ்சில் சாய்ந்து சாய்க்கிறாய்
நீ அருகில் புரியாத மாயம் செய்கிறாய்
உன்னை போலவே நான் இங்கே
மயங்கி கிறங்கி தான் போனேனே
போதையாக தான் ஆனேனே தள்ளாடும் ஜீவனே

ஜன்னலோரமாய் முன்னாலே  மின்னல் போலவே வந்தாயே
விண்ணை தாண்டி ஒரு சொர்கத்தை மண்ணில் எங்குமே தந்தாயே
விழியை நீங்கி நீ வில‌காதே நொடியும் என் மனம் தாங்காதே
என்ன நேருமோ தெரியாதே என் ஜீவன் ஏங்குதே


என் உயிரினை வதைத்திடும் அழகி நீ
என் இதயத்தில் அமர்ந்திடும் அரசி நீ
என் உடலினில் நதியாய் ஓடும் உதிரம் நீயடி
உன் சிரிப்பினில் கவிதைகள் கலங்குதே
உன் மொழிகளில் இசைகளும் தோற்குதே
உன் இரு விழி மின்னல் ஏந்த வானம் ஏங்குதே

உனக்குள் எந்தன் காதல் காண்கிறேன்
வெளியில் சொல்ல வார்த்தைகள் தேவையா
இருந்தும் உன் இதழ்கள் அந்த வார்த்தையை சொல்லுமா


குருவி போலவே என் உள்ளம் தத்தி தாவுதே உன்னாலே
குழந்தை போலவே என் கால்கள் சுத்தி திரியுதே பின்னாலே
தீயை போலவே என் தேகம் பத்தி எரியுதே தன்னாலே
அருவி போலவே ஆனந்தம் நில்லாமல் பாயுதே

ஹே... பெண்ணே என் நெஞ்சில் சாய்ந்து சாய்க்கிறாய்
நீ அருகில் புரியாத மாயம் செய்கிறாய்

Saturday, February 17, 2018

Ulaviravu - Thoorathu Kaadhal

ஆல்பம்: உலவிரவு (2018)
இசை: கார்த்திக்
பாடியவர்கள்: கார்த்திக்
பாடல் வரிகள்: ம‌தன் கார்க்கி


Image result for Ulaviravu




தூரத்து காதல் என் கோப்பை தேநீர் அல்ல
மின் முத்தம் ஏதும் உன் மெய் முத்தம் போலே அல்ல
நேரில் நீ நிற்பாயா? என் ஆசை எல்லாமே கேட்பாயா?
என் கை கோர்ப்பாயா?
ஒ... ஹோஹோ... காதலி... நீ என்னோடு வா உலவிரவு
ஒ... ஹோஹோ... காதலி... நீ என்னோடு வா உலவிரவு

காலத்தை கொஞ்சம் ஹே... பின்னோக்கி ஓட சொல்லு
வேகங்கள் வேண்டாம் ஹே... பெண்ணே நீ கொஞ்சம் நில்லு
என் கண்ணை பார்ப்பாயா? என் காதல் கோரிக்கை கேட்பாயா?
என் கை கோர்ப்பாயா?
ஒ... ஹோஹோ... காதலி நீ என்னோடு வா உலவிரவு
ஒ... ஹோஹோ... காதலி நீ என்னோடு வா உலவிரவு


பேருந்தில் ஏறி பெருந்தூரம் சென்று
தெரியாத ஊரில் நடப்போமே இன்று
நமக்கு பிடிக்கா கலைகள் ரசித்து
வேதியல், இயற்பியல், கணிதம் படித்து
திரியில் சுடர் ஆட...  ஒலி நாடா பாட
உன் விழியில் நானும்... என் வாழ்க்கையினை தேட
ஒ...ஒ...ஒ... காதலி நீ என்னோடு வா உலவிரவு
ஒ... ஹோஹோ... காதலி நீ என்னோடு வா உலவிரவு


கூடாரம் போட்டு குளிர் காய்ந்த பின்னே
விண்மீன்கள் எண்ணி துயில்வோம் வா பெண்ணே
கொட்டும் அருவியில் கட்டிக்கொண்டே குளிப்போம்
நீர் வாழை பிடித்து தீயில் வாட்டி சமைப்போம்
குறும் பார்வை வேண்டும்... குறும் செய்தி அல்ல
கைபேசி வீசி... நாம் கை வீசி செல்ல
ஒ... ஹோஹோ... காதலி நீ என்னோடு வா உலவிரவு
ம்ம்ம்.... காதலி நீ என்னோடு வா உலவிரவு

தூரத்து காதல் என் கோப்பை தேநீர் அல்ல
மின் முத்தம் ஏதும் உன் மெய் முத்தம் போலே அல்ல
நேரில் நீ நிற்பாயா? என் ஆசை எல்லாமே கேட்பாயா?
என் கை கோர்ப்பாயா? என் கை கோர்ப்பாயா? 
என் கை கோர்ப்பாயா? என் கை கோர்ப்பாயா?


Wednesday, February 14, 2018

Theeran Adhigaram Ondru - Laali Laali

ப‌டம்: தீரன் அதிகாரம் ஒன்று (2017)
இசை: M. ஜிப்ரான்
பாடியவர்: சத்ய பிரகாஷ், ப்ரகதி குருபிரஷாத்
பாடல்வரிகள்: ராஜு முருகன்


Image result for theeran adhigaaram ondru mp3




சின்ன சின்ன கண் அசைவில்
உன் அடிமை ஆகவா
செல்ல செல்ல முத்தங்களில்
உன் உயிரை வாங்கவா
லாலி... லாலி... நான் உன் தூழி... தூழி...

மெல்ல மெல்ல என்னுயிரில்
உன்னுயிரும் அசையுதே
துள்ள துள்ள என் இதயம்
நம்முயிரில் நிறையுதே
லாலி... லாலி... நீ என் தூழி... தூழி...

உன்னை அள்ளி ஏந்தியே
ஒரு யுகம் போகவா
தலை முதல் கால் வரை
பணிவிடை பார்க்கவா
லாலி... லாலி... நான் உன் தூழி... தூழி...

லாலி... லாலி... நீ என் தூழி... தூழி...


காலை அணைப்பின் வாசமும்
காதல் கிறங்கும் சுவாசமும்
சாகும்போதும் தீர்ந்திடாது வா உயிரே

காலில் உதைக்கும் பாதமும்
மார்பில் கிடக்கும் நேரமும்
வாழும் வரைக்கும் தேய்ந்திடாது வா உயிரே
ஆணில் தாய்மை கருவாகும்
ஈரம் பூத்து மழையாகும்

கண்ணில் சுகமாய் இமை மீறும்
காலம் உந்தன் வரமாகும்


சின்ன சின்ன கண் அசைவில்
உன் அடிமை ஆகவா
செல்ல செல்ல முத்தங்களில்
உன் உயிரை வாங்கவா
லாலி... லாலி... நான் உன் தூழி... தூழி...

மெல்ல மெல்ல என்னுயிரில்
உன்னுயிரும் அசையுதே
துள்ள துள்ள என் இதயம்
நம்முயிரில் நிறையுதே
லாலி... லாலி... நீ என் தூழி... தூழி...

என்னை அள்ளி ஏந்தியே
ஒரு யுகம் போகவா
தலை முதல் கால் வரை
பணிவிடை பார்க்கவா

லாலி... லாலி... நீ என் தூழி... தூழி...
லாலி... லாலி... நீ என் தூழி... தூழி...
லாலி... லாலி... நீ என் தூழி... தூழி...

Sunday, February 11, 2018

Enai Noki Paayum Thota - Visiri

ப‌டம்: எனை நோக்கி பாயும் தோட்டா (2017)
இசை: தர்பூகா சிவா
பாடியவர்: சித் ஸ்ரீராம், ஷாஷா திருப்பதி
பாடல்வரிகள்: தாமரை


Image result for Enai Noki Paayum Thota



எதுவரை போகலாம்
என்று நீ சொல்ல வேண்டும்
என்றுதான் விடாமல் கேட்கிறேன்

தேன் முத்தங்கள் மட்டுமே
போதும் என்று சொல்வதால்
தொடாமல் போகிறேன்

யார்யாரோ கனாக்களில்
நாளும் நீ சென்று உலாவுகின்றவள்
நீ காணும் கனாக்களில் வரும்
ஓர் ஆண் என்றால் நான்தான் எந்நாளிலும்

பூங்காற்றே நீ வீசாதே... ஓ..ஓ..ஓ..
பூங்காற்றே நீ வீசாதே...
நான் தான் இங்கே விசிறி...


என் வீட்டில் நீ நிற்கின்றாய்
அதை நம்பாமல் என்னைக் கிள்ளிக் கொண்டேன்
தோட்டத்தில் நீ நிற்கின்றாய்
உன்னை பூவென்று எண்ணி கொய்யச் சென்றேன்

புகழ்ப் பூமாலைகள், தேன்சோலைகள்
நான் கண்டேன்... ஏன் உன் பின் வந்தேன்
பெரும் காசோலைகள், பொன் ஆலைகள்
வேண்டாமே நீ வேண்டும் என்றேன்... உயிரே



நேற்றோடு... என் வேகங்கள்
சிறு தீயாக மாறி தூங்கக் கண்டேன்
காற்றோடு... என் கோபங்கள்
ஒரு தூசாக மாறி போகக் கண்டேன்

உனைப் பார்க்காத நாள் பேசாத நாள்
என் வாழ்வில் வீண் ஆகின்ற நாள்
தினம் நீ வந்ததால்... தோள் தந்ததால்
ஆனேன் நான் ஆனந்தப் பெண்பால்... உயிரே...


எதுவரை போகலாம்
என்று நீ சொல்ல வேண்டும்
என்றுதான் விடாமல் கேட்கிறேன்

தேன் முத்தங்கள்

மட்டுமே போதும் என்று சொல்வதால்
தொடாமல் போகிறேன்


உன்போன்ற இளைஞனை
மனம் ஏற்காமல் மறுப்பதே பிழை
கண்டேன் உன் அலாதித் தூய்மையை
என் கண்பார்த்துப் பேசும் பேராண்மையை

பூங்காற்றே நீ வீசாதே... ஓ ஓ ஓ...
பூங்காற்றே நீ வீசாதே...
நான்தானிங்கே விசிறி...

Thursday, February 8, 2018

Nattupura Kiramiya Padalgal - Chinna Machan

ஆல்பம்: நாட்டுப்புற பாடல்கள் (கிராமிய பாடல்கள்)
பாடியவர்கள்: செந்தில் கணேஷ், ராஜ லெட்சுமி

Image result for village songs in tamil




ஏ.. சின்ன மச்சான்... என்ன புள்ள‌
செவத்த மச்சான்... சொல்லு புள்ள‌
செவத்த மச்சான்... என்ன சொல்லு புள்ள‌
ஊருக்குள்ளே ஒங்கள‌ ஏசுறாக...
ஒன்னா ரெண்டா சொல்லி பேசுறாக...
நம்ம ஊருக்குள்ளே ஒங்கள‌ ஏசுறாக...
தெனம் ஒன்னா ரெண்டா சொல்லி பேசுறாக...

ஏ.. சின்ன புள்ள‌... என்ன மச்சான்
செவத்த புள்ள‌... சொல்லு மச்சான்
என் செவத்த புள்ள‌... சொல்லு மச்சான்
யாரு யாரு என்ன பேசுனாக‌
அடி என்ன என்ன சொல்லி ஏசுனாக‌
இங்க யாரு யாரு என்ன பேசுனாக‌
அடி என்னவெல்லாம் சொல்லி ஏசுனாக‌


ஏ.. கண்ணு மச்சான்... என்ன புள்ள‌
கருத்த மச்சான்... சொல்லு புள்ள‌
கருத்த மச்சான்... என்ன சொல்லு புள்ள‌
காரக்குடி வனிதா யாரு மச்சான்
என் காதுக்குள்ள வந்த சேதி மச்சான்
அந்த‌ காரக்குடி வனிதா யாரு மச்சான்
என் காதுக்குள்ள வந்த சேதி மச்சான்

ஆ... கட்ட புள்ள... என்ன மச்சான்
கருத்த புள்ள‌... 
முடி கருத்த புள்ள‌... சொல்லு மச்சான்
கட்டழகி வனிதா பேரு புள்ள...
நம்ம கண்ணனோட சேர்ந்த ஜோடி புள்ள‌
அடி கட்டழகி வனிதா பேரு புள்ள...
நம்ம கண்ணனோட சேர்ந்த ஜோடி புள்ள‌


ஏ.. குட்ட‌ மச்சான்... என்ன புள்ள‌
கொஞ்சும் மச்சான்... சொல்லு புள்ள‌
கொஞ்சும் மச்சான்... என்ன சொல்லு புள்ள‌
கொன்னையூரு சாந்தி யாரு மச்சான்
என்ன கொழப்புறாக தெளிவா கூறு மச்சான்
அந்த‌ கொன்னையூரு சாந்தி யாரு மச்சான்
என்ன கொழப்புறாக தெளிவா கூறு மச்சான்

ஏ... குட்ட புள்ள.... என்ன மச்சான்
கொஞ்சும் புள்ள‌... சொல்லு மச்சான்
அடி கொஞ்சும் புள்ள‌... சொல்லு மச்சான்
கொன்னையூரு சாந்தி யாருமில்ல‌
நம்ம‌ கோயிலுல பாத்த சின்ன புள்ள‌
அடி கொன்னையூரு சாந்தி யாருமில்ல‌
நம்ம‌ கோயிலுல பாத்த சின்ன புள்ள‌


ஆ.. ஆச‌ மச்சான்... என்ன புள்ள‌
அழகு மச்சான்... சொல்லு புள்ள‌
அழகு மச்சான்... என்ன சொல்லு புள்ள‌
ஆலங்குடி அனிதா யாரு மச்சான்
இது அக்கம் பக்கம் பேசும் பேச்சு மச்சான்
நம்ம‌ ஆலங்குடி அனிதா யாரு மச்சான்
இது அக்கம் பக்கம் பேசும் பேச்சு மச்சான்


ஆ.. அத்த‌ புள்ள‌... என்ன மச்சான்
அழகு புள்ள‌... சொல்லு மச்சான்
என் அழகு புள்ள‌... சொல்லு மச்சான்
ஆலங்குடி அனிதா நல்ல புள்ள‌
அடி அக்கம் பக்கம் பேசும்படி ஒன்னுமில்ல‌
ஆலங்குடி அனிதா நல்ல புள்ள‌
இங்க‌ அக்கம் பக்கம் பேசும்படி ஒன்னுமில்ல‌


ம்.. நேச‌ மச்சான்... என்ன புள்ள‌
நீங்க‌ மச்சான்... சொல்லு புள்ள‌
நீங்க‌ மச்சான்...  ஆமா சொல்லு புள்ள‌
என்ன மட்டும் நீங்க தொட்டுகுங்க‌
ஏன்னா எனக்கு மட்டும் தாலி கட்டிருகீங்க‌
மச்சான் என்ன மட்டும் நீங்க தொட்டுகுங்க‌
ஏன்னா எனக்கு மட்டும் தாலி கட்டிருகீங்க‌


ம்.. மாமன் புள்ள‌... என்ன மச்சான்
மாசத்துல... சொல்லு மச்சான்
போன மாசத்துல... சொல்லு மச்சான்
ஊருக்கெல்லாம் பாக்கு வச்சிருந்தேன்
இப்போ ஒன் புருசன் ஆகி நின்னுருக்கேன்
நம்ம‌ ஊருக்கெல்லாம் பாக்கு வச்சிருந்தேன்
இப்போ ஒன் புருசன் ஆகி நின்னுருக்கேன்

Nimir - Nenjil Maamazhai

ப‌டம்: நிமிர் (2018)
இசை: B. அஜனீஷ் லோக்நாத், தர்பூகா சிவா
பாடியவர்கள்: ஹரி சரண், ஸ்வேதா மோகன்
பாடல் வரிகள்: தாமரை

Image result for nimir mp3 free download






நெஞ்சில் மாமழை நெஞ்சில் மாமழை
தந்து வானம் கூத்தாட 
கொஞ்சும் தாமரை கொஞ்சும் தாமரை
வந்து எங்கும் பூத்தாட

எத்தனை நாள் எத்தனை நாள் பார்ப்பது
எட்டி நின்று எட்டி நின்று காய்வது 
கள்ள குரல் பாடல் உள்ளே ஓடுது 
கண் மூடி கண் மூடி காதோரம் பாடுது

நெஞ்சில் மாமழை நெஞ்சில் மாமழை
தந்து வானம் கூத்தாட 
கொஞ்சும் தாமரை கொஞ்சும் தாமரை
வந்து எங்கும் பூத்தாட


வானத்தில் எத்தனை நாள் பார்ப்பது 
அன்றாடம் வந்து பார்க்க ஏங்குது
வாராமல் போகும் நாட்கள் வீணே என 
வம்பாக சண்டை போட வாய்க்குது

சொல்லப் போனால்  என் நாட்களை
வண்ணம் பூசி தந்தவளும் நீதான் 
துள்ளல் இல்லா என் பார்வையில்
தூண்டில் மீனாய் வந்தவளும் நீதான்

எத்தனை நாள் எத்தனை நாள் பார்ப்பது
எட்டி நின்று எட்டி நின்று காய்வது 
கள்ள குரல் பாடல் உள்ளே ஓடுது 
கண் மூடி கண் மூடி காதோரம் பாடுது
நெஞ்சில் மாமழை நெஞ்சில் மாமழை
தந்து வானம் கூத்தாட 



பாசாங்கு செய்ததெல்லாம் போதுமே
ராசாவை தேடி கண்கள் ஓடுமே
ரோசாப்பூ மாலை ரெண்டு வேண்டுமே 
பேசாமல் மாற்றிக் கொள்ள தோன்றுமே

பெண்கள் இல்லா என் வீட்டிலே 
பாதம் வைத்து நீயும் வர வேண்டும் 
தென்றல் இல்லா என் தோட்டத்தில்
உன்னால் தானே காற்று வரும் மீண்டும்

எத்தனை நாள் எத்தனை நாள் பார்ப்பது
எட்டி நின்று எட்டி நின்று காய்வது 
கள்ள குரல் பாடல் உள்ளே ஓடுது 
கண் மூடி கண் மூடி காதோரம் பாடுது

நெஞ்சில் மாமழை நெஞ்சில் மாமழை
தந்து வானம் கூத்தாட 
கொஞ்சும் தாமரை கொஞ்சும் தாமரை
வந்து எங்கும் பூத்தாட

எத்தனை நாள் எத்தனை நாள் பார்ப்பது
எட்டி நின்று எட்டி நின்று காய்வது 
கள்ள குரல் பாடல் உள்ளே ஓடுது 
கண் மூடி கண் மூடி காதோரம் பாடுது

Maa - Ennuyire

ஆல்பம்: மா (2018)
இசை: சுந்தரமூர்த்தி KS
பாடியவர்கள்: பத்மப்ரியா ராகவன், சுந்தரமூர்த்தி KS
பாடல் வரிகள்: ம‌தன் கார்க்கி

Image result for maa tamil short film lyrics




நீ... யாரின் தவறோ?
நான்... யாரின் தவறோ?
விடை தேடிக்கொண்டே கரைகிறோம்
விடை காணும் முன்னே கலைந்து போகும்
கனவு தான் இவ்வாழ்க்கையோ?
கனவு தான் இவ்வாழ்க்கையோ?
கனவு தான் இவ்வாழ்க்கையோ?


என்னுயிரே... என் உயிரே...
என்னுயிரே...
என்னுயிரே... என் உயிரே...
என்னுயிரே...
என்னுயிரே... என் உயிரே...
என்னுயிரே...
என்னுயிரே... என் உயிரே...
என்னுயிரே...


உயிரே... உயிரே...
என் உயிரே... உயிரே...
என்னுயிரே... என் உயிரே... 
என்னுயிரே... என் உயிரே...
என்னுயிரே...

Koovai - Koova Koova

ஆல்பம்: கூவை (2018)
இசை: கார்த்திக்
பாடியவர்கள்: சின்னபொன்னு
பாடல் வரிகள்: ம‌தன் கார்க்கி


Image result for koovai mp3 album




ராவெல்லாம் தூக்கங்கெட்டு நீ கெடக்குதியோ?
உசுரெல்லாம் அத நெனச்சுட்டு இருக்குதியோ?
ராவெல்லாம் தூக்கங்கெட்டு நீ கெடக்குதியோ?
உசுரெல்லாம் அத நெனச்சுட்டு இருக்குதியோ?

கூவ... கூவ... முட்டாக்கூவ... ஆக்கங்கெட்ட 
கூவ... கூவ... முட்டாக்கூவ... ஆக்கங்கெட்ட 
கூ... கூ... கூவ... முட்டாக்கூவ... ஆக்கங்கெட்ட
கூவ... கூவ... முட்டாக்கூவ... 


ஒண்டி மனசச் சாத்தி ஒரு கொண்டிப் பூட்டப் பூட்டி
தொறவா தூக்கிப் போட்டு அட பொறவ தேடிப் போற
ஒண்டி மனசச் சாத்தி ஒரு கொண்டிப் பூட்டப் பூட்டி
தொறவா தூக்கிப் போட்டு அட பொறவ தேடிப் போற

கூவ... கூவ... முட்டாக்கூவ... ஆக்கங்கெட்ட 
கூவ... கூவ... முட்டாக்கூவ... ஆக்கங்கெட்ட 
கூ... கூ... கூவ... முட்டாக்கூவ... ஆக்கங்கெட்ட
கூவ... கூவ... முட்டாக்கூவ... 


நீ யாருன்னுதான் முட்டிக்கிட்டு கேட்டு நிக்க...
ஏன் வாழுதன்னு காரணம் நீ பாத்து நிக்க...
ரா... தீராமத்தான் வானமொன்னு இங்கிருக்கா?

நொஞ்ச கம்பளமா... நெஞ்சில் நொம்பலமா...
நாலஞ்சு நாளா நீ கெடக்க... கெடக்க...
ஒக்காந்து அழுதா மக்கித்தான் முடிவ
வா இன்னும் இருக்கு ந‌டக்க ஹே...

கூவ... கூவ... முட்டாக்கூவ... ஆக்கங்கெட்ட 
கூவ... கூவ... முட்டாக்கூவ... ஆக்கங்கெட்ட 
கூ... கூ... கூவ... முட்டாக்கூவ... ஆக்கங்கெட்ட
கூவ... கூவ... முட்டாக்கூவ... 

Popular Posts