Thursday, February 22, 2018

Kadhalukku Mariyadhai - Ithu Sangeetha

படம் : காதலுக்கு மரியாதை (1997)
இசை : இளையராஜா
பாடியவர் :  பவதாரணி
பாடல் வரி : பழனி பாரதி





இது சங்கீத திருநாளோ
புது சந்தோஷம் வரும் நாளோ
ரதி நம் வீட்டில் பிறந்தாளோ
சிறு பூவாக மலர்ந்தாளோ
சின்ன சின்ன அசைவில் சித்திரங்கள் வரைந்தாள்
முத்தமழை கன்ன‌ம் விழ நனைந்தாளே
கொஞ்சி கொஞ்சி பிஞ்சு நடை நடந்தாளே

இது சங்கீத திருநாளோ
புது சந்தோஷம் வரும் நாளோ
ரதி நம் வீட்டில் பிறந்தாளோ
சிறு பூவாக மலர்ந்தாளோ


கைகளில் பொம்மைகள் கொண்டு ஆடுவாள்
கண்களை பின்புறம் வந்து மூடுவாள்
செல்லம் கொஞ்சி தமிழ் பாடுவாள்
தோள்களில் கண்களை மெல்ல மூடுவாள்
உறங்கும் பொழுதும் என்னை தேடுவாள்
அங்கும் இங்கும் துள்ளி ஓடுவாள்
பூவெல்லாம் இவள் போல அழகில்லை
பூங்காற்று இவள் போல சுகமில்லை
இது போல சொந்தங்கள் இனி இல்லை
எப்போதும் அன்புக்கு அழிவில்லை
இவள் தானே நம் தேவதை

இது சங்கீத திருநாளோ
புது சந்தோஷம் வரும் நாளோ
ரதி நம் வீட்டில் பிறந்தாளோ
சிறு பூவாக மலர்ந்தாளோ


நடக்கும் நடையில் ஓர் தேர்வனம்
சிரிக்கும் அழகில் ஒரு கீர்த்தனம்
கண்ணில் மின்னும் ஒரு காவியம்
மனதில் வரைந்து வைத்த ஒவியம்
நினைவில் நனைந்து நிற்கும் பூவனம்
என்றும் எங்கும் இவள் ஞாபகம்
இவள் போகும் வழியெங்கும் பூவாவேன்
இரு பக்கம் காக்கின்ற கரையாவேன்
இவளாடும் பொன்னூஞ்சல் நானாவேன்
இதயத்தில் சுமக்கின்ற தாயாவேன்
எப்போதும் தாலாட்டுவேன்

இது சங்கீத திருநாளோ
புது சந்தோஷம் வரும் நாளோ
ரதி நம் வீட்டில் பிறந்தாளோ
சிறு பூவாக மலர்ந்தாளோ
சின்ன சின்ன அசைவில் சித்திரங்கள் வரைந்தாள்
முத்த மழை கன்ன‌ம் விழ நனைந்தாளே
கொஞ்சி கொஞ்சி பிஞ்சு நடை நடந்தளே

இது சங்கீத திருநாளோ
புது சந்தோஷம் வரும் நாளோ
ரதி நம் வீட்டில் பிறந்தாளோ
சிறு பூவாக மலர்ந்தாளோ

Popular Posts