Wednesday, May 30, 2012

Kannukkul Nilavu - Iravu Pagalai Theda

படம்: கண்ணுக்குள் நிலவு (2000)
இசை: இளையராஜா
பாடியவர்கள்: K.J. ஜேசுதாஸ்
பாடலாசிரியர்: பழனி பாரதி





இரவு பகலை தேட இதயம் ஒன்றை தேட
அலைகள் அமைதி தேட விழிகள் வழியை தேட

இரவு பகலை தேட இதயம் ஒன்றை தேட
அலைகள் அமைதி தேட விழிகள் வழியை தேட
சுற்றுகின்றதே தென்றல் தினம் தினம்
எந்தன் மனதை கொஞ்சம் சுமக்குமோ
விம்முகின்றதே விண்ணில் நட்சத்திரம்
எந்தன் கனவை சொல்லி அழைக்குமோ
அச்சச்சோ... ஓ அச்சச்சோ...

இரவு பகலை தேட இதயம் ஒன்றை தேட
அலைகள் அமைதி தேட விழிகள் வழியை தேட

வாழ்க்கை என்னும் பயணம் இங்கே தூரம் தூரம்
எங்கே மாறும் எங்கே சேரும் சொல்லும் காலம்
தென்றல் வந்து பூக்கள் ஆடும் அது ஒரு காலம்
மண்ணில் சிந்தி பூக்கள் வாடும் இலையுதிர் காலம்
கோலங்கள் ஆடும் வாசல்கள் வேண்டும் தனியாக அழகில்லையே
கடலை சேரா நதியை.கண்டால்
தரையில் ஆடும் மீனை கண்டால்
ஒற்றை குயிலின் சோகம் கண்டால் அச்சச்சச்சோ

இரவு பகலை தேட இதயம் ஒன்றை தேட
அலைகள் அமைதி தேட விழிகள் வழியை தேட

வீசும் காற்று ஓய்வை தேடி எங்கே போகும்
பூக்கள் பேச வாயிருந்தால் என்ன பேசும்
மாலை நேரம் பறவை கூட்டம் கூட்டை தேடும்
பறவை போனால் பறவை கூடு யாரை தேடும்
நாடோடி மேகம் ஓடோடி இங்கே யாரோடு உறவாடுமோ
அன்னையில்லா பிள்ளைக்கண்டால்
பிள்ளையில்லா அன்னைக்கண்டால்
அன்பே இல்லா உலகம் கண்டால் அச்சச்சச்சோ

இரவு பகலை தேட இதயம் ஒன்றை தேட
அலைகள் அமைதி தேட விழிகள் வழியை தேட
சுற்றுகின்றதே தென்றல் தினம் தினம்
எந்தன் மனதை கொஞ்சம் சுமக்குமோ
விம்முகின்றதே விண்ணில் நட்சத்திரம்
எந்தன் கனவை சொல்லி அழைக்குமோ
அச்சச்சோ... ஓ அச்சச்சோ....

இரவு பகலை தேட இதயம் ஒன்றை தேட
அலைகள் அமைதி தேட விழிகள் வழியை தேட

Kannukkul Nilavu - Nilavu Paattu

படம் : கண்ணுக்குள் நிலவு (2000)
இசை : இளையராஜா
பாடியவர் : ஹரிஹரன்
பாடல் வரி: பழனி பாரதி





நிலவுப் பாட்டு நிலவுப் பாட்டு… ஓர் நாள் கேட்டேன்
மூங்கில் காட்டில் மூங்கில் காட்டில்…நாளும் படித்தேன்

நிலவுப் பாட்டு நிலவுப் பாட்டு ஓர் நாள் கேட்டேன்
மூங்கில் காட்டில் மூங்கில் காட்டில் நாளும் படித்தேன்
நிலவுப் பாட்டு நிலவுப் பாட்டு ஓர் நாள் கேட்டேன்
மூங்கில் காட்டில் மூங்கில் காட்டில் நாளும் படித்தேன்

அந்த இசையின் ரகசியம் இரு உயிருக்குப் புரிந்தது
இரு உயிருக்குப் புரிந்தது இங்கு யாருக்குத் தெரிந்தது
இசையில் கலந்து மிதக்கும் தென்றலே
இசையின் மகளைப் பார்த்ததில்லையோ
நிலவுப் பாட்டு நிலவுப் பாட்டு ஓர் நாள் கேட்டேன்
மூங்கில் காட்டில் மூங்கில் காட்டில் நாளும் படித்தேன்

கனவுகள் வருவது விழிகளின் விருப்பமா
கவிதைகள் வருவது கவிஞனின் விருப்பமா
குயில்களின் இருப்பிடம் இசையால் அறியலாம்
மலர்ந்திடும் மலர்களை வாசனை சொல்லலாம்
குயில்களும் மலர்களும் அதிசயம்
கனவுகள் கவிதைகள் ரகசியம்
நிலவுப் பாட்டு நிலவுப் பாட்டு ஓர் நாள் கேட்டேன்
மூங்கில் காட்டில் மூங்கில் காட்டில் நாளும் படித்தேன்

நிலவொன்று நடந்தது சுவடுகள் மனதிலே
மழை வந்து நனைத்தது இசையன்னை செவியிலே
கொலுசுகள் கீர்த்தனை யாரந்த தேவதை
விழிகளில் விரிகிறாள் யாரந்தத் தாமரை
இது ஒரு புதுவிதப் பரவசம்
மயக்குது இசையென்னும் அதிசயம்
நிலவுப் பாட்டு நிலவுப் பாட்டு ஓர் நாள் கேட்டேன்
மூங்கில் காட்டில் மூங்கில் காட்டில் நாளும் படித்தேன்

அந்த இசையின் ரகசியம் இரு உயிருக்குப் புரிந்தது
இரு உயிருக்குப் புரிந்தது இங்கு யாருக்குத் தெரிந்தது
இசையில் கலந்து மிதக்கும் தென்றலே
இசையின் மகளைப் பார்த்ததில்லையோ
நிலவுப் பாட்டு நிலவுப் பாட்டு ஓர் நாள் கேட்டேன்
மூங்கில் காட்டில் மூங்கில் காட்டில் நாளும் படித்தேன்

நிலவுப் பாட்டு நிலவுப் பாட்டு ஓர் நாள் கேட்டேன்
மூங்கில் காட்டில் மூங்கில் காட்டில் நாளும் படித்தேன்

Kannukkul Nilavu - Oru Naal Oru Kanavu

படம்: கண்ணுக்குள் நிலவு (2000)
இசை: இளையராஜா
பாடியவர்கள்: K.J. ஜேசுதாஸ், அனுராதா ஸ்ரீராம்
பாடல்வரிகள்: பழனி பாரதி






ஒரு நாள் ஒரு கனவு
அதை நான் மறக்கவும் முடியாது
நிஜமாய் இனிக்கிறது
இதுபோல் கனவொன்று கிடையாது

ஒரு நாள் ஒரு கனவு
அதை நான் மறக்கவும் முடியாது

நிஜமாய் இனிக்கிறது
இதுபோல் கனவொன்று கிடையாது

வானவில்லில் நடந்து சென்று
சிரித்திருக்கும் நட்சத்திரப் பூப்பறித்தோம்

வெள்ளிப்பிறைப் படகெடுத்து
ஆகாயகங்கை அலைகளில் துள்ளிக் குதித்தோம் நீச்சலடித்திட

ஒரு நாள் ஒரு கனவு
அதை நான் மறக்கவும் முடியாது
நிஜமாய் இனிக்கிறது
இதுபோல் கனவொன்று கிடையாது

நதியோரம் நதியோரம்
என்னைச் சுற்றிப் பறந்தது கிளிக்கூட்டம்

கிளிக்கூட்டம் கிளிக்கூட்டம்
வந்ததெனில் நீயொரு பழத்தோட்டம்

பறக்கும் கிளிகளிலே
ஒரு கிளி உனைப்போல் உருவெடுக்க

கிளியே உனக்காக நானும் கிளிபோல் அவதரிக்க

இறக்கைகள் கொண்டு வா விண்ணிலே பறப்போம்
உள்ளங்கள் கலப்போம் வண்ணம் சூடும் வண்ணக்கிளி
ஒரு நாள் ஒரு கனவு அதை நான் மறக்கவும் முடியாது
நிஜமாய் இனிக்கிறது இதுபோல் கனவொன்று கிடையாது

எதனாலே வெண்ணிலவே
அவள் போல் நீயும் இளைத்தயோ ஹோ...

உன் மனதை உன் மனதை
எனைப்போல் எவருக்கும் கொடுத்தாயோ ஹோ...

ஒளிவிடும் முகத்தினிலே
கறையேன் முத்த அடையாளங்களோ

இரவில் விழித்திருந்து நீதான் கற்றதென்ன பாடங்களோ

மின்னிடும் கண்ணிலே என்னவோ உள்ளதே
சொல்லம்மா சொல்லம்மா நெஞ்சிலாடும் மின்னல் கொடி

ஒரு நாள் ஒரு கனவு
அதை நான் மறக்கவும் முடியாது

நிஜமாய் இனிக்கிறது
இதுபோல் கனவொன்று கிடையாது

வானவில்லில் நடந்து சென்று
சிரித்திருக்கும் நட்சத்திரப் பூப்பறித்தோம்

வெள்ளிப்பிறைப் படகெடுத்து
ஆகாயகங்கை அலைகளில் துள்ளிக் குதித்தோம் நீச்சலடித்திட

ஒரு நாள் ஒரு கனவு
அதை நான் மறக்கவும் முடியாது
நிஜமாய் இனிக்கிறது
இதுபோல் கனவொன்று கிடையாது

Ezhavathu Manithan - Kaakkai Siraginile

படம் : ஏழாவது மனிதன் (1982)
இசை: L. வைத்திய நாதன்
பாடியவர் : K.J ஜேசுதாஸ்
பாடல் வரி: பாரதியார்

Image result for Ezhavathu Manithan



காக்கை சிறகினிலே நந்தலாலா - நின்றன்
கரிய நிறம் தோன்றுதையே நந்தலாலா
காக்கை சிறகினிலே நந்தலாலா - நின்றன்
கரிய நிறம் தோன்றுதையே நந்தலாலா

பார்க்கும் மரங்களெல்லாம் நந்தலாலா - நின்றன்
பச்சை நிறம் தோன்றுதையே நந்தலாலா
காக்கை சிறகினிலே நந்தலாலா - நின்றன்
கரிய நிறம் தோன்றுதையே நந்தலாலா

கேட்கும் ஒலியிலெல்லாம் நந்தலாலா - நின்றன்
கீதம் இசைக்குதடா நந்தலாலா
காக்கை சிறகினிலே நந்தலாலா - நின்றன்
கரிய நிறம் தோன்றுதையே நந்தலாலா

தீக்குள் விரலை வைத்தால் நந்தலாலா - நின்னை
தீண்டும் இன்பம் தோன்றுதடா நந்தலாலா
நந்தலாலா... நந்தலாலா...


Tuesday, May 29, 2012

ஆவாரம்பூ - சாமிகிட்டச் சொல்லிவெச்சி


படம்:ஆவாரம்பூ (1992)
இசை:இளையராஜா
பாடியவரிகள்: S.P.பாலசுப்பிரமணியம், S. ஜானகி










சாமிகிட்டச் சொல்லிவெச்சி சேர்ந்ததிந்தச் செல்லக்கிளியே
இந்த பூமியுள்ள காலம் மட்டும் வாழும் இந்த அன்புக் கதையே


சாமிகிட்டச் சொல்லிவெச்சி சேர்ந்ததிந்தச் செல்லக்கிளியே 
இந்த பூமியுள்ள காலம் மட்டும் வாழும் இந்த அன்புக் கதையே
சாமிகிட்டச் சொல்லிவெச்சி சேர்ந்ததிந்தச் செல்லக்கிளியே
இந்த பூமியுள்ள காலம் மட்டும் வாழும் இந்த அன்புக் கதையே


முத்துமணியே பட்டுத்துணியே
ரத்தினமும் முத்தினமும் சேர்ந்து வந்த சித்திரமே


சாமிகிட்டச் சொல்லிவெச்சி சேர்ந்ததிந்தச் செல்லக்கிளியே


இந்த பூமியுள்ள காலம் மட்டும் வாழும் இந்த அன்புக் கதையே




கூவாத குயில் ஆடாத மயில் நானாக இருந்தேனே
பூவோடு வரும் காற்றாக எனை நீ சேரத் தெளிந்தேனே


ஆதாரம் அந்த தேவன் ஆணை சேர்ந்தாய் இந்த மானை


நாவார ருசித்தேனே தேனை தீர்ந்தேன் இன்று நானே


வந்த துணையே வந்து அணையே


அந்தமுள்ள சந்திரனைச் சொந்தங்கொண்ட சுந்தரியே


சாமிகிட்டச் சொல்லிவெச்சி சேர்ந்ததிந்தச் செல்லக்கிளியே 


இந்த பூமியுள்ள காலம் மட்டும் வாழும் இந்த அன்புக் கதையே


முத்துமணியே பட்டுத்துணியே


ரத்தினமும் முத்தினமும் சேர்ந்து வந்த சித்திரமே


சாமிகிட்டச் சொல்லிவெச்சி சேர்ந்ததிந்தச் செல்லக்கிளியே 


இந்த பூமியுள்ள காலம் மட்டும் வாழும் இந்த அன்புக் கதையே




காவேரி அணை மேலேரி நதி ஓடோடி வரும் நேரம்
பூவான எனை நீ சேரும் விதி மாறாத இறை வேதம்


பூலோகம் இங்கு வானம் போலே மாறும் நிலை பார்த்தேன்


வாழ்நாளின் சுகந்தானிது போலே வாழும் வழி கேட்டேன்


வண்ணக் கனவே வட்ட நிலவே


என்ன என்ன இன்பம் தரும் வண்ணம் வரும் கற்பனையே


சாமிகிட்டச் சொல்லிவெச்சி சேர்ந்ததிந்தச் செல்லக்கிளியே 


இந்த பூமியுள்ள காலம் மட்டும் வாழும் இந்த அன்புக் கதையே


முத்துமணியே பட்டுத்துணியே


ரத்தினமும் முத்தினமும் சேர்ந்து வந்த சித்திரமே


சாமிகிட்டச் சொல்லிவெச்சி சேர்ந்ததிந்தச் செல்லக்கிளியே 


இந்த பூமியுள்ள காலம் மட்டும் வாழும் இந்த அன்புக் கதையே

பதினாறு - யார் சொல்லி காதல்



படம் : பதினாறு (2011)
இசை : யுவன் சங்கர் ராஜா
பாடியவர் :  யுவன் சங்கர் ராஜா
பாடல் வரி : நா.முத்துகுமார்










யார் சொல்லி காதல் வருவது
யார் சொல்லி காதல் போவது
யாருக்கு அடிமை இந்த காதல் 
ஏன் இந்த காலம் நகருது
ஏன் இந்த காதல் தகருது
ஏன் இந்த மாறுபட்ட தேடல்
இதயங்கள் இணையும் தருணம் தெரிந்தால் சொல்வாய்
இமை மூடி இருந்தாலே வெளிச்சம் வருமா சொல்வாய்
பூமி முழுக்க காதல் இருக்க எங்கு ஓடி ஒளிகிறாய்
பூமி தாண்ட வழியே இல்லை வா
காதல் இங்கே தவறு என்றால் கடவுள் கூட தவறு தான்
காதல் இன்றி கடவுள் இல்லை வா


This part is in mp3 only
*--------------*--------------*--------------*--------------*--------------*--------------*--------------*
உன்னை நீ ஏன் வதைக்கிறாய் காரணங்கள் தெரியாமல்
காதல் தானே மீண்டும் உன்னை மீட்டு எடுக்கும்
என்னை நீ ஏன் வெறுக்கிறாய் என் நிலை புரியாமல்
காதல் உன்னை மெளனமாக அழுக வைக்கும்
தேதி போல் காதலை நீயும் கிழித்து விட முடியாதே
ஆகாயத்தை உள்ளங்கையில் மறைத்து வைக்க முடியாதே
காதலுக்கு மாற்று எதுவும் இல்லையே
ஆடை போல கழற்றிப் போட முடியவில்லை உன்னை நான்
உயிரை போல எனக்குள் உள்ளாய் வா
என்னை மீறி உன்னை எதுவும் செய்திடாது காதல் தான்
காதலை தான் நம்புகின்றேன் நான்
*--------------*--------------*--------------*--------------*--------------*--------------*--------------*


இதயத்தில் நீ காதலை பூட்டி வைக்க முடியாதே
சாவி எனது கரத்தில் இருக்கு புரிந்து கொள்வாய்
வாய் வழி நீ என்னை தான் வேண்டாம் என்று சொன்னாலும்
உன்னை ஒரு நாள் உந்தன் மனமே கொன்று விடுமே
நீயும் நானும் சேர்ந்தே செய்தோம் காதலெனும் சிற்பத்தை
சிற்பம் வேண்டாம் என்றே நீயும் தொடங்கினாய் யுத்தத்தை
இது என்ன நியாயம் நீ சொல்லடி 
இன்னும் நூறு தலை முறைகள் இந்த மண்ணில் வாழுமே 
அன்றும் இந்த காதல் இருக்கும் வா
உயிர்கள் ஜனித்த நொடியிலிருந்து காதல் இங்கே வாழுதே 
காதல் இன்றி உயிர்கள் ஏது வா 


யார் சொல்லி காதல் வருவது
யார் சொல்லி காதல் போவது
யாருக்கு அடிமை இந்த காதல்
ஏன் இந்த காலம் நகருது
ஏன் இந்த காதல் தகருது
ஏன் இந்த மாறுபட்ட தேடல்
இதயங்கள் இணையும் தருணம் தெரிந்தால் சொல்வாய்
இமை மூடி இருந்தாலே வெளிச்சம் வருமா சொல்வாய்
பூமி முழுக்க காதல் இருக்க எங்கு ஓடி ஒளிகிறாய்
பூமி தாண்ட வழியே இல்லை வா
காதல் இங்கே தவறு என்றால் கடவுள் கூட தவறு தான்
காதல் இன்றி கடவுள் இல்லை வா

Monday, May 28, 2012

பிரியங்கா - வனக்குயிலே குயில்


படம்: பிரியங்கா (1994)
இசை: இளையராஜா
பாடியவர்கள்: S.P. பாலசுப்ரமணியம்
பாடல்: வைரமுத்து






Download this MP3

வனக்குயிலே குயில் தரும் கவியே
கவி தரும் இசையே........
வனக்குயிலே குயில் தரும் கவியே
கவி தரும் இசையே........
கொடி மலரே மலர் விடும் இதழே
இதழ் தரும் மதுவே........
வனக்குயிலே குயில் தரும் கவியே
கவி தரும் இசையே........
மலரிலும் மலையிலும் நதியிலும் உன் உருவமே
தெரிவதென்ன அழகழகாய் தெரிவதென்ன
வனக்குயிலே குயில் தரும் கவியே
கவி தரும் இசையே........

ஹோயல்லோ ஹோய ஹோய ஹோயல்லோ
ஹோயல்லோ ஹோய ஹோய ஹோயல்லோ
ஹோய ஹோய ஹோயே....
ஹோய ஹோய ஹோயே....

உன் ஞாபகம் நெஞ்சில் வந்தாடுதே
ஓயாமலே என்னைப் பந்தாடுதே
உன் பூமுகம் கண்ணில் நின்றாடுதே
நான் கொஞ்சவே என்னை மன்றாடுதே
படித்தால் இனித்திடும் புதினம்
உனை நான் மறப்பது கடினம்
அலையாய் தொடர்ந்திடும் நினைப்பு
வலைக்குள் தவித்திடும் தவிப்பு
துளிர்க்கும் ஆசை துளிர்த்தால்
மேனி சிலிர்க்கும் மிதக்கும் பறக்கும்

வனக்குயிலே குயில் தரும் கவியே
கவி தரும் இசையே........
வனக்குயிலே குயில் தரும் கவியே
கவி தரும் இசையே........

ஆஹா  ஹோ ஓஹோஹோ
ஓஹோ ஹோ ஹோ ஹோ
ஓஹோ ஓஹோ ஹோ ஹோ
ஆஹா ஆஹா...

செவ்வாழைகள் பந்தலாய் தோன்றுதே
கூந்தல் பனை தோரனை ஆனாதே
பூமாலையாய் தோன்றும் பூஞ்சோலையே
எங்கெங்கும் கல்யாணக் கோலங்களே
மணநாள் நினைவுகள் மலரும்
மனதில் மலையென வளரும்
வருவேன் தருவேன் கிளியே
விழிக்குள் இருக்கும் விழியே
இணைந்தால் இருவர் இணைந்தால்
இன்ப வரவும் உறவும் சுகமே

வனக்குயிலே குயில் தரும் கவியே
கவி தரும் இசையே........
வனக்குயிலே குயில் தரும் கவியே
கவி தரும் இசையே........
கொடி மலரே மலர் விடும் இதழே
இதழ் தரும் மதுவே........
வனக்குயிலே குயில் தரும் கவியே
கவி தரும் இசையே........
மலரிலும் மலையிலும் நதியிலும் உன் உருவமே
தெரிவதென்ன அழகழகாய் தெரிவதென்ன
வனக்குயிலே குயில் தரும் கவியே
கவி தரும் இசையே........

சத்ரியன் - மாலையில் யாரோ



படம்: சத்ரியன் (1990)
இசை: இளையராஜா
பாடியவர்: ஸ்வர்ணலதா
பாடல் வரி: வாலி







மாலையில் யாரோ மனதோடு பேச
மார்கழி வாடை மெதுவாக வீச
தேகம் பூத்ததே ஓ.. மோகம் வந்ததோ
மோகம் வந்ததும் ஓ... மௌனம் வந்ததோ
நெஞ்சமே பாட்டெழுது... அதில் நாயகன் பேரெழுது
மாலையில் யாரோ மனதோடு பேச


வருவான் காதல் தேவன் என்று காற்றும் கூ
வரட்டும் வாசல் தேடி இன்று காவல் மீற
வளையல் ஓசை ராகமாக இசைத்தேன் வாழ்த்து பாடலை
ஒரு நாள் வண்ண மாலை சூட வளர்த்தேன் ஆசை காதலை
நெஞ்சமே பாட்டெழுது... அதில் நாயகன் பேரெழுது
மாலையில் யாரோ மனதோடு பேச
மார்கழி வாடை மெதுவாக வீச


கரைமேல் நானும் காற்று வாங்கி விண்ணை பார்க்க
கடல் மீன் கூட்டம் ஓடி வந்து கண்ணை பார்க்க
அடடா நானும் மீனைப் போல கடலில் பாயக் கூடுமோ
அலைகள் வெள்ளி ஆடை போல உடலின் மீது ஆடுமோ
நெஞ்சமே பாட்டெழுது... அதில் நாயகன் பேரெழுது
மாலையில் யாரோ மனதோடு பேச
மார்கழி வாடை மெதுவாக வீச
தேகம் பூத்ததே ஓ.. மோகம் வந்ததோ
மோகம் வந்ததும் ஓ... மௌனம் வந்ததோ
நெஞ்சமே பாட்டெழுது... அதில் நாயகன் பேரெழுது
நெஞ்சமே பாட்டெழுது... அதில் நாயகன் பேரெழுது

டூயட் - அஞ்சலி அஞ்சலி



படம்: டூயட் (1994)
இசை: A.R. ரகுமான்
பாடியவர்கள்: S.P. பாலசுப்ரமணியம், K.S. சித்ரா 
பாடல்: வைரமுத்து 










அஞ்சலி... அஞ்சலி... புஷ்பாஞ்சலி...
அஞ்சலி... அஞ்சலி... புஷ்பாஞ்சலி...

பூவே உன் பாதத்தில் புஷ்பாஞ்சலி
பொன்னே உன் பெயருக்கு பொன்னாஞ்சலி
கண்ணே உன் குரலுக்கு கீதாஞ்சலி
கண் காணா அழகுக்கு கவிதாஞ்சலி





அஞ்சலி... அஞ்சலி... புஷ்பாஞ்சலி...
அஞ்சலி... அஞ்சலி... புஷ்பாஞ்சலி...

பூவே உன் பாதத்தில் புஷ்பாஞ்சலி
பொன்னே உன் பெயருக்கு பொன்னாஞ்சலி
கண்ணே உன் குரலுக்கு கீதாஞ்சலி
கண் காணா அழகுக்கு கவிதாஞ்சலி




காதல் வந்து தீண்டும் வரை இருவரும் தனித்தனி
காதலின் பொன் சங்கிலி இணைத்தது கண்மணி
கடலிலே மழை விழுந்தபின் எந்த துளி மழைத்துளி
காதலில் அது போல நான் கலந்திட்டேன் காதலி
திருமகள் திருப்பாதம் பிடித்துவிட்டேன்
தினமொரு புதுப்பாடல் வடித்துவிட்டேன்
அஞ்சலி... அஞ்சலி... என்னுயிர் காதலி...



பூவே உன் பாதத்தில் புஷ்பாஞ்சலி
பொன்னே உன் பெயருக்கு பொன்னாஞ்சலி
கண்ணே உன் குரலுக்கு கீதாஞ்சலி
கண் காணா அழகுக்கு கவிதாஞ்சலி




அஞ்சலி... அஞ்சலி... புஷ்பாஞ்சலி...
அஞ்சலி... அஞ்சலி... புஷ்பாஞ்சலி...

பூவே உன் பாதத்தில் புஷ்பாஞ்சலி
பொன்னே உன் பெயருக்கு பொன்னாஞ்சலி
கண்ணே உன் குரலுக்கு கீதாஞ்சலி
கண் காணா அழகுக்கு கவிதாஞ்சலி


சீதையின் காதல் அன்று விழி வழி நுழைந்தது
கோதையின் காதல் இன்று செவி வழி புகுந்தது
என்னவோ என் நெஞ்சினை இசை வந்து துளைத்தது
இசை வந்த பாதை வழி தமிழ் மெல்ல நுழைந்தது
இசை வந்த திசை பார்த்து மனம் குழைந்தேன்
தமிழ் வந்த திசை பார்த்து உயிர் கசிந்தேன்
அஞ்சலி... அஞ்சலி... இவள் கலை காதலி...
அன்பே உன் அன்புக்கு புஷ்பாஞ்சலி
நண்பா உன் கண்ணுக்கு நடனாஞ்சலி
கண்ணா உன் இசை வாழ கீதாஞ்சலி
கவியே உன் தமிழ் வாழ கவிதாஞ்சலி



அஞ்சலி... அஞ்சலி... புஷ்பாஞ்சலி...
அஞ்சலி... அஞ்சலி... புஷ்பாஞ்சலி...

பூவே உன் பாதத்தில் புஷ்பாஞ்சலி
பொன்னே உன் பெயருக்கு பொன்னாஞ்சலி
கண்ணே உன் குரலுக்கு கீதாஞ்சலி
கண் காணா அழகுக்கு கவிதாஞ்சலி


அழகியே உனைப்போலவே அதிசயம் இல்லையே
அஞ்சலி பேரைச்சொன்னேன் அவிழ்ந்தது முல்லையே
கார்த்திகை மாதம் போனால் கடும் மழை இல்லையே
கண்மணி நீயில்லையேல் கவிதைகள் இல்லையே
நீயென்ன நிலவோடு பிறந்தவளா
பூவுக்குள் கருவாகி வளர்ந்தவளா
அஞ்சலி... அஞ்சலி... என்னுயிர் காதலி...
பூவே உன் பாதத்தில் புஷ்பாஞ்சலி
பொன்னே உன் பெயருக்கு பொன்னாஞ்சலி
கண்ணே உன் குரலுக்கு கீதாஞ்சலி
கண் காணா அழகுக்கு கவிதாஞ்சலி



அஞ்சலி... அஞ்சலி... புஷ்பாஞ்சலி...
அஞ்சலி... அஞ்சலி... புஷ்பாஞ்சலி...

பூவே உன் பாதத்தில் புஷ்பாஞ்சலி
பொன்னே உன் பெயருக்கு பொன்னாஞ்சலி
கண்ணே உன் குரலுக்கு கீதாஞ்சலி
கண் காணா அழகுக்கு கவிதாஞ்சலி

Sunday, May 27, 2012

Suryavamsam - Rosappu Chinna Rosappu

படம்: சூர்ய வம்சம் (1997)
இசை: S.A. ராஜ்குமார்
பாடியவர்: ஹரிஹரன்
பாடல் வரி : பழனிபாரதி





ரோசாப்பூ சின்ன ரோசாப்பூ
உம் பேரைச் சொல்லும் ரோசாப்பூ
ரோசாப்பூ சின்ன ரோசாப்பூ
உம் பேரைச் சொல்லும் ரோசாப்பூ
காற்றில் ஆடும் தனியாக 
என் பாட்டு மட்டும் துணையாக
காற்றில் ஆடும் தனியாக 
என் பாட்டு மட்டும் துணையாக
ரோசாப்பூ சின்ன ரோசாப்பூ
உம் பேரைச் சொல்லும் ரோசாப்பூ



மனசெல்லாம் பந்தலிட்டு
மல்லிக்கொடியாக ஒன்ன விட்டேன்
உசுருக்குள் கோயில் கட்டி
ஒன்ன கொலு வச்சி கொண்டாடினேன்
மழை பெய்ஞ்சாதானே மண் வாசம்
ஒன்ன நெனச்சாலே பூவாசம்தான்
பாத மேல பூத்திருப்பேன்
கையில் ரேகை போல சேர்ந்திருப்பேன்

ரோசாப்பூ சின்ன ரோசாப்பூ
உம் பேரைச் சொல்லும் ரோசாப்பூ
காற்றில் ஆடும் தனியாக 
என் பாட்டு மட்டும் துணையாக


கண்ணாடி பாக்கையில
அங்க முன்னாடி உம் முகம்தான்
கண்ணே நீ போகையில
கொஞ்சும் கொலுசாக என் மனம்தான்
நிழலுக்கும் நெத்தி சுருங்காம
ஒரு குடையாக மாறட்டுமா
மலைமேல் விளக்கா ஏத்தி வைப்பேன் 
உன்னப் படம் போல் மனசில் மாட்டிவைப்பேன்


ரோசாப்பூ சின்ன ரோசாப்பூ
உம் பேரைச் சொல்லும் ரோசாப்பூ
ரோசாப்பூ சின்ன ரோசாப்பூ
உம் பேரைச் சொல்லும் ரோசாப்பூ
காற்றில் ஆடும் தனியாக
என் பாட்டு மட்டும் துணையாக
ரோசாப்பூ சின்ன ரோசாப்பூ
உம் பேரைச் சொல்லும் ரோசாப்பூ
காற்றில் ஆடும் தனியாக 
என் பாட்டு மட்டும் துணையாக

கண்ட நாள் முதல் - மேற்கே மேற்கே



படம் : கண்ட நாள் முதல் (2005)
இசை : யுவன் சங்கர் ராஜா

பாடியவர் : சங்கர் மகாதேவன், சாதனா சர்கம்
பாடல் வரி : 
தாமரை









லை லை லை லை லாகி லாகி லாகி லே...
மேற்கே மேற்கே மேற்கே தான்
சூரியன்கள் உதித்திடுமே


சுடும் வெயில் கோடை காலம்
கடும் பனி வாடை காலம்
இரண்டுக்கும் நடுவே ஏதும் காலம் உள்ளதா?
இலை உதிர் காலம் தீர்ந்து
எழுந்திடும் மண்ணின் வாசம்
முதல் மழை காலம் என்றே நெஞ்சம் சொல்லுதே


ஓ... மின்னலும் மின்னலும்
நேற்று வரை பிரிந்தது ஏனோ
பின்னலாய் பின்னலாய்
இன்றுடன் பிணைந்திட தானோ
லை லை லை லே லால லை லை லே
மேற்கே மேற்கே மேற்கே தான்
சூரியன்கள் உதித்திடுமே


ஓ... கோபம் கொள்ளும் நேரம்
வானம் எல்லாம் மேகம்
காணாமலே போகும் ஒரே நிலா
ஓ... கோபம் தீரும் நேரம்
மேகம் இல்லா வானம்
பௌர்ணமியாய் தோன்றும் அதே நிலா


இனி எதிரிகள் என்றே எவருமில்லை
பூக்களை விரும்பா வேர்களில்லை
நதியை வீழ்த்தும் நாணல் இல்லையே
இது நீரின் தோளில் கை போடும்
ஒரு சின்ன தீயின் கதையாகும்
திரைகள் இனிமேல் தேவை இல்லையே


மேற்கே மேற்கே மேற்கே தான்
சூரியன்கள் உதித்திடுமே
லை லை லை லை லாகி லாகி லகி லகி லே...


வாசல் கதவை யாரோ
தட்டும் ஓசை கேட்டால்
நீதானென்று பார்த்தேனடி சகி...
பெண்கள் கூட்டம் வந்தால்
எங்கே நீயும் என்றே
இப்பொதெல்லாம் தேடும் எந்தன் விழி...


இனி கவிதையில் கைகள் நனைந்திடுமோ
காற்றே சிறகாய் விரிந்திடுமோ
நிலவின் முதுகை தீண்டும் வேகமோ...
அட தேவைகள் இல்லை என்றாலும்
வாய் உதவிகள் கேட்டு மன்றாடும்
மாட்டேன் என நீ சொன்னால் தாங்குமோ...


மேற்கே மேற்கே மேற்கே தான்
சூரியன்கள் உதித்திடுமே
லை லை லை லை லை...
சூரியன்கள் உதித்திடுமே
மின்னலும் மின்னலும்
நேற்று வரை பிரிந்தது ஏனோ
பின்னலாய் பின்னலாய்
இன்றுடன் பிணைந்திட தானோ

Popular Posts