Showing posts with label Prasannaa. Show all posts
Showing posts with label Prasannaa. Show all posts

Sunday, March 30, 2014

ரம்மி - கூட மேலே

படம்: ரம்மி (2014)
இசை: D.இமான்
பாடியவர்கள்: பிரசன்னா, வந்தனா ஸ்ரீனிவாசன்
பாடல்வரிகள்: யுகபாரதி




ஹா... ஹ.. ஹா...  ஹா... ஹா... 

கூட மேலே கூடவச்சு கூடலூரு போறவளே…
ஒங்கூட கொஞ்சம் நானும் வாரேன்
கூட்டிக்கிட்டு போனா என்ன…
ஒத்தையில நீயும் போனா அது நியாயமா
உன்னுடனே நானும் வாறேன் ஒரு ஓரமா
நீ வாயேனு சொன்னாலே வாழ்வேனே ஆதாரமா…
நீ வேணானு சொன்னாலே போவேடி சேதாரமா…


கூட மேலே கூடவச்சு கூடலூரு போறவள…
நீ கூட்டிக்கிட்டு போக சொன்னா
என்ன சொல்லும் ஊரு என்ன
ஒத்துமையா நாமும் போக இது நேரமா
துவக்கள தேச்சி வச்சா துரு ஏறுமா
நான் போறேனே சொல்லாம வாரேனே ஒன் தாரமா
நீ தாயேனு கேட்காம தாரேனே தாராளமா…


சாதத்துல கல்லு போல
நெஞ்சிக்குள்ள நீ இருந்து
சரிக்காம சதி பண்ணுற

சீயக்காய போல கண்ணில்
சிக்கி கிட்ட போதும் கூட
உறுத்தாம உயிர கொல்லுற

அதிகம் பேசாம அளந்து தான் பேசி
எதுக்கு சடை பின்னுற

சல்லி வேர ஆணி வேராக்குற
செத்த பூவ வாசமா மாத்துற

நீ போகாத ஊருக்கு
பொய்யான வழி சொல்லுற

கூட மேலே கூடவச்சு
கூடலூரு போறவளே

நீ கூட்டிக்கிட்டு போக சொன்னா
என்ன சொல்லும் ஊரு என்ன


ஹேஹே... ஹே... ஹே... ஹேய்...
எங்கேவேனா போய்க்க நீ
என்ன விட்டு போய்டாம
இருந்தாலே அது போதுமே

தண்ணியத்தான் விட்டுபுட்டு
தாமரையும் போனதுனா
தரைமேல தலை சாயுமே

மறஞ்சி போனாலும் மறந்து போகாத
நினைப்புத்தான் சொந்தமே

பட்ட தீட்ட தீட்ட தான் தங்கமே
உன்ன பாக்க பாக்கத்தான் இன்பமே

நீ பாக்காம போனாலே
கெடையாது மறுஜெம்மமே

ஹா.. ஹா... ஹா.. ஹா... 

கூட மேலே கூடவச்சு
ம்... ஹ... கூடலூரு... கூடலூரு போறவளே... 

ம்... நீ கூட்டிக்கிட்டு போக சொன்னா
என்ன சொல்லும் ஊரு என்ன

ஓ... ஒத்தையில நீயும் போனா அது நியாயமா
உன்னுடனே நானும் வாறேன் ஒரு ஓரமா

நான் போறேனே சொல்லாம வாரேனே உன் தாரமா
நீ தாயேனு கேட்காம தாரேனே தாராளமா


Tuesday, February 5, 2013

அழகிய தீயே - விழிகளின் அருகினில்

படம் : அழகிய தீயே (2004)
இசை : ரமேஷ் விநாயகம்
பாடியவர் :  ரமேஷ் விநாயகம்




விழிகளின் அருகினில் வானம்
வெகு தொலைவினில் தொலைவினில் தூக்கம்
இது ஐந்து புலங்களின் ஏக்கம்
என் முதல் முதல் அனுபவம்... ஓ.... ய
ஒலியின்றி உதடுகள் பேசும்
பெரும் புயல் என வெளிவரும் சுவாசம்
ஒரு சுவடின்றி நடந்திடும் பாதம்
இது அதிசய அனுபவம்... ஓ.... ய
பெண்ணை சந்தித்தேன்
அவள் நட்பை யாசித்தேன்
அவள் பண்பை நேசித்தேன்
வேறென்ன நான் சொல்ல... ஓ.... ய


பூ போன்ற கன்னி தேன் அவள் பேர் சொல்லி தித்தித்தேன்
அது ஏன் என்று யோசித்தேன் அட நான் எங்கு சுவாசித்தேன்
காதோடு மெளனங்கள் இசை வார்க்கின்ற நேரங்கள்
பசி நீர் தூக்கம் இல்லாமல் உயிர் வாழ்கின்ற மாயங்கள்
அலைகடலாய் இருந்த மனம் துளி துளியாய் சிதறியதே
ஐம்புலனும் என் மனமும் எனக்கெதிராய் செயல்படுதே
விழி காண முடியாத மாற்றம்
அதை மூடி மறைக்கின்ற தோற்றம்
ஒரு மெளன புயல் வீசுதே அதில் மனம் தட்டு தடுமாறும்... ஓ.... ய


பூவில் என்ன புத்தம் புது வாசம்
தென்றல் கூட சங்கீதமாய் வீசும்
ஏதோ வந்து பன்னீர் மழை தூவும்
யாரோ என்று எந்தன் மனம் தேடும்

கேட்காத ஓசைகள் இதழ் தாண்டாத வார்த்தைகள்
இமை ஆடாத பார்வைகள் இவை நான் கொண்ட மாற்றங்கள்
சொல் என்னும் ஓர் நெஞ்சம் இனி நில் என ஓர் நெஞ்சம்
எதிர்பார்க்காமல் என் வாழ்வில் ஒரு போர்க்காலம் ஆரம்பம்
இருதயமே துடிக்கிறதா... துடிப்பது போல் நடிக்கிறதா...
உரைத்திடவா... மறைத்திடவா... ரகசியமாய் தவித்திடவா...
ஒரு பெண்ணின் நினைவென்ன செய்யும்
எனை கத்தி இல்லாமல் கொய்யும்
இதில் மீள வழி உள்ளதே இருப்பினும் உள்ளம் விரும்பாது... ஓ... ய


விழிகளின் அருகினில் வானம்
வெகு தொலைவினில் தொலைவினில் தூக்கம்
இது ஐந்து புலங்களின் ஏக்கம்
என் முதல் முதல் அனுபவம்... ஓ.... ய
ஒலியின்றி உதடுகள் பேசும்
பெரும் புயல் என வெளிவரும் சுவாசம்
ஒரு சுவடின்றி நடந்திடும் பாதம்
இது அதிசய அனுபவம்... ஓ.... ய
பெண்ணை சந்தித்தேன்
அவள் நட்பை யாசித்தேன்
அவள் பண்பை நேசித்தேன்
வேறென்ன நான் சொல்ல... ஓ.... ய



Sunday, May 27, 2012

கண்ட நாள் முதல் - மேற்கே மேற்கே



படம் : கண்ட நாள் முதல் (2005)
இசை : யுவன் சங்கர் ராஜா

பாடியவர் : சங்கர் மகாதேவன், சாதனா சர்கம்
பாடல் வரி : 
தாமரை









லை லை லை லை லாகி லாகி லாகி லே...
மேற்கே மேற்கே மேற்கே தான்
சூரியன்கள் உதித்திடுமே


சுடும் வெயில் கோடை காலம்
கடும் பனி வாடை காலம்
இரண்டுக்கும் நடுவே ஏதும் காலம் உள்ளதா?
இலை உதிர் காலம் தீர்ந்து
எழுந்திடும் மண்ணின் வாசம்
முதல் மழை காலம் என்றே நெஞ்சம் சொல்லுதே


ஓ... மின்னலும் மின்னலும்
நேற்று வரை பிரிந்தது ஏனோ
பின்னலாய் பின்னலாய்
இன்றுடன் பிணைந்திட தானோ
லை லை லை லே லால லை லை லே
மேற்கே மேற்கே மேற்கே தான்
சூரியன்கள் உதித்திடுமே


ஓ... கோபம் கொள்ளும் நேரம்
வானம் எல்லாம் மேகம்
காணாமலே போகும் ஒரே நிலா
ஓ... கோபம் தீரும் நேரம்
மேகம் இல்லா வானம்
பௌர்ணமியாய் தோன்றும் அதே நிலா


இனி எதிரிகள் என்றே எவருமில்லை
பூக்களை விரும்பா வேர்களில்லை
நதியை வீழ்த்தும் நாணல் இல்லையே
இது நீரின் தோளில் கை போடும்
ஒரு சின்ன தீயின் கதையாகும்
திரைகள் இனிமேல் தேவை இல்லையே


மேற்கே மேற்கே மேற்கே தான்
சூரியன்கள் உதித்திடுமே
லை லை லை லை லாகி லாகி லகி லகி லே...


வாசல் கதவை யாரோ
தட்டும் ஓசை கேட்டால்
நீதானென்று பார்த்தேனடி சகி...
பெண்கள் கூட்டம் வந்தால்
எங்கே நீயும் என்றே
இப்பொதெல்லாம் தேடும் எந்தன் விழி...


இனி கவிதையில் கைகள் நனைந்திடுமோ
காற்றே சிறகாய் விரிந்திடுமோ
நிலவின் முதுகை தீண்டும் வேகமோ...
அட தேவைகள் இல்லை என்றாலும்
வாய் உதவிகள் கேட்டு மன்றாடும்
மாட்டேன் என நீ சொன்னால் தாங்குமோ...


மேற்கே மேற்கே மேற்கே தான்
சூரியன்கள் உதித்திடுமே
லை லை லை லை லை...
சூரியன்கள் உதித்திடுமே
மின்னலும் மின்னலும்
நேற்று வரை பிரிந்தது ஏனோ
பின்னலாய் பின்னலாய்
இன்றுடன் பிணைந்திட தானோ

Thursday, March 3, 2011

கண்ட நாள் முதல் - உன் பனித்துளி




படம் : கண்ட நாள் முதல் (2005)
இசை : யுவன் சங்கர் ராஜா

பாடியவர் : ஸ்ரேயாகோஷல், கே.கே
பாடல் வரி : 
தாமரை









கரு கரு கரு கரு கண்ணு பட்டு வாடிவிடும்
வாசமல்லி சந்தனத்த பூசிவிடுங்க 
அடுத்தது அடுத்தது எப்பவுன்னு
மாமியாரு கேக்கும் முன்னே..? 
அரை டஜன் பெத்து கொடுங்க....!! 

தக தக தக தக தங்க சிலை
தவிக்குது வெக்கதில
போதும் அத விட்டுவிடுங்க

ஆரிராரோ ஆரிராரோ
நாளைக்குன்னு தேவைபடும் தாலாட்டுல
ஒண்ணு ரெண்டு கத்துகொடுங்க

உன் பனித்துளி பனித்துளி பனித்துளி 
என்னை சுடுவது சுடுவது ஏனோ..? 
என் சூரியன் சூரியன் சூரியன் 
அதில் உருகுது உருகுது ஏனோ..? 
இது நனவாய் தோன்றும் கனவு 
இது காலையில் தோன்றும் நிலவு 
இது கண்ணை கண்ணை
பறித்து வெளிச்சம் தரும் இரவு 


காதலா காதலா எண்ணவும் கூசுதே 
ஆசையும் நாணமும் சண்டைகள் போடுதே.. 


உன் பனித்துளி பனித்துளி பனித்துளி 
என்னை சுடுவது சுடுவது ஏனோ? 
என் சூரியன் சூரியன் சூரியன் 
அதில் உருகுது உருகுது ஏனோ? 


கரு கரு கரு கரு கண்ணு பட்டு வாடிவிடும்
வாசமல்லி சந்தனத்த பூசிவிடுங்க 
அடுத்தது அடுத்தது எப்பவுன்னு
மாமியாரு கேக்கும் முன்னே..? 
அரை டஜன் பெத்து கொடுங்க....!! 

தக தக தக தக தங்க சிலை
தவிக்குது வெக்கதில
போதும் அத விட்டுவிடுங்க

ஆரிராரோ ஆரிராரோ
நாளைக்குன்னு தேவைபடும் தாலாட்டுல
ஒண்ணு ரெண்டு கத்துகொடுங்க

விரல்களும் நகங்களும்
தொட்டு கொண்ட நேரங்கள் 


எண்ணி அதை பார்த்ததில்லை
என்ற போதும் நூறுகள்


ஏதோ ஒரு தென்றல் மோதி
மெல்ல மெல்ல மாறினோம்


ஓ... உன்னை நானும் என்னை நீயும்
எங்கே என்று தேடினோம்?


நம்மை சுற்றி கூட்டம் வந்தும் தனியானோம்
தனிமையில் நெஞ்சிகுள்ள பேசலானோம்


பேசும் போதே பேசும் போதே மெளனமானோம்!!



உன் பனித்துளி பனித்துளி பனித்துளி 
என்னை சுடுவது சுடுவது ஏனோ? 
என் சூரியன் சூரியன் சூரியன் 
அதில் உருகுது உருகுது ஏனோ?

முகதிரைகுள்ளே நின்று கண்ணாமூச்சி ஆடினாய்..


பொய்யால் ஒரு மாலை கட்டி பூசை செய்து சூடினாய்


நிழல்களின் உள்ளே உள்ள நிஜங்களை தேடினேன்


நீயாய் அதை சொல்வாய் என நித்தமும் நான் வாடினேன்


சொல்ல நினைத்தேன் ஆனால் வார்த்தையில்லை
உன்னை விட்டால் யாரும் எந்தன் சொந்தம் இல்லை


சொந்தம் என்று யாரும் இனி தேவையில்லை......


உன் பனித்துளி பனித்துளி பனித்துளி 
என்னை சுடுவது சுடுவது ஏனோ..? 
என் சூரியன் சூரியன் சூரியன் 
அதில் உருகுது உருகுது ஏனோ..?



இது நனவாய் தோன்றும் கனவு 
இது காலையில் தோன்றும் நிலவு 
இது கண்ணை கண்ணை
பறித்து வெளிச்சம் தரும் இரவு

காதலா காதலா எண்ணவும் கூசுதே 
ஆசையும் நாணமும் சண்டைகள் போடுதே.. 


உன் பனித்துளி பனித்துளி பனித்துளி 
என்னை சுடுவது சுடுவது ஏனோ..?

என் சூரியன் சூரியன் சூரியன் 
அதில் உருகுது உருகுது ஏனோ..?

Friday, August 13, 2010

நாணயம் - நான் போகிறேன் மேலே


படம் :நாணயம் (2010)
பாடியவர்: S.P. பால சுப்பிரமணியம், K.S. சித்ரா
இசை : ஜேம்ஸ் வசந்தன்
பாடலாசிரியர் :தாமரை


 



நான்  போகிறேன்  மேலே  மேலே
பூலோகமே  காலின்  கீழே
விண்மீன்களின்  கூட்டம்   என்  மேலே
பூ  வாளியின்  நீரை  போலே
நீ  சிந்தினாய்  எந்தன்  மேலே
நான்  பூக்கிறேன்  பன்னீர்  பூ  போலே
தடுமாறி  போனேன்  அன்றே  உன்னை  பார்த்த  நேரம்
அடையாளம்  இல்லா  ஒன்றை  கண்டேன்  நெஞ்சின்  ஓரம்
ஏன்  உன்னை  பார்த்தேன்  என்றே  உள்ளம்  கேள்வி  கேட்கும்
ஆனாலும்  நெஞ்சம்  வந்து  நேரத்தை  நேசிக்கும் 

நான்  போகிறேன்  மேலே  மேலே 
பூலோகமே  காலின்  கீழே 
விண்மீன்களின்  கூட்டம்   என்  மேலே 
பூ  வாளியின்  நீரை  போலே 
நீ  சிந்தினாய்  எந்தன்  மேலே 
நான்  பூக்கிறேன்  பன்னீர்  பூ  போலே
தடுமாறி  போனேன்  அன்றே  உன்னை  பார்த்த  நேரம் 
அடையாளம்  இல்லா  ஒன்றை  கண்டேன்  நெஞ்சின்  ஓரம் 
ஏன்  உன்னை  பார்த்தேன்  என்றே  உள்ளம்  கேள்வி  கேட்கும் 
ஆனாலும்  நெஞ்சம்  வந்து  நேரத்தை  நேசிக்கும்

கண்ணாடி  முன்னே  நின்றே 
தனியாக  நான்  பேச 
யாரென்னும்  ஜன்னல்  தாண்டி  பார்த்தால்  ஐயோ 
உள்பக்கம்  தாழ்பாள்  போட்டும் 
அறையினுள்  நீ  வந்தாய் 
கை  நீட்டித்  தொட்டுப்  பார்த்தேன்  காற்றை  ஐயோ 

என்  வீட்டில்  நீயும்  வந்து  சேரும்  காலம்  எக்காலம் 
பூ  மாலை  செய்தேன்  வாடுதே 
என்  மெத்தை  தேடும்  போர்வை  யாவும்  சேலை  ஆகாதோ 
வாராதோ  அன்னாளும்  இன்று ,ஹானான்


என்  தூக்கம்  வேண்டும்  என்றாய் 
தரமாட்டேன்  என்றேனே 
கனவென்னும்  கள்ளச்சாவி  கொண்டே  வந்தாய் 
வார்த்தைகள்  தேடி  தேடி  நான்  பேசி  பார்த்தேனே 
மௌனத்தில்  பேசும்  வித்தை  நீதான்  தந்தாய்

அன்றாட  போகும்  பாதை  யாவும்  இன்று  மாற்றங்கள் 
காணாமல்  போனேன்  பாதியில் 
நீ  வந்து  என்னை  மீட்டி  செல்வாய்  என்று  இங்கேயே 
கால்  நோக  கால்  நோக  நின்றேனே

நான்  போகிறேன்  மேலே  மேலே 
பூலோகமே  காலின்  கீழே 
விண்மீன்களின்  கூட்டம்   என்  மேலே 

பூ  வாளியின்  நீரை  போலே 
நீ  சிந்தினாய்  எந்தன்  மேலே 
நான்  பூக்கிறேன்  பன்னீர்  பூ  போலே

ஆ ....
தடுமாறி  போனேன்  அன்றே  உன்னை  பார்த்த  நேரம் 

அடையாளம்  இல்லா  ஒன்றை  கண்டேன்  நெஞ்சின்  ஓரம் 

ஏன்  உன்னை  பார்த்தேன்  என்றே  உள்ளம்  கேள்வி  கேட்கும் 

ஆனாலும்  நெஞ்சம்  வந்து  நேரத்தை  நேசிக்கும் 




Popular Posts