Showing posts with label Yazin Nizar. Show all posts
Showing posts with label Yazin Nizar. Show all posts

Saturday, March 17, 2018

Neeye - Neeye

ஆல்பம்: நீயே (2016)
இசை: பாணி கல்யாண்
பாடியவர்: யாசின் நிசார், சரண்யா ஸ்ரீனிவாஸ்
பாடல்வரிகள்: அறிவு


Image result for Neeye - A tamil musical dance video



நீயே...
முதல் வெட்கம் தந்த நீயே...
மனப்பக்கம் வந்த நீயே...
காதல் ஆனதே...
நீயே... நீயே...

இரவும் பகலும் நீதானே

கடலும் அலையும் நுரையும் நீதானே
உடலும் உயிரும் நீயே...
எங்கும் எதிலும் நீயே...
எதிலும் அதிலும் நீயே...

நீயே... தட்டி விடுவதும் நீயே...
எட்டி பிடிப்பதும் நீயே எனை கொல்லடி
ஆ... காதல்… நடந்திடும் இந்த மோதல்
எது வந்த போதும் நீயே தாயுமாகி நில்…


எதிலும் உனது முகம் வந்து

எனது கவனம் தடுமாறும்
அதிலும் கூட சுகமாக
ஓர் அமைதி காண்கிறேன்

எதிரே வந்து நின்றாலே

எனது நிலமை என்னாகும்
விலகி நீயும் நடந்தாலே
நான் உடைந்து போகிறேன்

நீயே... எனதுயிர் சத்தம் நீயே

எதிர் வரும் திட்டம் நீயே நானாகிறேன்
ஆ.. பாதை… வழியினில் ஒரு வே..ர்வை
இவன் நனைத்திடும் போதை என்னை நீக்க வா


நீ எனை மறந்தால் வேறொரு உறவில்லையே

நான் எனை தருவேன் நீ வரும் மறுநொடியே

நானும் இங்கே நீயாக வாழ நீயும் வந்தாயே

நீயும் இங்கே நானாக வரம் வேண்டுமே
நீயே… வலி தருவதும் நீயே
வழி விடுவதும் நீயே முரண்பாடு ஏன்?
ஓ... காதல் உயிர் வலி வரும் தேடல்
இடையினில் வரும் ஊடல் நலம் காணவா…

Sunday, December 10, 2017

Sathya - Yavvana

பட‌ம்: சத்யா (2017)
இசை: சைமன் K. கிங்
பாடியவர்கள்: யாசின் நிஷார், கல்யாணி நாயர்
பாடல்வரிகள்: மதன் கார்க்கி


Image result for sathya movie



யாரோடும் சொல்லாத மூவேழில் கொள்ளாத
அச்சங்கள் கொண்டாடுதே
யாரோடும் சொல்லாத மூவேழில் கொள்ளாத
அச்சங்கள் கொண்டாடுதே 

என் கையை கோர் யவ்வனா...
என் கண்கள் பார் யவ்வனா...
என் நெஞ்சில் சேர் யவ்வனா...
திரன திரன... னா...
என் வார்த்தை கேள் யவ்வனா...
என் வாழ்வாய் நீ யவ்வனா...
என் வானே நீ யவ்வனா...
எங்கேயும் செல்லாதே எந்நாளும் நில்லாதே...

யாரோடும் சொல்லாத மூவேழில் கொள்ளாத
அச்சங்கள் கொண்டாடுதே
விண்ணோடும் செல்லாமல் மண்ணோடும் நில்லாமல்
என் கால்கள் திண்டாடுதே
கண்ணாடி பூவாகிறேன்
உன் கையில் நான் வீழ்கிறேன் என் அன்பே... ஹே...

என் கையை கோர் யவ்வனா...
என் கண்கள் பார் யவ்வனா...
என் நெஞ்சில் சேர் யவ்வனா...
திரன திரன... னா...
என் வார்த்தை கேள் யவ்வனா...
என் வாழ்வாய் நீ யவ்வனா...
என் வானே நீ யவ்வனா...
எங்கேயும் செல்லாதே எந்நாளும் நில்லாதே...


நிறவொளி நிறவொளி சிதறுது வானம்
நமக்கென இசைக்குது காலநதி
விழிகளில் காதலும் ஓவியம் தீட்டிடுதே
எதிரினில் அருகினில் அழகிய நாளை
மலர்களில் படர்ந்திடும் பாதை இது
பழகிய கனவென பூமியும் மாறிடுதே

வெளியிலே ஓர் புன்னகை
அணிகிறேன் நான் போலியாய்
பயங்களை நீ நீக்கியே
அணைத்திடு காதல் வேலியாய்
தீ ஒன்றின் பொறியாக நான்
எனை சூடும் திரியாக நீ என் அன்பே... ஹே..

என் கையை கோர் யவ்வனா...
என் கண்கள் பார் யவ்வனா...
என் நெஞ்சில் சேர் யவ்வனா...
திரன திரன... னா... னா...




Sunday, September 10, 2017

Nedunalvaadai - Ore Oru Kanpaarvai

படம்: நெடுநல்வாடை (2017)
இசை: ஜோஸ்  ‍ஃப்ராங்களின் 
பாடியவர்கள்: யாசின் நிஸார், பூர்ணிமா கிருஷ்ணன்
பாடல் வரிகள்: வைரமுத்து





ஒரே ஒரு கண்பார்வை
ஒரே ஒரு மெய்தீண்டல்
அதை எண்ணி உயிர் வாழ்வேன் அன்பே

ஒரே ஒரு கண்பார்வை
ஒரே ஒரு மெய்தீண்டல்
அதை எண்ணி உயிர் வாழ்வேன் அன்பே

பிரிவு இல்லாத காதல்
அது சுவர்கள் இல்லாத வீடு
இந்த உறவும் வாழ்க...
பிரிவும் வாழ்க...
வலிகள் வாழ்கவே...

பிரிவு இல்லாத காதல்
அது சுவர்கள் இல்லாத வீடு
இந்த உறவும் வாழ்க...
பிரிவும் வாழ்க...
வலிகள் வாழ்கவே...

ஒரே ஒரு கண்பார்வை
ஒரே ஒரு மெய்தீண்டல்
அதை எண்ணி உயிர் வாழ்வேன் அன்பே


வெய்யில் காயும் செடிகள் தானே
மழைதன்னை நேசிக்கும்
உடல் தாண்டும் காதல் தானே
உண்மை அன்பை யாசிக்கும்

ஊரைவிட்டு போனால் என்ன‌
உள்ளம் உன்னை பூசிக்கும்
சிறகுகொன்று வேண்டும் என்று
சின்ன உள்ளம் நேசிக்கும்

உன்பேரை சொல்லி கொண்டு
உயிரை நான் கிள்ளி கொண்டு
காற்றோடு பேசி கொண்டு வாழ்வேன் ராசாத்தி

கண்ணீரை முடி கொண்டு
கனவோடு பாடி கொண்டு
காற்றோடு தேடி கொண்டு வாழ்வேன் கண்ணாளா

இடைவெளிகளின் வெளியிலே
இரு இதயங்கள் எரியுதே

எரிவதிலும் சுகமிருக்கு
எரியும் மெழுகும் ஒளி வீசும்

அடி நம்மை கண்டு கண்ணீர் சிந்திக்
கரைந்தே போனது மேகம்

ஒரே ஒரு கண்பார்வை
ஒரே ஒரு மெய்தீண்டல்
அதை எண்ணி உயிர் வாழ்வேன் அன்பே



எந்த பக்கம் பார்க்கும் போதும்
அன்பே உந்தன் பிம்பங்கள்
கண்ணில் ஏதும் கோளாறில்லை
கண்ணா என்னை நம்புங்கள்

மேகம் ஏதும் சிந்தாமல்
மண்ணில் என்ன ஈரங்கள்
கண்ணே உன்னை காணாமல்
கண்ணீர் செய்த சாரங்கள்

ஊர் என்ன சொன்னால் என்ன‌
யார் என்ன சொன்னால் என்ன‌
இதயத்தின் ஆசை ஒசை என்றும் நில்லாது

கை தீண்டல் வேண்டாம் பெண்ணே
கண் தீண்டல் போதும் கண்ணே
காலத்தின் கடைசி வரையில் ஜீவன் போகாது

உன்னை ஒரு முறை காணவே
உயிர் முழுவதும் ஏங்குதே

நெஞ்சடியில் காணுகிறேன்
நினைவே நினைவே நீங்காதே

அட நெஞ்ச உன்வசம் ஆகியபோது
நினைவும் கனவும் ஏது?

Wednesday, September 6, 2017

Nedunalvaadai - Yedho Aagippochu

படம்: நெடுநல்வாடை (2017)
இசை: ஜோஸ்  ‍ஃப்ராங்களின்
பாடியவர்கள்: ஸ்வேதா மோகன், யாசின் நிஸார்
பாடல் வரிகள்: வைரமுத்து







ஏதோ ஆகிப் போச்சு
இதயம் இத்துப் போச்சு
ஏனோ இந்த கூத்து நீ சொல்லய்யா

ரோசா மொட்டுக்குள்ள‌
லேசா மெட்டுக்கட்டி
குத்திக் குடையும் வண்டு நீ தானய்யா

பைத்தியமா ஏம் பருவத்த சுத்தவிட்ட‌
பம்பரமா பெண் தாங்காதய்யா
சத்தியமா நான் சாதஞ் சோறு உண்ணலையே
பத்தியமா கண் தூங்காதய்யா

கஞ்சிக்குள் போட்ட உப்பு
கஞ்சியெல்லாங் கூடி போகும்
அது போல நெஞ்சில் சேந்தியே

கண் மூடி தூங்க போனா
கண்ணோடு கலகம் செஞ்ச‌
கனவோடு சிறகாய் நீந்தியே

ஏதோ ஆகிப் போச்சு
இதயம் இத்துப் போச்சு
ஏனோ இந்த கூத்து நீ சொல்லய்யா



காதல் வந்த பொண்ணும்
கண்ணடிச்ச கண்ணும்
உரியவ‌ன் சொல்லாம ஒறங்கிடுமா?

ஒத்த மழத்தூறல்
முத்தந்தரும் போதும்
கொடிகளின் கும்மாளம் கொறைஞ்சிடுமா?

உறவெல்லாம் வெறுத்தாலும்
ஊரெல்லாம் பகைச்சாலும்
ஒங்கூட வாழ்வேன் சுந்தரா

இன்பத்தில் பொரண்டாலும்
துன்பத்தில் மெரண்டாலும்
சரிபாதி நீதான் சங்கரா

கஞ்சிக்குள் போட்ட உப்பு
கஞ்சியெல்லாங் கூடி போகும்
அது போல நெஞ்சில் சேந்தியே

கண் மூடி தூங்க போனா
கண்ணோடு கலகம் செஞ்ச‌
கனவோடு சிறகாய் நீந்தியே

ஏதோ ஆகிப் போச்சு
இதயம் இத்துப் போச்சு
ஏனோ இந்த கூத்து நீ சொல்லய்யா

ரோசா மொட்டுக்குள்ள‌
லேசா மெட்டுக்கட்டி
குத்திக் குடையும் வண்டு நீ தானய்யா


ஒன்னத் தொட்ட இன்பம்
புத்திக்குள்ள போனா
கண்ணுமண்ணு எல்லாமே தெரியலையே

பொட்டப்பிள்ள குள்ள‌
எட்டு கோடி இன்பம்
முன்னபின்ன எப்போதுங் காங்கலையே

எலும்பெல்லாந் தேனூற‌
நரம்பெல்லாம் பூப்பூக்க‌
எளம்பொண்ணு ஏதோ செஞ்சிட்டா

ஒடம்பெல்லாம் கடுங்காய்ச்சல்
உள்ளுக்குள் பனிமுட்டம்
மகராசி மாயம் பண்ணிட்டா

ஒருவேளை தந்த இன்பம்
மறுவேளை வருமா என்று
ருசி கண்ட நெஞ்சு கேட்குது

தவறென்று கண்டபின்னும்
தடுமாறும் ஏழை உள்ளம்
படித் தாண்ட தானே பாக்குது

ஏதோ ஆகிப் போச்சு
இதயம் இத்துப் போச்சு
ஏனோ இந்த கூத்து நீ சொல்லம்மா

நெஞ்சா பழத்துக்குள்ள‌
கொஞ்சம் கூடுக்கட்டி
குத்திக் குடையும் வண்டு நீ தானம்மா

Popular Posts