Wednesday, September 6, 2017

Nedunalvaadai - Yedho Aagippochu

படம்: நெடுநல்வாடை (2017)
இசை: ஜோஸ்  ‍ஃப்ராங்களின்
பாடியவர்கள்: ஸ்வேதா மோகன், யாசின் நிஸார்
பாடல் வரிகள்: வைரமுத்து







ஏதோ ஆகிப் போச்சு
இதயம் இத்துப் போச்சு
ஏனோ இந்த கூத்து நீ சொல்லய்யா

ரோசா மொட்டுக்குள்ள‌
லேசா மெட்டுக்கட்டி
குத்திக் குடையும் வண்டு நீ தானய்யா

பைத்தியமா ஏம் பருவத்த சுத்தவிட்ட‌
பம்பரமா பெண் தாங்காதய்யா
சத்தியமா நான் சாதஞ் சோறு உண்ணலையே
பத்தியமா கண் தூங்காதய்யா

கஞ்சிக்குள் போட்ட உப்பு
கஞ்சியெல்லாங் கூடி போகும்
அது போல நெஞ்சில் சேந்தியே

கண் மூடி தூங்க போனா
கண்ணோடு கலகம் செஞ்ச‌
கனவோடு சிறகாய் நீந்தியே

ஏதோ ஆகிப் போச்சு
இதயம் இத்துப் போச்சு
ஏனோ இந்த கூத்து நீ சொல்லய்யா



காதல் வந்த பொண்ணும்
கண்ணடிச்ச கண்ணும்
உரியவ‌ன் சொல்லாம ஒறங்கிடுமா?

ஒத்த மழத்தூறல்
முத்தந்தரும் போதும்
கொடிகளின் கும்மாளம் கொறைஞ்சிடுமா?

உறவெல்லாம் வெறுத்தாலும்
ஊரெல்லாம் பகைச்சாலும்
ஒங்கூட வாழ்வேன் சுந்தரா

இன்பத்தில் பொரண்டாலும்
துன்பத்தில் மெரண்டாலும்
சரிபாதி நீதான் சங்கரா

கஞ்சிக்குள் போட்ட உப்பு
கஞ்சியெல்லாங் கூடி போகும்
அது போல நெஞ்சில் சேந்தியே

கண் மூடி தூங்க போனா
கண்ணோடு கலகம் செஞ்ச‌
கனவோடு சிறகாய் நீந்தியே

ஏதோ ஆகிப் போச்சு
இதயம் இத்துப் போச்சு
ஏனோ இந்த கூத்து நீ சொல்லய்யா

ரோசா மொட்டுக்குள்ள‌
லேசா மெட்டுக்கட்டி
குத்திக் குடையும் வண்டு நீ தானய்யா


ஒன்னத் தொட்ட இன்பம்
புத்திக்குள்ள போனா
கண்ணுமண்ணு எல்லாமே தெரியலையே

பொட்டப்பிள்ள குள்ள‌
எட்டு கோடி இன்பம்
முன்னபின்ன எப்போதுங் காங்கலையே

எலும்பெல்லாந் தேனூற‌
நரம்பெல்லாம் பூப்பூக்க‌
எளம்பொண்ணு ஏதோ செஞ்சிட்டா

ஒடம்பெல்லாம் கடுங்காய்ச்சல்
உள்ளுக்குள் பனிமுட்டம்
மகராசி மாயம் பண்ணிட்டா

ஒருவேளை தந்த இன்பம்
மறுவேளை வருமா என்று
ருசி கண்ட நெஞ்சு கேட்குது

தவறென்று கண்டபின்னும்
தடுமாறும் ஏழை உள்ளம்
படித் தாண்ட தானே பாக்குது

ஏதோ ஆகிப் போச்சு
இதயம் இத்துப் போச்சு
ஏனோ இந்த கூத்து நீ சொல்லம்மா

நெஞ்சா பழத்துக்குள்ள‌
கொஞ்சம் கூடுக்கட்டி
குத்திக் குடையும் வண்டு நீ தானம்மா

Popular Posts