படம்: நெடுநல்வாடை (2017)
இசை: ஜோஸ் ஃப்ராங்களின்
பாடியவர்கள்: மச்சியம் பாலா, கலக்கல் காவ்யா, சுகந்தி
பாடல் வரிகள்: வைரமுத்து
தங்க காவடி எடுக்கிறோம் சாமி
எங்க வாழ்வுக்கு வரம் கொடுங்க
சாதி சனமெல்லாம் பொழைக்கனும் சாமி
சின்னஞ் சிறுசுக்கு வழி விடுங்க
மதுரை வீரா... சுடலை மாடா...
வழி துணையாக வாங்க வாங்க
மதுரை வீரா... சுடலை மாடா...
வழி துணையாக வாங்க வாங்க
வாழாத பிஞ்சுகள ஒங்க
வாயால வாழ்த்திடுங்க
பொல்லாத பகை முடிக்க
ரெண்டு பூமால சூட்டிடுங்க
ஈயோடு எறும்புகளும் இங்க
இஷ்டம் போல் வாழுதுங்க
ஆனாலும் ஆணும் பொண்ணும்
தினம் அல்லாடி போகுதுங்க
சுடச் சுட மழையடிக்குது
சுடலைமாடன் காட்டுக்குள்ள
சின்னச் சின்ன குருவி ரெண்டும்
றெக்கையடிக்குது கூட்டுக்குள்ள
பருவம் கனிஞ்சிருக்குது
படி கடக்கணும் வீட்டுக்குள்ள
துணிஞ்சி முடிவெடுக்கணும்
துணிஞ்ச நெஞ்சில் துக்கமில்ல
சுடச் சுட மழையடிக்குது
சுடலைமாடன் காட்டுக்குள்ள
சின்னச் சின்ன குருவி ரெண்டும்
றெக்கையடிக்குது கூட்டுக்குள்ள
புத்தம் புது நெல் குத்து பொங்க வைப்போம்
இங்க ஏழ சனம் எல்லாரும் திங்க வைப்போம்
ஏ... நல்லது கெட்டது எல்லாமே சொல்லி வைப்போம்
வரம் கொடுக்கலயா சாமி தலைய கிள்ளி வைப்போம்
மாசம் மூணு மழை பெய்ய வேணும்
சாமிகளே எங்க சாமிகளே
ஆணும் பொண்ணும் அன்பாக வேணும்
தெய்வகளே எங்க தெய்வகளே
பொண்ணுங்க அணிகின்ற புது மஞ்சத்தாலி
வாழ்வெல்லாம் நிலையாக அருள்பாலிங்க
பூச்சூடும் மணவாளன் புகழோடு வாழ
வயதான தெய்வங்க வழி காட்டுங்க
அன்பு கொண்ட உள்ளத்துக்கா அக்கபோரு
ஒரு தீக்குச்சிக்கு தாங்காது வைக்கப்போரு
சுத்தியுள்ள சாதிசனம் உத்துப்பாரு
நீ சொந்தக்காலில் எப்போதும் நிக்கப்பாரு
நீதி நியாயம் தவறாகிப் போனா
வாதாடுவோம் இன்னும் போராடுவோம்
பந்தம் பாசம் சிறையாகி போனா
படித்தாண்டுவோம் சும்மா பறந்தோடுவோம்
ஊரெல்லாம் பயிர்வாழ மழை காட்டும் சாமி
உறவெல்லாம் உயிர்வாழ வழி காட்டய்யா
கொடுமீசை கொடுவாளு போதாது சாமி
கூடாத பகையெல்லாம் பலி போடய்யா
இசை: ஜோஸ் ஃப்ராங்களின்
பாடியவர்கள்: மச்சியம் பாலா, கலக்கல் காவ்யா, சுகந்தி
பாடல் வரிகள்: வைரமுத்து
தங்க காவடி எடுக்கிறோம் சாமி
எங்க வாழ்வுக்கு வரம் கொடுங்க
சாதி சனமெல்லாம் பொழைக்கனும் சாமி
சின்னஞ் சிறுசுக்கு வழி விடுங்க
மதுரை வீரா... சுடலை மாடா...
வழி துணையாக வாங்க வாங்க
மதுரை வீரா... சுடலை மாடா...
வழி துணையாக வாங்க வாங்க
வாழாத பிஞ்சுகள ஒங்க
வாயால வாழ்த்திடுங்க
பொல்லாத பகை முடிக்க
ரெண்டு பூமால சூட்டிடுங்க
ஈயோடு எறும்புகளும் இங்க
இஷ்டம் போல் வாழுதுங்க
ஆனாலும் ஆணும் பொண்ணும்
தினம் அல்லாடி போகுதுங்க
சுடச் சுட மழையடிக்குது
சுடலைமாடன் காட்டுக்குள்ள
சின்னச் சின்ன குருவி ரெண்டும்
றெக்கையடிக்குது கூட்டுக்குள்ள
பருவம் கனிஞ்சிருக்குது
படி கடக்கணும் வீட்டுக்குள்ள
துணிஞ்சி முடிவெடுக்கணும்
துணிஞ்ச நெஞ்சில் துக்கமில்ல
சுடச் சுட மழையடிக்குது
சுடலைமாடன் காட்டுக்குள்ள
சின்னச் சின்ன குருவி ரெண்டும்
றெக்கையடிக்குது கூட்டுக்குள்ள
புத்தம் புது நெல் குத்து பொங்க வைப்போம்
இங்க ஏழ சனம் எல்லாரும் திங்க வைப்போம்
ஏ... நல்லது கெட்டது எல்லாமே சொல்லி வைப்போம்
வரம் கொடுக்கலயா சாமி தலைய கிள்ளி வைப்போம்
மாசம் மூணு மழை பெய்ய வேணும்
சாமிகளே எங்க சாமிகளே
ஆணும் பொண்ணும் அன்பாக வேணும்
தெய்வகளே எங்க தெய்வகளே
பொண்ணுங்க அணிகின்ற புது மஞ்சத்தாலி
வாழ்வெல்லாம் நிலையாக அருள்பாலிங்க
பூச்சூடும் மணவாளன் புகழோடு வாழ
வயதான தெய்வங்க வழி காட்டுங்க
அன்பு கொண்ட உள்ளத்துக்கா அக்கபோரு
ஒரு தீக்குச்சிக்கு தாங்காது வைக்கப்போரு
சுத்தியுள்ள சாதிசனம் உத்துப்பாரு
நீ சொந்தக்காலில் எப்போதும் நிக்கப்பாரு
நீதி நியாயம் தவறாகிப் போனா
வாதாடுவோம் இன்னும் போராடுவோம்
பந்தம் பாசம் சிறையாகி போனா
படித்தாண்டுவோம் சும்மா பறந்தோடுவோம்
ஊரெல்லாம் பயிர்வாழ மழை காட்டும் சாமி
உறவெல்லாம் உயிர்வாழ வழி காட்டய்யா
கொடுமீசை கொடுவாளு போதாது சாமி
கூடாத பகையெல்லாம் பலி போடய்யா