Tuesday, June 2, 2020

Tamizhi

ப‌டம் : தமிழி (2019)
இசை : ஹிப்ஹாப் தமிழா
பாடியவர்கள் :  ஹிப்ஹாப் தமிழா, அந்தோணிதாசன் 
பாடல்வரிகள் : ஹிப்ஹாப் தமிழா

hiphop tamizha tamizhi episodes 1 Mp4 HD Video WapWon



எம்மதமும் சம்மதமாகும்
தமிழ் வரமாகும் தமிழ் உரமாகும்
இந்த உலகாகும் எங்கள் உறவாகும்
தமிழி... வழியே உயிரே உறவே தமிழே

எம்மதமும் சம்மதமாகும்
தமிழ் வரமாகும் தமிழ் உரமாகும்
இந்த உலகாகும் எங்கள் உறவாகும்
தமிழி... வழியே உயிரே உறவே தமிழே

மொழியால் இணைவாய் 
மொழிதான் துணையே
என் தமிழ் இனமே மொழிதான் பலமே

தமிழால் தான் நீயும் தமிழனே

மொழிதான் உறவே
மொழிதான் தொடர்பே
என் தமிழ் இனமே மொழிதான் பலமே

தமிழால்தான் நீயும் தமிழனே
தமிழால்தான் யாரும் தமிழனே
தமிழ் அறிந்தால் தான் நாம் தமிழரே
என் தமிழ் இனமே மொழிதான் பலமே

என் தமிழ் இனமே மொழிதான் பலமே
எம்மதமும் சம்மதமாகும்
தமிழ் வரமாகும் தமிழ் உரமாகும்
இந்த உலகாகும் எங்கள் உறவாகும்
தமிழி... 

மொழியே உயிரே உறவே தமிழே

எம்மதமும் சம்மதமாகும்
தமிழ் வரமாகும் தமிழ் உரமாகும்
இந்த உலகாகும் எங்கள் உறவாகும்
தமிழி... 

மொழியே உயிரே உறவே தமிழே

தமிழே... 

தமிழே...

எங்கள் உடல் பொருள் ஆவியும் நீ... 

தமிழி

எங்கள் அறிவுக்குள் எரிகின்ற தீ... 

தமிழி தமிழி

தமிழ் அழிந்தால் இனம் அழியும்
தமிழ் அறிவால் மொழி பகிர்வாய்

பல பிரிவாய் ஏன் பிரிந்தாய்
இனி தமிழால் ஒன்றிணைவாய்

இனம் வேறு மதம் வேறு
குலம் வேறு என பிரிந்திடும் வரலாறு

இருந்தாலும் ஒரு போதும்
பகை உணர்வினை செம்மொழி வளர்க்காது

மனிதனாய் இருந்தால் ஒரு வேளை
தமிழனாய் இருப்பாய் 
தமிழனாய் இருப்பாய்
நீ தமிழனாய் இருந்தால் நண்பா 
ஒரு மனிதனாய் இறப்பாய்

மனிதனாய் இறப்பாய்
மனிதனாய் இருந்தால் ஒரு வேளை 
தமிழனாய் இருப்பாய்
நீ தமிழனாய் இருந்தால் நண்பா 
ஒரு மனிதனாய் இறப்பாய்


Digital யுகத்துக்கு வந்தடைந்த செந்தமிழே
வணக்கம் உலகத்துக்காக உழைக்கும்
உலக தமிழர் அனைவருக்கும்
தமிழ்தானே நம்மை இணைக்கும்
அன்பாலே நம்மை பிணைக்கும்
பிற மொழிகளுக்கே துவக்கம்
தமிழ்தானே தமிழரின் விளக்கம்
வணக்கம் ஊரே யாவரும் கேளீர்
தமிழ் அறிந்தால் ஒரு மனிதராய் வாழ்வீர்
ஒரு தலைமுறைக்கும் தமிழ் கற்று தருவீர்
தமிழே நம் அடையாளம் அறிவீர்
உலகில் உள்ள மொழிகள் தோன்றும்
முன்னே தோன்றிய என் மொழி செம்மொழி
எங்கள் உயிர் அது மண்ணில் மறைந்தாலும்
என்றென்றும் வாழிய வாழிய நீ
கொத்து கொத்தாய் தமிழரை
ஒன்று குவித்தாலும் அழித்தாலும்
தமிழ் மொழி வாழும் வரை
தமிழர்க் அழிவில்லை மீண்டும் தோன்றும்
போற்றி பாதுக்காத்திடு நம் மொழியை
உலகிற்கே பரப்பு செம்மொழியை
கீழடி காலடி மறைந்தாலும்
செந்தமிழர் சருகாய் சரிந்தாலும்
தமிழ் உள்ளவரை நம் இனம் வாழும்
தமிழ் உள்ளவரை நம் இனம் வாழும்
தமிழ் உள்ளவரை நம் இனம் வாழும்
தமிழ் உள்ளவரை நம் இனம் வாழும்

தமிழே... என் தமிழே

மனிதனாய் இருந்தால் ஒரு வேளை 
தமிழனாய் இருப்பாய்
நீ தமிழனாய் இருந்தால் நண்பா 
ஒரு மனிதனாய் இறப்பாய் 

Thursday, May 28, 2020

Thirumoorthy - Senguruvi Senguruvi

படம்: திருமூர்த்தி (1995)
இசை: தேவா
பாடியவர்கள்: S.P.பாலசுப்ரமணியம், S. ஜானகி
பாடல்வரிகள்: வாலி

Thirumoorthy tamil Movie - Overview



சிறுவாணி தண்ணியபோல்
சிளுசிளுனு சிரித்திருக்கும்

கடையாணி சக்கரம் போல்
கண்ணிரெண்டும் சுத்திவரும்
மருதானி சிவப்பாட்டம்
மணிகண்ணம் மின்னி வரும்
மகராசி அழகை எல்லாம்
மலர்காத்து பாடி வரும்...


செங்குருவி செங்குருவி
காரமட செங்குருவி
சேலகட்டி மாமனுக்கு
மாலையிட்ட செங்குருவி

செங்குருவி செங்குருவி
காரமட செங்குருவி
சேலகட்டி மாமனுக்கு
மாலையிட்ட செங்குருவி

ஒத்திகைக்குப் போவமா
ஒத்துமையா ஆவமா

முத்திரைய போடம்மா
முத்தமிட்டு பாடம்மா

வெக்கமெல்லாம் மூட்டகட்டி
வச்சா என்ன ஓரமா

செங்குருவி செங்குருவி
காரமட செங்குருவி
சேலகட்டி மாமனுக்கு
மாலையிட்ட செங்குருவி



வெண் பருத்தி நூலெடுத்து
வாய் வெடிச்ச பூவெடுத்து
நான் அணிஞ்சிட தொடுத்துவச்ச
நளினமான மாலையிது

தன தனன‌னா தனன‌னா
தன தனன‌னா தனன‌னா

சென்னிமல தேனெடுத்து
செங்கரும்பின் சாறெடுத்து
நீ பருகிட கலந்து வச்ச
நெருக்கமான வேளையிது

தன தனன‌னா தனன‌னா
தன தனன‌னா தனன‌னா

ஆஆ... ராசாத்தி ஒடம்பிருக்கும்
ரவிக்க துணி நானாக

ஹா...

அன்னாடம் சூடிக்கொள்ள
ஆச வச்சா ஆகாதா

ஆத்தாடி மறைஞ்சிருக்கும்
அழகையெல்லாம் நீ பாத்தா
ஏம்மானம் ரெக்க கட்டி
எட்டுத்திக்கும் போகாதா

அடி சீனி சக்கரையே

ஆ... ஹா...

எட்டி நீயும் நிக்கிறியே

ஆ...

நான் ஏங்கி ஏங்கி பாக்குறப்போ
ராங்கு பண்ணுறியே

செங்குருவி செங்குருவி
காரமட செங்குருவி
சேலகட்டி மாமனுக்கு
மாலையிட்ட செங்குருவி



கள்ளழகர் வைகையிலே
கால் பதிக்கும் வேளையிலே
பால் நிலவில் படுத்திகிட்டு
பருவராகம் பாடணுமே

தன தனன‌னா தனன‌னா
தன தனன‌னா தனன‌னா

சொக்கனுக்குப் பக்கத்திலே
சோடி என்று வந்தவளே
நூல் பொடவையில் ஒளிஞ்சுகிட்டு
நெனச்ச தாளம் போடணுமே

தன தனன‌னா தனன‌னா
தன தனன‌னா தனன‌னா

ஆனாலும் உனக்கு ரொம்ப
அவசரம்தான் மாமாவே

ஆ...

ஒண்ணாக கூடும்போது
ஊர் முழுக்கப் பாக்காதா

ஆ... பாத்தாலும் தவறு இல்ல
பனி உறங்கும் ரோசாவே
முன்னால சோத்த வச்சா
மூக்குலதான் வேக்காதா

என்ன வாட்ட எண்ணுறியே

ஆ... ஆ

கைய கோத்து பின்னுறியே

ஆ... ஆ

உன் பாட்டப் பாடி பலவிதமா
சேட்ட பண்ணுறியே


செங்குருவி செங்குருவி
காரமட செங்குருவி
சேலகட்டி மாமனுக்கு
மாலையிட்ட செங்குருவி

செங்குருவி செங்குருவி
காரமட செங்குருவி
சேலகட்டி மாமனுக்கு
மாலையிட்ட செங்குருவி

ஒத்திகைக்குப் போவமா
ஒத்துமையா ஆவமா

முத்திரைய போடலாம்
முத்தமிட்டு பாடலாம்

வெக்கமெல்லாம் மூட்டகட்டி
வச்சா என்ன ஓரமா

செங்குருவி செங்குருவி
காரமட செங்குருவி
சேலகட்டி மாமனுக்கு
மாலையிட்ட செங்குருவி

Saturday, May 16, 2020

Aayiram Nilave Vaa - Devathai Ilam

படம்: ஆயிரம் நிலவே வா (1983)
இசை: இளையராஜா
பாடியவர்கள்: S.Pபாலசுப்ரமணியம்
பாடல்வரிகள்: வைரமுத்து




Aayiramnilavaevaa.png



தேவதை இளம் தேவி
உன்னைச் சுற்றும் ஆவி
காதலான கண்ணீர் காணவில்லையா
ஓ... நீயில்லாமல் நானா

தேவதை இளம் தேவி 
உன்னைச் சுற்றும் ஆவி
காதலான கண்ணீர் காணவில்லையா
ஓ... நீயில்லாமல் நானா


ஏரிக்கரை பூவெல்லாம் 
எந்தன் பெயர் சொல்லாதோ
பூ வசந்தமே நீ மறந்ததேன்
ஆற்று மணல் மேடெங்கும்
நான் வரைந்த கோலங்கள்
தேவமுல்லையே காணவில்லையே
காதல் சோதனை 
இரு கண்ணில் வேதனை
ஒரு வானம்பாடி தேகம் வாடி
பாடும் சோகம் கோடி

தேவதை இளம் தேவி
உன்னைச் சுற்றும் ஆவி
காதலான கண்ணீர் காணவில்லையா
ஓ... நீயில்லாமல் நானா


எந்தனது கல்லறையில்
வேறொருவன் தூங்குவதா
விதி என்பதா சதி என்பதா
சொந்தமுள்ள காதலியே
வற்றிவிட்ட காவிரியே
உந்தன் ஆவியை நீ வெறுப்பதா
இது கண்ணீர் ராத்திரி
என் கண்ணே ஆதரி
இவன் தேயும் தேதி கண்ணீர் ஜாதி
நீ தான் எந்தன் பாதி

தேவதை இளம் தேவி
உன்னைச் சுற்றும் ஆவி
காதலான கண்ணீர் காணவில்லையா
ஓ... நீயில்லாமல் நானா
ஓ... நீயில்லாமல் நானா

ஓ... நீயில்லாமல் நானா

Friday, May 15, 2020

Oru Thalai Ragam - Kadavul Vazhum

படம்: ஒரு தலை ராகம் (1980)
இசை: T. ராஜேந்தர்
பாடியவர்கள்: P. ஜெயசந்திரன்
பாடல்வரிகள்: T. ராஜேந்தர்

Oru Thalai Ragam - Wikipedia



கடவுள் வாழும் கோவிலிலே கற்பூர‌தீபம்
கலை இழந்த மாடத்திலே முகாரி ராகம்
முகாரி ராகம்... முகாரி ராகம்...
கடவுள் வாழும் கோவிலிலே கற்பூர‌தீபம்
கலை இழந்த மாடத்திலே முகாரி ராகம்
முகாரி ராகம்...
கடவுள் வாழும் கோவிலிலே கற்பூர‌தீபம்


முந்தாணை பார்த்து முன்னூறு கவிதை
என்னாளும் எழுதும் கவிஞர்கள் கோடி
முந்தாணை பார்த்து முன்னூறு கவிதை
என்னாளும் எழுதும் கவிஞர்கள் கோடி
முன்னாடி அறியா பெண்மனதை கேட்டு
அன்புண்டு வாழும் காளையர் கோடி
ஒரு தலை ராகம் எந்த வகையினில் சாரும்
அவள் இரக்கத்தை தேடும் என் மனம் பாடும்

கடவுள் வாழும் கோவிலிலே கற்பூர‌தீபம்
கலை இழந்த மாடத்திலே முகாரி ராகம்
முகாரி ராகம்...
கடவுள் வாழும் கோவிலிலே கற்பூர‌தீபம்


கிணத்துக்குள் வாழும் தவளையை போல
மனதுக்குள் ஆடும் ஆசைகள் கோடி
கிணத்துக்குள் வாழும் தவளையை போல
மனதுக்குள் ஆடும் ஆசைகள் கோடி
கண்கெட்ட பின்னே சூரிய உதயம்
எந்தபக்கம் ஆனால் எனக்கென்ன போடி
ஒருதலை ராகம் எந்த வகையினில் சாரும்
அவள் இரக்கத்தை தேடும் என் மனம் பாடும்

கடவுள் வாழும் கோவிலிலே கற்பூர‌தீபம்
கலை இழந்த மாடத்திலே முகாரி ராகம்
முகாரி ராகம்... முகாரி ராகம்...

Oru Thalai Raagam - Ithu Kuzhanthai

படம்: ஒரு தலை ராகம் (1980)
இசை: T.ராஜேந்தர்
பாடியவர்கள்: S.P.பாலசுப்ரமணியம்
பாடல்வரிகள்: T.ராஜேந்தர்


Oru Thalai Ragam - Wikipedia



இது குழந்தை பாடும் தாலாட்டு...
இது இரவு நேர பூபாளம்...
இது மேற்கில் தோன்றும் உதயம்...
இது நதியில்லாத ஓடம்...


இது குழந்தை பாடும் தாலாட்டு
இது இரவு நேர பூபாளம்
இது மேற்கில் தோன்றும் உதயம்
இது நதியில்லாத ஓடம்
இது நதியில்லாத ஓடம்


நடை மறந்த கால்கள் தன்னின்
தடயத்தைப் பார்க்கிறேன்
வடமிழந்த தேரது ஒன்றை
நாள்தோறும் இழுக்கிறேன்
சிறகிழந்த பறவை ஒன்றை
வானத்தில் பார்க்கிறேன்
சிறகிழந்த பறவை ஒன்றை
வானத்தில் பார்க்கிறேன்
உறவுறாத பெண்ணை எண்ணி
நாளெல்லாம் வாழ்கிறேன்
இது குழந்தை பாடும் தாலாட்டு
இது இரவு நேர பூபாளம்


வெறும் நாரில் கரம் கொண்டு
பூமாலை தொடுக்கிறேன்
வெறும் காற்றில் உளி கொண்டு
சிலை ஒன்றை வடிக்கிறேன்
விடிந்து விட்ட பொழுதில் கூட
விண்மீனை பார்க்கிறேன்
விடிந்து விட்ட பொழுதில் கூட
விண்மீனை பார்க்கிறேன்
விருப்பமில்லா பெண்ணை எண்ணி
உலகை நான் வெறுக்கிறேன்
இது குழந்தை பாடும் தாலாட்டு
இது இரவு நேர பூபாளம்


உளம் அறிந்த பின் தானோ
அவளை நான் நினைத்தது
உறவுறுவாள் என தானோ
மனதை நான் கொடுத்தது
உயிரிழந்த கருவைக் கொண்டு
கவிதை நான் வடிப்பது
உயிரிழந்த கருவைக் கொண்டு
கவிதை நான் வடிப்பது
ஒரு தலையாய் காதலிலே
எத்தனை நாள் வாழ்வது

இது குழந்தை பாடும் தாலாட்டு
இது இரவு நேர பூபாளம்
இது மேற்கில் தோன்றும் உதயம்
இது நதியில்லாத ஓடம்
இது நதியில்லாத ஓடம்


Oru Thalai Ragam - Vasamilla Malar Ithu

படம்: ஒரு தலை ராகம் (1980)
இசை: T.ராஜேந்தர்
பாடியவர்கள்: S.P.பாலசுப்ரமணியம்
பாடல்வரிகள்: T.ராஜேந்தர்


Oru Thalai Ragam - Wikipedia



வாசமில்லா மலரிது ஹாஹா வசந்தத்தைத் தேடுது
வாசமில்லா மலரிது வசந்தத்தைத் தேடுது
வைகையில்லா மதுரையிது மீனாட்சியைத் தேடுது
ஏதேதோ ராகம் எந்நாளும் பாடும்
அழையாதார் வாசல் தலை வைத்து ஓடும்
வாசமில்லா மலரிது வசந்தத்தைத் தேடுது


பாட்டுக்கொரு ராகம் ஏற்றி வரும் புலவா
உனக்கேன் ஆசை நிலவவள் மேலே
மீட்டி வரும் வீணை சொட்டவில்லை தேனை
உனக்கேன் ஆசை கலைமகள் போலே
மீட்டி வரும் வீணை சொட்டவில்லை தேனை
உனக்கேன் ஆசை கலைமகள் போலே
வாசமில்லா மலரிது வசந்தத்தைத் தேடுது


என்ன சுகம் கண்டாய் இன்று வரை தொடர்ந்து
உனக்கேன் ஆசை ரதியவள் மேலே
வஞ்சியவள் உன்னை எண்ணவில்லை இன்றும்
உனக்கேன் ஆசை மன்மதன் போலே
வஞ்சியவள் உன்னை எண்ணவில்லை இன்றும்
உனக்கேன் ஆசை மன்மதன் போலே
வாசமில்லா மலரிது வசந்தத்தைத் தேடுது


மாதங்களை எண்ணப் பன்னிரண்டு வரலாம்
உனக்கேன் ஆசை மேலொன்று கூட்ட
மாது தன்னை அறிய கண்ணிரண்டும் பொய்யே
உனக்கேன் ஆசை உறவென்று நாட
மாது தன்னை அறிய கண்ணிரண்டும் பொய்யே
உனக்கேன் ஆசை உறவென்று நாட
வாசமில்லா மலரிது வசந்தத்தைத் தேடுது
வைகையில்லா மதுரையிது மீனாட்சியைத் தேடுது
ஏதேதோ ராகம் எந்நாளும் பாடும்
அழையாதார் வாசல் தலை வைத்து ஓடும்
வாசமில்லா மலரிது வசந்தத்தைத் தேடுது

Oru Thalai Ragam - Kudaiyile Karuvaadu

படம்: ஒரு தலை ராகம் (1980)
இசை: T.ராஜேந்தர்
பாடியவர்கள்: மலேசியா வாசுதேவன்
பாடல்வரிகள்: T.ராஜேந்தர்


Oru Thalai Ragam - Wikipedia



கூடையில கருவாடு கூந்தலிலே பூக்காடு
கூடையில கருவாடு கூந்தலிலே பூக்காடு
என்னாடி பொருத்தம் ஆயா
எம்பொருத்தம் இதைப் போலா
தாளமில்லாப் பின்பாட்டு ஆஹா...
தாளமில்லாப் பின்பாட்டு தட்டு கெட்ட எங்கூத்து
என்னுயிர் ரோசா எங்கடி போறே
மாமலர் வண்டு வாடுது இங்கு
அம்மாளே... அம்மாளே...

கூவுற கோழி கூவுற வேளை
ராசாதி ராசன் வாராண்டி முன்னே
கூவுற கோழி கூவுற வேளை
ராசாதி ராசன் வாராண்டி முன்னே


அல்லி வட்டம் புள்ளி வட்டம்
நானறிஞ்ச நிலா வட்டம்
அல்லி வட்டம் புள்ளி வட்டம்
நானறிஞ்ச நிலா வட்டம்
பாக்குறது பாவமில்லே 
புடிப்பது சுலபமில்லே
புத்தி கெட்ட விதியாலே ஆஹா...
புத்தி கெட்ட விதியாலே போனவதான் எம்மயிலு
என்னுயிர் ரோசா எங்கடி போறே
மாமலர் வண்டு வாடுது இங்கு
அம்மாளே... அம்மாளே...

கூவுற கோழி கூவுற வேளை
ராசாதி ராசன் வாராண்டி முன்னே
கூவுற கோழி கூவுற வேளை
ராசாதி ராசன் வாராண்டி முன்னே


ஆயிரத்தில் நீயே ஒண்ணு
நானறிஞ்ச நல்ல பொண்ணு
ஆயிரத்தில் நீயே ஒண்ணு
நானறிஞ்ச நல்ல பொண்ணு
மாயூரத்துக் காளை ஒண்ணு
பாடுதடி மயங்கி நின்னு
ஓடாதடி காவேரி ஆஹா...
ஓடாதடி காவேரி உம்மனசில் யாரோடி
என்னுயிர் ரோசா எங்கடி போறே
மாமலர் வண்டு வாடுது இங்கு
அம்மாளே... அம்மாளே...

கூவுற கோழி கூவுற வேளை
ராசாதி ராசன் வாராண்டி முன்னே
கூவுற கோழி கூவுற வேளை
ராசாதி ராசன் வாராண்டி முன்னே

ஆ... என்னுயிர் ரோசா எங்கடி போறே
மாமலர் வண்டு வாடுது இங்கு
அம்மாளே... அம்மாளே...
அம்மாளே.... அம்மாளே....

Oru Thayin Sabatham - Sollamathane

படம்: ஒரு தாயின் சபதம் (1987)
இசை: T.ராஜேந்தர்
பாடியவர்கள்: S.P.பாலசுப்ரமணியம், K.S.சித்ரா
பாடல்வரிகள்: T.ராஜேந்தர்


Oru Thayin Sabhatham (1987) DVDRip Tamil Movie Watch Online - www ...



சொல்லாமத்தானே...
இந்த மனசு தவிக்குது 
இந்த மனசு தவிக்குது

கண்ணால தானே
இந்த காதல் வளருது
இந்த காதல் வளருது

உள்ளமோ நினைக்குது
உதடுதான் மறைக்குது

உள்ளமோ நினைக்குது
உதடுதான் மறைக்குது

ஹோ...

சொல்லாமத்தானே
இந்த மனசு தவிக்குது
இந்த மனசு தவிக்குது



மூடி வச்ச மொட்டுப் பூவுக்குள்ள 
வண்டு வந்தா வழி கிடைக்குமா

வண்டின் இதழ் மொட்டில் பட்டு விட்டால்
மொட்டின் இதழ் விட்டுக் கொடுக்குமே

ஓ... பூனைக்கு மணியைக் கட்டுறது யாரு

இப்படியே இருந்தா முடிவென்ன கூறு

பெண்ணின் மன ஆழம்...
அறிந்துடும் முன்னே
இறங்கிட எனக்கும் தயக்கம்

காந்தமதைக் கண்டா...
இரும்பது தானே இணைந்திட
வருவது வழக்கம் ஹோ... ஹோ...

சொல்லாமத்தானே
இந்த மனசு தவிக்குது

இந்த மனசு தவிக்குது



தினம் தினம் உன்னைப் பார்க்கையில
மனம் விட்டுப் பேசத் துடிக்கிறேன்

ஊரு கதை தானே நடக்குது
உள்ள கதை உள்ளே முழிக்குது

பார்க்க வரும் முன்னே துணிவது இருக்கும்

பக்கம் வந்த பின்னே வெட்கமது தடுக்கும்

சிப்பிக்குள்ள முத்தைப் போல...
நெஞ்சுக்குள்ள காதலை 
மூடி மூடி வைப்பதும் ஏனோ

தொண்டைக்குழி வரைக்கும்...
அலையுது வார்த்தையும்
வந்து வந்து திரும்புது ஏனோ ஹோ... ஹோ...

சொல்லாமத்தானே
இந்த மனசு தவிக்குது
இந்த மனசு தவிக்குது

கண்ணால தானே
இந்த காதல் வளருது
இந்த காதல் வளருது

உள்ளமோ நினைக்குது
உதடுதான் மறைக்குது

உள்ளமோ நினைக்குது
உதடுதான் மறைக்குது

ஹோ...

சொல்லாமத்தானே...
இந்த மனசு தவிக்குது
இந்த மனசு தவிக்குது
இந்த மனசு தவிக்குது
இந்த மனசு தவிக்குது

Thursday, May 14, 2020

En Thangai Kalyani - Thol Meethu Thaalaatta

படம்: என் தங்கை கல்யாணி (1988)
இசை: T.ராஜேந்தர்
பாடியவர்கள்: S.P.பாலசுப்ரமணியம், K.S.சித்ரா
பாடல்வரிகள்: T.ராஜேந்தர்


En Thangai Kalyani (1988) - IMDb



ம்ஹும்.... ம்ஹும்...
தோள் மீது தாலாட்ட
என் பச்சக் கிளி நீ தூங்கு
தாய் போலத் தாலாட்ட
என் தங்கமே நீ தூங்கு
நிலவக் கேட்டா புடிச்சுத்
தருவேன் மாமன்
உலகக் கேட்டா வாங்கித்
தருவேன் மாமன்

தோள் மீது தாலாட்ட
என் பச்சக் கிளி நீ தூங்கு
தாய் போலத் தாலாட்ட
என் தங்கமே நீ தூங்கு


மண்ணுக் குதிர அவன நம்பி
வாழ்க்கையென்னும் ஆற்றில் இறங்க
அம்மா நெனச்சாடா
உன் மாமன் தடுத்தேன்டா
வார்த்தை மீறி போனாப் பாரு ஓ...
வார்த்தை மீறி போனாப் பாரு
வாழ்க்கை தவறி நின்னா கேளு
மனது பொறுக்கலடா
என் மானம் தடுக்குதடா
தங்கரதமே தூங்காயோ
தாழம் மடலே தூங்காயோ
முத்துச்சரமே தூங்காயோ
முல்லைவனமே தூங்காயோ


நெருப்ப தொட்டா சுடுமே என்று
சின்ன வயதில் அண்ணன் தடுக்கும்
மீறித் தொட்டேன் நான்
கதறி அழுதேன் நான்
ஓடிவந்து அண்ணன் பார்க்கும் ஓ...
ஓடிவந்து அண்ணன் பார்க்கும்
தவற மறந்து மருந்து போடும்
இப்போ நெருப்ப தொட்டேன் அதை
பார்க்க யாரும் இல்லை

தோள் மீது தாலாட்ட
என் பச்சக் கிளி நீ தூங்கு
தாய் நெஞ்சம் தாலாட்ட
என் தங்கமே நீ தூங்கு

நிலவக் கேட்டா புடிச்சுத்
தருவேன் மாமன்
உலகக் கேட்டா வாங்கித்
தருவேன் மாமன்

தங்க ரதமே தூங்காயோ

தாழம் மடலே தூங்காயோ
முத்துச் சரமே தூங்காயோ

முல்லைவனமே தூங்காயோ

ஆரிராரோ... ஆரிரரோ...
ஆரிரரோ... ஆரிராரோ...

Popular Posts