Thursday, May 14, 2020

En Thangai Kalyani - Thol Meethu Thaalaatta

படம்: என் தங்கை கல்யாணி (1988)
இசை: T.ராஜேந்தர்
பாடியவர்கள்: S.P.பாலசுப்ரமணியம், K.S.சித்ரா
பாடல்வரிகள்: T.ராஜேந்தர்


En Thangai Kalyani (1988) - IMDb



ம்ஹும்.... ம்ஹும்...
தோள் மீது தாலாட்ட
என் பச்சக் கிளி நீ தூங்கு
தாய் போலத் தாலாட்ட
என் தங்கமே நீ தூங்கு
நிலவக் கேட்டா புடிச்சுத்
தருவேன் மாமன்
உலகக் கேட்டா வாங்கித்
தருவேன் மாமன்

தோள் மீது தாலாட்ட
என் பச்சக் கிளி நீ தூங்கு
தாய் போலத் தாலாட்ட
என் தங்கமே நீ தூங்கு


மண்ணுக் குதிர அவன நம்பி
வாழ்க்கையென்னும் ஆற்றில் இறங்க
அம்மா நெனச்சாடா
உன் மாமன் தடுத்தேன்டா
வார்த்தை மீறி போனாப் பாரு ஓ...
வார்த்தை மீறி போனாப் பாரு
வாழ்க்கை தவறி நின்னா கேளு
மனது பொறுக்கலடா
என் மானம் தடுக்குதடா
தங்கரதமே தூங்காயோ
தாழம் மடலே தூங்காயோ
முத்துச்சரமே தூங்காயோ
முல்லைவனமே தூங்காயோ


நெருப்ப தொட்டா சுடுமே என்று
சின்ன வயதில் அண்ணன் தடுக்கும்
மீறித் தொட்டேன் நான்
கதறி அழுதேன் நான்
ஓடிவந்து அண்ணன் பார்க்கும் ஓ...
ஓடிவந்து அண்ணன் பார்க்கும்
தவற மறந்து மருந்து போடும்
இப்போ நெருப்ப தொட்டேன் அதை
பார்க்க யாரும் இல்லை

தோள் மீது தாலாட்ட
என் பச்சக் கிளி நீ தூங்கு
தாய் நெஞ்சம் தாலாட்ட
என் தங்கமே நீ தூங்கு

நிலவக் கேட்டா புடிச்சுத்
தருவேன் மாமன்
உலகக் கேட்டா வாங்கித்
தருவேன் மாமன்

தங்க ரதமே தூங்காயோ

தாழம் மடலே தூங்காயோ
முத்துச் சரமே தூங்காயோ

முல்லைவனமே தூங்காயோ

ஆரிராரோ... ஆரிரரோ...
ஆரிரரோ... ஆரிராரோ...

Popular Posts