Tuesday, April 19, 2011

எம்.மகன் - கோலி குண்டு



படம் : எம் மகன் (2006)
இசை : வித்யா சாகர்

பாடியவர் : கார்த்திக், கல்யாணி

பாடலாசிரியர் : யுகபாரதி









கோலி குண்டு கண்ணு 
கோவ பழ உதடு 
பாலப் போல பல்லு 
படிய வச்ச வகிடு 
ஆளத் தின்னும் கன்னம் 
அலடிகாத கையி 
சோளத்தட்ட காலு 
சொக்க வைக்கும் வாயி 
தேனீ தொட்ட உன்னை தேடி வந்தேன் தாயி 


ஏய்...நீ எதுக்குப் பொறந்தியோ 
என் உசிர வாங்குற
சே... நீ எதுக்கு வளந்தியோ 
என் வயசத்தாங்குற 


ஏய்..நான் உனக்கு பொறந்தவ 
ஏன் பாஞ்சி பதுங்குற வா.. 
நான் உனக்கு வளந்தவ 
ஏன் காஞ்சி வெதும்புற 



கோலி குண்டு கண்ணு 
கோவ பழ உதடு 
பாலப் போல பல்லு 
படிய வச்ச வகிடு 



சீரான ரோசாவேசீம்பாலு சீசாவே 
நெட்டி முறிப்பதும் எட்டி இருப்பதும் என்ன கணக்கு 


தேனான ராசாவே தேக்காத கூசாவே 
தொட்டுப் பறிப்பதும் கட்டி அணைப்பதும் செல்ல கிறுக்கு 


வேப்பல கூட இப்ப தித்திக்குது தேனா 
பாப்பா நீ பாதி கொடுத்தா ஹேய்.... 


கேக்கல சோறு தண்ணி 
கேட்டுக்க நீ மாமா
உன் பேச்சை யாரும் எடுத்தா...


அருகம் புல்லு நா.. 
ஆடாக வேணுமா... 


இலவம் பஞ்சு நா.. 
இடிபாடு ஆகுமா 


நீ சாமியா? பூதமா? 
ஒண்ணும் புரியல 
ரெண்டும் புரியல ஏய்.. 



ஏய்..நான் உனக்கு பொறந்தவ 
ஏன் பாஞ்சி பதுங்குற வா.. 




ஏய்.. நீ எதுக்கு வளந்தியோ 
என் வயசத்தாங்குற 

கோலி குண்டு கண்ணு 
கோவ பழ உதடு 
பாலப் போல பல்லு 
படிய வச்ச வகிடு 




பத்தாய நெல் போல 
நின்னாயே முன்னால 
வம்பு வளக்குது 
வம்பு வளக்குது 
அந்த சிரிப்பு 


வெள்ளாவி கண்ணால 
சுட்டாயே தன்னால 
கொள்ளையடிக்குது 
கொள்ளையடிக்குது 
கள்ள நெருப்பு 


கண்ணுல கொட்டிக்கிட்ட 
சீயக்காயப் போல 
ஐயோ நீ உறுத்துறியே 


தண்ணில சிந்திவிட்ட 
சீமையெண்ண போல 
என்னை நீ ஒதுக்குறியே 


ஏ... நீ  சகடையா 
எதுக்கென்ன உருட்டுற 


மாசக் கடைசியா 
ஏன் என்னை விரட்டுற 


நீ வசதியா... வறுமையா... 
அங்கு குறையுது 
இங்கு நிறையுது ஏன்? 




ஏய்..நான் உனக்கு பொறந்தவ 
ஏன் பாஞ்சி பதுங்குற 


சே... நீ எதுக்கு வளந்தியோ 
என் வயசத்தாங்குற 

கோலி குண்டு கண்ணு 
கோவ பழ உதடு 
பாலப் போல பல்லு 
படிய வச்ச வகிடு 
ஆளத் தின்னும் கன்னம் 
அலடிகாத கையி 
சோளத்தட்ட காலு 
சொக்க வைக்கும் வாயி 

தேனீ தொட்ட உன்னை தேடி வந்தேன் தாயி 


ஏய்...நீ எதுக்குப் பொறந்தியோ 
என் உசிர வாங்குற
சே... நீ எதுக்கு வளந்தியோ 
என் வயசத்தாங்குற 

ஏய்..நான் உனக்கு பொறந்தவ 
ஏன் பாஞ்சி பதுங்குற வா.. 
நான் உனக்கு வளந்தவ 
ஏன் காஞ்சி வெதும்புற 

Popular Posts