Showing posts with label Srividya. Show all posts
Showing posts with label Srividya. Show all posts

Thursday, May 14, 2020

En Thangai Kalyani - Poottaane Moonu Mudichithan

படம்: என் தங்கை கல்யாணி (1988)
இசை: T.ராஜேந்தர்
பாடியவர்கள்: S.P.பாலசுப்ரமணியம், B.S.சசிரேகா
பாடல்வரிகள்: T.ராஜேந்தர்


En Thangai Kalyani (1988) - IMDb



ஆ..............
ஆஆஆஆ...
ஆ... ஆஆஆஆஆ...
ஆஆஆ...... ஆஆஆஆஆஆஆஆஆ...
ஆஆஆ.... ஆ... ஆஆஆஆஆஆஆஆஆஆ....

போட்டானே மூணு முடிச்சுத்தான்
போனாயே அதை நினைச்சுத்தான்
போட்டானே மூணு முடிச்சுத்தான்
போனாயே அதை நினைச்சுத்தான்
நாய் வாலுன்னு நிமித்தப் பார்த்தது
என் தப்புத்தான்
தாய் தங்கய்ய திருத்தப் பார்த்ததும்
என் தப்புத்தான்
போட்டானே மூணு முடிச்சுத்தான்
போனாயே அதை நினைச்சுத்தான்


புள்ள இவன் கிழிச்சக் கோட்ட
தாண்டியது நீயம்மா
தொல்ல பல தந்த ஆள
தேடியது நியாயமா
ஆஆஆஆஆஆஆஆ...

புள்ள உன்னை உலகத்துக்கு
தந்தவரு எவரப்பா
தாலி போட்ட அவரை மறக்க
வேலி போட யாரப்பா

நட்டாத்துல தவிக்க விட்டு
ஓடுனதை மறக்கலாமா
நட்டாத்துல தவிக்க விட்டு
ஓடுனதை மறக்கலாமா
குடும்பத்தின் பாரம்தன
சுமந்தது நானேயம்மா
சுமந்தது நானேயம்மா

பத்து மாதம் சுமந்தேன் உன்னை
அதுக்கு இது ஈடாகுமா
அதுக்கு இது ஈடாகுமா
பெத்த மனம் அது பித்துடா
புள்ள மனம் அது கல்லுடா
புடிச்ச முயலுக்கு 
மூணு காலுன்னு நீ சொல்லுற 
பொண்ணு வாழ்க்கைக்கு
புருஷன் பெரிசுன்னு நான் சொல்லுறேன்
பெத்த மனம் அது பித்துடா
புள்ள மனம் அது கல்லுடா


எட்டி எட்டி உதைச்ச கால
தொட்டு நீயும் வணங்குற
களங்கத்தை சுமத்திய ஆள
கணவன் என்று சுமக்கற
ஆஆஆஆஆஆஆஆஆ...

குழந்தைங்க எட்டி உதைச்சா
காலை யாரும் வெட்டுவது இல்ல
ஆம்பளைங்க தப்ப உணர்ந்தா
பொண்ணு யாரும் விரட்டறது இல்ல

நச்சுக் கக்கும் நாகத்துக்கு
பாலை வார்க்கும் பெண்ணினமே
நச்சுக் கக்கும் நாகத்துக்கு
பாலை வார்க்கும் பெண்ணினமே
உன்னைச் சொல்லி குத்தமில்ல
பெண்புத்தி பின்புத்திதான்
மண்சட்டி நிலைக்காதுதான்

பழமொழி நானும் சொல்வேன்
கல்லானாலும் கணவன் தாண்டா
புல்லானாலும் புருஷன் தாண்டா

போட்டானே மூணு முடிச்சுத்தான்
போனாயே அதை நினைச்சுத்தான்

பெத்த மனம் அது பித்துடா
புள்ள மனம் அது கல்லுடா
இருதலைக் கொள்ளி
எறும்ப போலத்தான் நான் துடிக்கிறேன்

இருந்த பந்தங்கள்
ஓடிப் போகவே தவிதவிக்கிறேன்
போட்டானே மூணு முடிச்சுத்தான்
போனாயே அதை நினைச்சுத்தான்

En Thangai Kalyani - Poo Ondru

படம்: என் தங்கை கல்யாணி (1988)
இசை: T.ராஜேந்தர்
பாடியவர்கள்: S.P.பாலசுப்ரமணியம்
பாடல்வரிகள்: T.ராஜேந்தர்

En Thangai Kalyani (1988) - IMDb




பூ ஒன்று வளர்த்தேன் வாசமும் இல்ல
பொன் ஒன்று வளர்த்தேன் பாசமும் இல்ல

பூ ஒன்று வளர்த்தேன் வாசமும் இல்ல
பொன் ஒன்று வளர்த்தேன் பாசமும் இல்ல
எங்கையே கண்ண குத்தியது ஏனோ
தங்கையே என்ன எரித்தது ஏனோ
அம்மம்மா... நீ கேளு
அழுதாலும் தீராது

பூ ஒன்று.. வளர்த்தேன் வாசமும் இல்ல
பொன் ஒன்று வளர்த்தேன் பாசமும் இல்ல
ஆ...ஆஆஆ...


கழுத்துக்கு மணிமாலை
வேணுமின்னா என்னக் கேப்பே
கழுத்துக்கு மணமாலை 
நீயேதான தேடிக்கொண்ட
நாகத்த மாலை என்றால் 
நானுந்தான் ஏற்பேனா
ஓடுற பாம்ப மிதிக்கிற வயச 
தாண்டிய பிறகும் தவற நீ செஞ்சே
தடுத்தும் நீ நிக்கவில்லையே...
தங்கச்சி நீ கேக்கவில்லையே...

பூ ஒன்று வளர்த்தேன் வாசமும் இல்ல
பொன் ஒன்று வளர்த்தேன் பாசமும் இல்ல
எங்கையே கண்ண குத்தியது ஏனோ
தங்கையே என்ன எரித்தது ஏனோ
அம்மம்மா நீ கேளு அழுதாலும் தீராது

பூ ஒன்று வளர்த்தேன் வாசமும் இல்ல
பொன் ஒன்று வளர்த்தேன் பாசமும் இல்ல
ஆஹா.. ஹா.. ஹா.. ஹா..

En Thangai Kalyani - Thangachikku Seemantham

படம்: என் தங்கை கல்யாணி (1988)
இசை: T.ராஜேந்தர்
பாடியவர்கள்: S.P.பாலசுப்ரமணியம்
பாடல்வரிகள்: T.ராஜேந்தர்

En Thangai Kalyani (1988) - IMDb



தங்கச்சிக்கு சீமந்தம் தவிக்குது எந்பந்தம்
உள்ளுக்குளே ஆனந்தம் உருக்குது ஆதங்கம்
உள்ளுக்குளே ஆனந்தம் உருக்குது ஆதங்கம்
அம்மாடி தங்கச்சி அண்ணன் மனம் புண்ணாச்சி
அம்மாடி தங்கச்சி அண்ணன் மனம் புண்ணாச்சி
தங்கச்சிக்கு சீமந்தம் தவிக்குது எந்பந்தம்
தங்கச்சிக்கு சீமந்தம் தவிக்குது எந்பந்தம்


பூப்போல நெனச்சேன் தாய்ப்போல வளர்த்தேன்
மாலை ஒண்ணு தொடுத்தேன் மந்தியிடம் தொலச்சேன்
ஆஆஆ... ஹோ. ஆஆஆ...
பூப்போல நெனச்சேன் தாய்ப்போல வளர்த்தேன்
மாலை ஒண்ணு தொடுத்தேன் மந்தியிடம் தொலச்சேன்
உதிர்வதப்பார்த்தேன் உதிரத்தால் கொதிச்சேன்
உதிர்வதப்பார்த்தேன் உதிரத்தால் கொதிச்சேன்
அம்மாடி தங்கச்சி அண்ணன் மனம் புண்ணாச்சி
அம்மாடி தங்கச்சி அண்ணன் மனம் புண்ணாச்சி
அண்ணன் மனம் புண்ணாச்சி அண்ணன் மனம் புண்ணாச்சி

தங்கச்சிக்கு சீமந்தம் தவிக்குது எந்பந்தம்
தங்கச்சிக்கு சீமந்தம் தவிக்குது எந்பந்தம்
உள்ளுக்குளே ஆனந்தம் உருக்குது ஆதங்கம்
உள்ளுக்குளே ஆனந்தம் உருக்குது ஆதங்கம்
அம்மாடி தங்கச்சி அண்ணன் மனம் புண்ணாச்சி
அம்மாடி தங்கச்சி அண்ணன் மனம் புண்ணாச்சி
ஆஆஆ....

Friday, January 4, 2013

ஆனந்தம் - ஆசை ஆசையாய்

படம் : ஆனந்தம் (2001)
இசை : S.A. ராஜ்குமார்
பாடியவர் : K.J. ஜேசுதாஸ்
பாடல் வரிகள் : கலைக்குமார்







ச ரி ப ம க ரி... ச ரி ச நி ச...
ச ரி ப ம க ரி... ச ரி ச நி ச...

ஆசை ஆசையாய் இருக்கிறதே இதுப்போல் வாழ்ந்திடவே
பாசப் பூமழை பொழிகிறதே இதயங்கள் நனைந்திடவே
நம்மை காணுகின்ற கண்கள் நம்மோடு சேர கெஞ்சும்
சேர்ந்து வாழுகின்ற இன்பம் அந்த சொர்கம் தன்னை மிஞ்சும்
ஒரு நாள் கூட இங்கு வரமாகும் உயிர் எங்கள் வீடாகும்
சுகமாய் என்றும் இங்கு விளையாடும் நிரந்தர ஆனந்தம்
ஆசை ஆசையாய் இருக்கிறதே இதுப்போல் வாழ்ந்திடவே
பாசப் பூமழை பொழிகிறதே இதயங்கள் நனைந்திடவே

ஹா... ஆஆஆ... ஹா... ஆஆஆ...
ஹா... ஆஆஆ... ஹா... ஆஆஆ...



ஓ... நம் தாயின் முகத்தில் ஒரு கோடி கடவுள்
தரிசனம் நாங்கள் பார்த்திடுவோம்

ஹே... ஹே ஹே.... ஹே... ஹே ஹே....

தீபங்கள் கோடி நம் வீட்டில் ஏற்றி
கோவிலை போல மாற்றிடுவோம்
அன்னைக்கு பணிவிடை செய்திடவே
ஜென்மங்கள் வாங்கி வந்தோம்
நம் ஜென்மங்கள் மாறிடும் நேரத்திலும்
சொந்தங்கள் சேர்ந்திருப்போம்
அனைவரின் அன்பில் ஆயுள் கூடிடுமே


ச ரி ப ம க ரி... ச ரி ச நி ச...
ச ரி ப ம க ரி... ச ரி ச நி ச...


ஆசை ஆசையாய் இருக்கிறதே இதுப்போல் வாழ்ந்திடவே
பாசப் பூமழை பொழிகிறதே இதயங்கள் நனைந்திடவே


ஓ... பல நூறு வண்ணம் ஒன்றாக சேரும்
ஓவியம் போல சேர்ந்திருப்போம்
வரலாறு எல்லாம் நம் பேரை நாளை
சொல்வதைப் போல வாழ்ந்திருப்போம்
எங்களுக்குள்ளே வளைந்திடுவோம்
நாணலை போல் தானே
நம் ஒற்றுமை காத்திட நின்றிடுவோம்
தூண்களை போல் நாமே
அடைமழையாக பெய்யும் சந்தோஷம்

ச ரி ப ம க ரி... ச ரி ச நி ச...
ச ரி ப ம க ரி... ச ரி ச நி ச...
ச ரி ப ம க ரி... ச ரி ச நி ச...
ச ரி ப ம க ரி... ச ரி ச நி ச...

Monday, November 26, 2012

கற்பூர முல்லை - பூங்காவியம்


படம் : கற்பூர முல்லை (1991)
இசை : இளையராஜா
பாடியவர்கள் : K.J.ஜேசுதாஸ், P.சுசீலா & K.S.சித்ரா
பாடல்வரிகள்: வாலி





பூங்காவியம் பேசும் ஓவியம்
பூங்காவியம் பேசும் ஓவியம்
ஆனிப்பொன் தேரோ ஆரிரோ ஆரோ
வெள்ளிப்பன்னீரோ ஆரிரோ ஆரோ
பூங்காவியம் பேசும் ஓவியம்


பாட்டுதான் தாலாட்டுதான் கேட்கக்கூடும் என நாளும்
வாடினாள் போராடினாள் வண்ணத்தோகை நெடுங்காலம்
தாய் முகம் தரிசனம் தரும் நாள் இது
சேய் மனம் உறவெனும் கடல் நீந்துது
பாசம் மீறும்போது பேசும் வார்த்தை ஏது
பாசம் மீறும்போது பேசும் வார்த்தை ஏது
ஓ... ஓஓஓஓ... மயக்கத்தில் மனம் சேர்ந்தது


பூங்காவியம் பேசும் ஓவியம்
ஆனிப்பொன் தேரோ ஆரிரோ ஆரோ
வெள்ளிப்பன்னீரோ ஆரிரோ ஆரோ


யார் மகள் இப்பூமகள் ஏது இனி இந்தக் கேள்வி
கூட்டிலே தாய் வீட்டிலே வாழும் இனி இந்தக் குருவி
பாடலாம் தினம் தினம் புது கீர்த்தனம்
நாளெல்லாம் தளிர் விடும் இந்தப் பூவனம்
வானம் பூமி வாழ்த்தும் வாடைக் காற்றும் போற்றும்
வானம் பூமி வாழ்த்தும் வாடைக் காற்றும் போற்றும்
ஓ... ஓஓஓஓ... புதுக்கதை அரங்கேறிடும்


பூங்காவியம் பேசும் ஓவியம்
ஆனிப்பொன் தேரோ ஆரிரோ ஆரோ
வெள்ளிப்பன்னீரோ ஆரிரோ ஆரோ
பூங்காவியம் பேசும் ஓவியம்

Thursday, January 20, 2011

Apoorva Raagangal - Ezhu Swarangalukkul

படம் : அபூர்வ ராகங்கள் (1975)
இசை : M.S.விஸ்வநாதன்
பாடியவர் : வாணி ஜெயராம்
பாடல் வரிகள் : கண்ணதாசன்




ஏழு ஸ்வரங்களுக்குள் எத்தனை பாடல்

ஏழு ஸ்வரங்களுக்குள் எத்தனை பாடல்
இதயச் சுரங்கத்துள் எத்தனை கேள்வி
ஏழு ஸ்வரங்களுக்குள் எத்தனை பாடல்
இதயச் சுரங்கத்துள் எத்தனை கேள்வி

காணும் மனிதருக்குள் எத்தனை சலனம்
காணும் மனிதருக்குள் எத்தனை சலனம் - வெறும்
கற்பனை சந்தோஷத்தில் அவனது கவனம்
கற்பனை சந்தோஷத்தில் அவனது கவனம்
ஏழு ஸ்வரங்களுக்குள் எத்தனை பாடல்


காலை எழுந்தவுடன் நாளைய கேள்வி
காலை எழுந்தவுடன் நாளைய கேள்வி - அது
கையில் கிடைத்த பின்னும் துடிக்குது ஆவி
கையில் கிடைத்த பின்னும் துடிக்குது ஆவி
ஏனென்ற கேள்வி ஒன்றே என்றைக்கும் தங்கும்
ஏனென்ற கேள்வி ஒன்றே என்றைக்கும் தங்கும் - மனித
இன்பதுன்பம் எதிலும் கேள்விதான் மிஞ்சும்
இன்பதுன்பம் எதிலும் கேள்விதான் மிஞ்சும்
ஏழு ஸ்வரங்களுக்குள் எத்தனை பாடல்


எனக்காக நீ அழுதால் இயற்கையில் நடக்கும்
எனக்காக நீ அழுதால் இயற்கையில் நடக்கும்
நீ எனக்காக உணவு உண்ண எப்படி நடக்கும்
நமக்கென்று பூமியிலே கடமைகள் உண்டு - அதை
நமக்காக நம் கையால் செய்வது நன்று
நமக்காக நம் கையால் செய்வது நன்று
ஏழு ஸ்வரங்களுக்குள் எத்தனை பாடல்


ஆரம்பத்தில் பிறப்பும் உன் கையில் இல்லை
ஆரம்பத்தில் பிறப்பும் உன் கையில் இல்லை
என்றும் அடுத்தடுத்த நடப்பும் உன் கையில் இல்லை
பாதை வகுத்த பின்பு பயந்தென்ன லாபம்
பாதை வகுத்த பின்பு பயந்தென்ன லாபம் - அதில்
பயணம் நடத்திவிடு மறைந்திடும் பாவம்
பயணம் நடத்திவிடு மறைந்திடும் பாவம்
ஏழு ஸ்வரங்களக்குள் எத்தனை பாடல்


நாளைப் பொழுது என்றும் நமக்கென வாழ்க
அதை நடத்த ஒருவனுண்டு கோயிலில் காண்க
நாளைப் பொழுது என்றும் நமக்கென வாழ்க
அதை நடத்த ஒருவனுண்டு கோயிலில் காண்க
வேளை பிறக்கும் என்று நம்பிக்கை கொள்க
வேளை பிறக்கும் என்று நம்பிக்கை கொள்க
எந்த வேதனையும் மாறும் மேகத்தைப் போல
எந்த வேதனையும் மாறும் மேகத்தைப் போல

ஏழு ஸ்வரங்களுக்குள் எத்தனை பாடல்
இதயச் சுரங்கத்துள் எத்தனை கேள்வி
காணும் மனிதருக்குள் எத்தனை சலனம்
காணும் மனிதருக்குள் எத்தனை சலனம் - வெறும்
கற்பனை சந்தோஷத்தில் அவனது கவனம்
ஏழு ஸ்வரங்களுக்குள் எத்தனை பாடல்

Popular Posts