Thursday, May 14, 2020

En Thangai Kalyani - Poottaane Moonu Mudichithan

படம்: என் தங்கை கல்யாணி (1988)
இசை: T.ராஜேந்தர்
பாடியவர்கள்: S.P.பாலசுப்ரமணியம், B.S.சசிரேகா
பாடல்வரிகள்: T.ராஜேந்தர்


En Thangai Kalyani (1988) - IMDb



ஆ..............
ஆஆஆஆ...
ஆ... ஆஆஆஆஆ...
ஆஆஆ...... ஆஆஆஆஆஆஆஆஆ...
ஆஆஆ.... ஆ... ஆஆஆஆஆஆஆஆஆஆ....

போட்டானே மூணு முடிச்சுத்தான்
போனாயே அதை நினைச்சுத்தான்
போட்டானே மூணு முடிச்சுத்தான்
போனாயே அதை நினைச்சுத்தான்
நாய் வாலுன்னு நிமித்தப் பார்த்தது
என் தப்புத்தான்
தாய் தங்கய்ய திருத்தப் பார்த்ததும்
என் தப்புத்தான்
போட்டானே மூணு முடிச்சுத்தான்
போனாயே அதை நினைச்சுத்தான்


புள்ள இவன் கிழிச்சக் கோட்ட
தாண்டியது நீயம்மா
தொல்ல பல தந்த ஆள
தேடியது நியாயமா
ஆஆஆஆஆஆஆஆ...

புள்ள உன்னை உலகத்துக்கு
தந்தவரு எவரப்பா
தாலி போட்ட அவரை மறக்க
வேலி போட யாரப்பா

நட்டாத்துல தவிக்க விட்டு
ஓடுனதை மறக்கலாமா
நட்டாத்துல தவிக்க விட்டு
ஓடுனதை மறக்கலாமா
குடும்பத்தின் பாரம்தன
சுமந்தது நானேயம்மா
சுமந்தது நானேயம்மா

பத்து மாதம் சுமந்தேன் உன்னை
அதுக்கு இது ஈடாகுமா
அதுக்கு இது ஈடாகுமா
பெத்த மனம் அது பித்துடா
புள்ள மனம் அது கல்லுடா
புடிச்ச முயலுக்கு 
மூணு காலுன்னு நீ சொல்லுற 
பொண்ணு வாழ்க்கைக்கு
புருஷன் பெரிசுன்னு நான் சொல்லுறேன்
பெத்த மனம் அது பித்துடா
புள்ள மனம் அது கல்லுடா


எட்டி எட்டி உதைச்ச கால
தொட்டு நீயும் வணங்குற
களங்கத்தை சுமத்திய ஆள
கணவன் என்று சுமக்கற
ஆஆஆஆஆஆஆஆஆ...

குழந்தைங்க எட்டி உதைச்சா
காலை யாரும் வெட்டுவது இல்ல
ஆம்பளைங்க தப்ப உணர்ந்தா
பொண்ணு யாரும் விரட்டறது இல்ல

நச்சுக் கக்கும் நாகத்துக்கு
பாலை வார்க்கும் பெண்ணினமே
நச்சுக் கக்கும் நாகத்துக்கு
பாலை வார்க்கும் பெண்ணினமே
உன்னைச் சொல்லி குத்தமில்ல
பெண்புத்தி பின்புத்திதான்
மண்சட்டி நிலைக்காதுதான்

பழமொழி நானும் சொல்வேன்
கல்லானாலும் கணவன் தாண்டா
புல்லானாலும் புருஷன் தாண்டா

போட்டானே மூணு முடிச்சுத்தான்
போனாயே அதை நினைச்சுத்தான்

பெத்த மனம் அது பித்துடா
புள்ள மனம் அது கல்லுடா
இருதலைக் கொள்ளி
எறும்ப போலத்தான் நான் துடிக்கிறேன்

இருந்த பந்தங்கள்
ஓடிப் போகவே தவிதவிக்கிறேன்
போட்டானே மூணு முடிச்சுத்தான்
போனாயே அதை நினைச்சுத்தான்

Popular Posts