Showing posts with label Jeevitha. Show all posts
Showing posts with label Jeevitha. Show all posts

Tuesday, January 4, 2011

தர்ம பத்தினி - நான் தேடும்



படம் : தர்ம பத்தினி (1986)
இசை : 
இளையராஜா

பாடியவர் :  இளையராஜா, S.ஜானகி

பாடல் வரி : கண்மனி சுப்பு


நான் தேடும் செவ்வந்திப் பூவிது
ஒரு நாள் பார்த்து அந்தியில் பூத்தது
பூவோ இது வாசம் போவோம் இனி காதல் தேசம்
பூவோ இது வாசம் போவோம் இனி காதல் தேசம்



நான் தேடும் செவ்வந்திப் பூவிது
ஒரு நாள் பார்த்து அந்தியில் பூத்தது

பறந்து செல்ல வழியில்லையோ பருவக்குயில் தவிக்கிறதே


சிறகிரண்டும் விரித்துவிட்டேன் இளமை அது தடுக்கிறதே


பொன் மானே உன் யோகம் தான்


பெண் தானோ சந்தேகம் தான்


என் தேவி...ஆஆஆ



உன் விழி ஓடையில் நான் கலந்தேன்
பொன் கனி விழுமெனத் தவம் கிடந்தேன்


பூங்காற்று சூடாச்சு ராஜாவே யார் மூச்சு

நான் தேடும் செவ்வந்திப் பூவிது

ஒரு நாள் பார்த்து அந்தியில் பூத்தது



மங்கைக்குள் என்ன நிலவரமோ
மஞ்சத்தில் விழும் நிலை வருமோ


அன்னத்தை எந்தன் விரல் தொடுமோ 
என்றைக்கும் அந்த சுகம் வருமோ



தள்ளாடும் பெண் தேகம் தான்
எந்நாளும் உன் வானம் நான்

என் தேவா...ஆ ஆ ஆ

கண் மலர் மூடிட ஏன் தவித்தேன்
என் விரல் நகங்களை தினம் இழந்தேன்


தாலாட்டுப் பாடாமல் தூங்காது என் பிள்ளை

நான் தேடும் செவ்வந்திப் பூவிது
ஒரு நாள் பார்த்து அந்தியில் பூத்தது
பூவோ இது வாசம் போவோம் இனி காதல் தேசம்
பூவோ இது வாசம் போவோம் இனி காதல் தேசம்

நான் தேடும் செவ்வந்திப் பூவிது
ஒரு நாள் பார்த்து அந்தியில் பூத்தது

Wednesday, September 8, 2010

நானே ராஜா நானே மந்திரி - மயங்கினேன் சொல்ல



படம் :நானே ராஜா நானே மந்திரி (1986)
இசை :இளையராஜா

பாடியவர் : ஜெயச்சந்திரன், சுசீலா
பாடல் வரி : வாலி



மயங்கினேன் சொல்லத் தயங்கினேன் 
உன்னை விரும்பினேன் உயிரே!
தினம் தினம் உந்தன் தரிசனம் 
பெறத் தவிக்குதே மனமே!
இங்கு நீயில்லாமல் வாழும் வாழ்வுதான் ஏனோ?


மயங்கினேன் சொல்லத் தயங்கினேன் 
உன்னை விரும்பினேன் உயிரே!
தினம் தினம் உந்தன் தரிசனம் 
பெறத் தவிக்குதே மனமே!
இங்கு நீயில்லாமல் வாழும் வாழ்வுதான் ஏனோ?

மயங்கினேன் சொல்லத் தயங்கினேன் 
உன்னை விரும்பினேன் உயிரே!
தினம் தினம் உந்தன் தரிசனம் 
பெறத் தவிக்குதே



உறக்கமில்லாமல் அன்பே நான் ஏங்கும் ஏக்கம் போதும்
இரக்கமில்லாமல் என்னை நீ வாட்டலாமோ நாளும்?
வாடைக்காலமும் நீ வந்தால் வசந்தமாகலாம் - கொதித்திருக்கும்
கோடைக்காலமும் நீ வந்தால் குளிர்ச்சி காணலாம்

எந்நாளும் தனிமையே எனது நிலைமையோ 
துன்பக் கவிதையோ கதையோ?

இரு கண்ணும் என் நெஞ்சும்

இரு கண்ணும் நெஞ்சும் நீரிலாடுமோ?


மயங்கினேன் சொல்லத் தயங்கினேன் 
உன்னை விரும்பினேன் உயிரே!
தினம் தினம் உந்தன் தரிசனம் 
பெறத் தவிக்குதே மனமே!
இங்கு நீயில்லாமல் வாழும் வாழ்வுதான் ஏனோ?

மயங்கினேன் சொல்லத் தயங்கினேன் 
உன்னை விரும்பினேன் உயிரே!
தினம் தினம் உந்தன் தரிசனம் 
பெறத் தவிக்குதே

ஒரு பொழுதேனும் உன்னோடு சேர்ந்து வாழணும்
உயிர் பிரிந்தாலும் அன்பே உன் மார்பில் சாயணும்

மாலை மங்கலம் கொண்டாடும் வேளை வாய்க்குமோ?

மணவறையில் நீயும் நானும் தான் பூச்சூடும் நாளும் தோன்றுமோ?

ஒன்றாகும் பொழுதுதான் இனிய பொழுதுதான் 
உந்தன் உறவுதான் உறவு!

அந்த நாளை எண்ணி நானும்

அந்த நாளை எண்ணி நானும் வாடினேன்



மயங்கினேன் சொல்லத் தயங்கினேன் 
உன்னை விரும்பினேன் உயிரே!
தினம் தினம் உந்தன் தரிசனம் 
பெறத் தவிக்குதே மனமே!
இங்கு நீயில்லாமல் வாழும் வாழ்வுதான் ஏனோ?

மயங்கினேன் சொல்லத் தயங்கினேன் 
உன்னை விரும்பினேன் உயிரே!
தினம் தினம் உந்தன் தரிசனம் 
பெறத் தவிக்குதே மனமே!
இங்கு நீயில்லாமல் வாழும் வாழ்வுதான் ஏனோ?

மயங்கினேன் சொல்லத் தயங்கினேன் 
உன்னை விரும்பினேன் உயிரே!
தினம் தினம் உந்தன் தரிசனம் 
பெறத் தவிக்குதே மனமே!
இங்கு நீயில்லாமல் வாழும் வாழ்வுதான் ஏனோ?

மயங்கினேன் சொல்லத் தயங்கினேன் 
உன்னை விரும்பினேன் உயிரே!
தினம் தினம் உந்தன் தரிசனம் 
பெறத் தவிக்குதே 


Popular Posts