Saturday, July 31, 2021

Maan Karate - Darling Dambakku

 படம்: மான் கராத்தே (2014)

இசை: அனிருத்

பாடியவர்கள்: பென்னி தயாள், சுனிதி சஹான்

பாடல்வரிகள்: யுகபாரதி



டார்லிங் டம்மக்கு

டார்லிங் டம்மக்கு

டார்லிங் டம்மக்கு

டார்லிங் டம்மக்கு

டா... டா... டா.. டா...

டா... டா... டா.. டா...


பாவி பயல

இவ உயிர் மூச்சுல

கடை போடுற ஓயாம

ஆவி புகையா

இவ அடி நெஞ்சுல

விளையாடுற போகாம

நான் புவியிலதான்

பொறப்பு எடுத்தது ஏன்

அது புரியுதுடா

உன் நினைவுலதான்

நான் குடியிருந்திடத் தான்

என தெரியுதடா


ஏய் ஆத்தாடி தலகாலு புரியாம

பாத்தேனே உன்ன நானும் தயங்காம

காத்தோட காத்தாக 

கைகோர்த்து நடப்பேனே விலகாம

ஹேய்...ஹேய்...ஹேய்...ஹேய்...


டார்லிங் டம்மக்கு

டார்லிங் டம்மக்கு

டார்லிங் டம்மக்கு

டார்லிங் டம்மக்கு

டா... டா... டா.. டா...

டா... டா... டா.. டா...


டார்லிங் டம்மக்கு

டார்லிங் டம்மக்கு

டார்லிங் டம்மக்கு

டார்லிங் டம்மக்கு

டா... டா... டா.. டா...

டா... டா... டா.. டா...



கோடி சென்மம் எடுத்தாலும்

ஒன்ன சேரும் வரம் கேப்பேன் நான்


ஓஹோ...ஒஹோ...ஒஹோ...


ம்... ஊரு கண்ணு படுமேன்னு

உசுரோட அடகாப்பேன் நான்


ஓஹோ...ஒஹோ...ஒஹோ...


ஹோய்... நீருக்குள்ள நிலவாக

நனையாம ஒன்ன பாப்பேன் நான்


ஓஹோ...ஒஹோ...ஒஹோ...


ஹேய்... கோடை வெயில் அடிச்சாலும்

உடல் வேர்க்க விடமாட்டேன் நான்


ஓஹோ...ஒஹோ...ஒஹோ...


அந்த வானம் வத்தும் வரை

இந்த பூமி சுத்தும் வரை

உன்னை காதல் செஞ்சிடுவேன்

தன்னால... ஹேய்..


கண்ணில் காட்சி உள்ள வரை

கண்ணை மூடி செல்லும் வரை

உன்னை காத்து வச்சிருப்பேன்

அன்பால... 


ஆத்தாடி தலகாலு புரியாம

பாத்தேனே உன்ன நானும் தயங்காம

காத்தோட காத்தாக 

கைகோர்த்து நடப்பேனே விலகாம

ஹேய்... ஹேய்... ஹேய்... ஹேய்...


ராமனுக்கு சீதை

கண்ணனுக்கு ராதை

அடியே மாமனுக்கு ஜோடி நீயடி


ராமனுக்கு சீதை

கண்ணனுக்கு ராதை

அடியே மாமனுக்கு ஜோடி நீயடி



பாவி பயல இவ...

பாவி பயல இவ...

பாவி பயல இவ உயிர் மூச்சுல

கடை போடுற ஓயாம


டார்லிங் டம்மக்கு

டார்லிங் டம்மக்கு

டார்லிங் டம்மக்கு

டார்லிங் டம்மக்கு

டா... டா... டா.. டா...

டா... டா... டா.. டா...


டார்லிங் டம்மக்கு

டார்லிங் டம்மக்கு

டார்லிங் டம்மக்கு

டார்லிங் டம்மக்கு

டா... டா... டா.. டா...

டா... டா... டா.. டா........

Maan Karate - Un Vizhigalil

 படம்: மான் கராத்தே (2014)

இசை: அனிருத்

பாடியவர்கள்: அனிருத், ஸ்ருதிஹாசன்

பாடல்வரிகள்: R.D.ராஜா

உன் விழிகளில் விழுந்த நாட்களில் 

நான் தொலைந்தது அதுவே போதுமே

வேறெதுவும் வேண்டாமே பெண்ணே


உன் உயிரினில் கலந்த நாட்களில் 

நான் கரைந்தது அதுவே போதுமே

வேறெதுவும் வேண்டாமே பெண்ணே


என் கனவினில் வந்த காதலியே

கண் விழிப்பதிற்குள்ளே வந்தாயே

நான் தேடி தேடித்தான் அளஞ்சுட்டேன்

என் தேவதைய கண்டு புடிச்சுட்டேன்

நான் முழுசா என்னதான் கொடுத்துட்டேன்

அட உன்ன வாங்கிட்டேன்


நீ தெனம் சிரிச்சா போதுமே

வேற துவும் வேண்டாமே நான் வாழவே

நான் உன்ன ரசிச்சா போதுமே

வேற துவும் வேண்டாமே நான் வாழவே



காற்று வீசும் திசை எல்லாம்

நீ பேசும் சத்தம் கேட்டேனே

நான் காற்றாய் மாறி போவேனே அன்பே


அன்பே... அன்பே... அன்பே...


உன் கை விரல் தீண்டி சென்றாலே

என் இரவுகள் நீளும் தன்னாலே

இனி பகலை விரும்ப மாட்டேனே அன்பே


அன்பே... அன்பே... அன்பே...


அழகான இந்த காதல் அன்பாலே நிஜமாச்சு


உயிரோடு உனதாக நம் காதல் கலந்தாச்சு

கலந்தாச்சு...


ஓஹோஹோ... ஓஹோஹோ...

நீ தெனம் சிரிச்சா போதுமே

வேற எதுவும் வேணாமே நான் வாழவே


நான் உன்ன ரசிச்சா போதுமே

வேற எதுவும் வேணாமே நான் வாழவே


உன் விழிகளில் விழுந்த நாட்களில் 

நான் தொலைந்தது அதுவே போதுமே

வேறெதுவும் வேண்டாமே பெண்ணே...


உன் உயிரினில் கலந்த நாட்களில் 

நான் கரைந்தது அதுவே போதுமே

வேறெதுவும் வேண்டாமே அன்பே...


உன் விழிகளில் விழுந்த நாட்களில் 

நான் தொலைந்தது அதுவே போதுமே

வேறெதுவும் வேண்டாமே பெண்ணே...


உன் உயிரினில் கலந்த நாட்களில் 

நான் கரைந்தது அதுவே போதுமே

வேறெதுவும் வேண்டாமே அன்பே...

Friday, July 30, 2021

Naatpadu Theral 07 - Adaiyalam Yeralam

படம்: நாட்படு தேறல் (2021)
இசை: வாகு மசான்
பாடியவர்கள்: அந்தோணிதாசன், வாகு மசான்
பாடல்வரிகள்: வைரமுத்து
இயக்கம்: செல்வகண்ணன்





Download this MP3


அடையாளம் ஏராளம்
ஆளெங்க? பேரெங்க?
நெனப்பிருக்கு நெஞ்செல்லாம்
நீயெங்க? நானெங்க?

கும்பி எரியுதடி
கொந்தளிக்கும் எம்மனசில்
தும்பி பறக்குதடி
தோணுதடி பழையகதை


அடையாளம் ஏராளம்
ஆளெங்க? பேரெங்க?
நெனப்பிருக்கு நெஞ்செல்லாம்
நீயெங்க? நானெங்க?

கும்பி எரியுதய்யா
கொந்தளிக்கும் எம்மனசில்
தும்பி பறக்குதய்யா
தோணுதய்யா பழையகதை



ஓ.... மின்னல் வெட்டும் ராத்திரியில்
சன்னல் பக்கம் நீஅழைக்க
அந்நேரம் பாத்து
அஞ்சாறு நாய் கொலைக்க

வெறிச்சோடிப் போயிருந்த
வீதியில நான்விழுந்து
தெறிச்சோடிப் போனதுக்குத்
தெருவிளக்கு அடையாளம்


சொட்டாங்கல்லு ஒண்ணு  - எந்
தொடைப்பக்கம் தவறிவிழ
கல்லெடுக்கும் சாக்குல நீ
கள்ளத்தனம் பண்ண

ஆடி விழுந்ததுக்கும்
ஆளவிடு சாமியின்னு
ஓடி ஒளிஞ்சதுக்கும்
ஓடைக்கரை அடையாளம்


அடையாளம் ஏராளம்
ஆளெங்க? பேரெங்க?
நெனப்பிருக்கு நெஞ்செல்லாம்
நீயெங்க? நானெங்க?

கும்பி எரியுதடி
கொந்தளிக்கும் எம்மனசில்
தும்பி பறக்குதடி
தோணுதடி பழையகதை



ஓ....சீலகட்டத் தெரியாத
சிறுமியின்னு பாக்காம
வேளகெட்ட வேளையில
வெறிகொண்டு நீயணைக்க

மாமான்னு மிரண்டதுக்கும்
மணமாலை கேட்டதுக்கு
ஆமான்னு சொன்னதுக்கும்
அம்மன்கோயில் அடையாளம்


ஓ.... ஊருக்கே தெரியாம
யாருக்கோ பெண்டாகிக்
குதிரைவண்டி ஏறிக்
கொடிக்கால் கடக்கையில

மடிவிழுந்த கண்ணீரு
மழையாகிப் போனதுக்கு
இடிவிழுந்த ஆலமரம்
இன்னைக்கும் அடையாளம்

அடையாளம் ஏராளம்
ஆளெங்க? பேரெங்க?
நெனப்பிருக்கு நெஞ்செல்லாம்
நீயெங்க? நானெங்க?

கும்பி எரியுதடி
கொந்தளிக்கும் எம்மனசில்
தும்பி பறக்குதடி
தோணுதடி பழையகதை

Naatpadu Theral 05 - En Kadhala

 படம்: நாட்படு தேறல் (2021)

இசை: N.R. ரகுநந்தன்

பாடியவர்கள்: ஸ்ரீநிஷா ஜெயசீலன்

பாடல்வரிகள்: வைரமுத்து



Download this MP3

என் காதலா
காதல் வயது பார்க்குமா?
நானும் சின்னக் கன்று என்று 
இன்று சிந்தை மாறுமா?

வயதால் நம்
வாழ்வு முறியுமா?
வாய் முத்தம்
வயது அறியுமா?

நிலா வெண்ணிலா
வயதில் மூத்ததில்லையா
இருந்தும் நிலவு சொல்லி 
இளைய அல்லி மலர்வதில்லையா?

என்வாழ்வில் தந்தை இல்லையே!
தந்தைபோல் கணவன் வேண்டுமே!

என் காதலா
காதல் வயது பார்க்குமா?
நானும் சின்னக் கன்று என்று 
இன்று சிந்தை மாறுமா?


ஆணும் பெண்ணும் சேர்வது
ஆசைப் போக்கில் நேர்வது
காதல் நீதி என்பது
காலம் தோறும் மாறுது

வெட்டுக்கிளியின் ரத்தமோ
வெள்ளையாக உள்ளது
விதிகள் எழுதும் ஏட்டிலே
விதிவிலக்கும் உள்ளது

ஆழி ரொம்ப மூத்தது
ஆறு ரொம்ப இளையது
ஆறு சென்று சேரும்போது
யாரு கேள்வி கேட்பது?



காதல் சிந்தும் மழையிலே
காலம் தேசம் அழியுதே
எங்கே சிந்தை அழியுதோ
காதல் அங்கே மலருதே!

அறிவழிந்து போனபின்
வயது வந்து தோன்றுமா?
பொருள் அழிந்து போனபின்
நிழல் கிடந்து வாழுமா?

அறமிருக்கும் வாழ்விலே
முரணிருக்கும் என்பதால்
முரணிருக்கும் வாழ்விலும்
அறமிருக்கும் இல்லையா?

என் காதலா
காதல் வயது பார்க்குமா?
நானும் சின்னக் கன்று என்று
இன்று சிந்தை மாறுமா?

என் காதலா
காதல் வயது பார்க்குமா?
நானும் சின்னக் கன்று என்று 
இன்று சிந்தை மாறுமா?

Naatpadu Theral 03 - Merkku Thodarchi Mala

படம்: நாட்படு தேறல் (2021)
இசை: அந்தோணிதாசன்
பாடியவர்கள்: அந்தோணிதாசன்
பாடல்வரிகள்: வைரமுத்து





Download this MP3


மேற்குத் தொடர்ச்சி மலை
இளைச்சுப் போகும்
அந்த மேகாத்து மேல்மூச்சு
வாங்கிப் போகும்

மேற்குத் தொடர்ச்சி மலை
இளைச்சுப் போகும்
அந்த மேகாத்து மேல்மூச்சு
வாங்கிப் போகும்

மாசம் ஒருவாட்டி
நான் வடுகபட்டி போகாட்டி
வலது கைநீட்டி
நான் மலையோட பேசாட்டி…

மாசம் ஒருவாட்டி
நான் வடுகபட்டி போகாட்டி
வலது கைநீட்டி
நான் மலையோட பேசாட்டி…

மேற்குத் தொடர்ச்சி மலை
இளைச்சுப் போகும்
அந்த மேகாத்து மேல்மூச்சு
வாங்கிப் போகும்



வைகை நதிமேல என்
வலதுகை நனைக்காம
வைகையில வெளையாடும்
வாளமீனு தூங்காது

பூமரத்துக் கீழே நான்
புதுப்பாட்டு எழுதாம
பூமரத்தில் கூடுகட்டும்
புறா இரை கொள்ளாது

கத்தாழங் காடு
எங்கால்சூடு காங்காமக்
கத்தாழம் புதரோட
காடைமுட்டை போடாது

மஞ்சளாறு அணையில் நான்
மலைக்காத்து வாங்காம
மஞ்சளாத்து மூலையில
மணிக்குருவி மேயாது

மலையைக் கொஞ்சம்
கடிச்சுக் கிட்டே
கூழ்குடிச்ச பூமியடா
மண்ணும் மழையும் எங்க
பரம்பரைக்கே சாமியடா

மலையைக் கொஞ்சம்
கடிச்சுக் கிட்டே
கூழ்குடிச்ச பூமியடா
மண்ணும் மழையும் எங்க
பரம்பரைக்கே சாமியடா

மேற்குத் தொடர்ச்சி மலை
இளைச்சுப் போகும்
அந்த மேகாத்து மேல்மூச்சு
வாங்கிப் போகும்



கும்பக்கரைச் சாலையில
கோமிய வாசம் புடிக்காம
மண்டக்குள்ள மல்லுக்கட்டி
மல்லியப்பூ பூக்காது

கெடையாட்டு மந்தையில
கெடாக் கூத்துக் காங்காம
காஞ்சுபோன பொழப்புக்குள்ள
கற்பனையே கெளம்பாது

சாதிசனம் பேசும்
மொழி சங்கீதம் கேளாம
இதிகாச எழுத்துக்கு
சகவாசம் இருக்காது

சுட்ட மீன் கவுச்சி
வந்து சுர்ருன்னு ஏறாம
எண்சீர் விருத்தத்தில்
ஏழாஞ்சீரு வாராது

மலையைக் கொஞ்சம்
கடிச்சுக்கிட்டே
கூழ்குடிச்ச பூமியடா
மண்ணும் மழையும்
எங்க பரம்பரைக்கே சாமியடா

மலையைக் கொஞ்சம்
கடிச்சுக்கிட்டே
கூழ்குடிச்ச பூமியடா
மண்ணும் மழையும்
எங்க பரம்பரைக்கே சாமியடா

மேற்குத் தொடர்ச்சி மலை
இளைச்சுப் போகும்
அந்த மேகாத்து மேல்மூச்சு
வாங்கிப் போகும்

மாசம் ஒருவாட்டி
நான் வடுகபட்டி போகாட்டி
வலது கைநீட்டி
நான் மலையோட பேசாட்டி

மேற்குத் தொடர்ச்சி மலை
இளைச்சுப் போகும்
அந்த மேகாத்து மேல்மூச்சு
வாங்கிப் போகும்

Naatpadu Theral 01 - Naakku Chevandhavarae

படம்: நாட்படு தேறல் (2021)

இசை: வாகு மசான்

பாடியவர்கள்: வாகு மசான்

பாடல்வரிகள்: வைரமுத்து


Download this MP3


ஒருவாய் வெத்தலைய

இருவாய் உண்டகதை

திருவாய் மறந்தாலும்

தின்னருசி மறந்திருமோ?


ஒருவாய் வெத்தலைய

இருவாய் உண்டகதை

திருவாய் மறந்தாலும்

தின்னருசி மறந்திருமோ?


நாக்குச் செவந்தவரே

நாலெழுத்து மந்திரியே

மூக்கு வெடச்சவரே

முன்வழுக்கை மன்னவரே


நாக்குச் செவந்தவரே

நாலெழுத்து மந்திரியே

மூக்கு வெடச்சவரே

முன்வழுக்கை மன்னவரே



கூத்து முடிஞ்சிருச்சு

கொமரிப்புள்ள எதுக்குன்னு

பாத்தும் பாக்காமப்

பரபரன்னு போறீரோ!


ஒருவாய் வெத்தலைய

இருவாய் உண்டகதை

திருவாய் மறந்தாலும்

தின்னருசி மறந்திருமோ?


ஒருவாய் வெத்தலைய

இருவாய் உண்டகதை

திருவாய் மறந்தாலும்

தின்னருசி மறந்திருமோ?



வைக்கப் போர்ப்படப்புக்கு

வடஇருட்டு மூலையில

அக்கப்போர் செஞ்சகதை

அய்யனுக்கு மறந்திருச்சோ?


சவரக் கத்திக்குத்

தப்பிச்ச குறுமுடியில்

முகர ஒரசுனது

முழுசாத்தான் மறந்திருச்சோ?


மொட்டு மொட்டு மல்லிகையை

முட்டிமுட்டித் தட்டிவிட்டு

முத்துமுத்து வேர்வைச் சொட்டு

மோந்தகதை மறந்திருச்சோ?


வாழைத் தோப்புக்குள்ள

வளவி ஒடச்சகதை

வாழை மறந்திருக்கும்

வலதுகையி மறந்திருமோ?


ஒருவாய் வெத்தலைய

இருவாய் உண்டகதை

திருவாய் மறந்தாலும்

தின்னருசி மறந்திருமோ?


ஒருவாய் வெத்தலைய

இருவாய் உண்டகதை

திருவாய் மறந்தாலும்

தின்னருசி மறந்திருமோ?



தேனேறிப் போயிருந்த

சிறுக்கிமக தலைமயிரு

பேனேறிப் போனதய்யா

பேச்சுவார்த்தை இல்லாம


புள்ளித் தேமலுக்கும்

புதுவேட்டி மடிப்புக்கும்

கருப்பட்டி ஒதட்டுக்கும்

கருத்தகிளி அலையுதய்யா


ஆறுசரம் சங்கிலியோ

அட்டிகையோ கேக்கலையே

மஞ்சக் கயித்துக்கு

மனசுக்குள்ள அரிக்குதய்யா


ஆம்பளைக சகவாசம்

அடுத்தொருத்தி வாரவரைக்கும்

பொம்பளைக சகவாசம்

புதைகாடு போறவரைக்கும்

Aararo (Music Video)

படம்: ஆராரோ (2020)
இசை: அந்தோணிதாசன்
பாடியவர்கள்: அந்தோணிதாசன்
பாடல்வரிகள்: மோகன்ராஜன்





ஹ்ம்ம்... ம்ம்ம்... ஹ்ம்ம்...
ஆரிரோ ஆரிரோ ஆராரிரோ
ஆராரிரோ ஆராரிரோ

ஆராரோ ஆரிராரோ
அப்பனோட தாலாட்டு
நீ தூங்க பாடலடா
நீ முழிக்க பாடுறேன்டா
வம்புதும்பு வச்சுக்காத
கோழையாவும் வாழ்ந்திடாத
கூட்டு சேர்ந்து கெட்டுடாத
கைய கட்டி நின்னுடதா
அப்பன் சொல்ல மீறிடாத
ஆராரோ ஆரிராரோ
அப்பனோட தாலாட்டு



நாலு எழுத்து கத்துக்கடா
நாலு திசை போயி வாடா
நாணயத்தை கத்துக்கிட்டு
நாலு காசு சேத்துக்கடா

ஊரு என்ன சொல்லுமுன்னு
எப்போதும் நீ வாழ்ந்திடத
ஊருக்கென்ன செய்யணுன்னு
யோசிக்க நீ மறந்திடாத

பாசத்த அதிகம் வெச்சா
பைத்தியமா ஆகிடுவ
பாசமே இல்லையின்னா
பரதேசி ஆகிடுவ

அளவா இருந்துக்கடா
அழகா வாழ்ந்துக்கடா
கவலையை வென்றிடடா
கஷ்டப்பட கத்துக்கடா
அப்பன் சொன்னா ஒத்துக்கடா

ஆராரோ ஆரிராரோ
அப்பனோட தாலாட்டு



அம்மாவோட பாசத்த
புரிஞ்சுக்க சில மாசம்
அண்ணன் தம்பி பாசத்த
தெரிஞ்சிக்க சில வருஷம்

சொந்தத்தோட பாசத்த
புரிஞ்சிக்க சில கஷ்டம்
கூட்டாளி பாசத்த
தெரிஞ்சிக்க சில நஷ்டம்

அவரவர் பாசத்த
அப்பப்போ புரிஞ்சிப்ப
அப்பனோட பாசத்த
அப்பன்னாகி தெரிஞ்சிப்ப

வேர்வைய தாய்ப்பால
கொடுப்பவன் அப்பனடா
கோவத்துல பாசத்த
காட்டுறவன் அப்பனடா

இப்ப சொன்ன எல்லாமே
வார்த்தையில்லை தெரிஞ்சிக்க
அப்பன் வாழ்க்கையின்னு புரிஞ்சிக்க

ஆராரோ ஆரிராரோ
அப்பனோட தாலாட்டு
நீ தூங்க பாடலடா
நீ முழிக்க பாடுறேன்டா
வம்புதும்பு வச்சுக்காத
கோழையாவும் வாழ்ந்திடாத
கூட்டு சேர்ந்து கெட்டுடாத
கைய கட்டி நின்னுடதா
அப்பன் சொல்ல மீறிடாத
ஆராரோ ஆரிராரோ
அப்பனோட தாலாட்டு

ஹ்ம்ம்... ம்ம்ம்... ஹ்ம்ம்...
ஆரிரோ ஆரிரோ ஆராரிரோ
ஆராரிரோ ஆராரிரோ....

Red - Dil Dil Dil Italy Kattil

படம்: ரெட் (2002)

இசை: தேவா

பாடியவர்கள்: STR, மாதங்கி ஜெக்தீஸ்

பாடல்வரிகள்: வைரமுத்து




டில் டில் டில் இத்தாலி கட்டில்

தை தை தை இங்கிலாந்து மெத்தை


டில் டில் டில் இத்தாலி கட்டில்

தை தை தை இங்கிலாந்து மெத்தை

உலகிலுள்ள உயர்ந்ததெல்லாம்

சுவைக்கும் ரசிகன் நீ நண்பா


டில் டில் டில் இத்தாலி கட்டில்

தை தை தை இங்கிலாந்து மெத்தை

உலகிலுள்ள உயர்ந்ததெல்லாம்

சுவைக்கும் ரசிகன் நான் பெண்ணே


காஷ்மீரின் ஆப்பிள்

காபூலின் திராட்சை

புசிப்பேன் புசிப்பேன்

பெல்ஜியம் கிலாஸில்

ஜெர்மனி வைனை

ருசிப்பேன் ருசிப்பேன்

அடி பெண்களில் நான் தொட்டது

அடி நீதானே... நீதானே...


டில் டில் டில் இத்தாலி கட்டில்

தை தை தை இங்கிலாந்து மெத்தை

உலகிலுள்ள உயர்ந்ததெல்லாம் 

சுவைக்கும் ரசிகன் நீ நண்பா



துருக்கி கம்பலத்தில்

நான் இந்திய பூக்களிட்டு

உனை நடக்க வைத்திருப்பேன்


சௌதி பேரிச்சையில்

ஆஸ்த்ரேலியா தேன் ஊற்றி

உனை சுவைக்க வைத்திருப்பேன்


கிளியே நமக்கொரு மாளிகையில்

கிரேக்க நாட்டு மார்பல்கள்

ஆப்ரிக்காவின் தங்கத்தில்

அழகிய கைப்பிடிகள்


ஜோர்டன் முஸ்லிம் தனியறையில்

தாய்லாந்து நாட்டு தலையனைகள்

பாத்ரூம் போக நேர்ந்தாலும்

பாரிஸ் காலணிகள்


இனியெல்லாம் முதல் தரம்

இந்த இன்பம் நிரந்தரம்


அட பெண்களில் யார் முதல் தரம்

அது நான்தானே நான்தானே


டில் டில் டில் இத்தாலி கட்டில்

தை தை தை இங்கிலாந்து மெத்தை

உலகிலுள்ள உயர்ந்ததெல்லாம்

சுவைக்கும் ரசிகன் நான் பெண்ணே


ஆப்ரிக்கா வெள்ரிக்கா வெண்டக்கா

அக்கக்கா மாயக்கா

யெக்கா யெக்கா யெக்கக்கா

முர்ங்கக்கா பீர்கங்கா அவரக்கா

அக்கக்கா மாயக்கா மாயக்கா மாயக்கா

ஓஹோ ஹோ மாய் மாய் மாய் மாய் 

மாயக்கா பக்கத்தில் வாயக்கா

ரெட்டோட சாயக்கா

ஜீக்ஜு ஜும் ஜீக்ஜு ஜும்

ஜும் ஜும் ஜும் ஜும்

ஜீக்ஜு ஜும் ஜீக்ஜு ஜும்

ஜும் ஜும் ஜும் ஜும்



சீன கிண்ணத்தில்

சேலத்து மாம்பழங்கள்

நீ புசிக்க நான் தருவேன்


இலங்கை தேயிலையில்

நான் டென்மார்க் பாலூற்றி

புது தேநீர் நான் தருவேன்


மைசூர் சந்தன தைலத்தில்

மாலை பொழுதில் நீராடி

பாரிஸ் பர்ஃப்யூம் பூசிக்கொண்டு

மெக்சிகன் இசை கேட்போம்


இராக் நாட்டு கோப்பையிலே

பிரேசிலோட ஜூஸ் பருகி

ரோமன் விளக்கு வெளிச்சத்தில்

கவிதை தமிழ் படிப்போம்... ஓ... ஓ... ஓ


இனியெல்லாம் முதல் தரம்

இந்த இன்பம் நிரந்தரம்


அட பெண்களில் யார் முதல் தரம்

நான்தானே நான்தானே


டில் டில் டில் இத்தாலி கட்டில்

தை தை தை இங்கிலாந்து மெத்தை

உலகிலுள்ள உயர்ந்ததெல்லாம்

சுவைக்கும் ரசிகன் நான் பெண்ணே


காஷ்மீரின் ஆப்பிள்

காபூலின் திராட்சை

புசிப்பாய் புசிப்பாய்

பெல்ஜியம் கிலாஸில்

ஜெர்மனி வைனை

ருசிப்பாய் ருசிப்பாய்

பெண்களில் நீ தொட்டது

நான்தானே நான்தானே


Red - Thai Madiye Unnai

படம்: ரெட் (2002)

இசை: தேவா

பாடியவர்கள்: திப்பு

பாடல்வரிகள்: வைரமுத்து





பிரசன்ன வதனா

சௌபாக்யதா பாக்யதா

ஹாதாபாபய  ப்ரதாம் மனிகனைர் 

நனவிதைர் பூஷிதா


தாய் மடியே உன்னை தேடுகிறேன்

தாரகையும் உருக பாடுகிறேன்

பத்து திங்கள் என்னை சுமந்தாயே

ஒரு பத்தே நிமிடம் தாய் மடி தா தாயே

நீ கருவில் மூடி வைத்த என் உடம்பு

நடு தெருவில் கிடக்கிறது பார்த்தாயோ

உதிரம் வெளியேறும் காயங்களில்

என் உயிரும் ஒழுகும் உன்னை வாா்த்தாயோ

தெய்வங்கள் இங்கில்லை உன்னை அழைக்கிறேன்


தாய் மடியே உன்னை தேடுகிறேன்

தாரகையும் உருக பாடுகிறேன்


பிரசன்ன வதனா

சௌபாக்யதா பாக்யதா

ஹாதாபாபய  ப்ரதாம் மனிகனைர் 

நனவிதைர் பூஷிதா



விண்ணை இடிக்கும் தோள்கள்

மண்ணை அளக்கும் கால்கள்

அள்ளி கொடுத்த கைகள்

அசைவில் வந்ததென்ன

கானல்கள் தின்னும் கண்கள்

கனிந்து நிற்கும் இதழ்கள்

உதவி செய்யும் பார்வை

உயிர் குறைந்ததென்ன

பாரத போர்கள் முடிந்த பின்னாலும்

கொடுமைகள் இங்கே குறையவில்லை

ஏசுகள் என்றோ மாண்ட பின்னாலும்

சிலுவைகள் இன்னும் மறிக்கவில்லை


தாய் மடியே உன்னை தேடுகிறேன்

தாரகையும் உருக பாடுகிறேன்



படை நடத்தும் வீரன்

பசித்தவர்கள் தோழன்

பகைவருக்கும் நண்பன்

படும் துயரம் என்ன

தாய் பாலாய் உண்ட ரத்தம்

தரை விழுந்ததென்ன

இவன் பேருக்கேற்ற வண்ணம்

நிலம் சிவந்ததென்ன

தீமைகள் என்றும் ஆயுதம் ஏந்தி

தேர்களில் ஏறி வருவதென்ன

தர்மங்கள் என்றும் பல்லக்கில் ஏறி

தாமதமாக வருவதென்ன


தாய் மடியே உன்னை தேடுகிறேன்

தாரகையும் உருக பாடுகிறேன்

பத்து திங்கள் என்னை சுமந்தாயே

ஒரு பத்தே நிமிடம் தாய் மடி தா தாயே

நீ கருவில் மூடி வைத்த என் உடம்பு 

நடு தெருவில் கிடக்கிறது பார்த்தாயோ

உதிரம் வெளியேறும் காயங்களில் 

என் உயிரும் ஒழுகும் உன்னை வாா்த்தாயோ

தெய்வங்கள் இங்கில்லை உன்னை அழைக்கிறேன்


பிரசன்ன வதனா

சௌபாக்யதா பாக்யதா

ஹாதாபாபய  ப்ரதாம் மனிகனைர் 

நனவிதைர் பூஷிதா


Thursday, July 29, 2021

Red - Olikuchi Udambukari

 படம்: ரெட் (2002)

இசை: தேவா

பாடியவர்கள்: கே.கே, அனுராதாஸ்ரீராம்

பாடல்வரிகள்: வைரமுத்து

Download this MP3


தா தை... தத்த தை...

தக்க தை தக்க தை... தக்க தக்க தை...

தா தை... தத்த தை...

தக்க  தை தக்க தை... தக்க தக்க தை...


ஒல்லிக்குச்சி ஒடம்புக்காரி 

ஒட்டிக்கிட்டா உடும்புக்காரி 

சடையில் அடிச்சே

என்னை சாச்சுப்புட்டா ஆ...ஆ... ஆ...

முத்தாங்கனி தொட்டுப்புட்டா

நான் செத்தே போனேன் திட்டு திட்டா


நான் காணாங்குளத்து மீனே....

நான் காணாங்குளத்து மீனே 

உன்ன கடிக்கப் போறேன் நானே 

நான் சமைஞ்சதும் உன் சாமி வந்து 

உன் காதில் சொல்லுச்சு தானே


ஒல்லிக்குச்சி ஒடம்புக்காரி 

ஒட்டிக்கிட்டா உடும்புக்காரி



எனக்காச்சு மச்சினிச்சி உனக்காச்சு

வேணாம் இனி வாய்பேச்சு

வாய்க்குள்ளே முத்து குளிக்கலாம்

பற்களே முத்தாய் மாறலாம்

கிச்சு கிச்சு பண்ணிக்கலாம்

பிச்சு பிச்சு தின்னுக்கலாம்


பழுத்தாச்சு நெஞ்சாம் பழம் பழுத்தாச்சு

அணில் கிட்ட குடுத்தாச்சு

அணில் இப்போ துள்ளி குதிக்கலாம்

அப்பப்பா பல்லும் பதிக்கலாம்


பசியையும் தூண்டி விட்டு

பந்திக்கும் வரச்சொல்லிட்டு

இலைகளை மூடி ஓடுறியே


பசி வந்தா கலங்குவே

நீ பாத்திரத்த முழுங்குவ


என் காணாங்குளத்து மீனே 

உன்ன கவுக்க போறேன் நானே 

நீ சமைஞ்சதும் சாமி வந்து 

என் காதில் சொல்லுச்சு மானே


 

ஒல்லிக்குச்சி ஒடம்புக்காரி....

ஒட்டிக்கிட்டா உடும்புக்காரி....


தா தை... தத்த தை...

தக்க தை தக்க தை... தக்க தக்க தை...

தா தை... தத்த தை...

தக்க  தை தக்க தை... தக்க தக்க தை...

தா தை... தத்த தை...

தக்க  தை தக்க தை... தக்க தக்க தை...


தடுக்காதே மூடு வந்தா கெடுக்காதே 

மஞ்சப்பூவும் மறைக்காதே 

தாகம் தான் சும்மா அடங்குமா 

தண்ணிக்குள் பந்து உறங்குமா 

கொஞ்சம் கொஞ்சம் விட்டு கொடு 

குங்குமத்த தொட்டு கொடு


நெருக்காதே பொன்னாங்கண்ணி பொறுக்காதே

புடலங்காய முருக்காதே

மொத்தத்தில் என்ன துவைக்கிற

முத்தத்தில் மச்சம் கரைக்கிற


காதலின் சேட்டையடி

கட்டில் மேல் வேட்டையடி

காயமும் இங்கே இன்பமடி


கட்டிலுக்கு கெட்ட பையன் 

நீ ரெட்ட சுழி உள்ள பையன்


ஏ காணாங்குளத்து மீனே 

உன்ன கவுக்க போறேன் நானே

நீ சமைஞ்சதும் சாமி வந்து 

என் காதில் சொல்லுச்சு மானே மானே


ஒல்லிக்குச்சி ஒடம்புக்காரி 

ஒட்டிக்கிட்டா உடும்புக்காரி 

சடையில் அடிச்சே உன்னை 

சாச்சுப்புட்டா ஆ...ஆ... ஆ...

ஒல்லிக்குச்சி ஒடம்புக்காரி 

ஒட்டிக்கிட்டா உடும்புக்காரி 

சடையில் அடிச்சே உன்னை 

சாச்சுப்புட்டா ஆ...ஆ... ஆ...


முத்தாங்கனி தொட்டுப்புட்டா

நான் செத்தே போனேன் திட்டு திட்டா


நான் காணாங்குளத்து மீனே 

நான் காணாங்குளத்து மீனே 

உன்ன கடிக்கப் போறேன் நானே 

நான் சமைஞ்சதும் சாமி வந்து 

உன் காதில் சொல்லுச்சு தானே


தா தை... தத்த தை...

தக்க தை தக்க தை... தக்க தக்க தை...

தா தை... தத்த தை...

தக்க  தை தக்க தை... தக்க தக்க தை...


Teddy - En Iniya Thanimaye

 படம்: டெடி (2020)

இசை: இமான்

பாடியவர்கள்: சித் ஸ்ரீராம்

பாடல்வரிகள்: மதன் கார்க்கி




என் இனிய தனிமையே...

என் இனிய தனிமையே...

என் இனிய தனிமையே........ஏஏ..ஏ..

என் இனிய தனிமையே....


புதிதான அதிகாலையோ

புகைசூடும் நெடுஞ்சாலையோ

உன்னோடு நான் நடந்தால்

எல்லாம் பேரழகு


மழை வீழும் இளமாலையோ

இசையில்லா இடைவேளையோ

என்னோடு நீ நடந்தால்

இன்பம் என் உலகு


உன்னோடு மட்டும்தான்

என் நேரம் எனது

உன்னோடு மட்டும்தான்

மெய் பேசும் மனது


மனிதரின் மொழி கேட்டு

கேட்டு இதயம் பழுதாய்

தமைதியில் தானே

ஆனேன் முழுமுழுதாய்


என் இனிய தனிமையே...

என் இனிய தனிமையே...

என் இனிய தனிமையே........ஏஏ..ஏ...

என் இனிய தனிமையே....



அலை மோதும் கரை மீதிலோ

மணல் பாதம் சுடும் போதிலோ

உன்னோடு நான் நடந்தால்

மண்ணே பூச்சிறகு


கரைகின்ற அடி வானமோ

குறையாத பெருந்தூரமோ

என்னோடு நீ நடந்தால்

இன்பம் என் உலகு


என் தாயின் கருவில்

என்னோடு பிறந்தாய்

என் வாழ்வின் முடிவில்

என்னோடு இருப்பாய்


உறவுகள் வந்து சேரும் 

நீங்கும் நீதான் நிலையாய்

அதற்கு உக்கொரு நன்றி

சொன்னேன் முதல் முறையாய்


என் இனிய தனிமையே...

என் இனிய தனிமையே...ஏஏ..ஏ...

என் இனிய தனிமையே...ஏஏ..ஏ...

என் இனிய தனிமையே....



இதுவரை கற்கா கலைகள் எல்லாம்

உன்னுடன் கற்கும் வேளையிலே

என்னுயிர் தோழி நீயென்பேன் நீயென்பேன்

இதுவரை காணா காட்சிகளை

உன்னுடன் காணும் வேளையிலே

எந்தன் காதல் நீயென்பேன் நீயென்பேன்


ஒரு சிலர் என்னை நெருங்க

என்னிடம் பேச தொடங்க

சிறு ஊடல் கொண்டு

நீங்கி போகின்றாய்


கவலைகள் என்னை வருத்த

உன்னிடம் என்னை துரத்த

உன் மடியை தந்து

தாயாய் ஆகின்றாய்


எனை துயிலென அணைத்திடு தனிமையே...

என் கனவிலும் தொடர்ந்திடு தனிமையே...

கண் விழிக்கையில் இருந்திடு தனிமையே...

தனிமையே...


என் இனிய தனிமையே...

என் இனிய தனிமையே...ஏஏ..ஏ...

என் இனிய தனிமையே...ஏஏ..ஏஏ...

என் இனிய தனிமையே....

என் இனிய தனிமையே...ஓஹ்ஹோ

என் இனிய தனிமையே... ஏஏ..ஏஏ...

என் இனிய தனிமையே...

Teddy - Nanbiye

 படம்: டெடி (2020)

இசை: D.இமான்

பாடியவர்கள்: அனிருத்

பாடல்வரிகள்: மதன் கார்க்கி




எந்தன் நண்பியே... நண்பியே...

எனை திறக்கும் அன்பியே...

எந்தன் நண்பியே... நண்பியே...

எனை இழுக்கும் இன்பியே...


பப்பப்ப... பப்ப பப்ப... ப...

பப்பப்ப... பப்ப பப்ப... ப...


எந்தன் முகம் காட்டும்

புன்னகைகள் தீட்டும்

மனதின் கண்ணாடி நீயே

என்னை என்னை போலே

ஏற்றுகொண்டதாலே

எதிரொலியாகிடுவாயே


கண்டதை பாடவும்

கண்மூடி ஆடவும்

என் துணை ஆக்கிட வந்தாயே

சண்டைகள் போடவும்

பின் வந்து கூடவும்

ஆயிரம் கரணம் தந்தாயே

வண்ணங்கள் நானே நீ தூரிகையே


எந்தன் நண்பியே... நண்பியே...

எனை திறக்கும் அன்பியே...

எந்தன் நண்பியே... நண்பியே...

எனை இழுக்கும் இன்பியே...


எந்தன் மனம் பார்க்க

சொல்வதெல்லாம் கேக்க

கிடைத்த ஓர் உயிர் துணை நீயே

நீயே...

என் சிரிப்பில் பாதி

என் துயரில் பாதி

பகிர்ந்து நீ அருந்துகிறாயே

அருந்துகிறாயே...


எல்லாமே பொய்யென

நீ மட்டும் மெய்யென

என் அச்சம் யாவையும் கொன்றாயே

கொன்றாயே...


நான் இங்கு உண்மையா

உன் கையில் பொம்மையா

யார் இந்த நான் என சொன்னாயே

செவ்வானம் நானே நீ அவந்திகையே


எந்தன் நண்பியே... நண்பியே...

எனை திறக்கும் அன்பியே...

எந்தன் நண்பியே... நண்பியே...

எனை இழுக்கும் இன்பியே...


இன்பியே... ஹோ ஹோ ஒ...

நண்பியே... ஹோ ஹோ ஒ...


மெய் நிகராட்டகள் ஆடிடும் போது

ஆயிரம் எதிரிகள் போர்களம் மீது

எந்தன் படையில் நீயும் இருந்தால்

அந்த வெற்றி எந்தன் காலடியில்


இணைய தொடரை இணைத்தே

மெய் காண்போமே

அழுதால் உடனே நீ துடைப்பாய்

மனதில் நினைத்து ஒரு சொல் 

சொல்லும்போதே

தொடங்கும் எதையும் நீ முடிப்பாய்


நீயும் எந்தன் தனிமையே

அதை விட இனிமையே

இதய சுவரில் இறைவன் 

வரையும் குறுநகையே


எந்தன் நண்பியே நண்பியே

நண்பியே...

எனை திறக்கும் அன்பியே

நண்பியே...

எந்தன் நண்பியே நண்பியே

நண்பியே...

எனை இழுக்கும் இன்பியே

இன்பியே.....


நண்பியே... நண்பியே...

நண்பியே... நண்பியே...

Popular Posts