Saturday, March 31, 2018

Solo - Sitha Kalyanam

ப‌டம் : சோலோ (2017)
இசை : சூரஜ் S.குரூப்
பாடியவர் : ரேணுகா அருண், சூரஜ் S.குரூப்
பாடல்வரி : சங்கீத் ரவிந்திரன்,  சூரஜ் S.குரூப்



Image result for Solo tamil Movie



எண்ணிக்காது ஒரு நாள் 
நான் உன் பக்கம் இல்லனா
என் நியாபகம் நெனப்பு எதுவும் இல்லனா
Will you used to love me

Take Me There
I Know This Journey Ends
Oh, Wake Me Up...
I Need To Breathe To Again
I Need...
I Need To Breathe To Again

சீதா கல்யாண... வைபோகமே...
ராமா கல்யாண... வைபோகமே...

ராதா ரகசியா மதுரை மடியினில்
ராதா ரகசியா மதுரை மடியினில்
ராதா ரகசியா காதல் கண்ணனில் 
ராதா ரகசியா
ராதா ரகசியா மதுரை மடியினில்
ராதா ரகசியா மதுரை மடியினில்
ராதா ரகசியா காதல் கண்ணனில் 
ராதா ரகசியா


வாழ்க்கையே...

இதும் கடந்து வாழ வேண்டும்

என்னிலே...

உடல் உயிர் உன் மனம்

அரசியே...

மனம் அடைந்து வாழ வேண்டும்

நாள் என்றும் நல் வாழ்வு 
நினைக்கும் என் மனம்

மறையாதே என் கனவே 
காற்றாக நீ இருப்பாய்
நீ எந்தன் அருகினில் வா...
மறையாதே என் கனவே 
காற்றாக நீ இருப்பாய்
நீ எந்தன் அருகினில் வா...

Take... Me... There...

பக்த ஜன பரிபால
பரிதா சர ஜால
புக்தி முக்திதலீலா 
பூதேவ பாலா

சீதா கல்யாண... வைபோகமே...
ராமா கல்யாண... வைபோகமே...


Take Me There
I Know This Journey Ends
Oh, Wake Me Up...
I Need To Breathe To Again
I Need...

வாழ்க்கையே...

இதும் கடந்து வாழ வேண்டும்

என்னிலே...

உடல் உயிர் உன் மனம்

அரசியே... நல் வாழ்வு 
நினைக்கும் என் மனம்
ஆ... உடல் உயிர் உன் மனம்
சீதா கல்யாண... வைபோகமே...

Kadhalan - Kadhalikum Pennin

படம் : காதலன்(1994)
இசை : ரஹ்மான்
பாடியவர் : S.P.B, உதித் நாராயணன், பல்லவி
பாடல்வரி : வைரமுத்து


Image result for kadhalan song




காதலிக்கும் பெண்ணின் கைகள் தொட்டு நீட்டினால்
சின்ன தகரம் கூட தங்கம் தானே
காதலிக்கும் பெண்ணின் வண்ண கன்னம் ரெண்டிலே
மின்னும் பருவம் கூட பவளம் தானே
சிந்தும் வேர்வை தீர்த்தம் ஆகும்
சின்ன பார்வை மோட்ஷம் ஆகும்
காதலின் சங்கீதமே
ம்.. ஹும் பூமியின் பூபாளமே
காதலின் சங்கீதமே
ம்.. ஹும் பூமியின் பூபாளமே


காதலிக்கும் பெண் வடிக்கும் கையெழுத்திலே
கண்ட பிழைகள் கூட கவிதை ஆகுமே

காதல் ஒன்றும் சுத்தம் கித்தம் பார்ப்பதில்லையே
எச்சில் கூட புனிதம் ஆகுமே

குண்டு மல்லி ரெண்டு ரூபாய்
உன் கூந்தல் ஏறி உதிரும் பூ கோடி ரூபாய்

பஞ்சு மிட்டாய் அஞ்சு ரூபாய்
நீ பாதி தின்று தந்ததால் லட்ச ரூபாய்

காதலிக்கும் பெண்ணின் கைகள் தொட்டு நீட்டினால்
சின்ன தகரம் கூட தங்கம் தானே
காதலிக்கும் பெண்ணின் வண்ண கன்னம் ரெண்டிலே
மின்னும் பருவம் கூட பவளம் தானே

சிந்தும் வேர்வை தீர்த்தம் ஆகும்
சின்ன பார்வை மோட்ஷம் ஆகும்

காதலின் சங்கீதமே

ம்.. ஹும் பூமியின் பூபாளமே

காதலின் சங்கீதமே

ம்.. ஹும் பூமியின் பூபாளமே


காதல் ஒன்றும் நல்ல நேரம் பார்ப்பதில்லையே
ராகு காலம் கூட ராசி ஆகுமே

காதலுக்கு அன்னபட்ஷி தேவை இல்லையே
காக்கை கூட தூது போகுமே

காதல் ஜோதி புகைவதில்லை
காதல் என்றும் குற்றமே பார்ப்பதில்லை

இதில் அர்ப்பமானது எதுவும் இல்லை
இந்த நுட்பம் ஊருக்கு புரியவில்லை

வானும் மண்ணும் மாறியே போகும்
காதல் என்றும் வாழுமே
ஆதாம் ஏவாள் பாடிய பாடல்
காற்றில் என்றும் கேட்குமே
காதல் கெட்ட வார்தையா என்ன யாரும் சொல்லலாம்
நீ சொல்லவேண்டும் என்று
காதல் முள்ளின் வேலியா என்ன யாரும் செல்லலாம்
நீ செல்லவேண்டும் என்று

Thirumathi Palanisamy - Rendula Nee

படம் : திருமதி பழனிச்சாமி (1992)
இசை : இளையராஜா
பாடியவர் : மனோ, ஜானகி
பாடல் வரி : வாலி


Image result for thirumathi palanisamy songs



ரெண்டுல நீ ஒன்ன தொடு மாமா
இந்த பொண்ணுக்கிட்ட வெக்கப்படலாமா

ஜல்லிக்கட்டு காள ரெடிதாம்மா
நீ தும்ப விட்டு வால தொடலாமா

பாய் மேல பூ போட்டு
படிப்போமா புது பாட்டு

ஆமாமா அது தானே
அலுக்காத விளையாட்டு

ரெண்டுல நீ ஒன்ன தொடு மாமா
இந்த பொண்ணுக்கிட்ட வெக்கப்படலாமா

ஜல்லிக்கட்டு காள ரெடிதாம்மா
நீ தும்ப விட்டு வால தொடலாமா


சந்தனமும் குங்குமமும் பள பள‌க்க
மல்லிகப்பூ வாட பட்டு கிருகிருக்க

கும்முனு வளர்ந்த பொண்ணு கும்மி அடிக்க
துள்ளுது மனசு இப்போ தந்தி அடிக்க

கட்டான ஆம்பள அள்ளி அனைக்க
கேட்டாளே பொம்பல ஒன்ன நினைக்க

பட்டால வீரன தொட்டு மடக்க
கட்டான மாதுள மொட்டு வெடிக்க

சேர்ந்திருக்கத் தானே சின்ன பொண்ணும் ஆணும்

காத்திருக்கேன் கண்மணியே காரணத்தோடு

ரெண்டுல நீ ஒன்ன தொடு மாமா
இந்த பொண்ணுக்கிட்ட வெக்கப்படலாமா

ஜல்லிக்கட்டு காள ரெடிதாம்மா
நீ தும்ப விட்டு வால தொடலாமா

பாய் மேல பூ போட்டு
படிப்போமா புது பாட்டு

ஆமாமா அது தானே
அலுக்காத விளையாட்டு

ரெண்டுல நீ ஒன்ன தொடு மாமா
இந்த பொண்ணுக்கிட்ட வெக்கப்படலாமா

ஜல்லிக்கட்டு காள ரெடிதாம்மா
நீ தும்ப விட்டு வால தொடலாமா


வட்டியும் முதலும் இப்போ கட்டி விடவா
சுத்தியுல்ல வேலிகல வெட்டி விடவா

ஆத்திரமும் ஆகாது கொஞ்சம் மெதுவா
மத்த கத நீ பேச நேரம் இதுவா

இல்லாத மூடு தான் சூடு கெள‌ப்ப
வந்தாச்சு நேரம் தான் தூளு கெளப்ப

பொல்லாத மாமன் தான் போட்டு இழுக்க
நம்மோட பேச்சி தான் ஊருமுழுக்க

ஆடி மாசம் புள்ள ஆடிப்பாப்போம் உள்ள

வாடுகிற நேரம் இல்ல வாலிப புள்ள

ரெண்டுல நீ ஒன்ன தொடு மாமா
இந்த பொண்ணுக்கிட்ட வெக்கப்படலாமா

ஜல்லிக்கட்டு காள ரெடிதாம்மா
நீ தும்ப விட்டு வால தொடலாமா

பாய் மேல பூ போட்டு
படிப்போமா புது பாட்டு

ஆமாமா அது தானே
அலுக்காத விளையாட்டு

ஹே... ரெண்டுல நீ ஒன்ன தொடு மாமா
இந்த பொண்ணுக்கிட்ட வெக்கப்படலாமா

ஜல்லிக்கட்டு காள ரெடிதாம்மா
நீ தும்ப விட்டு வால தொடலாமா

Thirumathi Palanisamy - Paatha Kolusu

படம் : திருமதி பழனிச்சாமி (1992)
இசை : இளையராஜா
பாடியவர் : S.P. பாலசுப்ரமணியம்
பாடல் வரி : வாலி


Image result for thirumathi palanisamy songs



பாத கொலுசு பாட்டு பாடி வரும் பாடி வரும்
பாவ சொகுசு பாக்க கோடி பெறும் கோடி பெறும்
பாத கொலுசு பாட்டு பாடி வரும் பாடி வரும்
பாவ சொகுசு பாக்க கோடி பெறும் கோடி பெறும் 

பாத கொலுசு பாட்டு பாடி வரும் பாடி வரும்
பாவ சொகுசு பாக்க கோடி பெறும் கோடி பெறும்
சித்தாடை போட்ட சின்னமணித் தேரு
சில்லென்னு பூத்த செவ்வரளிப் பூவு
செப்பால செஞ்சு வச்ச அம்மன் சிலை தான்...
பாத கொலுசு பாட்டு பாடி வரும் பாடி வரும்
பாவ சொகுசு பாக்க கோடி பெறும் கோடி பெறும்


குத்தால மேகமெல்லாம் கூந்தலிலே நீந்தி வரும்
கொய்யாத மாங்கனியை கொடியிடை தான் ஏந்தி வரும்
மத்தாப்பு வானமெல்லாம் வாய்ச் சிரிப்பு காட்டி வரும்
மானோடு மீன் இரண்டை மை விழியோ கூட்டி வரும்
பொன்னாக ஜொலிக்கும் பெண் பாவை அழகு
ஒண்ணாகக் கலந்த முன்னூறு நிலவு
பொட்டோடு பூவும் கொண்டு தாவும் மயில் தான்...
பாத கொலுசு பாட்டு பாடி வரும் பாடி வரும்


செஞ்சாந்து குழம்பெடுத்து தீட்டி வைத்த சித்திரமே
தென்பாண்டிக் கடல் குளித்து கொண்டு வந்த முத்தினமே
தொட்டாலும் கை மணக்கும் தென்பழனிச் சந்தனமே
தென்காசித் தூரலிலே கண் விழித்த செண்பகமே
பெண்ணாக பிறந்த பல்லாக்கு நீயோ
ஈரேழு உலகில் ஈடாக யாரோ
நெஞ்சோடு கூடு கட்டி கூவும் குயிலோ...
பாத கொலுசு பாட்டு பாடி வரும் பாடி வரும்


பெண் என்ற ஜாதியிலே ஆயிரத்தில் அவள் ஒருத்தி
பொன் வைரம் கொடுத்தாலும் போதாது சீர் செனத்தி
கல்யாணப் பந்தலிலே நான் அவளை நேர் நிறுத்தி
பூமாலை சூட்டிடுவேன் மாப்பிள்ளை நான் பட்டுடுத்தி
அன்றாடம் அலைந்து எங்கேயும் தேடி
கண்டேனே எனக்கு தோதான ஜோடி
வந்தாச்சு கால நேரம் மாலையிடத் தான்...

பாத கொலுசு பாட்டு பாடி வரும் பாடி வரும்
பாவ சொகுசு பாக்க கோடி பெறும் கோடி பெறும்
சித்தாடை போட்ட சின்னமணித் தேரு
சில்லென்னு பூத்த செவ்வரளிப் பூவு
செப்பால செஞ்சு வச்ச அம்மன் சிலை தான்...

பாத கொலுசு பாட்டு பாடி வரும் பாடி வரும்
பாவ சொகுசு பாக்க கோடி பெறும் கோடி பெறும்

Thirumathi Palanisamy - Amman Kovil

படம் : திருமதி பழனிச்சாமி (1992)
இசை : இளையராஜா
பாடியவர் : S.P. பாலசுப்ரமணியம், மின்மினி
பாடல்வரி : வாலி



ஹே... ஹே... அர‌அர‌அர‌அர... ஹே
ஹே... ஹே... அர‌அர‌அர‌அர... ஹே
ஆஆஆஆஆஆஆ....

அம்மன் கோவில் வாசலிலே... வாசலிலே...
அய்யனாரு விதியிலே... விதியிலே...
என் பூரதம் சுத்தி வருது
ஒரு பொன்மணிய தேடி வருது
அடி ஊர்கோலம் போவோமா
இளம் ஜோடியினு ஆவோமா
ஹே... அம்மன் கோவில் வாசலிலே... வாசலிலே...
அய்யனாரு விதியிலே... விதியிலே...

மச்சான் உன் பொன்னுமணி
மங்காத தங்க‌மணி கிட்டாதையா...
வச்சாலும் நல்ல குறி
நம்மூரு பச்சகிளி சிக்காதையா...

அண்ணாச்சி விட்ட ரதம்
எந்நாளும் வெற்றி பெறும் நிக்காதையா...

முக்காடு பொட்டுக்கிட்டு
உன் வாய பொத்திக்கிட்டு உக்காரையா...

வட்டம் போடும் வாலிப காத்து
திட்டம் போட்டு பாடாதா...
பாட்டு கேட்டு வாசனை பூவும்
பக்கம் வந்து ஆடாதா...
கிட்டாதது கிட்டும் வரை
மல்லாடுற‌ கில்லாடி நான்...
ஹே...

அம்மன் கோவில் வாசலிலே... வாசலிலே...
அய்யனாரு விதியிலே... விதியிலே...
ஒரு பூரதம் சுத்தி வருது
அது பொன்மணிய தேடி வருது
இது ஆகாத வேலை தான்
வந்து மாட்டாது சேலை தான்
ஹே... அம்மன் கோவில் வாசலிலே... வாசலிலே...
அய்யனாரு விதியிலே... விதியிலே...


ஏட்டாத கொம்புபழம்
கிட்டாத குள்ளநரி அந்நாளிலே
சீ... சீ... சொல்லிபுட்டு
வாலாட்ட வந்திருக்கு இந்நாளிலே

விக்காம வத்திக்குச்சி
பக்குனு பத்திக்குச்சி பெண்ணாசதான்
பொண்டாட்டி வேணும் இப்ப‌
கொண்டானு கேக்குதடி என்னாசதான்

லவ்‍னு பண்ணும் நாடகம் எல்லாம்
இவ்வு மண்ணில் வேகாது
சைக்கிள் ஓட்டி சைட் அடிச்சாலும்
கைக்குள் வந்து சேராது

அண்ணாச்சி தான் கைய வச்சா
மண்ணானதும் பொன்னாகுமே


ஹே... அம்மன் கோவில் வாசலிலே... வாசலிலே...
அய்யனாரு விதியிலே... விதியிலே...
என் பூரதம் சுத்தி வருது
ஒரு பொன்மணிய தேடி வருது
அடி ஊர்கோலம் போவோமா
இளம் ஜோடியினு ஆவோமா
ஹே... அம்மன் கோவில் வாசலிலே... வாசலிலே...
அய்யனாரு விதியிலே... விதியிலே...

Saturday, March 17, 2018

Mounam Sollum Varthaigal - Pessamal

ஆல்பம்: மெளனம் சொல்லும் வார்த்தைகள் (2017)
இசை: சித்தார்தா ப்ரதீப்
பாடியவர்: அமிர்தா ஜெயகுமார், நிதின் ராஜ்
பாடல்வரிகள்: ஜெயகுமார்


Image result for Mounam Sollum Varthaigal | Tamil Music Video



Download this MP3

பேசாமல் உந்தன் மெளனம்
எந்தன் நெஞ்சிலே 
காதல் வலையை வீசி செல்கிறதே
பூக்காதோ உந்தன் மெளனம்
என்னை காணும் வேளையில்
காதல் வாசம் எங்கும் வீசுமடா

நதியே கடலில் சேராதே
என்னுள் கலந்துவிடு
மழையே மண்ணை சேராதே
நெஞ்சில் நிறைந்துவிடு

பேசாமல் உந்தன் மெளனம்
எந்தன் நெஞ்சிலே
காதல் வலையை வீசி செல்கிறதே
பூக்காதோ உந்தன் மெளனம்
என்னை காணும் வேளையில்
காதல் வாசம் எங்கும் வீசுமடா


பாக்காமல் என்னை நீயும் தாண்டி செல்லும் வேளை
பார்த்தேனே உந்தன் கண்ணில் என்னை தள்ளும் போதை
பாக்காமல் என்னை நீயும் தாண்டி செல்லும் வேளை
பார்த்தேனே உந்தன் கண்ணில் என்னை தள்ளும் போதை
பட... பட... படவென மாறும் வானம்
பட்டென நீயும் பார்த்தால்
என் வானமே நீயேடா... நீயே... நீயேதானடா
சிலு... சிலு.. சிலு-னு வீசும் காற்றில்
சிறிதாய் நீயும் சிரித்தாய்
என் வாழ்க்கையே நீயேடா... நீயே... நீயேதானடா

பேசாமல்... பேசாமல்...
ம்... பேசாமல் உந்தன் மெளனம்
எந்தன் நெஞ்சிலே 
காதல் வலையை வீசி செல்கிறதே
பூக்காதோ உந்தன் மெளனம்
என்னை காணும் வேளையில்
காதல் வாசம் எங்கும் வீசுமடா


பேசாத உந்தன் கண்ணில் என்னை காணும் வேளை
தானாக ஆவேனோ உன்னால் நானும் ஊமை
பேசாத உந்தன் கண்ணில் என்னை காணும் வேளை
தானாக ஆவேனோ உன்னால் நானும் ஊமை
விழியே... விழியே... காதல் விழியே
என்னை ஒரு முறை பார்த்தால்
வானிலை மாறுமே வானில் வில்லும் தோன்றுமே
கவியே... கவியே... ஆண்மை கவியே
என்னை ஒரு முறை பார்த்தால்
புதிதாய் ஒரு ராகமே பாடல் பாட தோன்றுமே

பேசாமல்... பேசாமல்...
பேசாமல்... பேசாமல்...
ம்... பேசாமல் உந்தன் மெளனம்
எந்தன் நெஞ்சிலே 
காதல் வலையை வீசி செல்கிறதே
பூக்காதோ உந்தன் மெளனம்
என்னை காணும் வேளையில்
காதல் வாசம் எங்கும் வீசுமடா

Neeye - Neeye

ஆல்பம்: நீயே (2016)
இசை: பாணி கல்யாண்
பாடியவர்: யாசின் நிசார், சரண்யா ஸ்ரீனிவாஸ்
பாடல்வரிகள்: அறிவு


Image result for Neeye - A tamil musical dance video



நீயே...
முதல் வெட்கம் தந்த நீயே...
மனப்பக்கம் வந்த நீயே...
காதல் ஆனதே...
நீயே... நீயே...

இரவும் பகலும் நீதானே

கடலும் அலையும் நுரையும் நீதானே
உடலும் உயிரும் நீயே...
எங்கும் எதிலும் நீயே...
எதிலும் அதிலும் நீயே...

நீயே... தட்டி விடுவதும் நீயே...
எட்டி பிடிப்பதும் நீயே எனை கொல்லடி
ஆ... காதல்… நடந்திடும் இந்த மோதல்
எது வந்த போதும் நீயே தாயுமாகி நில்…


எதிலும் உனது முகம் வந்து

எனது கவனம் தடுமாறும்
அதிலும் கூட சுகமாக
ஓர் அமைதி காண்கிறேன்

எதிரே வந்து நின்றாலே

எனது நிலமை என்னாகும்
விலகி நீயும் நடந்தாலே
நான் உடைந்து போகிறேன்

நீயே... எனதுயிர் சத்தம் நீயே

எதிர் வரும் திட்டம் நீயே நானாகிறேன்
ஆ.. பாதை… வழியினில் ஒரு வே..ர்வை
இவன் நனைத்திடும் போதை என்னை நீக்க வா


நீ எனை மறந்தால் வேறொரு உறவில்லையே

நான் எனை தருவேன் நீ வரும் மறுநொடியே

நானும் இங்கே நீயாக வாழ நீயும் வந்தாயே

நீயும் இங்கே நானாக வரம் வேண்டுமே
நீயே… வலி தருவதும் நீயே
வழி விடுவதும் நீயே முரண்பாடு ஏன்?
ஓ... காதல் உயிர் வலி வரும் தேடல்
இடையினில் வரும் ஊடல் நலம் காணவா…

Darling - Un Vizhigalil

படம்: டார்லிங் (2015)
இசை: ஜி.வி. பிரகாஷ்
பாடியவர்: ஹரிணி
பாடல்வரிகள்: நா. முத்துக்குமார்


Image result for darling tamil movie



உன் விழிகளில் விழுந்து நான் எழுகிறேன்
எழுந்ததும் ஏன் மறுபடி விழுகிறேன்
உன் பார்வையில் தோன்றிட அலைகிறேன்
அலைந்தும் ஏன் மறுபடி தொலைகிறேன்
ஓர் நொடியும் உனை நான் பிரிந்தால்
போர்க்களத்தை உணர்வேன் உயிரில்
என் ஆசை எல்லாம் சேர்த்து
ஓர் கடிதம் வரைகிறேன் அன்பே...

உன் விழிகளில் விழுந்து நான் எழுகிறேன்
எழுந்ததும் ஏன் மறுபடி விழுகிறேன்


தூரத்தில் தோன்றிடும் மேகத்தை போலவே
நான் உனை பார்கிறேன் அன்பே...
சாரலாய் ஓர் முறை நீ எனை தீண்டினாய்
உனக்கது தெரிந்ததா அன்பே...
என் மனம் கானலின் நீர் என ஆகுமா
கைகளில் சேருமா அன்பே...
நேசிக்கும் காலம்தான் வீணென போகுமா
நினைவுகள் சேர்க்கிறேன் இங்கே...
ஆயினும் காதலின் கைகளில் விரும்பியே
விழுகிறேன் அன்பே...






பூக்களில் தோன்றிடும் வண்ணங்கள் போலவே
பெண்களின் நெஞ்சம்தானடா...
வண்ணத்து பூச்சியின் வண்ணங்கள் போலவே
ஆண்களின் நெஞ்சம்தானடா...
வண்ணங்கள் வேறென தோன்றிடும் போதிலும்
எண்ணங்கள் சேருமா அன்பே...
வண்ணத்து பூச்சியின் சிறகுகள் மோதவே
இதழ்களும் உள்ளதே இங்கே...
ஆயினும் காதலின் கைகளில் விரும்பியே
விழுகிறேன் அன்பே...

உன் விழிகளில் விழுந்து நான் எழுகிறேன்
எழுந்தும் ஏன் மறுபடி விழுகிறேன்

Friday, March 16, 2018

Geethaiyin Raadhai - Ennai Kollathey

படம் : கீதையின் ராதை (2016)
இசை : ஜிதீஷ்
பாடியவர் :  குமரேஷ், கேஷிவினி சரவணன்
பாடல் வரி : கவி நாயகன் யுவாஜி


Image result for Geethaiyin Raadhai



என்னை கொல்லாதே தள்ளி போகாதே
நெஞ்சை கிள்ளாதே கண்மணி
சொன்ன என் சொல்லில் இல்லை உண்மைகள்
ஏனோ கோபங்கள் சொல்லடி
உன்னை தீண்டாமல் உன்னை பார்க்காமல்
கொஞ்சி பேசாமல் கண்ணில் தூக்கமில்லை
என்னுள் நீ வந்தாய் நெஞ்சில் வாழ்கின்றாய்
விட்டு செல்லாதே இது நியாயமில்லை


கண்ணை மூடி கொண்டாலும் உன்னை கண்டேன்
மீண்டும் ஏன் இந்த ஏக்கம்
வெள்ளை மேகதுண்டுக்குள் எழும் மின்னல் போல்
எந்தன் வாழ்வெங்கும் இன்னல்
எந்தன் இதழ் மேல் இன்று வாழும் மௌனங்கள்
என் மனம் பேசுதே நூறு எண்ணங்கள்
சொன்ன சொல்லின் அர்த்தங்கள் என்னுள் வாழுதே
தூரம் தள்ளி சென்றாலும் உயிர் தேடுதே
ஆசை வார்த்தை எல்லாமே இன்று கீறலாய்
எந்தன் நெஞ்சின் ஓரத்தில் பாய செய்கிறாய்
என்னுள் நீ வந்தாய் இன்னும் வாழ்கின்றாய்
உந்தன் சொல்லாலே தூரம் உண்டாகினாய்
என்னை தீண்டாதே என்னை பார்க்காதே
ஒன்றும் பேசாதே போதும் துன்பங்கள்


என்னை விட்டு செல்லாதே எந்தன் அன்பே
வேண்டும் உன் காதல் ஒன்றே
உன்னை மட்டும் நேசித்தேன் இது உண்மை
இன்னும் ஏன் இந்த ஊடல்
என் உயிர் காதலை உந்தன் காதோரம்
ஒருமுறையாவது சொல்ல நீ வேண்டும்
எந்தன் ஆசை முத்தங்கள் உன்னை சேருமோ
இல்லை காதல் யுத்தங்கள் இன்னும் நீளுமோ
உந்தன் கண்ணில் நீ சிந்தும் ஈரம் ஏனடி
நெஞ்சில் பாரம் வேண்டாமே என்னை பாரடி

என்னை கொல்லாதே தள்ளி போகாதே
நெஞ்சை கிள்ளாதே கண்மணி
சொன்ன என் சொல்லில் இல்லை உண்மைகள்
ஏனோ கோபங்கள் சொல்லடி

என்னை கொல்லாதே தள்ளி போகாதே
நெஞ்சை கிள்ளாதே கண்மணி 
சொன்ன என் சொல்லில் இல்லை உண்மைகள்
ஏனோ கோபங்கள் சொல்லடி

Monday, March 5, 2018

Kaali - Arumbey

படம் : காளி (2018)
இசை : விஜய் ஆண்டனி
பாடியவர் :  நிவாஸ், ஜானகி ஐயர்
பாடல் வரி : விவேக்


Kaali First Look Poster.jpg




அரும்பே... அரும்பே...
என்ன கடத்தி போ கரும்பே
அழும்பே... தழும்பே...
உள்ள கெடத்தி போ குரும்பே
அருகாமையே வெறகாகுதே
உணராமலே உயிர் போகுதே
எதம் உறுதே ஏக்கம் கூடுதே

குரும்பே... குரும்பே...
என்ன கடத்தி போ குரும்பே
அழும்பே... தழும்பே...
உள்ள கெடத்தி போ க‌ரும்பே


பத்தியமா நின்ன வாலிபம்
உன்ன பார்த்து தான் விடுதே

பத்திரமா வச்ச ஆணவம்
தூளாகி தூவிடுதே

எந்த நேரம் செஞ்ச ஓவியம்
நிழல் கூட கூசிடுதே

ஆ... பத்து விரல் பொட்ட காட்டுக்குள்
பூக்கோலம் பூசிடுதே

கன்னக் குழியோடதான் என்ன வித போட்டுடா

எட்டு கரையோடு தான் என்ன அழ போட்டுட்டான்

போதைய... தரும் தேவத....
அந்த வாசம் காட்டிபுட்டா

அரும்பே... அரும்பே...
என்ன கடத்தி போ கரும்பே

அழும்பே... தழும்பே...
உள்ள கெடத்தி போ குரும்பே


நெத்தி முடி சுத்தும் பாம்ப போல்
என்ன சீண்டி பாக்குதடி

ஆ... சின்ன புள்ள செய்யும் வீம்ப போல்
கை தீண்டி பாக்குதடா

குங்குமப்பூ கொட்டும் மேகமா
பஞ்சு பாகம் தூவுதடி

ஆ... மன்மத தீ பத்தும் பாணத்த‌
உன் மோகம் ஏந்துதடா

ஜென்மம் பல தாண்டி தான் வந்தேன் தட போடாதே

அஞ்சி உறவாட தான் போறேன் வல போடாத‌

பால் நிலா... இந்த ஜோடிய‌...
வந்து வாழ கூப்பிடுதே


அரும்பே... அரும்பே...
என்ன கடத்தி போ கரும்பே
அழும்பே... தழும்பே...
உள்ள கெடத்தி போ குரும்பே

அருகாமையே வெறகாகுதே
உணராமலே உயிர் போகுதே
எதம் உறுதே ஏக்கம் கூடுதே

குரும்பே... குரும்பே...
என்ன கடத்தி போ குரும்பே
அழும்பே... தழும்பே...
உள்ள கெடத்தி போ க‌ரும்பே

Popular Posts