Showing posts with label Kavi Naayagan Yuwaji. Show all posts
Showing posts with label Kavi Naayagan Yuwaji. Show all posts

Friday, March 16, 2018

Geethaiyin Raadhai - Ennai Kollathey

படம் : கீதையின் ராதை (2016)
இசை : ஜிதீஷ்
பாடியவர் :  குமரேஷ், கேஷிவினி சரவணன்
பாடல் வரி : கவி நாயகன் யுவாஜி


Image result for Geethaiyin Raadhai



என்னை கொல்லாதே தள்ளி போகாதே
நெஞ்சை கிள்ளாதே கண்மணி
சொன்ன என் சொல்லில் இல்லை உண்மைகள்
ஏனோ கோபங்கள் சொல்லடி
உன்னை தீண்டாமல் உன்னை பார்க்காமல்
கொஞ்சி பேசாமல் கண்ணில் தூக்கமில்லை
என்னுள் நீ வந்தாய் நெஞ்சில் வாழ்கின்றாய்
விட்டு செல்லாதே இது நியாயமில்லை


கண்ணை மூடி கொண்டாலும் உன்னை கண்டேன்
மீண்டும் ஏன் இந்த ஏக்கம்
வெள்ளை மேகதுண்டுக்குள் எழும் மின்னல் போல்
எந்தன் வாழ்வெங்கும் இன்னல்
எந்தன் இதழ் மேல் இன்று வாழும் மௌனங்கள்
என் மனம் பேசுதே நூறு எண்ணங்கள்
சொன்ன சொல்லின் அர்த்தங்கள் என்னுள் வாழுதே
தூரம் தள்ளி சென்றாலும் உயிர் தேடுதே
ஆசை வார்த்தை எல்லாமே இன்று கீறலாய்
எந்தன் நெஞ்சின் ஓரத்தில் பாய செய்கிறாய்
என்னுள் நீ வந்தாய் இன்னும் வாழ்கின்றாய்
உந்தன் சொல்லாலே தூரம் உண்டாகினாய்
என்னை தீண்டாதே என்னை பார்க்காதே
ஒன்றும் பேசாதே போதும் துன்பங்கள்


என்னை விட்டு செல்லாதே எந்தன் அன்பே
வேண்டும் உன் காதல் ஒன்றே
உன்னை மட்டும் நேசித்தேன் இது உண்மை
இன்னும் ஏன் இந்த ஊடல்
என் உயிர் காதலை உந்தன் காதோரம்
ஒருமுறையாவது சொல்ல நீ வேண்டும்
எந்தன் ஆசை முத்தங்கள் உன்னை சேருமோ
இல்லை காதல் யுத்தங்கள் இன்னும் நீளுமோ
உந்தன் கண்ணில் நீ சிந்தும் ஈரம் ஏனடி
நெஞ்சில் பாரம் வேண்டாமே என்னை பாரடி

என்னை கொல்லாதே தள்ளி போகாதே
நெஞ்சை கிள்ளாதே கண்மணி
சொன்ன என் சொல்லில் இல்லை உண்மைகள்
ஏனோ கோபங்கள் சொல்லடி

என்னை கொல்லாதே தள்ளி போகாதே
நெஞ்சை கிள்ளாதே கண்மணி 
சொன்ன என் சொல்லில் இல்லை உண்மைகள்
ஏனோ கோபங்கள் சொல்லடி

Popular Posts