Friday, August 26, 2011

பூக்களை பறிக்காதீர்கள் - சோலைகளெல்லாம்


படம் : பூக்களை பறிக்காதீர்கள் (1986)
இசை : T. ராஜேந்தர்
பாடியவர் : S. P. பால சுப்பிரமணியம், K.S. சித்ரா
பாடல் வரி : T. ராஜேந்தர்



சோலைகளெல்லாம் பூக்களைத் தூவ சுகம் சுகம் ஆ... 
குயில்களின் கூட்டம் பாக்களைப் பாட இதம் இதம் ஓ... 
காதல் ஊர்வலம் இங்கே 
கன்னி மாதுளம் இங்கே 
சோலைகளெல்லாம் பூக்களைத் தூவ சுகம் சுகம் ஆ.. 
குயில்களின் கூட்டம் பாக்களைப் பாட இதம் இதம் ஆ... 

காதல் ஊர்வலம் இங்கே
கன்னி மாதுளம் இங்கே

விழியெனும் அருவியில்
நனைகிறேன் குளிர்கிறேன்

கவியெனும் நதியினில்
குதிக்கிறேன் குளிக்கிறேன்

மரகத வீணை உன் சிரிப்பிலே
மயக்கிடும் ராகம் கேட்கிறேன்

மன்னவன் உந்தன் அணைப்பிலே
மான் என நானும் துவள்கிறேன் 

வாழையிலை போல நீ ஜொலிக்கிறாய்

காளை விருந்துக்கு எனையழைக்கிறாய்

காதல் ஊர்வலம் இங்கே

கன்னி மாதுளம் இங்கே

ஆஹ...ஹா... ஆ.. ஆ... ஹ... ஹ... ஹா...
காதலி அருகிலே இருப்பதே ஆனந்தம்

காதலன் மடியிலே கிடப்பதே பரவசம்

நட்சத்திரம் கண்ணில் சிரிக்குதா ஹஹ்ஹா...
மின்னி மின்னி என்னைப் பறிக்குதா

புத்தகம் போல் தமிழைச் சுமக்கிறாய்
பக்கம் வந்து புரட்ட அழைக்கிறாய்

நீ வெட்கத்தில் படிக்க மறுக்கிறாய்

நீ சொர்க்கத்தை மிஞ்ச நினைக்கிறாய்...

காதல் ஊர்வலம் இங்கே
ததத்தா ததத துது...

கன்னி மாதுளம் இங்கே
ரதத்தா ததத ரதத்தா.. 

சோலைகளெல்லாம் பூக்களைத் தூவ சுகம் சுகம் ஆ...

குயில்களின் கூட்டம் பாக்களைப் பாட இதம் இதம் ஆ...

காதல் ஊர்வலம் இங்கே

பபப்ப பபப பபப்ப 
கன்னி மாதுளம் இங்கே

ரரர.. ரரர.. ருருரு...

Popular Posts