Showing posts with label Nadhiya. Show all posts
Showing posts with label Nadhiya. Show all posts

Friday, August 26, 2011

பூக்களை பறிக்காதீர்கள் - சோலைகளெல்லாம்


படம் : பூக்களை பறிக்காதீர்கள் (1986)
இசை : T. ராஜேந்தர்
பாடியவர் : S. P. பால சுப்பிரமணியம், K.S. சித்ரா
பாடல் வரி : T. ராஜேந்தர்



சோலைகளெல்லாம் பூக்களைத் தூவ சுகம் சுகம் ஆ... 
குயில்களின் கூட்டம் பாக்களைப் பாட இதம் இதம் ஓ... 
காதல் ஊர்வலம் இங்கே 
கன்னி மாதுளம் இங்கே 
சோலைகளெல்லாம் பூக்களைத் தூவ சுகம் சுகம் ஆ.. 
குயில்களின் கூட்டம் பாக்களைப் பாட இதம் இதம் ஆ... 

காதல் ஊர்வலம் இங்கே
கன்னி மாதுளம் இங்கே

விழியெனும் அருவியில்
நனைகிறேன் குளிர்கிறேன்

கவியெனும் நதியினில்
குதிக்கிறேன் குளிக்கிறேன்

மரகத வீணை உன் சிரிப்பிலே
மயக்கிடும் ராகம் கேட்கிறேன்

மன்னவன் உந்தன் அணைப்பிலே
மான் என நானும் துவள்கிறேன் 

வாழையிலை போல நீ ஜொலிக்கிறாய்

காளை விருந்துக்கு எனையழைக்கிறாய்

காதல் ஊர்வலம் இங்கே

கன்னி மாதுளம் இங்கே

ஆஹ...ஹா... ஆ.. ஆ... ஹ... ஹ... ஹா...
காதலி அருகிலே இருப்பதே ஆனந்தம்

காதலன் மடியிலே கிடப்பதே பரவசம்

நட்சத்திரம் கண்ணில் சிரிக்குதா ஹஹ்ஹா...
மின்னி மின்னி என்னைப் பறிக்குதா

புத்தகம் போல் தமிழைச் சுமக்கிறாய்
பக்கம் வந்து புரட்ட அழைக்கிறாய்

நீ வெட்கத்தில் படிக்க மறுக்கிறாய்

நீ சொர்க்கத்தை மிஞ்ச நினைக்கிறாய்...

காதல் ஊர்வலம் இங்கே
ததத்தா ததத துது...

கன்னி மாதுளம் இங்கே
ரதத்தா ததத ரதத்தா.. 

சோலைகளெல்லாம் பூக்களைத் தூவ சுகம் சுகம் ஆ...

குயில்களின் கூட்டம் பாக்களைப் பாட இதம் இதம் ஆ...

காதல் ஊர்வலம் இங்கே

பபப்ப பபப பபப்ப 
கன்னி மாதுளம் இங்கே

ரரர.. ரரர.. ருருரு...

Saturday, January 8, 2011

பூவே பூச்சூடவா - பூவே பூச்சூடவா



படம் : பூவே பூச்சூடவா (1985)
இசை : இளையராஜா

பாடியவர் :  
K.J.ஜேசுதாஸ்




பூவே பூச்சூடவா எந்தன் நெஞ்சில் பால் வார்க்க வா...


பூவே பூச்சூடவா எந்தன் நெஞ்சில் பால் வார்க்க வா...
வாசல் பார்த்து கண்கள் பூத்து பார்த்து நின்றேன் வா...



பூவே பூச்சூடவா எந்தன் நெஞ்சில் பால் வார்க்க வா...

அழைப்பு மணி எந்த வீட்டில் கேட்டாலும்

ஓடி நான் வந்து பார்ப்பேன்
தென்றல் என் வாசல் தீண்டவேயில்லை
கண்ணில் வெந்நீரை வார்ப்பேன்
கண்களும் ஓய்ந்தது... ஜீவனும் தேய்ந்தது...
ஜீவ தீபங்கள் ஓயும் நேரம் நீயும் நெய்யாக வந்தாய்...
இந்த கண்ணீரில் சோகம் இல்லை இன்று ஆனந்தம் தந்தாய்...
பேத்தி என்றாலும் நீயும் என் தாய் 

பூவே பூச்சூடவா எந்தன் நெஞ்சில் பால் வார்க்க வா... 


காலம் கரைந்தாலும் கோலம் சிதைந்தாலும்

பாசம் வெளுக்காது மானே
நீரில் குளித்தாலும் நெருப்பில் எரித்தாலும்

தங்கம் கருக்காது தாயே
பொன் முகம் பார்க்கிறேன் அதில் என் முகம் பார்க்கிறேன்...
இந்த பொன்மானை பார்த்துக்கொண்டு சென்று நான் சேர வேண்டும்
மீண்டும் ஜென்மங்கள் மாறும் போதும் நான் உன் மகளாக வேண்டும்
பாச ராகங்கள் பாட வேண்டும்...




பூவே பூச்சூடவா எந்தன் நெஞ்சில் பால் வார்க்க வா...


எந்தன் நெஞ்சில் பால் வார்க்க வா...

Popular Posts