Wednesday, December 29, 2010

நள தமயந்தி - என்ன இது



படம் : நள தமயந்தி (2003)
இசை : ரமேஷ் வினாயகம்

பாடியவர் :  சின்மயி, 
ரமேஷ் வினாயகம்
பாடல் வரி : 
நா.முத்துகுமார்




என்ன இது என்ன இது என்னை கொல்வது 
என்னவென்று கேட்பவற்கு என்ன சொல்வது



என்ன இது என்ன இது என்னை கொல்வது 
என்னவென்று கேட்பவற்கு என்ன சொல்வது


புதிதாக ஏதோ நிகழ்கின்றதோ 
புரியாமல் நெஞ்சம் நெகிழ்கின்றதோ 
நாடி எங்கும் மூடி ஒரு கோடி மின்னல் கோலமிடுதோ 



என்ன இது என்ன இது என்னை கொல்வது 
என்னவென்று கேட்பவற்கு என்ன சொல்வது


யாரிடத்தில் யாருக்கொரு காதல் வருமோ 
பூமி எதிர் பார்த்து மழை தூரல் விழுமோ 


காதல் வர கால் விரல்கள் கோலம் இடுமோ 
கை நகத்தை பல் கடிக்க ஆசை படுமோ 


எதுவுமே... எதுவுமே... எதுவுமே... 
எதுவுமே... நடக்கலாம் 
இறகின்றி இளமனம் பறக்கலாம் 


இதுவரை... விடுகதை 
இனிவரும் கதை ஒரு தொடர் கதை


வேண்டும் வசந்தம் வாசல் வரலாம் 


ஊமைக்கொரு வார்த்தை வந்து பாடுகின்ற வேளை இது 
என்ன இது என்ன இது என்னை கொல்வது 

என்னவென்று கேட்பவற்கு என்ன சொல்வது


காற்றடிது அணைவதில்லை காதல் அகல் தான் 
சாட்சி என நிற்கிறது தாஜ் மஹல் தான் 


கல்லறையில் உறங்கும் அந்த காதல் என்பது 
கண் உறக்கம் நீங்கி இங்கு கண் விழித்தது 


இனி வரும்..................................................... 
இனி வரும் இரவெல்லாம்
சீனத்தின் சுவரை போல் நீளலாம்


உனக்கு நான்.... பிறந்தவள் 
மனமென்னும் கதவை தான் திறந்தவள் 


காதல் பிறந்தால் காவல் கடக்கும் 


போட்டு வைத்த கோட்டுக்குள்ளே 
காதல் என்றும் நின்றதில்லை 

என்ன இது என்ன இது என்னை கொல்வது 
என்னவென்று கேட்பவற்கு என்ன சொல்வது


புதிதாக ஏதோ நிகழ்கின்றதோ 
புரியாமல் நெஞ்சம் நெகிழ்கின்றதோ 
நாடி எங்கும் மூடி ஒரு கோடி மின்னல் கோலமிடுதோ 

Popular Posts