Showing posts with label Shiva. Show all posts
Showing posts with label Shiva. Show all posts

Thursday, October 25, 2018

Love Today - Enna Azhagu

படம் : லவ் டூடே (1996)
இசை : சிவா
பாடியவர் :  S.P.பாலசுப்ரமணியம்
பாடல் வரி : வைரமுத்து



என்ன அழகு எத்தனை அழகு
கோடி மலர் கொட்டிய அழகு
இன்று எந்தன் கை சேர்ந்ததே
சின்ன அழகு சித்திர அழகு
சிறு நெஞ்சை கொத்திய அழகு
இன்று எந்தன் தோள் சாய்ந்ததே

எந்தன் உள்ளங்கையில் அவள் உயிரை வைத்தாள்
ஒரே சொல்லில் மனசை தைத்தாள்
சுட்டும் விழி பார்வையில் சுகம் வைத்தாள்
நான் காதலின் கடலில் விழுந்துவிட்டேன்
நீ கரம் ஒன்று கொடுத்தாய் எழுந்து விட்டேன்

என்ன அழகு எத்தனை அழகு
கோடி மலர் கொட்டிய அழகு
இன்று எந்தன் கை சேர்ந்ததே


அன்பே உன் ஒற்றை பார்வை அதை தானே யாசிதேன்
கிடையாதென்றால் கிளியே என் உயிர் போக யோசித்தேன்
நான்காண்டு தூக்கம் கெட்டு இன்று உன்னை சந்தித்தேன்
காற்றும் நிலவும் கடலும் அடி தீ கூட தித்திதேன்
மாணிக்க தேரே உன்னை மலர் கொண்டு பூசித்தேன்
என்னை நான் கிள்ளி இது நிஜம் தான சோதித்தேன்
இது போதுமே இது போதுமே
இனி என் கால்கள் வான் போகுமே

என்ன அழகு எத்தனை அழகு
கோடி மலர் கொட்டிய அழகு
இன்று எந்தன் கை சேர்ந்ததே


நான் கொண்ட ஆசை எல்லாம் நான்காண்டு ஆசைதான்
உறங்கும் போதும் ஒலிக்கும் அடி உன் கொலுசின் ஓசைதான்
நீ வீசும் பார்வை இல்லை நெருப்பாச்சு நெஞ்சம் தான்
வலியின் கொடுமை ஒழிய அடி தமிழ் வார்த்தை கொஞ்சம் தான்
இன்றே தான் பெண்ணே உன் முழு பார்வை நான் கண்டேன்
கை தொட்ட நேரம் என் முதல் மோட்சம் நான் கொண்டேன்
மகாராணியே மலர் வாணியே இனி என் ஆவி உன் ஆவியே

என்ன அழகு எத்தனை அழகு
கோடி மலர் கொட்டிய அழகு
இன்று எந்தன் கை சேர்ந்ததே
சின்ன அழகு சித்திர அழகு
சிறு நெஞ்சை கொத்திய அழகு
இன்று எந்தன் தோள் சாய்ந்ததே

எந்தன் உள்ளங்கையில் அவள் உயிரை வைத்தாள்
ஒரே சொல்லில் மனசை தைத்தாள்
சுட்டும் விழி பார்வையில் சுகம் வைத்தாள்
நான் காதலின் கடலில் விழுந்துவிட்டேன்
நீ கரம் ஒன்று கொடுத்தாய் எழுந்து விட்டேன்

என்ன அழகு எத்தனை அழகு
கோடி மலர் கொட்டிய அழகு
இன்று எந்தன் கை சேர்ந்ததே

Sunday, December 10, 2017

Vanakkam Chennai - Oh Penne

பட‌ம்: வணக்கம் சென்னை (2013)
இசை: அனிருத்
பாடியவர்கள்: அனிருத், விஷால் தட்லானி
பாடல்வரிகள்: நா.முத்து குமார்


Image result for vanakkam chennai movie



உன் கைகள் கோர்த்து உன்னோடு போக
என் நெஞ்சம் தான் ஏங்குதே தினம் உயிர் வாங்குதே
உன் தோளில் சாய்ந்து கண் மூடி வாழ
என் உள்ளம் அலைபாயுதே ஐயோ தடுமாறுதே
உன் கன்னம் மேலே மழை நீரைப் போலே
முத்தக் கோலம் போட ஆசை அல்லாடுதே
நீ பேசும் பேச்சு நாள்தோறும் கேட்டு
எந்தன் ஜென்மம் தீர ஏக்கம் தள்ளாடுதே

ஒ... பெண்ணே பெண்ணே
என் கண்ணே கண்ணே
உண்மை சொன்னால் என்ன
உன்னை தந்தால் என்ன
ஒ... பெண்ணே பெண்ணே
என் கண்ணே கண்ணே
உண்மை சொன்னால் என்ன
உன்னை தந்தால் என்ன


ஏழு கடல் தாண்டி உனக்காக வந்தேனே
இந்த நதி வந்து கடல் சேருதே
வெண்ணிலாவை வெட்டி மோதிரங்கள் செய்வேனே
அது உனைச் சேர ஒளி வீசுதே

அந்த விண்மீன்கள் தான் உந்தன் கண்மீனிலே
வந்து குடியேறவே கொஞ்சம் இடம் கேக்குதே
இன்று உன் கையிலே நான் நூல் பொம்மையே
ஊஞ்சல் போல் மாறுதே அடி உன் பெண்மையே

ஒ... பெண்ணே பெண்ணே
என் கண்ணே கண்ணே
உண்மை சொன்னால் என்ன
உன்னை தந்தால் என்ன
ஒ... பெண்ணே பெண்ணே
என் கண்ணே கண்ணே
உண்மை சொன்னால் என்ன
உன்னை தந்தால் என்ன


உன் கைகள் கோர்த்து உன்னோடு போக
என் நெஞ்சம் தான் ஏங்குதே தினம் உயிர் வாங்குதே
உன் தோளில் சாய்ந்து கண் மூடி வாழ
என் உள்ளம் அலைபாயுதே ஐயோ தடுமாறுதே
உன் கன்னம் மேலே மழை நீரைப் போலே
முத்தக் கோலம் போட ஆசை அல்லாடுதே
நீ பேசும் பேச்சு நாள்தோறும் கேட்டு
எந்தன் ஜென்மம் தீர ஏக்கம் தள்ளாடுதே

ஒ... பெண்ணே பெண்ணே
என் கண்ணே கண்ணே
உண்மை சொன்னால் என்ன
உன்னை தந்தால் என்ன
ஒ... பெண்ணே பெண்ணே
என் கண்ணே கண்ணே
உண்மை சொன்னால் என்ன
உன்னை தந்தால் என்ன

Vanakkam Chennai - Osaka Osaka

பட‌ம்: வணக்கம் சென்னை (2013)
இசை: அனிருத்
பாடியவர்கள்: அனிருத், ப்ரகதி குருபிரசாத்
பாடல்வரிகள்: மதன் கார்க்கி


Image result for vanakkam chennai movie



தேனி காத்தோட தேன தெளிச்சாலே
தேளாக என் நெஞ்ச கொட்டிபுட்டா
தேங்கா நாராக நெஞ்ச உரிச்சாளே
உள்ளார என்னான்னு காட்டிப்புட்டா

யகன மொகனா பாக்காம
கவுத பாடி கெடக்கேனே
தெற்கா மேற்கா கேக்காம
றெக்க கட்டி பறந்தேனே
ஒசக்கா சேத்த ஒசக்கா போயி
மெதக்கத்தான் வானேத்தி விட்டுபுட்டா
ஒசக்கா சேத்த ஒசக்கா பாவி
இதயத்த காத்தாடி ஆக்கிபுட்டா



ஹே... ஏசி ரோசா தூசி ரோட்டில்
வீசி கைவீசி பேசி வந்தா
தேம்சு தண்ணி பாத்த மீனு
வைக ஆத்தோட நீந்த வந்தா
இந்த வயக்காட்டு மத்தியில
இந்த வயக்காட்டு மத்தியில
முயலொன்னா துள்ளிகிட்டு
புயல் ஒன்ன நெஞ்சில் நட்டு
ஏன் போனாளோ...

யகன மோகன பாக்காம
வுத பாடி கெடக்கேனே
தெற்கா மேற்கா கேக்காம
றெக்க கட்டி பறந்தேனே…
ஒசக்கா சேத்த ஒசக்கா போயி
மெதக்கத்தான் வானேத்தி விட்டுபுட்டா
ஒசக்கா சேத்த ஒசக்கா பாவி
இதயத்த காத்தாடி ஆக்கிபுட்டா


ஹே... ஹே... ஹே...
கண்ண‌ தெற‌ந்தாலும் கலையவில்ல
கனவா நனவானு புரியவில்ல
பூவின் மடிமேல தூங்கும் வண்டா
நானும் மாறிட்டா கவல இல்ல
என் கண் பார்க்கும் தூரம் வர... ஹோ...
என் கண் பார்க்கும் தூரம் வர
பச்ச புல் விரிச்ச தர
அது மேல ராணியப் போல
நான் போனேனே


Tuesday, February 22, 2011

காதல் சுகமானது - சொல்லத்தான் நினைக்கிறேன்



படம் : காதல் சுகமானது (2003)
இசை : சிவா

பாடியவர் :  K.S. 
சித்ரா
பாடல் வரி : நா.முத்துகுமார்



சொல்லத்தான் நினைக்கிறேன்
சொல்லாமல் தவிக்கிறேன்
காதல் சுகமானது

வாசப்படி ஓரமாய் வந்து வந்து பார்க்கும்
தேடல் சுகமானது
அந்தி வெயில் கொலைத்து 
செய்த மருதாணி போல
வெட்கங்கள் வர வைக்கிறாய்
வெளியே சிரித்து 
நான் விளையாடினாலும்
தனியே அழ வைக்கிறாய்
இந்த ஜீவன் இன்னும் கூட ஏன் உயிர் தாங்குது
காதல் சுகமானது

சொல்லத்தான் நினைக்கிறேன் 
சொல்லாமல் தவிக்கிறேன்
காதல் சுகமானது

சின்ன பூவொன்று பாறையை தாங்குமா
உன்னை சேராமல் என்  விழி  தூங்குமா
தனிமை உயிரை வதைக்கின்றது


கண்ணில் தீ வைத்து போனது நியாயமா
என்னை சேமித்து வை நெஞ்சில் ஓரமா
கொலுசும் உன் பேர் ஜபிக்கின்றது


தூண்டிலினை தேடும் ஒரு மீன் போலானேன்
துயரங்கள் கூட அட சுவையாகுது
இந்த வாழ்கை இன்னும் இன்னும் ரொம்ப ருசிக்கின்றது
காதல் சுகமானது

சொல்லத்தான் நினைக்கிறேன்
சொல்லாமல் தவிக்கிறேன்
காதல் சுகமானது


ஒரு ஆணுக்குள் இத்தனை காந்தமா
நீயும் ஆனந்த பைரவி ராகமா
இதயம் அலை மேல் சருகானதே


ஒரு சந்தன பௌர்ணமி ஓரத்தில்
வந்து மோதிய இருந்த மேகமே
தேகம் தேயும் நிலவானதே


காற்று மலை சேர்ந்து வந்து அடித்தாலும் கூட
கற்ச்சிலையை போலே நெஞ்சு அசையாது
சுண்டு விரலாய் தொட்டு இழுத்தாய்
ஏன் குடை சாய்ந்தது
காதல் சுகமானது

சொல்லத்தான் நினைக்கிறேன்
சொல்லாமல் தவிக்கிறேன்
காதல் சுகமானது

வாசப்படி ஓரமாய் வந்து வந்து பார்க்கும்
தேடல் சுகமானது
அந்தி வெயில் கொலைத்து 
செய்த மருதாணி போல

வெட்கங்கள் வர வைக்கிறாய்
வெளியே சிரித்து 
நான் விளையாடினாலும்
தனியே அழ வைக்கிறாய்
இந்த ஜீவன் இன்னும் கூட ஏன் உயிர் தாங்குது
காதல் சுகமானது............

Wednesday, December 29, 2010

Love Today - Yen Pennendru

படம் : லவ் டூடே (1996)
இசை : சிவா
பாடியவர் : 
 ஹரிஷ் ராகவேந்திரா
பாடல் வரி : வைரமுத்து




ஏன் பெண் என்று பிறந்தாய்
ஏன் என் கண்ணில் விழுந்தாய் 
ஏன் ஒரு பாதி சிரித்தாய்
என் உயிர் பூவை எரித்தாய்

முதல் நாள் பார்த்தாய் உறக்கம் கெடுத்தாய் 
முறையா என்றேன் கண்கள் பறித்தாய் 
என் வலி தீர ஒரு வழி என்ன 
என் பனிபூவே மீண்டும் பார்த்தால் என்ன

ஏன் பெண் என்று பிறந்தாய்
ஏன் என் கண்ணில் விழுந்தாய் 


நீ சூடும் ஒரு பூ தந்தால்
என் ஆஸ்தி எல்லாம் கொடுப்பேன்
உன் வாயால் என் பெயர் சொன்னால் 
உன் காலடியில் கிடப்பேன் 

தூக்கத்தை தொலைத்தேனே துடிக்குது நெஞ்சம் 
தலை போன சேவல் போல் தவிக்குது அங்கம் 
இரண்டில் ஒன்று சொல்லிவிடு 
இல்லை நீயே கொல்லியிடு


ஏன் பெண் என்று பிறந்தாய்
ஏன் என் கண்ணில் விழுந்தாய் 



நோகாமல் பிறர் காணாமல் 
உந்தன் ஆடை நுனி தொடுவேன் 
என்ன ஆனாலும் உயிர் போனாலும் 
ஒரு தென்றல் என்றே வருவேன் 


நீ என்னை பார்த்தால் தான் துடிக்குது உள்ளம் 
நீ என்னை பிரிந்தாலோ உள்ளம் வெறும் பள்ளம் 
இமயம் கேட்கும் என் துடிப்பு 
ஏனோ உனக்குள் கதவடைப்பு

ஏன் பெண் என்று பிறந்தாய்
ஏன் என் கண்ணில் விழுந்தாய் 
ஏன் ஒரு பாதி சிரித்தாய்
என் உயிர் பூவை எரித்தாய்

முதல் நாள் பார்த்தாய் உறக்கம் கெடுத்தாய் 
முறையா என்றேன் கண்கள் பறித்தாய் 
என் வலி தீர ஒரு வழி என்ன 
என் பனிபூவே மீண்டும் பார்த்தால் என்ன

ஏன் பெண் என்று பிறந்தாய்
ஏன் என் கண்ணில் விழுந்தாய் 

Popular Posts