Showing posts with label Sandhya. Show all posts
Showing posts with label Sandhya. Show all posts

Thursday, April 24, 2014

Chellamae - Kummi Adi

படம் : செல்லமே (2004)
இசை : ஹரிஷ் ஜெயராஜ்
பாடியவர்கள் : சந்தியா
பாடல் வரிகள் : வைரமுத்து







தந்தனனா…. தான தந்தனனா…. 

தான தந்தனனா…. தான தந்தனனா…. 
தந்தனனா…. தான தந்தனனா…. 
தான தந்தனனா…. தான தந்தனனா…. 
தந்தன.... தந்தன... தந்தன... தந்தன...
தந்தன.... தந்தன... தந்தன... தந்தன...
தந்தன.... தந்தன... தந்தன... தந்தன...

கும்மியடி பெண்ணே கும்மியடி
கூடி குலவையும் போட்டு கும்மியடி
கும்மியடி பெண்ணே கும்மியடி
கூடி குலவையும் போட்டு கும்மியடி
குமரி பொண்ணுக்கு மாலை வந்தது
குளைஞ்சு குளைஞ்சு கும்மியடி
வயசு பொண்ணுக்கு வாழ்வு வந்தது
வளஞ்சு வளஞ்சு கும்மியடி
எங்க வீட்டு தங்க விளக்கு
ஏங்கி நிக்குது கும்மியடி
எண்ணெய் ஊத்தி திரிய தூண்ட
ஆளு வந்தது கும்மியடி

கும்மியடி பெண்ணே கும்மியடி
கூடி குலவையும் போட்டு கும்மியடி
கும்மியடி பெண்ணே கும்மியடி
கூடி குலவையும் போட்டு கும்மியடி


அடி செக்க சிவந்த அழக
கொஞ்ச செழிச்சு கிடக்கும் திமிர
பத்து வருஷம் பக்கம் இருந்தும்
பார்த்ததில்லயடி நானும்
அந்த ராஜகதவ திறந்தா
பல ரகசியமும் தெரிஞ்சா
பத்தியம் கிடந்த மாப்பிள்ளை பயனும்
பைத்தியம் ஆக வேணும்
அடி தூக்கி இருக்கும் அழகு
அவன் தூக்கம் கெடுத்து போகும்
அடி பாக்கி இருக்கும் அழகு
உசிர் பாதி வாங்கி போகும்
தான தந்தானா... தந்தானே...
தான தந்தானா... தந்தானே...
தான தந்தானா... தந்தானே...
தான தந்தானா... தந்தானே...
அடி பஞ்சு மெத்தையிலே... 
ஒரு பந்தயம் நடக்குமே
அந்த பந்தயம் முடிவிலே... 
அட இரண்டுமே ஜெயிக்குமே

கும்மியடி பொண்ணே கும்மியடி
கூடி குலவையும் போட்டு கும்மியடி
கும்மியடி பொண்ணே கும்மியடி
கூடி குலவையும் போட்டு கும்மியடி


ஒரு பெண்ணுக்குள்ளது செருக்கு
அடி ஆணுக்குள்ளது முறுக்கு
விடிய விடிய நடந்த கதைய
விளக்க போகுது விளக்கு
இவ உலகம் மறந்து கிடப்பா
அடி உறவு மட்டுமே நினைப்பா
டுத்தி போன சேலை மறந்து
வேட்டி உடுத்தி நடப்பா
அடி மோகம் உள்ள புருஷன்
பல முத்தம் சொல்லி கொடுப்பான்
இன்னும் போக போக பாரு
இவ ஒத்தி சொல்லி கொடுப்பா
தான தந்தானா... தந்தானே...
தான தந்தானா... தந்தானே...
தான தந்தானா... தந்தானே...
தான தந்தானா... தந்தானே...
அடி உங்க வீட்டுக்குள்ளே லட்சம் குயில் பாடட்டும்
அடி சலங்கை கட்டிக்கிட்டு சந்தோஷம் ஆடட்டும்

கும்மியடி பெண்ணே கும்மியடி
கூடி குலவையும் போட்டு கும்மியடி
கும்மியடி பெண்ணே கும்மியடி
கூடி குலவையும் போட்டு கும்மியடி
குமரி பொண்ணுக்கு மாலை வந்தது
குளைஞ்சு குளைஞ்சு கும்மியடி
வயசு பொண்ணுக்கு வாழ்வு வந்தது
வளஞ்சு வளஞ்சு கும்மியடி
எங்க வீட்டு தங்க விளக்கு
ஏங்கி நீக்குது கும்மியடி
எண்ணெய் ஊத்தி திரிய தூண்ட
ஆளு வந்தது கும்மியடி

தந்தானனா... தான தந்தானனா... 
தான தந்தானனா...  தான தந்தானனா... 
தந்தானனா... தான தந்தானனா... 
தான தந்தானனா...  தான தந்தானனா... 
தந்தானனா... தான தந்தானனா... 
தான தந்தானனா...  தான தந்தானனா... 
தந்தானனா... தான தந்தானனா... 
தான தந்தானனா...  தான தந்தானனா... 

Popular Posts