Showing posts with label Roopini. Show all posts
Showing posts with label Roopini. Show all posts

Friday, February 8, 2013

என்னெப்பெத்த ராசா - சொந்தம் ஒன்றை தேடும்

படம்: என்னெப்பெத்த ராசா (1988)
இசை: இளையராஜா
பாடியவர்கள்: மனோ, சித்ரா
பாடல்வரிகள் : பிறைசூடன் 




சொந்தம் ஒன்றை தேடும் அன்னக்கிளி
சொல்லிச் சொல்லி பாடும் அன்னக்கிளி

சொந்தம் ஒன்றை தேடும் அன்னக்கிளி
சொல்லிச் சொல்லி பாடும் அன்னக்கிளி
இந்தக் குரல் கேட்குதா
இன்பம் தன்னை தூண்டுதா
அன்புகொள்ள காலம் நேரம் ஏது
அன்புகொள்ள காலம் நேரம் ஏது

சொந்தம் ஒன்றை தேடும் அன்னக்கிளி
சொல்லிச் சொல்லி பாடும் அன்னக்கிளி


வானத்து அம்புலியை வரவழைக்க வேணும் என்று
தனியாக தவம் இருந்து வெகுநாளும் வேண்டி நின்றேன்
வானத்து அம்புலியை வரவழைக்க வேணும் என்று
தனியாக தவம் இருந்து வெகுநாளும் வேண்டி நின்றேன்
எந்தன் தவம் தான் பலிக்க தெய்வம் வரம் தந்ததம்மா
அம்புலியில் பூமி தன்னில் உன் உருவில் வந்ததம்மா
வீதி வழி போனால் வெள்ளி ரதம்
தரையில் நடந்தாலே தங்க ரதம்
உன்னை என்னை ஜீவன் இணைத்தது

சொந்தம் ஒன்றை தேடும் அன்னக்கிளி
சொல்லிச் சொல்லி பாடும் அன்னக்கிளி


சிறு வீணை தான் எடுத்து விரலாலே சுதி எழுப்பி
குறுநகையாள் பாடுவதை குறும்புடனே கேட்பீரோ
சிறு வீணை தான் எடுத்து  விரலாலே சுதி எழுப்பி
குறுநகையாள் பாடுவதை குறும்புடனே கேட்பீரோ
பாடல் தன்னில் நீ மயங்கி பைங்கொடியை வேண்டும் என்றாய்
குரல் தன்னிலே நீ கிறங்கி குலக்கொடியை வேண்டி நின்றாய்
ஈசன் அருள் உனக்கே இருந்தது
ஏந்திழையின் மனமும் இணைந்தது
நம்மை அன்பு தானே இணைத்தது

சொந்தம் ஒன்றை தேடும் அன்னக்கிளி
சொல்லிச் சொல்லி பாடும் அன்னக்கிளி
இந்தக் குரல் கேட்குதா
இன்பம் தன்னை தூண்டுதா
அன்புகொள்ள காலம் நேரம் ஏது
அன்புகொள்ள காலம் நேரம் ஏது

சொந்தம் ஒன்றை தேடும் அன்னக்கிளி
சொல்லிச் சொல்லி பாடும் அன்னக்கிளி


Tuesday, October 23, 2012

Michael Madana Kama Rajan - Sivarathiri

படம் : மைக்கேல் மதன காமராஜன் (1990)
இசை : இளையராஜா
பாடியவர் :  மனோ, K.S.சித்ரா
பாடல் வரி : வாலி



Image result for Michael Madana Kama Rajan



Download this MP3




ஹும்ம்ம்... ஹும்ஹீம்ம்ம்...
ஹும்ம்ம்.... ஹும்ஹீம்ம்ம்...
சிவராத்திரி தூக்கம் ஏது ஹோ
முதல் ராத்திரி தொடங்கும்போதுஹோ
பனி ராத்திரி ஓஓஓ... பட்டு பாய் விரி
சுப ராத்திரி ஓஓஓ... புது மாதிரி 
விடிய விடிய சிவராத்திரி தூக்கம் ஏது ஹோ
முதல் ராத்திரி...


வெப்பம் தீர வந்ததடி வேப்ப மர காத்து
ஹா... ஹே... ம்ம்ம்...
வச்சிக்குவோம் கச்சேரியை உச்சகட்டம் பாத்து
ஹும்... ஹும்... ஹும்ம்ம்...

தெப்பம் போல தத்தளிக்கும் செம்பருத்தி நாத்து

ம்... ம்... ம்ம்....

அம்பலத்தில் ஆடுறப்போ உம் பலத்தை காட்டு

ஹோ... ம்... ஹும்ம்ம்...

ராஜாமணி மாயமோகினி ரோஜா மலர் நீ

தேமாங்கனி தேவரூபினி தேன் வாங்கலாம் நீ

சுப ராத்திரி ஓ... புது மாதிரி விடிய விடிய
சிவராத்திரி தூக்கம் ஏது... ஹோ
முதல் ராத்திரி தொடங்கும்போது…ஹோ
பனி ராத்திரி ஓஓஓ... பட்டுபாய் விரி
சுப ராத்திரி புது மாதிரி விடிய விடிய

சிவராத்திரி...


வெட்டி வேரு வாசனைய தொட்டு தொட்டு பாரு
கிட்ட வந்து கட்டிக்காம விட்டு வச்சதாரு

அர்த்த ஜாம நேரத்துல பூஜைகளை ஏற்று
பக்தனுக்கு பக்கம் வந்து சொர்க்கம் ஒன்று காட்டு

நூலாடையை போட்டு மூடினேன் பாலாடையை தா

ஆத்தாடியோ தேய்ஞ்சி போகுமா பாத்தாலென்ன நான்

சுப ராத்திரி ஓ... புது மாதிரி விடிய விடிய…

சிவராத்திரி தூக்கம் ஏது... ஹே
முதல் ராத்திரி தொடங்கும்போது… ஹோ

பனி ராத்திரி ஓஓஓ... பட்டு பாய் விரி
சுப ராத்திரி ஓஓஓ... புது மாதிரி விடிய விடிய

சிவராத்திரி தூக்கம் ஏது... ஹே

முதல் ராத்திரி தொடங்கும்போது… ஹோ

சிவ ராத்திரி…

Saturday, August 6, 2011

தாலாட்டு பாடவா - நீ தானா



படம் : தாலாட்டு பாடவா (1990)
இசை : இளையராஜா
பாடியவர் : அருண்மொழி, S. ஜானகி
பாடல் வரி:  வாலி







நீ தானா நீ தானா நெஞ்சே நீ தானா
நீ இன்றி நானே தான் இங்கே வாழ்வேனா
அன்பே அன்பே எந்தன் அன்பே
வாழும் ஜீவன் நீ தான் அன்பே
துணை நீயே அன்பே
நீ தானா நீ தானா நெஞ்சே நீ தானா
நீ இன்றி நானே தான் இங்கே வாழ்வேனா


காவிரியும் வழி மறந்து வேறு திசை நடப்பதில்லை
கன்னி இளம் நினைவுகளை காதல் மனம் மறப்பதில்லை
காதல் அலை வீசும் கடல் தான் மனது
காலம் பல காலம் இது வாழுவது
தூங்காமல் என் கண்கள் வாடும் பொழுது
தோள் மீது சாய்ந்தாட ஏங்கியது
நீ இன்றி நானேது நேசமோடு வாழும் மாது
நீ தானா நீ தானா நெஞ்சே நீ தானா


நீ இன்றி நானே தான் இங்கே வாழ்வேனா
அன்பே அன்பே எந்தன் அன்பே
வாழும் ஜீவன் நீ தான் அன்பே
துணை நீயே அன்பே
நீ தானா நீ தானா நெஞ்சே நீ தானா
நீ இன்றி நானே தான் இங்கே வாழ்வேனா


கூவி வரும் புதுக் குயிலின் குரல் வழியே ஒரு துயரம்
பாடி வரும் மொழிதனிலே பாதியிலே ஒரு சலனம்
ஓடும் நதி நீரில் மலர் பூப்பதில்லை
உண்மை இதை கண்டும் மனம் கேட்பதில்லை
காலங்கள் நேரங்கள் பாலம் அமைக்கும்
கையோடு கையென்று சேர்ந்திருக்கும்
வாடாதே வாடாதே வாசம் இந்த பூவைத் தேடும்
நீ தானா நீ தானா நெஞ்சே நீ தானா


நீ இன்றி நானே தான் இங்கே வாழ்வேனா


அன்பே அன்பே எந்தன் அன்பே


வாழும் ஜீவன் நீ தான் அன்பே
துணை நீயே அன்பே
நீ தானா நீ தானா நெஞ்சே நீ தானா


நீ இன்றி நானே தான் இங்கே வாழ்வேனா

Thursday, July 21, 2011

நினைக்க தெரிந்த மனமே - எங்கெங்கு நீ

படம் : நினைக்க தெரிந்த மனமே (1987)
இசை : இளையராஜா
பாடியவர்கள் : K.J.யேசுதாஸ் & சித்ரா
பாடல் வரி : காமகோடியன்









எங்கெங்கு நீ சென்ற போதும்
என் நெஞ்சமே உன்னை தேடும்


ஆனந்த கீதம் ஆரம்பமாகும்
காலங்கள் யாவும் நம்மோடு பாடும்


பூங்காற்று தாலாட்டும் அன்பே அன்பே


எங்கெங்கு நீ சென்ற போதும்
என் நெஞ்சமே உன்னை தேடும்


கண்களின் பார்வை அம்புகள் போலே
நெஞ்சினிலே பாய்வதும் ஏன்
அம்புகள் மீண்டும் பாய்ந்திடும் போது
காயங்களும் ஆறியதேன்


ஆறிடும் நெஞ்சம் தேறிடும் நேரம்
பிரிந்தது ஏனோ உன் உறவு
நெருங்கிடும் போதும் நீங்கிடும் போதும்
மயங்குவதேனோ என் மனது


இரு நெஞ்சின் துன்பம் இது காதல் தான்
அதுபோல இன்பம் எது கண்மணி
பூங்காற்று தாலாட்டும் அன்பே அன்பே


எங்கெங்கு நீ சென்ற போதும்
என் நெஞ்சமே உன்னை தேடும்


ஆனந்த கீதம் ஆரம்பமாகும்
காலங்கள் யாவும் நம்மோடு பாடும்


பூங்காற்று தாலாட்டும் அன்பே அன்பே


எங்கெங்கு நீ சென்ற போதும்
என் நெஞ்சமே உன்னை தேடும்


மாலை நன்நேரம் மாறிட வேண்டாம்
மாங்குயிலே மாங்குயிலே
காலங்கள் கூட மாறிட வேண்டாம்
கண்மணியே கண்மணியே


சூரியன் மேற்கினில் சென்றிடட்டும்
சந்திரன் அங்கே நின்றிடட்டும்
மேகங்கள் வானத்தில் நிலை பெறட்டும்
கடலினில் கூட அலை நிற்கட்டும்


உன்னோடு சேரும் ஒரு நேரமே
என்றென்றும் இங்கே நிலையாகட்டும்
பூங்காற்று தாலாட்டும் அன்பே அன்பே


எங்கெங்கு நீ சென்ற போதும்
என் நெஞ்சமே உன்னை தேடும்


ஆனந்த கீதம் ஆரம்பமாகும்
காலங்கள் யாவும் நம்மோடு பாடும்


பூங்காற்று தாலாட்டும் அன்பே அன்பே




எங்கெங்கு நீ சென்ற போதும்
என் நெஞ்சமே உன்னை தேடும்


லல... லல... லல...

Popular Posts