Showing posts with label Pasupathy. Show all posts
Showing posts with label Pasupathy. Show all posts

Wednesday, May 2, 2018

Veyil - Uruguthey Maruguthey

படம்: வெயில் (2006)
இசை: G.V. பிரகாஷ்
பாடகர்: சங்கர் மகாதேவன், ஸ்ரேயா கோஷல்
பாடல்வரிகள்: நா.முத்து குமார்

Related image



உருகுதே மருகுதே ஒரே பார்வையாலே
உருகுதே மருகுதே ஒரே பார்வையாலே
உலகமே சுழலுதே உன்ன பார்த்ததாலே

தங்கம் உருகுதா அங்கம் கரையுதா
வெட்கம் உடையுதா முத்தம் தொடருதா
சொக்கித்தானே போகிறேனே மாமா கொஞ்சம் நாளா

உருகுதே மருகுதே ஒரே பார்வையாலே
உலகமே சுழலுதே உன்ன பார்த்ததாலே

தங்கம் உருகுதே அங்கம் கரையுதே
வெட்கம் உடையுதே முத்தம் தொடருதே

சொக்கித்தானே போகிறேனே நானும் கொஞ்சம் நாளா
ஒ... ஒ... ஒ... ஒ...

உருகுதே மருகுதே ஒரே பார்வையாலே
உலகமே சுழலுதே உன்ன பார்த்ததாலே



ஹே... அம்புலியில் நினைந்து சந்திக்கிற பொழுது
அன்பு கதை பேசி பேசி விடியுது இரவு

ஏழு கடல் தாண்டிதான் ஏழுமலை தாண்டிதான்
என் கருத்து மச்சான் கிட்ட ஓடி வரும் மனசு

நாம சேர்ந்து வாழும் காட்சி ஓட்டி பாக்குறேன்

ஓ.. காட்சி யாவும் நெசமா மாற கூட்டிபோகிறேன்

ஓ... சாமி பார்த்து கும்பிடும் போதும்
நீதானே நெஞ்சில் இருக்க

உருகுதே மருகுதே ஒரே பார்வையாலே
உலகமே சுழலுதே உன்ன பார்த்ததாலே


ஊர விட்டு எங்கையோ வேரறுந்து நிக்கிறேன்
கூடு தந்த கிளி பெண்ணே உன்னாலதான் வாழுறேன்

கூர‌ பட்டு சேலைதான் வாங்க சொல்லி கேக்குறேன்
கூடு விட்டு கூடு பாயும் காதலால சுத்துறேன்

கடவுள் கிட்ட கருவறை கேட்டு உன்ன சுமக்கவா

உதிரம் முழுதும் உனக்கேதான்னு எழுதி குடுக்கவா

ஓ... மையிட்ட கண்ணே உன்ன மறந்தால் இறந்தே போவ
ஒ... ஒ... உருகுதே மருகுதே
ஒரே பார்வையாலே
உலகமே சுழலுதே உன்ன பார்த்ததாலே

தங்கம் உருகுதே அங்கம் கரையுதே
வெட்கம் உடையுதே முத்தம் தொடருதே

சொக்கித்தானே போகிறேனே நானும் கொஞ்சம் நாளா

Wednesday, March 13, 2013

ராமன் தேடிய சீதை - நண்பா நண்பா

படம்: ராமன் தேடிய சீதை (2008)
இசை: வித்யாசாகர்
பாடியவர்: கார்த்திக்
பாடல்வரிகள்: ஜெயிந்தா








நண்பா நண்பா நீ கொஞ்சம் கேளடா
நாமும் ஜெயிப்போம் என நம்பி வாழடா
நண்பா நண்பா நீ கொஞ்சம் கேளடா
நாமும் ஜெயிப்போம் என நம்பி வாழடா


உனை நீ தாழ்வாய் பார்க்காதே
அட நீயே உன்னிடம் தோற்க்காதே
எதுவும் முடியும் என்று நினை
நீ எழுந்து நடக்கும் ஏவுகணை
நண்பா நண்பா நீ கொஞ்சம் கேளடா
நாமும் ஜெயிப்போம் என நம்பி வாழடா


நண்பா நண்பா உன் நெஞ்சில் எழுதடா
வானம் நோக்கி நீ வளரும் விழுதடா
தயக்கம் என்பது சொந்த சிறை
அதில் தங்கி கிடப்பது உந்தன் குறை
அதிர்ஷ்டம் விற்பது கடவுள் கடை
உன் முயற்சி ஒன்றே அதற்கும் விலை
நண்பா நண்பா நீ கொஞ்சம் கேளடா
நாமும் ஜெயிப்போம் என நம்பி வாழடா


Wednesday, April 25, 2012

ராமன் தேடிய சீதை - இப்பவே இப்பவே


படம் : ராமன் தேடிய சீதை (2008)
இசை : வித்யா சாகர்
பாடியவர் : மது பாலகிருஷ்ணன், ஹரிணி










ம்….ம்…..ம்….ம்…..
ம்….ம்…..ம்….ம்…..


இப்பவே இப்பவே பார்க்கணும் இப்பவே


ம்….ம்…..ம்….ம்…..


இப்பவே இப்பவே பேசணும் இப்பவே


ம்….ம்…..ம்….ம்…..


கண்ணை மூடி உன்னைக் கண்ட அப்பவே அப்பவே
கைவளையல் ஓசை கேட்ட அப்பவே அப்பவே
ஆடை வாசம் நாசி தொட்ட அப்பவே அப்பவே
ஆயுள் கைதி ஆகிவிட்டேன் அப்பவே அப்பவே


இப்பவே இப்பவே பார்க்கணும் இப்பவே


இப்பவே இப்பவே பேசணும் இப்பவே……….


வெள்ளச் சேதம் வந்தால் கூட தப்பிக் கொள்ளலாம்
உள்ளச்சேதம் வந்து விட்டால் என்ன செய்வது


முள்ளைக் காலில் ஏற்றிக் கொண்டால் ரத்தம் மட்டும் தான்


உன்னை நெஞ்சில் ஏற்றிக் கொண்டேன் நித்தம் யுத்தம் தான்


சொல்லித் தீரா இன்பம் கண்டு எந்தன் நெஞ்சு கூத்தாட‌…


மின்னல் கண்ட தாழை போல உன்னால் நானும் பூத்தாட‌…..


உன்னைக் கண்டேன் என்னைக் காணோம்
என்னைக் காண உன்னை நானும்


இப்பவே இப்பவே பார்க்கணும் இப்பவே….
இப்பவே இப்பவே பேசணும் இப்பவே…..


எந்தன் வாழ்வில் வந்ததின்று நல்ல திருப்பம்
இனி உந்தன் கையைப் பற்றிக் கொண்டே செல்ல விருப்பம்


நெஞ்ச வயல் எங்கும் உன்னை நட்டு வைக்கிறேன்…
நித்தம் அதில் காதல் உரம் இட்டு வைக்கிறேன்


உன்னைக் காண நானும் வந்தால்
சாலை எல்லாம் பூஞ்சோலை….


உன்னை நீங்கி போகும் நேரம்
சோலை கூட தார்ப்பாலை…


மண்ணுக்குள்ளே வேரைப் போலே
நெஞ்சுக்குள்ளே நீதான் நீதான்


இப்பவே இப்பவே பார்க்கணும் இப்பவே


இப்பவே இப்பவே பேசணும் இப்பவே


கண்ணுக்குள்ள‌ உன்னைக் கண்ட அப்பவே அப்பவே


கைவளையல் ஓசை கேட்ட அப்பவே அப்பவே


ஆடை வாசம் நாசி தொட்ட அப்பவே அப்பவே
ஆயுள் கைதி ஆகிவிட்டேன் அப்பவே அப்பவே

Popular Posts